![]() |
|
500 சிறுவர்கள் மாயம் !!?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 500 சிறுவர்கள் மாயம் !!?? (/showthread.php?tid=4199) |
500 சிறுவர்கள் மாயம் !!?? - anpagam - 05-27-2005 தென் இலங்கையில் 500 சிறுவர்கள் மாயம்! - உடல் உறுப்புகளை வெட்டி விற்பதற்கு வார்த்தகர்களால் கடத்திசெல்லப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை 27 மே 2005 ஜ டி.சிவராம் ஆழிப்பேரலையில் உயிர் பிழைத்து ஒவ்வொரு இடங்களில் இருந்ததாகக் கூறப்படும் சுமார் 500 சிறுவர்கள் பற்றி எதுவித தகவல்களும் இல்லை என அச்சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் புகார் செய்துள்ளனர். கிடைக்கப் பெற்றிருக்கும் முறைப்பாடுகள் சம்பந்தமாக தாங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ள போதிலும் அதில் எந்தக் குழந்தையும் உயிருடன் இருப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைக்கவில்லை என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் பேராசிரியர் ஹரேந்திர சில்வா தெரிவித்தார். இவர்கள் சிறுநீர் உறுப்புகளை வெட்டி விற்பதற்கு வார்த்தகர்களால் கடத்திசெல்லப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை தங்காலை காலி மாகாலி ஆகிய பிரதேசங்களில் இருந்தே அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆழிப்பேரலைக்குப் பின்னர் இச்சிறுவர்கள் உயிர் வாழ்ந்துள்ளதாக பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் இவர்கள் பற்றிய எந்த தகவலும் இப்பகுதி பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என காணாமல் போன சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தாங்கள் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சிறுவர்கள் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ளும் சில நிலையங்களில் இச்சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக இந்தப் பெற்றோரும் உறவினர்களும் தெரிவிக்கின்றனர். எனினும் அவ்வாறான எந்தவொரு சிறுவர்களையும் தங்களின் பாதுகாப்பில் இல்லை என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஹரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆழிப்பேரலையில் தமது தாயையோ தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்த சிறுவர்கள் பற்றிய கணக்கெடுப்பினை நடத்தி அறிக்கை சமர்ப்பித்ததைத் தவிர அவர்களை எந்தவொரு நிறுவனத்தினதும் பொறுப்பில் தாங்கள் விடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் தமது அதிகாரசபை பாதிக்கப்பட்ட சிறுவர்களை வைத்திருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுவதில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். செய்தி நிதர்சனம் :? hock: hock: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
- tamilini - 05-27-2005 அடப்பாவிகளா எங்கை என்று திரியிறாங்களா. 500 எங்க இந்த சிறுவர் ஐக்கியநாடுகளின் சிறுவர் அமைப்பு நித்திரையா இப்ப :evil: :evil: :twisted: - kuruvikal - 05-27-2005 tamilini Wrote:அடப்பாவிகளா எங்கை என்று திரியிறாங்களா. 500 எங்க இந்த சிறுவர் ஐக்கியநாடுகளின் சிறுவர் அமைப்பு நித்திரையா இப்ப :evil: :evil: :twisted: அதுக்கு புலி என்றாத்தான் தூக்கம் கலையுமாம்..! :twisted:
- MUGATHTHAR - 05-27-2005 tamilini Wrote:அடப்பாவிகளா எங்கை என்று திரியிறாங்களா. 500 எங்க இந்த சிறுவர் ஐக்கியநாடுகளின் சிறுவர் அமைப்பு நித்திரையா இப்ப :evil: :evil: :twisted: இண்டைக்கு ஒருசிங்களப் பத்திரிகையில் போட்டிருந்தது கடந்த 4 மாதங்களில் 137 சிறுவா;கள் புலிகளுடன் ணைந்துள்ளார்களாம் இதுகளைத்தான் தலைப்புச் செய்திகளாக போடுவினம் - vasisutha - 05-27-2005 நல்லாத்தான் செய்தி சொல்றீங்கள்.. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பது இதை தானோ? :roll: :roll: |