Yarl Forum
அம்மாவிடம் இருந்து மகளுக்கு `டைவர்ஸ்' - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அம்மாவிடம் இருந்து மகளுக்கு `டைவர்ஸ்' (/showthread.php?tid=4190)



அம்மாவிடம் இருந்து மகளுக்கு `டைவர்ஸ்' - Vaanampaadi - 05-29-2005

அம்மாவிடம் இருந்து மகளுக்கு `டைவர்ஸ்'
ஆஸ்திரேலிய கோர்ட்டில் நூதன தீர்ப்பு!

கணவனிடம் இருந்து மனைவியோ, மனைவியிடம் இருந்து கணவனோ `டைவர்ஸ்' (விவாகரத்து) வாங்குவது வாடிக்கையாக நடப்பது தான்.ஆனால் அம்மாவிடம் இருந்து மகள் `டைவர்ஸ்' வாங்கியதாக இதுவரை யாரும் கேள்விப்பட்டு இருக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

17 வயது இளம்பெண்

டைவர்ஸ் வாங்கி உள்ள பெண்ணின் பெயர் கயே (வயது 17). நிïசவுத்வேல்ஸ் மாநிலத்தில் தனது தாயுடன் வசித்து வந்தாள். சமீபத்தில் இவள் கோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்தாள்.

``நான் 10 வயதாக இருக்கும்போதே என் தாய் என்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபட வைத்தாள். ஒரு கொடுமைக்கார ஆசாமியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவனுடைய `செக்ஸ்' ஆசைக்கு என்னை பயன்படுத்தினாள். 7 வருடமாக நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். இனிமேலும் என் தாயிடம் அடிமையாக வாழ முடியாது. தாயிடம் இருந்து குடும்ப உறவை துண்டித்து எனக்கு `டைவர்ஸ்' வழங்க வேண்டும்'' என்று மனுவில் அந்த பெண் கூறியிருந்தாள்.

சேர்ந்து வாழ முடியாத கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கோ, குழந்தைகளிடம் இருந்து பெற்றோருக்கோ டைவர்ஸ் வழங்கும் புதிய சட்டம் சமீபத்தில்தான் அந்த மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது.

டைவர்ஸ் கிடைத்தது

இளம்பெண் கயேவின் மனுவை விசாரித்த மாஜிஸ்தி ரேட்டுதீவிர விசாரணை நடத்தி அவளுக்கு தாயிடம் இருந்து `டைவர்ஸ்' (குடும்ப உறவு ரத்து) வழங்கி தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பை கேட்ட சந்தோஷத்தில் கயே நிருபர்களிடம் கூறும்போது, `என் தாயையும், எனக்கு செக்ஸ் கொடுமை இழைத்த நபரையும் ஒருபோதும் மன்னிக்கவும் மாட்டேன், மறக்கவும் மாட்டேன்' என்றாள். 4 வருட கனவு இன்று நனவாகி விட்டதாகவும் அந்த பெண் மகிழ்ச்சி தெரிவித்தாள்.