Yarl Forum
அழியாத கோலங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: அழியாத கோலங்கள் (/showthread.php?tid=4170)

Pages: 1 2 3


அழியாத கோலங்கள் - தூயா - 06-02-2005

[size=15]<b>என் இனத்தை காக்க, தம் உயிரை தந்த மாவீரர்களை பற்றிய தகவல்களை [மட்டும்] இங்கு எழுதுவோம்.
தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு கூறவும்.

நன்றி.

பி.கு - மாவீரர்களை பற்றி மட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--></b>


- hari - 06-02-2005

சார்ள்ஸ் அன்ரனி என்பவர் ஈழப்போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரர்களில் ஒருவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால தாக்குதல் சம்பவங்களில் பங்கேற்ற அற்புதமான வீரன்.தாக்குதல்களை சிறப்பாக ஒழுங்கமைத்து ஒருங்கமைத்து அதன்மூலம் எதிரியின் கண்களில் விரல் விட்டு ஆட்டிவந்தவர்.

திருகோணமலையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலகட்டங்களில் - எழுபதுகளின் பிற்பகுதியில் - அப்போதிருந்தவர்களில் வயதில் குறைந்தவராக இருந்தபோதும் தலைவர் பிரபாகரனின் உயிர்நண்பனாக இருந்தார்.அக்காலப்குதியில் சிங்கள இராணுவ,பொலீஸாருக்கு எதிரான கெரில்லா தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தார்.

1982 இல் உமாமகேஸ்வரன் தனது விசுவாசிகள் சிலருடன் விடுதலைப்புலிகள் அமைப்பலிருந்து விலகிச்சென்றதும் புலிகளின் ஆட்பலம் குறைந்துவிட்டது என்றும் அதனால் அவர்களின் இராணுவபலம் குறைந்துவிட்டது ஏனைய போராளி இயக்கங்கள் கதைகளைப்பரப்பின.

அந்தக்கதைகளுக்கு ஆப்பு வைத்து புலிகளின் பலத்தை நிரூபித்து தமக்கு மேலும் பலம் சேர்த்தவர்தான் சார்ள்ஸ் அன்ரனி.அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சாவகச்சேரி பொலீஸ் நிலையத்தாக்குதலே அது.(உமாமகேஸ்வரனின் வெளியேற்றத்துக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்தத்தாக்குதலுக்கு முன்னதாக நெல்லியடியில் பொலீஸ் ரோந்து அணி மீதும் பொன்னாலை கடற்கரையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வரவை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் எதிர்பார்த்தஅளவுக்கு புலிகளுக்கு வெற்றியைத்தரவில்லை)

1982 ஒக்டோபர் 27 ஆம் திகதி சார்ள்ஸ் அன்ரனி தலைமையில் அருணா,சங்கர்,சந்தோசம்,மாத்தையா,புலேந்திரன்,ரகு,பஷீர்காக்கா ஆகியோர் அடங்கிய எட்டுப்பேர் அடங்கிய புலிகள் குழு மினி வானொன்றில் சாவகச்சேரி பொலீஸ்நிலையத்துக்கு விரைந்தது.பொலீஸ் நிலையத்துக்கு முன்பாக வானை நிறுத்திவிட்டு இறங்கிய சார்ள்ஸ் அன்ரனி தலைமையிலான ஒரு தொகுதியினர் வாசலில் காவலுக்கு நின்ற பொலீஸை சுட்டுவிட்டு உள்ளே சென்று ஒவ்வொரு அறையையும் திறந்து பார்த்து பார்த்து ‘க்ளியர’; பண்ணிக்கொண்டு சென்றனர்.இந்நேரத்தில் அருணாவும் பஷீர்காக்காவும் அங்கிருந்த பொலீஸின் ஆயுதங்களை அள்ளினர்.திடீர்தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாது தப்பிய ஒடிய பொலீஸார் ஒருவர் மாடியிலிருந்து குதித்து கால் முறிந்தது.ஆனால் அங்கு மேல்மாடியில் நின்று உஷாரான சில பொலீஸார் திருப்பிசுட்டதில் புலேந்திரனின் தோளில் காயம்.ரகுவின்; வலது கைஎலும்பு முறிந்தது.சார்ள்ஸ் அன்ரனிக்கு கணுக்காலில் காயம்.பொலீஸ் நிலையத்திலிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு எஸ்.எம்.ஜி,19 ரிப்பீட்டர்கள்,9 ரைபிள்ஸ்,ஒரு பிஸ்டல் ஆகியவற்றையும் காயமடைந்தவர்களையும் மற்றவர்களையும் அருணா வானில் தூக்கிப்போட அங்கிருந்து அனைவரும் தப்பினர்.

தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இல்லாத நேரங்களில் புலிகளின் பதில் தளபதியாக பொறுப்புவகிக்கும் சார்ள்ஸ் அன்ரனிக்கு காயம் ஏற்பட்டதால் தலைவர் விரைந்து செயற்பட்டார்.பாக்குநீரிணை வழியாக சார்ள்ஸ் அன்ரனியை தமிழ்நாட்டுக்கு படகு மூலம் கொண்டுசென்று சிகிச்சை அளித்த பிரபா தன் நண்பனுடன் கூடவிருந்து அவனுக்கு சுகமானதும் அவனுடன் தாயகம் திரும்பினார்.

1983 ஜீலை 15 ஆம் திகதி….

சார்ள்ஸ் அன்ரனி அருணா மற்றும் கணேசுடன் மீசாலையில் ஒரு வளவில் இருந்து இளநீர் குடித்துக்கொண்டிருந்தான்.எவனோ எட்டப்பன் சிங்களப்படைகளுக்கு இந்தத்தகவலை கொடுக்க கவசவாகனங்கள் ஜீப்களில் திடீரெனவந்த சிங்களப்படையினர் சார்ள் அன்ரனி இருந்த இடத்தை முற்றுகையிட்டனர்.இளைஞன் ஒருவன் ‘ஆமி வந்துவிட்டான்’ என்று ஒடி வந்து விஷயத்தை சொல்ல சைக்கிளையும் தூக்கிக்கொண்டு மீசாலை வயற்கரையால் சார்ள்ஸ் அன்ரனியும் ஏனைய இருவரும் பறந்தனர்.ஏற்கனவே சாவகச்சேரி தாக்குதலில் கணுக்காலில் விழுப்புண் அடைந்த சார்ள்ஸ் அன்ரனியால் வேகமாக ஓடமுடியவில்லை.அப்போது இராணுவம் கலைத்துச்சுட்டதில் இனி ஓடமுடியாது என்றெண்ணிய சார்ள்ஸ் அன்ரனி அருணாவையும் கணேசையும் ஓடித்தப்புமாறு கலைத்துவிட்டு எதிரியின் கைகளில் சிக்காமல் வயல்வெளிக்குள்ளேயே தன்னை மாய்த்துக்கொண்டான்.

நீர்வேலியில் கிட்டு,செல்லக்களி மற்றும் பண்டிதர் ஆகியோருடன் இயக்கத்தின் நிதிவிடயங்கள் சம்மந்தமாக பேசிக்கொண்டிருந்த பிரபாவுக்கு சார்ள்ஸ் அன்ரனி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.பிரபா அந்தக்கணம் அடைந்த உணர்வு பற்றி கிட்டு பின்னர் ஒரு முறை எழுதிய கட்டுரையில் “தலைவர் அப்போது அடைந்த அதிர்ச்சியை வார்த்தையில் வெளிப்படுத்துவது சாத்தியமற்றது.”-என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு ஒப்பற்ற தளபதி மட்டுமல்லாமல் நல்ல நண்பனையும் அன்று தலைவர் பிரபா இழந்தார்.மூன்று வருடங்களின் பின்னர் பிறந்த தனது முதலாவது பிள்ளைக்கு தலைவர் தனது நண்பனின் ஞாபகார்த்தமாக அவனது பெயரையே சூட்டினார்.விடுலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட முதல் படையணிக்கும் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு என்றே பெயரிட்டார்.


- hari - 06-02-2005

மேலும் மாவீரன் லெப்.சீலன்(சார்ள்ஸ் அன்ரனி) அவர்களின் வரலாற்றை படிக்க
http://www.pathivu.com/content/varalaru/do...r/lt_seelan.htm


- தூயா - 06-02-2005

நன்றி அண்ணா.


- sinnappu - 06-02-2005

அருணா (இவர் கல்வியங்காடு அருணா தானே ஹரி ) இவரையும் காந்தி என்ற போராளியையும் தானே முதல் முதலாக கைதிகள் பரி மாற்றத்தின் போது வெளியே வந்தவர் இவரும் பல சாகசங்களை நிகழ்த்தியவர் கிழக்குப்பகுதியில் பல இடங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் (காக்கா அம்மான்(பஷீர்காக்கா) காலப்பகுதியில் )
இவருடைய குடும்பத்தை மிகவும் எனக்குத்தெரியும் இவருடைய தந்தையையும் தம்பியையும் கொலைகார இந்திய ராணுவ நாய்கள் :evil: :evil: சுட்டுக்கொன்று விட்டார்கள் இவருக்கும் எங்கு என்ன நடந்தது என்று தெரியாது

காந்தி ம் அருமையான போராளி
குருநகர் இரவரது பிறப்பிடம் என்று நினைக்கிறேன்

மேலும் உங்களுக்கு தெரிந்த பழைய போராளிகளை ஞாபகப்படுத்துங்களேன்

Cry Cry Cry


- தூயா - 06-02-2005

சின்னப்பு. மிக்க நன்றி. தங்களுக்கு தெரிந்தவற்றை மேலும் எழுதுங்கள்


- kuruvikal - 06-02-2005

இவ்வளவு இருக்கா... தூயா பாப்பாவின் முயற்சியாலும் ஹரியின் உதவியாலும் சாள்ஸ் அன்ரனி பற்றி அறிந்து கொண்டோம்..தொடருங்கள்...! Idea


- தூயா - 06-02-2005

குருவி அண்ணா நீங்களும் தெரிந்த விடயங்களை கூறுங்கள். சிறிய விடயமாக இருப்பினும் அது மிக பிரயோசனமாக இருக்கும்.

கள உறவுகள் அனைவரையும் கேட்டு கொள்கிறோம். தெரிந்தவற்றை எழுதுங்கள்.


Re: அழியாத கோலங்கள் I - சாள்ஸ் அன்ரனி - தூயா - 06-02-2005

தூயா Wrote:<img src='http://www.eelamstore.com/shop/images/books/bi_pi279.jpg' border='0' alt='user posted image'>


இந்த பெயருக்கு சொந்தகாரன் யார்? அவன் கதை என்ன? அவன் வாழ்க்கை என்ன?

தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு கூறவும்.

நன்றி.

படங்கள் இருப்பின் தயவு செய்து இங்கு போட்டால் பெரும் உதவியாக இருக்கும்.


- sinnappu - 06-02-2005

விக்டர் (மன்னார் தளபதி ) பல சாகசங்களை செய்தவர் அந்த நாள் துரோக ரெலோ வை அழிப்பதில் பெரும் பங்கு இவருக்கும் தளபதி கிட்டம்மானுக்கும் அரியாலை பொறுப்பாளர் நடா வுக்கும் அதிக பங்கிருந்தது மிகவும் அன்பான விக்டர் அண்ணா ம் ம்
Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- sathiri - 06-02-2005

sinnappu Wrote:
Quote:அருணா (இவர் கல்வியங்காடு அருணா தானே ஹரி ) இவரையும் காந்தி என்ற போராளியையும் தானே முதல் முதலாக கைதிகள் பரி மாற்றத்தின் போது வெளியே வந்தவர் இவரும் பல சாகசங்களை நிகழ்த்தியவர் கிழக்குப்பகுதியில் பல இடங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் (காக்கா அம்மான்(பஷீர்காக்கா) காலப்பகுதியில் )
இவருடைய குடும்பத்தை மிகவும் எனக்குத்தெரியும் இவருடைய தந்தையையும் தம்பியையும் கொலைகார இந்திய ராணுவ நாய்கள் :evil: :evil: சுட்டுக்கொன்று விட்டார்கள் இவருக்கும் எங்கு என்ன நடந்தது என்று தெரியாது

காந்தி ம் அருமையான போராளி
குருநகர் இரவரது பிறப்பிடம் என்று நினைக்கிறேன்

மேலும் உங்களுக்கு தெரிந்த பழைய போராளிகளை ஞாபகப்படுத்துங்களேன்
Cry Cry Cry
சின்னப்பு அருணா வுடன் கைதி மபற்றத்தின் போது வெளியே வந்தவர் பெயர் காந்தி அல்ல காமினி இவர் குரு நகர் மணியந் தோட்டத்தை சேர்ந்தவர் வெளி வந்த சில காலத்தில் வவுனியாவில் ஒரு மோதலில் சாவடைந்து விட்டார். அருணாவும் இந்திய படை கால்தில் யாழ் மத்திய வீதி தண்ணி தொட்டியடியில இந்திய இராணுவம் சுட்டு இறந்து விட்டார். ; Cry


- தூயா - 06-02-2005

தொடருங்கள் உறவுகளே...பல விடயங்கள் நான் தெரிந்து கொள்ள வேண்டியவை... கூறுங்கள்


- sinnappu - 06-02-2005

அடுத்து லெப். கே.ராதா ((யாழ் தளபதி ) ம் மிகவும் மிகவும் அன்பானவர் கோபமே வராது அவருடை அளவுக்கு அதிககோபம் வந்தா சொல்லுவது என்ன ஐசே ம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஒரு மோட்டார் சைக்கிள் பின்னால் ஒருவர் அவ்வளவு தான் அந்தத் தளபதி மிகவும் படித்தவர் தலைவர் இவர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்
இவரது பெயரால் இவர் நண்பர் வாசன்(போட்டோ ) இன் மனைவி சுரிச் இல ராதா நடணாலயம் என்று ஒண்று நடத்திறார்
இன்றும் ஏதாவது அரங்கேற்றம் என்றால் இறைவன் படத்துடன் மாவீரன் ராதா வின் படமும் வைத்து விளக்கேற்றிய பின்பு தான் அரங்கேற்றம் ஆரம்பமாகும்

நான் அடிக்கடி நினைப்பேன் ராதா அண்ணாவை அவரது சிரித்த முகத்தை
Cry Cry Cry Cry Cry


- kuruvikal - 06-02-2005

தூயா Wrote:குருவி அண்ணா நீங்களும் தெரிந்த விடயங்களை கூறுங்கள். சிறிய விடயமாக இருப்பினும் அது மிக பிரயோசனமாக இருக்கும்.

கள உறவுகள் அனைவரையும் கேட்டு கொள்கிறோம். தெரிந்தவற்றை எழுதுங்கள்.

தூயா பாப்பா நாங்களும் உங்களை மாதிரித்தான்...தாயகத்தில் இருக்கும் போது விடுதலைப்புலிகளை ஏட்டை தொடர்ந்து வாசித்து அறிந்தவை தான் அதிகம்... பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் விமர்சனங்கள் வாசித்தறிந்தவை தான் அதிகம்...மற்றும் படி அனுபவங்களாய் பகர்ந்துகொள்ள என்று பெரிசா எதுவும் இல்லை...! எனினும் எங்கும் வாசிக்கக் கிடைத்தால் அதைத் தருகின்றோம்...! Idea


- sinnappu - 06-02-2005

Quote:சின்னப்பு அருணா வுடன் கைதி மபற்றத்தின் போது வெளியே வந்தவர் பெயர் காந்தி அல்ல காமினி இவர் குரு நகர் மணியந் தோட்டத்தை சேர்ந்தவர் வெளி வந்த சில காலத்தில் வவுனியாவில் ஒரு மோதலில் சாவடைந்து விட்டார். அருணாவும் இந்திய படை கால்தில் யாழ் மத்திய வீதி தண்ணி தொட்டியடியில இந்திய இராணுவம் சுட்டு இறந்து விட்டார். ;
_________________
வீழ்வது யாராயினும் வாழ்வது நானாகட்டும்

ஓம் ஓம் காமினி சாத்திரி நன்றி அருணா அண்ணை மத்திய வீதியிலா
ம்

சாத்திரி அப்ப அரியாலை நடா வைத் தெரியுமா உமக்கு தகவல் தாருமன் தயவு செய்து
Cry Cry Cry Cry அந்த நாளில் மிகவும் பிரபல்யமான பொறுப்பாளர் இல்லையா (4ம் சந்தி சென்ட்றி பொயிண்ட் ஐ கவனமாக பாத்தவர் இல்லையா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )


- sathiri - 06-02-2005

உறவுகளே இந்த உரையாடலில் மரணமடைந்த போராளிகளின் விபரயங்களை மட்டும் உறுதி செய்து எழுதினால் நன்றாக இருக்கும் ஏனெனில் பழைய போராளிகள் பற்றி கதைக்கும் போது அதில் பலர் இன்று வெளிநாடுகளில் வசிக்கின்றனர் சிலவேளை அது அவர்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் அல்லது வேண்டாத ஒரு கூட்டம் காத்திருக்கு அவர்களின் தேவையில்லாத விமர்சனங்களையும் தவிர்க்கலாம்


- sinnappu - 06-02-2005

sathiri Wrote:உறவுகளே இந்த உரையாடலில் மரணமடைந்த போராளிகளின் விபரயங்களை மட்டும் உறுதி செய்து எழுதினால் நன்றாக இருக்கும் ஏனெனில் பழைய போராளிகள் பற்றி கதைக்கும் போது அதில் பலர் இன்று வெளிநாடுகளில் வசிக்கின்றனர் சிலவேளை அது அவர்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் அல்லது வேண்டாத ஒரு கூட்டம் காத்திருக்கு அவர்களின் தேவையில்லாத விமர்சனங்களையும் தவிர்க்கலாம்

உண்மை மிகவும் கவனமாக எழுத வேண்டும்
:wink: :wink: :wink:


- hari - 06-02-2005

<img src='http://www.tamilcanadian.com/eelam/maaveerar/thileepan/thileepan2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilcanadian.com/tamil/Teelipa1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilcanadian.com/tamil/Teelipa.gif' border='0' alt='user posted image'>


- வெண்ணிலா - 06-02-2005

திலீபன் அண்ணாவைப் பற்றிய தகவல்களை தந்தமைக்கு நன்றி ஹரியண்ணா


- selvanNL - 06-02-2005

அழியாத கோலங்களில் இந்த ஒரு பதிவும் தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு சிறு சம்பவம்.. பதிவு இனையத்தளத்திலிருந்து பெறப்பட்டது..

<b>ஒரு வேவுக் போராளியின் உண்மைக் கதை.</b>

ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.

அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில் பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் குறிப்பிட்ட அணியை வழிகாட்டி நகர்த்திக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்போராளி.

நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவர்கள் எதிரியின் முன்னணித் தடை வேலியை நெருங்கிவிட்டனர். நீண்டதொரு இரகசிய நகர்வை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியில் அவர்கள் இருந்தனர். ஆனால்ää இன்னுங்கூட அபாயம் நீங்கவில்லை. அப்போது எதிரியால் அவதானிக்கப்பட்டால் அவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்படலாம். காவலரண்களின் முன்னாற் சில பத்து மீற்றரில் அவர்கள் நிலத்துடன் நிலமாகக் கிடக்க அவர்களை வழிகாட்டி அழைத்துவந்த போராளி கைகளில் முட்கம்பி வேலித்தடையை அகற்றும் கருவியுடன் முன்னேறினான்.

சண்டை தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. முதலாவதாக இருந்த கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இரண்டாவது தடைக்கு அவன் டோப்பிட்டோ குண்டை பொருத்த மறுமுனைகளிற் சண்டை தொடங்குகின்றது. அங்கே பொருத்திய டோப்பிட்டோ வெடிக்குமென எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க அந்தக் குண்டு வெடிக்காமலே போய்விட்டது.

துப்பாக்கிகள் சடசடக்க எதிரி வானில் ஏவிய பரா வெளிச்சக் குண்டுகள் இரவைப் பகலாக்கி வானில் ஒளிவீச அங்கே எமது அணியினர் தமக்குரிய பாதைத் தடையைத் தகர்க்க முடியாமல் இருப்பதை எதிரி கண்டுகொண்டான். தனது சூட்டு வலுவை இப்போது அந்த அணியினர் மீது எதிரி மையங்கொள்ள வைத்தான்.

நிலமை மோசமாகிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையவேண்டிய அந்த அணி வழியிலேயே எதிரியின் சூட்டிற்கு இலக்காகிப் போராளிகளை ஒவ்வொருவராய் இழந்துகொண்டிந்தது. மீண்டும் அந்தத் தடையைத் தகர்க்க அவ்விடத்தில் கைவசம் மேலதிக டோப்பிட்டோ வோ

பின்னாலிருந்து வரவழைக்க அவகாசமோ இருக்கவில்லை. இந்த இக்கட்டான நிலையில் எல்லோரும் தவிப்புடன் பார்த்திருக்க கைவசம் இருந்த ஒரேயொரு கம்பிவெட்டும் கட்டருடன் எழுந்தான். அந்த அணிக்கு வழிகாட்டி முன்னே நகர்ந்து கொண்டிருந்த லெப்டினன்ட் மலரவன்.

துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டு உடலிலிருந்து குருதி வழிய வழிய தள்ளாடியபடி எதிரியின் தடைக்கம்பி வேலியை நெருங்கியவன் ஒவ்வொரு கம்பியாய் வெட்டத்தொடங்கினான். எதிரியின் துப்பாக்கிகள் அவன் ஒருவனையே குறிவைத்தன. அந்தச் சொற்ப நேரத்தினுள்ளேயே தடையை வெட்டி அகற்றிவிடவேண்டும் என்ற உறுதியுடன் தடைக்கம்பிகளை வெட்டி அகற்றியவாறு அந்தக் கம்பிகளின் மீதே சரிகின்றான் மலரவன். இறுதிக் கம்பி மட்டும் இன்னும் வெட்டப்படாமல் இருந்தது. ஆயினும் பாதை ஏற்பட்டுவிட்டது.

அவன் ஏற்படுத்திக் கொடுத்த பாதையின் ஊடாக அணிகள் உள்ளே பாய்கின்றன.அவனது தோழர்கள் அவனைக் கடந்து எதிரியின் அரண்களை நோக்கி ஓடும் போது எஞ்சிய உயிர்த் துளியில் அவனது நாவு உச்சரித்தவை இவைதான்.

[size=18]மச்சான்! ஒன்றையும் விடமாற் பிடியுங்கோ

அன்றைய அந்த அணியின் சண்டையின் முடிவை மாற்றியமைத்தவன் அந்தப் போராளி. எதிரியின் சூட்டிற்கு ஒவ்வொருத்தராய் வீழ்ந்துகொண்டிருந்த நிலையை மாற்றியது அவனது முடிவுதான்.

தன் உயிர்கொண்டு அவன் தடையகற்ற துணிந்தமையால் தொடர்ந்து எதிரிகளை வீழ்த்திக் கொண்டு முன்னேறியது அவனது அணி. அன்றைய சண்டையில் அவர்கள் ஏராளம் இராணுவத்தினரை கொன்றொழித்தனர். பலம் வாயந்த எதிரியின் பிரதான முகாமை ஊடுருவி அவனது பல ஆயுதங்கள் உள்ளிட்ட ஆட்லறித் தளத்தை அவர்கள் அழித்தனர். அத்தனையும் அன்று சாத்தியமாக்கியது தடையகற்றித் தன் சாவைச் சரித்திரமாக்கிவிட்ட அந்தப் போராளியின் இறுதி நேர முடிவே.

எமது விடுதலை வரலாற்றுப்பற்றித் தலைவர் அவர்கள் கூறுவது போல் ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில் தானும் ஒருவனாய் சங்கமித்துப்போன இவனதும் சரித்திர நாயகர்களினதும் தியாகங்களே இன்றும் எம் விடுதலை நதியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கின்றன..

இதை ஆரம்பித்த தூயாவிற்கு நன்றி.. கள உறவுகளே தொடருங்கள்.. Idea

---------------------------------------------------------------------

<img src='http://img19.echo.cx/img19/5753/a18fj8tc.jpg' border='0' alt='user posted image'>