Yarl Forum
சினிமாவில் புகை பிடிக்க தடை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சினிமாவில் புகை பிடிக்க தடை (/showthread.php?tid=4167)



சினிமாவில் புகை பிடிக்க தடை - Mathan - 06-02-2005

சினிமாவில் புகை பிடிக்க தடை

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41205000/jpg/_41205719_indi.jpg' border='0' alt='user posted image'>
புகைத்தல் தொடர்பான நோய்களினால் வருடத்துக்கு 8000 இந்தியர்கள் இறக்கின்றனர்

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிக்கு இந்திய அரசு கொண்டுவந்துள்ள தடையை திரையுலகினர் எதிர்த்துள்ளனர்

இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சியைக் காட்டுவதாக வரும் காட்சிகளுக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து இந்தத் தடை அமலுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

புகை பிடிப்பதாக வரும் காட்சிகளை காட்டுவதை தவிர்ப்பதன் மூலம், புகை பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க முடியும் எனவும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் ஆண்டு தோறும் எட்டு இலட்சம் இந்தியர்கள் புகை பிடிக்கும் வழக்கத்தால் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் சூழ்நிலையில் இந்தத் தடை சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு கூறுகிறது.

இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் இந்தத் தடையை கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.


பழைய படங்களில் புகை பிடிக்கும் காட்சி இடம்பெற்றால், அதில் எச்சரிக்கையும் குறிப்பிடப்பட வேண்டும்
இந்தத் தடை திரைப்படக் கலைஞர்களின் படைப்புரிமையை பாதிப்பதாகவும் இது போன்ற சட்டங்கள் மட்டுமே புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்காது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த சட்டம் குறித்து கருத்து வெளியிட்ட, இந்த் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜனநாதன், திரைப்படங்களின் மூலமாக புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்று கூறப்படுவதை மறுத்தார்.

இது போல் சட்டங்களை இயற்றுவதை விட திரைப்படத்துறையினரிடையே பிரச்சாரங்கள் மேற்கொள்வதன் மூலம் இது போன்ற காட்சிகளைத் தவிர்க்கலாம் எனவும் ஜனநாதன் கூறினார்.

BBC தமிழ்


- Mathan - 06-02-2005

'காட்பாதர்' படத்தில் புகை பிடிக்கும் காட்சி- குழப்பத்தில் இயக்குனர்

'காட்பாதர்' படத்தில் அஜித் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்தகாட்சி வரும் பிண்ணனி செட்டுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாம்.

மத்திய அரசு இந்த தடை அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் கே.எஸ். ரவிக்குமாரிடம் இதுபற்றி கருத்து கேட்டபோது தனது குமுறலை கொட்டி தீர்த்தார்.

"சிகரெட் தயாரிக்கும் கம்பெனியை மூடிவிட்டு சினிமாவில் சிகரெட்டுக்கு தடை விதித்தால், அதை வரவேற்கலாம். சினிமாவில் பிடிப்பதை பார்த்துதான் ஜனங்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்கமாட்டேன்.

சினிமாவில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் வித்தியாசம் காட்டுவதற்காக, வில்லன் சிகரெட் பிடிப்பது போலவும், மது அருந்துவது போலவும் சீன் வைக்கிறோம். அது கூடாது என்றால் எப்படி சினிமா எடுப்பது?

நான் இப்போது டைரக்டு செய்துவரும் 'காட்பாதர்' படத்துக்காக 2கோடி செலவில் செட் போடப்பட்டு, சில முக்கியமான காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். அதில், அஜித்குமார் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து சிகரெட்டை மட்டும் அழிக்க முடியுமா? அந்த காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும் என்றால் மேலும் 2 கோடி செலவாகும். அந்த பணத்தை அரசாங்கம் கொடுக்குமா? தயாரிப்பாளரின் நஷ்டத்தை யார் ஈடுகட்டுவது?

இதுபற்றி சென்சார் போர்டில் முறையிடுவதா, எங்கள் யூனியனில்(டைரக்டர்கள் சங்கத்தலி) முறையிடுவதா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்." என்று முடித்த கே.எஸ்.ரவிக்குமாரின் முகத்தில் கோபம் புகைந்து கொண்டேயிருந்தது.

சினி சவுத்


- vasisutha - 06-02-2005

Quote:சினிமாவில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் வித்தியாசம் காட்டுவதற்காக, வில்லன் சிகரெட் பிடிப்பது போலவும், மது அருந்துவது போலவும் சீன் வைக்கிறோம். அது கூடாது என்றால் எப்படி சினிமா எடுப்பது?

இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
அந்தக் கால திரைப்படங்களில் வேண்டுமானால் அப்படி
இருந்திருக்கலாம். வில்லன் என்றால் தண்ணியடித்து சிகரெட்பிடித்தால்
வில்லனா? அப்போ ரஜனி எல்லாம் படத்திலே சிகரெட் பிடிச்சமாதிரி
நிறைய படங்கள் வந்ததே..அதெல்லாம் வில்லனா நடிச்சாங்களோ?
திருமலையில் விஜய் ஊதித்தள்ளுவாரே விஜய் அந்தப்படத்தில் வில்லனா?
(பகவதியில் தண்ணியடிச்சுட்டு பாட்டுவேற பாடுறார்.)
இவர் சொல்வதை பார்த்தால் சாதாரண வாழ்க்கையில்
தண்ணியடிக்கும் தம்மடிக்கும் எல்லாரும் வில்லன்களா???
கனாக்கண்டேன் வில்லன்.. தண்ணியடிச்சா வில்லத்தனத்தை காட்டினார்?
தன்னுடைய சிரிப்பாலேயே கதிகலங்க வைத்தாரே.

தனக்கு நட்டம் என்றவுடனே குய்யோ முறையோ என்பது சினிமாவில்
சாதாரணம்.
Quote:"சிகரெட் தயாரிக்கும் கம்பெனியை மூடிவிட்டு சினிமாவில் சிகரெட்டுக்கு தடை விதித்தால், அதை வரவேற்கலாம். சினிமாவில் பிடிப்பதை பார்த்துதான் ஜனங்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்கமாட்டேன்.


சினிமாவை பார்த்து யாரும் பண்ணுவதில்லையாம்...
ரஜனி ஸ்டைல் என்று அதை பார்த்து பலர் சிகரட் பிடித்து பழகியதை நான்
கண்டிருக்கிறேன்.



Quote:நான் இப்போது டைரக்டு செய்துவரும் 'காட்பாதர்' படத்துக்காக 2கோடி செலவில் செட் போடப்பட்டு, சில முக்கியமான காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். அதில், அஜித்குமார் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து சிகரெட்டை மட்டும் அழிக்க முடியுமா? அந்த காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும் என்றால் மேலும் 2 கோடி செலவாகும். அந்த பணத்தை அரசாங்கம் கொடுக்குமா? தயாரிப்பாளரின் நஷ்டத்தை யார் ஈடுகட்டுவது?

கே எஸ் ரவிகுமார் குரல் கொடுப்பது தடை வந்ததுக்காக அல்ல..
பாவம் அவர் போட்ட செட்டுக்கு 2கோடி செலவழிஞ்சுதே அதுக்காக.
தங்கள் சுய லாபங்களுக்காக குரல் கொடுக்காமல் இளைய சமுதாயத்தை
கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும்.


- Mathan - 06-02-2005

தனிப்பட்ட நலங்களுக்காக தான் தடையை எதிர்க்கின்றார் என்பது உண்மை தான். அதே சமயம் தடை கொண்டுவர பட்டதிலும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றது

Quote:இவர் சொல்வதை பார்த்தால் சாதாரண வாழ்க்கையில்
தண்ணியடிக்கும் தம்மடிக்கும் எல்லாரும் வில்லன்களா???

வில்லங்கள் தண்ணி, தம் அடிப்பார்கள் என்று காட்ட முயற்சிக்கிரார்களோ தெரியலை,

அது சரி ஏன் இவ்வளவு டென்சன் ஆகிறீங்க? நீங்க வில்லன் என்று சொல்லலையே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வசி எப்போதும் ஹீரோ தான் வசியை ஹீரோகவும் ரீமா சென்னை ஹீரோயினாகவும் போட்டு புகைப்பிடிக்கால் ஒரு படம் எடுங்கப்பா யாராவது.


- vasisutha - 06-02-2005

சோடியா நடிப்பது நம்ம சினேக் அல்லது கோபி என்றால்
உடனே டேற் தாறன்.. :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathan - 06-02-2005

அப்போ ரீமா சென்? அது சரி சினேக்???? பாம்பு கூட நடிக்க போறீங்களா?


- Mathan - 06-02-2005

Quote:இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சியைக் காட்டுவதாக வரும் காட்சிகளுக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது.

இந்த புகைபிடிப்பதற்கு தடை விதித்தவர்கள் ஏன் மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு தடை விதிக்கவில்லை?


- vasisutha - 06-02-2005

Mathan Wrote:அப்போ ரீமா சென்? அது சரி சினேக்???? பாம்பு கூட நடிக்க போறீங்களா?

என்ன லொள்ளா :evil: சினேகா தான் செல்லமாய் சினேக்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சினேக் கோபியோட டேற் கிடைக்காட்டி ரீமா சென்தான் ஹீரோயின் :wink:


- vasisutha - 06-02-2005

Mathan Wrote:
Quote:இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சியைக் காட்டுவதாக வரும் காட்சிகளுக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது.

இந்த புகைபிடிப்பதற்கு தடை விதித்தவர்கள் ஏன் மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு தடை விதிக்கவில்லை?

மது அருந்துவதை விட புகைப் பிடிப்பது தான் இன்னும்
கெடுதலானது. இங்கும் கூட பார்த்தீர்களானால் மது அருந்துவதற்கு
எதிரான பிரச்சாரங்களை
விட புகைப்பிடித்தலுக்கு எதிரான பிரச்சாரங்கள் தான் அதிகம்.
இப்படியான கட்சிகள் சிறுவர்களை எளிதில் கவரும். மதுவை விட
இலகுவான வழிகளில் கிடைக்கக்கூடியது சிகரட்தான்.
எனவே இப்பழக்கத்தை இலகுவாக ஆரம்பித்து விடுகிறார்கள்.


- Eswar - 06-02-2005

vasisutha Wrote:
Mathan Wrote:
Quote:இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சியைக் காட்டுவதாக வரும் காட்சிகளுக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது.

இந்த புகைபிடிப்பதற்கு தடை விதித்தவர்கள் ஏன் மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு தடை விதிக்கவில்லை?

மது அருந்துவதை விட புகைப் பிடிப்பது தான் இன்னும்
கெடுதலானது. இங்கும் கூட பார்த்தீர்களானால் மது அருந்துவதற்கு
எதிரான பிரச்சாரங்களை
விட புகைப்பிடித்தலுக்கு எதிரான பிரச்சாரங்கள் தான் அதிகம்.
இப்படியான கட்சிகள் சிறுவர்களை எளிதில் கவரும். மதுவை விட
இலகுவான வழிகளில் கிடைக்கக்கூடியது சிகரட்தான்.
எனவே இப்பழக்கத்தை இலகுவாக ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஒருவன் குடித்தால் அவன் மட்டுமே நோய்வாய்ப்படுகிறான். ஆனால் சிகரட் புகை பக்கத்தில் இருப்பவனையும் பாதிக்கும்.


- MUGATHTHAR - 06-02-2005

திரைப்படத்தில் புகைபிடிக்காமல் இருக்கும் படி கவுண்டமணியிடம் போய் செந்தில் கேக்கிறர்

செந்தில் : ஏன் அண்ணை புகைபிடிக்கிறீங்க?.....உடம்புக்கு கூடாது எங்குறாங்க?...
கவுண்டமணி : போடா கூழ்முட்டை தலையா இப்ப நான் புகையைப் பிடிச்சு உள்ளுக்கை வச்சிருந்தா தானே கூடாது..அதுதான் நான் நல்லா இழுத்து வெளியிலை விட்டுறனே பிறகென்ன.....


- kavithan - 06-02-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வருடத்துக்கு 8000 இந்தியர்கள் இறக்கின்றனர்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இந்தியாவில் ஆண்டு தோறும் எட்டு இலட்சம் இந்தியர்கள் புகை பிடிக்கும் வழக்கத்தால் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 06-05-2005

அரசுடன் தணிக்கை குழு தலைவர் மோதல் - புகையும் சிகரெட் விவகாரம்

<img src='http://cinesouth.com/images/new/04062005-THN15image1.jpg' border='0' alt='user posted image'>

புகையால் வந்த பகை மத்திய சினிமா தணிக்க குழு தலைவர் வரை புகையத் தொடங்கியிருக்கிறது. அனைத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டது ஒரு நன்றி கடிதம் என்றால் நம்ப முடிகிறதா?

ரஜினி என்றால் உடன் நினைவு வருவது அவரது அலையும் முடியும், புகையும் சிகரெட்டும்தான். 'சந்திரமுகி' படப்பிடிப்புக்கு முன் தனது உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் ரஜினி. ஆறு மாதங்களுக்கு சிகரெட்டுக்கு தடா போடவேண்டும் என்றனர் மருத்துவர்கள். ரஜினியும் அதனால் 'சந்திரமுகி'யில் சிகரெட்டை தொடவில்லை. இது மத்திய அமைச்சர் அன்பு மணியின் நெஞ்சை தொட்டுவிட்டது. சிகரெட் பிடிக்காததற்கு நன்றி தெரிவித்து அவர் ரஜினிக்கு கடிதம் எழுதினார். ரஜினி சம்பந்தப்பட்ட விஷயம்...... மத்திய பட்ஜெட்டை விட பிரபலமாகிவிட்டது கடிதம்.

சிகரெட் பிடிக்காததற்கு எழுதிய கடிதத்துக்கே இப்படியென்றால், சிகரெட் பிடிப்பதை சினிமாவில் இருந்தே ஒழித்தால்...? மந்திரியின் மனதில் இப்படியொரு எண்ணம் ஓடியிருக்க வேண்டும். ஆகஸ்டு 1 முதல் சினிமாவில் சிகரெட் பிடிப்பதை தடை செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு எதிராக இயக்குனர்கள், நடிகர்கள் மத்தியில் கிளம்பிய எதிர்ப்பு மத்திய சினிமா தணிக்கைக் குழு தலைவர் சார்மிளா தாகூரிடம் எதிரொலித்திருக்கிறது. "இது அவசரப்பட்டு எடுத்த முடிவு. சுயமரியாதையுள்ள எந்த இயக்குனரும் இதை விரும்பமாட்டார்கள்" என கூறியுள்ளார் சார்மிளா தாகூர்.

இப்படியொரு சட்டம் கொண்டுவருமுன் திரையுலகத்தை சேர்ந்தவர்களுடனோ, தணிக்கை குழுவினருடனோ அரசு கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய தணிக்கை குழுவிலேயே எழுந்துள்ள இந்த அதிருப்தி குரல் சிகரெட் பிரச்சனையை மேலும் ஊதி பெரிதாக்கியிருக்கிறது.

இதில் நம்முடையது ஒரே ஒரு கேள்வி......

இதுவரை சினிமாவில் வந்துள்ள சிகரெட் புகைக்கும் காட்சிகளை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? உதாரணமாக 'படையப்பா'வில் வரும் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்கிவிடுவார்களா? இல்லை, அப்படியே ஒளிபரப்ப அனுமதிப்பார்கள் என்றால், இனிவரும் படங்கள் மட்டும் இப்படியொரு தடைக்கு தலைவணங்க என்ன பாவம் செய்தன?

சினி சவுத்


- kavithan - 06-05-2005

Quote:இதுவரை சினிமாவில் வந்துள்ள சிகரெட் புகைக்கும் காட்சிகளை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? உதாரணமாக 'படையப்பா'வில் வரும் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்கிவிடுவார்களா? இல்லை, அப்படியே ஒளிபரப்ப அனுமதிப்பார்கள் என்றால், இனிவரும் படங்கள் மட்டும் இப்படியொரு தடைக்கு தலைவணங்க என்ன பாவம் செய்தன?
அதுவும் சரி தான்.. ஏதோ புகையட்டன் ... சினிமா தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->