| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 479 online users. » 0 Member(s) | 476 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,450
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,289
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,761
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| புலியெதிர்ப்பு அரசியல் |
|
Posted by: kirubans - 05-27-2005, 11:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (30)
|
 |
அண்மையில் புதிசு சஞ்சிகையில் வந்த கட்டுரை ஒன்றில் உள்ள கேள்விகள். இக்களத்தில் வருபவர்களில் பெரும்பாலானோர் புலிகளின் (அதன் மூலம் தமிழ் தேசியத்தின்) ஆதரவாளர்கள் என்றே எண்ணுகிறேன். எனினும் உங்கள் பார்வையில் புலிஎதிர்ப்பாளர்களின் பதில்கள் எவ்வாறு இருக்கும் என்று எழுதங்களேன். நீங்கள் உண்மையிலேயே புலி எதிர்ப்பாளர் எனின் உங்கள் சொந்தக் கருத்துக்களயும் முன்வைக்கலாம்.
<b>புலியெதிர்ப்பு அரசியல் பிரிவினர் மக்களுக்காக எதுவும் செய்ய விரும்பின் அல்லது அவர்களை புரிந்துகொள்ள பின்வருவனவற்றுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும்.
1.புலிகளுக்கு மாறாக நீங்கள் முன்வைக்கும் மாற்று தலைமையின் வடிவம் தான் என்ன?
2.புலிகளை எதிர்க்கும் உங்கள் பொருளாதார வடிவம் தான் என்ன?
3.சிங்கள இனவாத அரசு பற்றிய உங்கள் நிலைப்பாடுகள் தான் என்ன?
4.ஏகாதிபத்தியம் பற்றி உங்கள் நிலைப்பாடு தான் என்ன?
5.அரசுசாராத தன்னார்வக் குழுக்கள் ஏகாதிபத்திய நலன்களை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் தான். இதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் தான் என்ன?
6.மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வு என்னவாக இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?
7.உங்கள் அரசியல் மற்றும் கருத்துகள் மக்கள் நலனுடன் எப்படி எந்த வகையில் இணங்கிப் போகின்றது.?
8.நீங்கள் எதைத்தான் செய்ய விரும்புகின்றீர்கள்?
9.மாற்றுக் கருத்து என்பது என்ன? அதனுடன் நீங்கள் எப்படி இணங்கி அல்லது விலகி போகிறீர்கள்?
10.ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் உடனான உங்கள் உறவுகள் என்ன? உலகளாவிய மக்களுடனான உங்கள் உறவு என்ன? இரண்டுடனும் ஒரேவிதமான உறவு இருக்கமுடியுமா?
இது போன்று எதார்த்தம் சார்ந்த விடையங்களில், உங்கள் கருத்துகள் தான் என்ன? இதற்கும் மக்களுக்கு என்ன உறவு உள்ளது என்பதை உரசிப் பார்க்க வேண்டுகோள் விடுகின்றோம்.
</b>
|
|
|
| இறந்த பின்............- கமலஹாசனிடமிருந்து ! |
|
Posted by: AJeevan - 05-26-2005, 04:09 PM - Forum: சினிமா
- Replies (5)
|
 |
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/kamal-200.jpg' border='0' alt='user posted image'>
<b>உங்களுக்கு ஒரு வேண்டுகோள்- கமலஹாசனிடமிருந்து</b>(ம்)!
சன் டிவியின் 'மே தின' சிறப்பு நிகழ்ச்சியில் கமல் அவர்கள் பேசியதைப் பார்த்திருப்பீர்கள்! இரண்டு வாரத்திற்கு முன் வந்த வந்த கல்கி பத்திரிகையில் அவரது பேட்டியையும் படித்திருப்பீர்கள்! இந்த இரண்டிலிருந்து மட்டுமல்ல; அண்மையில் அவர் கொடுத்த தெலுங்கு பத்திரிகைப் பேட்டியிலும் கூட, கமல் என்ற ஒரு கலைஞனின் மனதிற்குள்ளேயான தொழிலியல் நடைமுறை இயலாமைகளும் அவனது வாழ்வு மீதான அடக்குமுறைகளின் வீரியமும் வருத்தத்தின் விழிகளில் தொக்கி நின்றதை நம்மால் கண்டிருக்க முடியும். 'ஒரு சாதிக்கும் கலைஞனுக்கு சமுதாயத்தின் மரியாதைப் பங்களிப்பு இறப்புக்குப் பின் தானா இன்னும்' என்று இன்றும் வருத்தப்படவைக்கின்றன இவைகள்.
காந்தியைச் சுடச்சொல்லி ஆளனுப்பி காரியம் முடிந்தபின் அவருக்கு ஆங்காங்கு ஒரு சிலை வைத்துவிட்டோம். 'பாரதி' என்ற 'பா பைத்தியக்காரனுக்கு அன்று சாப்பாடு போடக்கூட விரும்பாமல் இறுதிக் காரியத்திலும் கூட இணைந்துகொள்ள அருவருத்து ஒதுங்கி நின்றுவிட்டு இன்று அவனைத் 'தேசியக்கவி' ஆக்கிவிட்டோம். அது யாரப்பா புதுமைப்பித்தனா? ரேஷன் கார்டு வைத்திருக்கிறாயா? இது யார் வலம்புரி ஜானா? உடம்புக்கு சரியில்லையின்னு ஆஸ்பத்திரிக்கி வரியேப்பா, கையில காசு வெச்சுருக்கியா? ஏய் தம்பி, குடும்பம் குட்டியெல்லாத்தையும் விட்டுபுட்டு வெள்ளக்காரனுக்கு குண்டு வெச்சி தூக்குல தொங்குறீயே? தேவையாவெ உனக்கு இது? பகத்சிங்காம் பகத்சிங்கு, பைத்தியசிங்கா நீ?
ஏம்பா முக்கோண வெண்தாடி நாதா, செவாலியேவெல்லாம் வாங்கியிருக்கியாமே, ஹிந்தி தெரியுமா உனக்கு? அது யாருப்பா அந்தப்பக்கம் மதிய உணவுத்திட்ட நாயகனா? வெட்டி வேலையப்பா உன்னது!
உங்களது கரங்கள் பெரியதாய் என்ன செய்துவிடப்போகின்றன? அடிக்கடி முதுகில் குத்தும் அல்லது ஒரே ஒருமுறை ஒருத்தருக்கு என, பல மலர் வளையங்கள் வைக்கும். உங்களது இதழ் எப்போது திறந்து மூடப்போகின்றன? மலர் வளையம் வைத்த கையோடு மைக் பிடிக்கும் உங்களுக்கு, இரண்டே இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து பேசுவதற்கு திறந்து மூடும்.
ஆயிரம் மலர் வளையங்களை விட ஒரே ஒரு மலர்மாலையும் மனம் நிறைந்த பாராட்டும் சாதிக்கக்கூடியவை எத்தனை எத்தனை நண்பர்களே!
இறந்த பின் மட்டும் வெளியில் காட்டுவதற்கென உங்கள் கைகளும் வாயும் இருந்தால் இனிமேல் அவை இரண்டும், அவற்றுக்கு(ம்) பயன்படாமல் போகட்டும்!
கல்கி பேட்டியிலிருந்து....
"தனிப்பட்ட முறையில் பிராமணர்கள் பால் எந்தவித காழ்ப்பும் பெரியாருக்கு இல்லை"
"பகுத்தறிவுப்பாதையை பெரியார் மட்டும் தான் கொண்டு வரவேண்டுமென்பதில்லை. சுபிட்சமே கொண்டு வரும்"
"மேஜை மீது கிடக்கிற தண்ணீரை தள்ளிவிட்டால் மற்றொரு பக்கம் போய்விடும். அப்படித்தான் மும்பை முழுவதுமே இப்போது தாராவியாகிவிட்டது"
"ஆபத்தின் விளிம்புவரை சென்று எட்டிப்பார்க்கும் ஒரு முனைப்பு எனக்கு எப்போதும் உண்டு."
"வர்த்தகக் கோட்பாடுகளிலிருந்து தமிழ் சினிமாவின் திரைக்கதையை மீட்டெடுக்கவில்லை. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட்! அதில் கொஞ்சம் தீவிரம் இருக்கத்தான் செய்யும்; கொஞ்சம் ரத்தம் கசியத்தான் செய்யும். நோ பெயின் நோ கெயின்! புத்தர் சொன்னதாக எடுத்துக்கொண்டாலும் சரி; ஆர்நால்டு சொன்னாலும் சரி. வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை! "
"இது ஒரு தொழிலாக வியாபாரமாக இருக்கும்போது, புரட்சிகளில் ஈடுபடும் தியாகம் என்னிடமில்லை."
"நேர்மை ஜெயிக்குமா என்று தெரியாது. ஆனால் நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை புரிய கொஞ்சம் நேரம் ஆகும். நேர்மமயானவனா இல்லையா என்பதை அவன் வாழ்ந்துதான் காட்டவேண்டும். அது ஒரு பெரிய கொடுமை!"
"மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கேட்காதே..அந்த மாற்றமாக நீயே மாறி விடு!
என்பார் காந்தி. நான் காந்தியின் மிகப்பெரிய ரசிகன். கொடுமை என்னவென்றால், காந்தியைப் பற்றி நான் தப்பாக படம் எடுத்தேன் என்கிறார்கள். காந்தியின் உருவத்தைச் சிதைக்கும் படமா ஹேராம்?"
"தமிழர்கள் எனக்கு கைதட்டாவிட்டாலும் பரவாயில்லை. இப்படி எதிர்பாராத நேரத்தில் அதுவும் பின்புரத்திலிருந்து பொறடியில் தட்டாமல் இருக்கலாம் இல்லையா? முதுகில் குத்துவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?"
"அழும் கோழைத்தனம் எனக்கு இல்லை. ஆனால் சிரிக்கும் பக்குவத்தை மட்டும் நான் இழந்துவிட்டேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்'
"கலைஞன் என்பவன் சாந்தமான மனநிலையில் இருந்துகொண்டு செயல்படவேண்டும். வேலை செய்கிற உச்சகட்டத்தில் என்னைத் தொந்தரவு பண்ணிவிட்டு, ஓய்வு பெறும்போது நீங்கள் பாராட்டுவது எனக்கு வேண்டாம்."
கடைசி வரிகள் நமக்கு மிகவும் முக்கியம் நண்பர்களே! இனிமேலும் இறந்த காலத்திற்காய் ஏங்காதீர்! நிகழ்காலத்தின் சக சாதனையளர்களை போற்றுங்கள், மதியுங்கள்!
எம்.கே.குமார்
நன்றி: கல்கி!
posted by எம்.கே.குமார்
|
|
|
| உளமெல்லாம் உவகை பொங்க |
|
Posted by: Paranee - 05-26-2005, 03:15 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (12)
|
 |
வணக்கம்
மீண்டும் பல திங்கள் கடந்து உங்களுடன் இணைந்துகொள்வதில் உளமெல்லாம் உவகை பொங்க காண்கின்றேன்.
விரைவில் கவியோடு வந்து உங்களுடன் சங்கமம் ஆகின்றேன்
நன்றி வணக்கம்
ந.பரணீதரன்
<img src='http://img.123greetings.com/thumbs/emar_spring_flowers/8184-003-10-1075.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| விவாகரத்துக்கு காரணம் என்ன??? |
|
Posted by: MUGATHTHAR - 05-26-2005, 03:13 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (61)
|
 |
<b> விவாகரத்துக்கு காரணம் என்ன??? </b>
அண்மைக்காலங்களில் எங்கள் தமிழ் சமுதாயத்திற்கிடையில் திருமணபந்தங்கள் கேள்விக்குறியாக மாறுகிறதன்மை அதிகரித்துள்ளது அதுதான் இந்த விவாகரத்துக்கள் எமது தமிழீழத்தில் இதுபோண்ற சம்பவங்கள் குறைவுதான் இருந்தாலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு போனவர்களிலும் . இந்திய தமிழ் சமூகத்திலும் இது பல்கிப் பெருகி காணப்படுகிறது. அண்மைக்கால கணிப்பீடுகளின்படி விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை தமிழ்சமூகத்தில் அதிகரித்துள்ளதாம். அதிலும் பெண்கள்தான் கூடுதலாக இதை கேட்டு குடும்ப நீதிமன்றங்களுக்கு போவதாகவும் கூறப்படுகிறது இந்திய தமிழ் சினிமா உலகில் சுகன்யா . நளினி . சீதா . பானுப்பிரியா . சொர்ணமாலியா என நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டு போவதால் இந்த விவாகரத்து கேடடு பிரிந்து வாழ்வதை ஒரு Fashian ஆக பெண்கள் கருதுகிறார்களோ தொpயவில்லை. இதற்கு என்ன காரணம்................................
ஒன்று இந்த சமுதாயம் பெண்களுக்கு கொடுத்துள்ள சுதந்திரம் அதிகம் என எண்ணத் தோன்றுகிறது இது அவர்களை ஆண்துனை இல்லாமல் தனித்து வாழ முடியும் எண்ட துணிவை அவா;களுக்கு கொடுத்திருக்கிறது
அல்லது
முன்னைய காலத்து ஆண்களை விட இப்பஉள்ள ஆண்கள் கொடூராமனவர்களாக இருக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகிறது
எனது அனுபவத்தில் இப்ப ஒரு ஆண் விவாகரத்துக் கேட்டு கோட்டுக்கு போனால் அவன் மனைவிக்காக நியாயம் கேட்க என ஒட்டு மொத்த சமூகமும் சேர்ந்து கொடி பிடிக்கும் { அதுக்குத் தான் வெட்டிப்பொழுது கழிக்கிற மாதர் சங்கங்களும் . பெண்கள் அமைப்புக்களும் இருக்கின்றனவே..} ஆனால் அதே நேரம் பெண் விவாகரத்துக் கேட்டு போனால் ஆண்களுக்காக கதைக்க ஒரு நாதியுமில்லை..
ஆண்களிலும் கடுமையானவர்கள் இருக்கிறார்கள்தான் இல்லாமல் இல்லை ஆனால் எமது தமிழ் பண்பாட்டில் மனைவியானவள் கணவனுக்காக தாயாக . தாரமாக நல்ல சினேகிதியாக எல்லா முறையிலும் நெருங்கி இருக்கிறாள் அப்படி பட்ட பெண் எந்த கெட்ட பழக்கமுள்ள ஆணையும் திருத்தி வாழ்க்கை நடத்த முடியும் அதிலும் ஒரு திறில் இருக்குதானே..(திருந்தாத ஜென்மங்கள் விதிவிலக்கு}
இதைவிட்டுவிட்டு எடுத்தேன் கவுத்தேன் எண்டு விவாகரத்து கேட்பது நல்லாவா இருக்கு???.....
என்ன பழசு அந்தகாலத்துக்கு ஏத்தாப் போல கதைக்குது நாங்கள் 21ம் நுறாண்டிலை இருக்கிறம் என சிலபேர் நினைக்கக் கூடும் நாங்கள் வெளித் தோற்றங்களால் வெளிநாட்டவர் போல மாறலாம் ஆன தமிழ் கலாச்சாரங்களை பேணுவது ஒவ்வொருவரின் கடமையில்லையா????????
சரி எங்கை உங்களின் கருத்துகளைப் பாப்பம்.....................
|
|
|
| கடந்து வந்த பாதைகளை... |
|
Posted by: தூயா - 05-26-2005, 01:55 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (11)
|
 |
வணக்கம் ,
தலைப்பு தொடங்குவதே தூயாவுக்கு வேலை என நினைத்தாலும் பரவாயில்லை. நான் இதை எழுதிதான் ஆகவேண்டும்.
உங்களில் பலருக்கு எமது போராட்டம் பற்றி தெரிந்து இருக்கிறது. என்னை போல பபாக்களுக்கு அவ்வளவாக தெரியாது. தற்போது நடப்பது மட்டுமே எமக்கு தெரியும்.
நாம் கடந்து வந்த பாதை.... இவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை எங்களுக்கும் கூறலாமே.
நான் இங்கு பல செய்திகள் வாசிக்கும் போது, சொல விடயங்கள் புரிவதில்லை. காரணம் வரலாறு தெரியாதமையே.
வாரம் ஒரு நிகழ்வோ, நினைவுகளோ...உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதலாமே.
உதாரணத்திற்கு, கிட்டு மாமா பற்றி எழுதலாம். அல்லது ஒரு சமர் பற்றி எழுதலாம். தற்போது நடப்பவற்றை தான் எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. முன்னர் நடந்தவை தெரியவில்லை , அதனாலே உங்களுடன் கருத்தாடல்களில் பங்கு பெற முடியவில்லை.
இல்லை எனில் "இன்றைய தினம்" அப்படி ஒரு தலைப்பு ஆரம்பித்து அண்ரைய நாளில் கடந்த வருடங்களில் நடந்தவற்றை எலுதலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
தங்கள் கருத்தை எலுதுங்கள்.
|
|
|
| பயணங்கள் மாறிடா...! |
|
Posted by: kuruvikal - 05-26-2005, 09:17 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
<img src='http://img279.echo.cx/img279/103/kuruvi67jb.jpg' border='0' alt='user posted image'>
<b>வாழ்வெனும் வீதியில் பயணம்
வழக்கங்கள் மாறா விதிகள்
வழமையானால் இல்லை அவதிகள்
வழமைக்கு மாறாய் விதிகள்
வடிவமைத்து வடிவாய் வாழினும்
வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..!
வழமை நாம் விரும்பினும்
வழமைகள் மாற்றி
வரும் வாகனங்கள் வீதியில் சகஜம்
வந்தவை தரும் விபத்துக்கள்
வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும்
வருமுன் காப்போம் விதிகள்...!
வந்த விதி வழி அப்பாவியாய்
வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால்
வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய்
வகை வகையாய் விபத்துக்கள்
வந்தவை எதுவும் புதிதல்ல
வருந்தவும் அங்கு இடமில்லை
வருந்த உன்னில் எதுவுமில்லை
வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம்
வாடா உன் முகம் என்றும் வேண்டும்
வரமது தந்திடு அரு மலரே...!
வசந்தம் வந்த வேளையில்
வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய்
வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன்
வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே
வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை
வரும் என் கை உன்னை நாடியே..!
வரும் மரணம் கூட
வழி மறிக்கா
வகையான அன்பு வழி
வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை
வருத்தமின்றி வா
வகையாய் குதூகலிப்போம்
வான வீதியில் வாழ்ந்திடும்
வண்ணச் சிட்டுக்களாய்....! </b>
|
|
|
| "நாயகன்" படத்திற்கு புது கௌரவம் ! |
|
Posted by: hari - 05-26-2005, 08:10 AM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
"நாயகன்" படத்திற்கு புது கௌரவம் !
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/mani-335.jpg' border='0' alt='user posted image'><img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/kamal-200.jpg' border='0' alt='user posted image'>
மணிரத்தினம் இயக்கி, கமல்ஹாசன் நடித்து, இசைஞானி இளையராஜாவின் அற்புத இசையில் உருவான நாயகன் படம், உலகின் தலைசிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக புகழ் பெற்ற "டைம்" பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை, கடந்த 1927ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரையில் உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு மொழிகளில் வெளியான தலை சிறந்த 100 திரைப்படங்களைத் தேர்வு செய்துள்ளது.
இந்த 100 படங்களில் கமல்ஹாசனின் நாயகனும் ஒன்று. இந்தப் படம் குறித்த டைம் பத்திரிக்கையின் குறிப்பில், ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களை பொறாமைப்பட செய்யும் வகையில், நாயகன் படத்தில் கதையை அமைத்திருந்தார் மணிரத்தினம். கதை சொல்லிய விதமும், ஒளிப்பதிவும் (பி.சி.ஸ்ரீராம்) மிக அருமையாக இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளது.
1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் கமல்ஹாசன், ஜனகராஜ், நாசர், சரண்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வேலு நாயக்கர் என்ற மும்பை தாதாவாக கமல்ஹாசன் நடித்திருந்தார். பி.சி. ஸ்ரீராமின் கேமராவும், இளையராஜாவின் இசையும், மணிரத்தினத்தின் இயக்கமும் சேர்ந்து படத்துக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. அது மட்டுமல்லாமல், கமல்ஹாசனுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகர் விருதையும் பெற்றுக் கொடுத்தது.
நாயகன் தவிர சத்யஜித்ரேயின் "அபு டிரையாலஜி", குரு தத்தின் "பியாசா" ஆகிய படங்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. டைம் பத்திரிக்கையின் இணையதளத்தில் 100 படங்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது.
மணிரத்தினத்தின் திரைப்படம் ஒன்று உலக அளவில் பேசப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே தளபதி படத்தில் இடம் பெற்ற "ராக்கம்மா கையைத் தட்டு' பாட்டு உலகின் தலை சிறந்த பாடலாக பிபிசி நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது நாயகன், உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ளது, தமிழ் சினிமாவுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.
உலக அளவில் அதிகம் பேசப்பட்ட, காஸாபிளான்கா, சைனா டவுன், ஈ.டி, தி காட்பாதர், லாரன்ஸ் ஆப் அராபியா, மெட்ரோபோலிஸ், சைக்கோ, ஷின்ட்லர்ஸ் லிஸ்ட், ஸ்டார் வார்ஸ், டாக்ஸி டிரைவர் உள்ளிட்ட படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
நன்றி:தட்ஸ்தமிழ்
http://www.time.com/time/2005/100movies/th...plete_list.html
http://www.time.com/time/2005/100movies/0,...nayakan,00.html
|
|
|
| ஜேர்மனி ஹம் கோயில் |
|
Posted by: Mathan - 05-26-2005, 07:44 AM - Forum: புலம்
- Replies (29)
|
 |
ஜேர்மனி ஹம் கோயில்
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/bilder2.jpg' border='0' alt='user posted image'>
படம் - தமிழமுதம்
ஜேர்மனி ஹம் நகரில் உள்ள இலங்கை தமிழர்களின் கோயில் குறித்து நண்பர்கள் உறவினர்கள் மூலம் அறிந்திருக்கின்றேன். அதன் வருடாந்திர திருவிழா அண்மையில் நடைபெற்றது என்று அறிந்தேன், இந்த திருவிழா மத நம்பிக்கைகளை தவிர்த்து ஜேர்மனியில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்று கூடும் தினமாகவும் இருப்பதாக சொன்னார்கள், கோயில் குறித்து மேலும் விபர்ங்கள் தெரிந்தவர்கள் அறிய தாருங்கள்
|
|
|
|