![]() |
|
திருக்காட்சி மலர்ந்திடாதா?.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: திருக்காட்சி மலர்ந்திடாதா?.. (/showthread.php?tid=4116) |
திருக்காட்சி மலர்ந்திடாதா?.. - hari - 06-10-2005 <b>திருக்காட்சி மலர்ந்திடாதா?..</b> திரைசூழும் தென்னிலங்கைத் தீவு காணச் சென்றுவந்தேன் ஆவலுடன் சிலநாள் முன்னே! வரையாது தமிழ்கொழித்த கொழும்பு என்னை வரவேற்ற காட்சிஇன்னும் என்கண் முன்னே!... மருந்துக்குக் கூட,தமிழ் எழுத்தைக் காணோம்! மாமதுரத் தமிழோசை முழங்கக் காணோம்! வருந்திமிகத் தேடினும் வாகனங்கள் மீது வண்டமிழின் எழுத்தொன்றும் விளங்கக் காணோம்!.. வாட்டமுடன் நான்பயணம் செய்த வேளை, வந்தது,பார் அந்த "'வெலிகடைச் சிறைச் சாலை"! நாட்டமுடன் ஏங்கியஎன் கண்க ளுக்கோர் நல்லதமிழ் வாசகம்தான் கிடைத்த தம்மா!.. அன்றொருநாள் சோழன் உலா வந்த பூமி! ஆறுமுக நாவலனின் அரிய பூமி! தண்டமிழின் தூதுவனார் தனிநாயகமும் தந்தை,செல்வ நாயகமும் தழைத்த பூமி!... கடல்கடந்து கலம்செலுத்திப் படை நடாத்திக் காடையனைச் சிறைப்பிடித்த வீர பூமி! அடல்மறவர் தமிழர்இனம் ஆற்றல் பொங்க ஆண்டிருந்த தென்னிலங்கை எங்கள் பூமி!... நம்குலத்தோர் கோலோச்சி நடை பயின்ற நாடிதுதான் என்றுசொன்னால் நம்பு வோமா? சிங்களத்தார் நாகரிகம் தெருக்கள் தோறும் சிலந்திவலை பின்னுவதைத் தாங்கு வோமா?.. மானமிகு தமிழ்மங்கை உடுத்து கின்ற மணித்துகிலும் புடைவைகளும் அங்கே இல்லை! நாணமற்ற நங்கையராய் மேனி காட்டி நடக்கின்றார்.. நளினம் ஒரு துளியும் இல்லை!... கண்டகண்ட மாமரத்து நிழலில் எல்லாம் கௌதமனின் சம்மணத்துச் சிலைகள் கண்டேன்: அண்டவந்து ஆட்சிகொண்ட அயலான் வம்சம் அரங்கேற்றும் ஆணவத்து நிலைகள் கண்டேன்!... தமிழினத்தைச் சூழ்ச்சியினால் ஓரங் கட்டும் சாகசங்கள் கொடிகட்டிப் பறக்கு தம்மா! தமிழினத்தான் தலைநிமிர்ந்து நடந்து செல்லும் தரணியொன்று காண்பதினி எப்போ தம்மா?... என்னருமைத் தமிழனுக்கோர் நாள் வாராதா? இனியதமிழ் ஈழம்தான் புலர்ந்திடாதா? பொன்னுலக வீதிகளில் தமிழாம் அன்னை புன்னகைக்கும் திருக்காட்சி மலர்ந்திடாதா?.. தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com ) - kavithan - 06-10-2005 நன்றி மன்னா,,.. அருமையான கவிதை .. சூசைமிக்கேலுகும் வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|