Yarl Forum
விவாகரத்துக்கு காரணம் என்ன??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: விவாகரத்துக்கு காரணம் என்ன??? (/showthread.php?tid=4203)

Pages: 1 2 3 4

விவாகரத்துக்கு காரணம் என்ன??? - MUGATHTHAR - 05-26-2005

<b> விவாகரத்துக்கு காரணம் என்ன??? </b>

அண்மைக்காலங்களில் எங்கள் தமிழ் சமுதாயத்திற்கிடையில் திருமணபந்தங்கள் கேள்விக்குறியாக மாறுகிறதன்மை அதிகரித்துள்ளது அதுதான் இந்த விவாகரத்துக்கள் எமது தமிழீழத்தில் இதுபோண்ற சம்பவங்கள் குறைவுதான் இருந்தாலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு போனவர்களிலும் . இந்திய தமிழ் சமூகத்திலும் இது பல்கிப் பெருகி காணப்படுகிறது. அண்மைக்கால கணிப்பீடுகளின்படி விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை தமிழ்சமூகத்தில் அதிகரித்துள்ளதாம். அதிலும் பெண்கள்தான் கூடுதலாக இதை கேட்டு குடும்ப நீதிமன்றங்களுக்கு போவதாகவும் கூறப்படுகிறது இந்திய தமிழ் சினிமா உலகில் சுகன்யா . நளினி . சீதா . பானுப்பிரியா . சொர்ணமாலியா என நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டு போவதால் இந்த விவாகரத்து கேடடு பிரிந்து வாழ்வதை ஒரு Fashian ஆக பெண்கள் கருதுகிறார்களோ தொpயவில்லை. இதற்கு என்ன காரணம்................................

ஒன்று இந்த சமுதாயம் பெண்களுக்கு கொடுத்துள்ள சுதந்திரம் அதிகம் என எண்ணத் தோன்றுகிறது இது அவர்களை ஆண்துனை இல்லாமல் தனித்து வாழ முடியும் எண்ட துணிவை அவா;களுக்கு கொடுத்திருக்கிறது
அல்லது
முன்னைய காலத்து ஆண்களை விட இப்பஉள்ள ஆண்கள் கொடூராமனவர்களாக இருக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகிறது

எனது அனுபவத்தில் இப்ப ஒரு ஆண் விவாகரத்துக் கேட்டு கோட்டுக்கு போனால் அவன் மனைவிக்காக நியாயம் கேட்க என ஒட்டு மொத்த சமூகமும் சேர்ந்து கொடி பிடிக்கும் { அதுக்குத் தான் வெட்டிப்பொழுது கழிக்கிற மாதர் சங்கங்களும் . பெண்கள் அமைப்புக்களும் இருக்கின்றனவே..} ஆனால் அதே நேரம் பெண் விவாகரத்துக் கேட்டு போனால் ஆண்களுக்காக கதைக்க ஒரு நாதியுமில்லை..
ஆண்களிலும் கடுமையானவர்கள் இருக்கிறார்கள்தான் இல்லாமல் இல்லை ஆனால் எமது தமிழ் பண்பாட்டில் மனைவியானவள் கணவனுக்காக தாயாக . தாரமாக நல்ல சினேகிதியாக எல்லா முறையிலும் நெருங்கி இருக்கிறாள் அப்படி பட்ட பெண் எந்த கெட்ட பழக்கமுள்ள ஆணையும் திருத்தி வாழ்க்கை நடத்த முடியும் அதிலும் ஒரு திறில் இருக்குதானே..(திருந்தாத ஜென்மங்கள் விதிவிலக்கு}
இதைவிட்டுவிட்டு எடுத்தேன் கவுத்தேன் எண்டு விவாகரத்து கேட்பது நல்லாவா இருக்கு???.....
என்ன பழசு அந்தகாலத்துக்கு ஏத்தாப் போல கதைக்குது நாங்கள் 21ம் நுறாண்டிலை இருக்கிறம் என சிலபேர் நினைக்கக் கூடும் நாங்கள் வெளித் தோற்றங்களால் வெளிநாட்டவர் போல மாறலாம் ஆன தமிழ் கலாச்சாரங்களை பேணுவது ஒவ்வொருவரின் கடமையில்லையா????????

சரி எங்கை உங்களின் கருத்துகளைப் பாப்பம்.....................

- Niththila - 05-26-2005

அப்பு எனது தொழிலில் இப்படி விவாகரத்து கேட்டு வரும் பல பெண்கள் சொல்லும் காரணம் ஈகோ மற்றும் பாலியல் துன்புறுத்தல் இது தமிழ் பெண்கள் மட்டுமல்ல பொதுவாக எல்லா சமுக பெண்களும் சொல்லுற காரணம்.

இப்ப விரிவா எழுத நேரமில்லை. வீட்டுககு போய் எழுதுறன். :|

- தூயா - 05-26-2005

காலம் காலமாக "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசம் "என சொல்லிய பெண், திடீரென மாறி இருக்கிறாள் [இதில எத்தனை பேர் மாறினார்கள் என்பது அடுத்த கதை] என்றால் , காரணத்தை தேட வேண்டும். ஒரு இனத்தை சாடுவது தவறு.

- kuruvikal - 05-26-2005

பெண்களுக்குத் தங்களை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும் தங்களுக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும்தான் ஓங்கி இருக்கிறதே தவிர.. ஒரு ஆண் தன்னிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறான்..ஏன் ஒன்றைச் செய்கின்றான் அதில் என்ன நியாயம் இருக்கின்றது என்பதை ஆராய எந்தப் பெண்ணும் தயாராக இல்லை...! இதுதான் புரிந்துணர்வின்மைக்கும் விவாகரத்துக்கும் பெரும்பாலும் வழிகோலுகின்றது என்பதே உண்மை...! இதைத் தவிர்க்க ஒன்றில் ஆண்கள் வாழ்வியல் தியாகங்களைச் செய்ய வேண்டும்..இல்லை பெண்களிடம் வளர்ந்து வரும் தங்கள் சுயபார்வையிலான நியாயங்கள் கற்ப்பித்தல் விலக்கப்பட்டு அவர்கள் அறிவுபூர்வமானதாக யதார்த்தம் நோக்கியதாக தங்கள் பார்வையை ஆராய்ந்து வெளியிடக் கற்றுக்கொள்ள வேண்டும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- tamilini - 05-26-2005

ஏன் ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருக்க முடியாதவையுடன் வாழ்ந்து என்னத்தை சாதிக்கிறதுங்க..?? :wink:

- stalin - 05-26-2005

tamilini Wrote:ஏன் ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருக்க முடியாதவையுடன் வாழ்ந்து என்னத்தை சாதிக்கிறதுங்க..?? :wink:
அதுதானே........................................ஸ்ராலின்

- stalin - 05-26-2005

எனக்கொரு சந்தேகம் திருமணம் அமைப்பு முறை ,சடங்கு உலகில் எந்த காலகட்டத்தில் ஏற்பட்டது? ஆதாம் ஏவாள் திருமணம் செய்தவர்களா-- -----------------------------------------------------------ஸ்ராலின்

- MUGATHTHAR - 05-26-2005

Quote: எனக்கொரு சந்தேகம் திருமணம் அமைப்பு முறை ,சடங்கு உலகில் எந்த காலகட்டத்தில் ஏற்பட்டது? ஆதாம் ஏவாள் திருமணம் செய்தவர்களா

தம்பி உம்மைப் போன்ற ஆட்களிட்டை இந்தக் கேள்வியைக் கேட்டது தப்புதான் நாங்கள் இங்கை கதைக்கிற விசயம் தமிழ் சமூகத்தில் ஏன் முன்னையவிட இப்ப விவாகரத்துக்கள் கூடி இருக்கு என்பதுதான் நீர் வெள்ளைகார வாழ்க்கையை இதுக்குள்ளை கொண்டு வாரீர் திருமணபந்தம் எமது ஆசியாவில் அதுவும் இந்தியா இலங்கையில் தான் சரியாக பேணப்படுகிறது என மேல்நாட்டவர்களே வியந்து பாராட்டி உள்ள நிலையில் திருமணம் ஏன் எண்டு கேக்கிறீர் உமது பேருக்கு எற்றாப்போல வாழ்க்கை முறையையும் மாற்றி இருக்கிறீர் போல கிடக்கு சந்தோஷம்.................

- stalin - 05-26-2005

MUGATHTHAR Wrote:

ஏன் முகத்தார் என்னை இப்படிபேசுறீங்கள்-----------------------------------------விவாகரத்தை பற்றி கதைக்க முற்படும்போது தோற்றம் வளர்ச்சி நிறைகள் குறைகள் மற்றும் ஆண் பெண் இருபாலாரின் குணாதிசியங்கள் சமூக கட்டமைப்பின் ஆதிக்கங்கள் பொருளாதர அடிப்படையின் தன்மை திருமண சம்பிராதையங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்குரிய விவாத எடுகோள்களாக தான் கூறீனேன்----------------------------DAVID PETER DANIAL RICHARD STALIN பெயருடைய தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழ் திருமண முறைப்படி தாலி கட்டித்தான் திருமணம் செய்பவர்கள் என்று உங்களுக்கு தெரியாது போலை----பெயரை வைச்சு அப்படி இப்படியென்று நிக்கிறியள்---------------------------உங்கட கதையைப்பார்த்தால் நோய்க்கு திறமான மருந்து இருக்கு ஆள் தப்பாது என்று சொல்ற மாதிரி இருக்கு---------------------------------STALIN :evil: :evil:

- sinnappu - 05-27-2005

Niththila Wrote:அப்பு எனது தொழிலில் இப்படி விவாகரத்து கேட்டு வரும் பல பெண்கள் சொல்லும் காரணம் ஈகோ மற்றும் பாலியல் துன்புறுத்தல் இது தமிழ் பெண்கள் மட்டுமல்ல பொதுவாக எல்லா சமுக பெண்களும் சொல்லுற காரணம்.

இப்ப விரிவா எழுத நேரமில்லை. வீட்டுககு போய் எழுதுறன். :|

<b>என்ன லோயர் அம்மா கேசுவள் குமியுது போல எனக்கும் ஒரு உதவி உவள் சின்னாச்சிட்டை இருந்து ......... வாங்கித்தா பிள்ளை</b>

குத்தியன் ்இல்லைத்தானே இங்கை
:oops: :oops: :oops: :oops: :oops:

- kirubans - 05-27-2005

இங்கு விவாகரத்திற்கு எதிராக பல கருத்துக்களை வைப்பவர்கள் நித்திலா கூறிய கருத்தையும் பற்றி சிந்திக்கலாமே. பெரும்பாலான தமிழ் ஆண்கள் எப்போதும் பெண் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்கள் (இது வன்முறை சார்ந்த அடக்குமுறை மட்டுமல்ல, கருத்தியல் சார்ந்ததும்தான்). வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்களும் தங்கள் சொந்தக்காலில் நிற்பதால் ஊர் மாதிரி அடங்கி ஒடுங்கத் தேவையில்லை. பிரச்சினையின் வேர் என்னவென்று ஆராயாமல் எப்படியாவது பெண்களை விவாகரத்து கேட்காமல் பண்ணி அடங்கி ஒடுக்க இருக்க சமூகம், கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் துணைக்கு இழுக்கிறீர்கள்.

ஒன்று மட்டும் உண்மை. என்னதான் நாங்கள் இங்கு கருத்தெழுதி விவாதம் செய்தாலும், நாங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எங்களை நாங்களே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான்.

விவாகரத்துக்கள் அதிகரிக்கும். திருமணத்துக்கு முன்னர் ஆண்களும், பெண்களும் ஐரோப்பியர்போல கூடிவாழ்வர். பிடிக்காவிடில் பிரிந்து இன்னுமொருவரைத் தேடுவர். இதற்குக் கூப்பாடு போட்டுப் பிரயோசனமில்லை. சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த விடயங்களைப் பற்றி அலசி ஆராய தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பணி செய்ய முன்வரவேண்டும்.

- kuruvikal - 05-27-2005

<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin-->இங்கு விவாகரத்திற்கு எதிராக பல கருத்துக்களை வைப்பவர்கள் நித்திலா கூறிய கருத்தையும் பற்றி சிந்திக்கலாமே. பெரும்பாலான தமிழ் ஆண்கள் எப்போதும் பெண் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்கள் (இது வன்முறை சார்ந்த அடக்குமுறை மட்டுமல்ல, கருத்தியல் சார்ந்ததும்தான்). வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்களும் தங்கள் சொந்தக்காலில் நிற்பதால் ஊர் மாதிரி அடங்கி ஒடுங்கத் தேவையில்லை. பிரச்சினையின் வேர் என்னவென்று ஆராயாமல் எப்படியாவது பெண்களை விவாகரத்து கேட்காமல் பண்ணி அடங்கி ஒடுக்க இருக்க சமூகம், கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் துணைக்கு இழுக்கிறீர்கள்.

ஒன்று மட்டும் உண்மை. என்னதான் நாங்கள் இங்கு கருத்தெழுதி விவாதம் செய்தாலும், நாங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எங்களை நாங்களே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான்.

<b>விவாகரத்துக்கள் அதிகரிக்கும். திருமணத்துக்கு முன்னர் ஆண்களும், பெண்களும் ஐரோப்பியர்போல கூடிவாழ்வர். பிடிக்காவிடில் பிரிந்து இன்னுமொருவரைத் தேடுவர். இதற்குக் கூப்பாடு போட்டுப் பிரயோசனமில்லை. சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த விடயங்களைப் பற்றி அலசி ஆராய தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பணி செய்ய முன்வரவேண்டும்.</b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

விலங்குக்கு சனத்தொகையைக் கட்டுப்படுத்த இயற்கையாகவே காலத்துடன் பாலியலுக்கான கட்டுப்பாடுகள் இருக்கு.. அதைவிட சூழல்காரணிகளும் அதற்கு உதவுகின்றன..! மனிதனில் அவை வெவ்வேறு வடிவங்களில் இருந்தன... இருக்கின்றன...! அதில் ஒன்று பகுத்தறிவு...! பகுத்தறிவை சில சமூகங்கள் கலாசாரம் பண்பாடு விழுமியம் என்று அறிவூட்டல் நடைமுறை நெறிகள் கொண்டு சீர்படுத்துகின்றன...! இல்லை... அந்த வரம்புக்களுக்குள் நிற்க முடியாது நான் மனித விலங்காட்டம் அலைவன் என்றதுகள என்ன செய்ய முடியும்...அப்படி அலையவிடும் நிலைதான் மேற்குலகில இருக்கு..காரணம் இரண்டாம் உலகமகா யுத்தம் தந்த விளைவுகளில் அதுவும் ஒன்றானதால்...! பிறகு அதுகளுக்கு தடுப்புக்களும் விளைவுகளுக்கு பரிகாரமும் தேட ஒரு கூட்டமும் இருக்கும்..இவை அவசியமா எங்கட சின்ன சீராய் வாழ்ந்த சமூகத்துக்கு...! இப்படியான விளைவுகள்... ஒட்டுமொத்த சமூகக் கட்டமையையே மாற்றிச் சீர்குலைக்குமே அன்றி சீர்படுத்தாது...! பிறகு அப்பா பெயர் இல்லாததுகளும்.. அதுகளைக் கண்டுபிடிக்க திரிசா சோக்களும்... 12 வயசில பிள்ளையும் குட்டியுமா அலையுறதுகளும்... அதுக்கு கவுண்சில் வீடுகளும் வசதிகளும்.. பள்ளிக்கூட வயசில உள்ள கிறைம் எல்லாம் செய்யுறதுகளும்...மிஞ்சும் தாராளம்... பெரிய மேற்குலக சுதந்திரம் பேசினம்...லண்டனில இருக்கிறவை அவையின்ர பெண்பிள்ளைகளை இரவு 9:00 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வெளிய விடட்டுபாப்பம்...! ஏன் பூட்டி வைக்கினம் சுதந்திர தேசத்தில....யாரை ஏய்க்கிறியள்...சுதந்திரம் என்று...!

ஈழத்தில் பெண் சமூக சமத்துவம் பற்றி சிந்திப்பவர்கள்...இப்படியான் மனித பகுத்தறிவுக்கு கீழான செயற்பாடுகளை ஊக்குவிப்பதில்லை..! இது முழுக்க முழுக்க மனிதன் விலங்கு நிலையில் இருந்து கொண்டு கட்டுப்பாடற்ற தனது இச்சைகளுக்கு தீர்வு தேடும் நிலையே...! இவை எமது சமூகத்துக்கு அவசியமில்லை...புடுக்குப்பட்டாலும் அடிபட்டாலும் எங்கள் ஆண்களும் பெண்களும் பகுத்தறிவோட மனிதனா சந்தோசத்தோட திருப்தியோட வாழக்கூடிய நிலையிலையே இன்னும் இருக்கிறார்கள்...அதை மேற்குலக சுதந்திரம் என்ற போர்வையில் சீரழிக்காதீர்கள்...! அவனுக்கு அரசியல் வர்த்தக தளம் அமைக்காதீர்கள்...! சும்மா சோகுவராவின் படத்தைப் போட்டாப் போல சிந்தனைகளும் அவனைப் போன்றதா...எங்கோ பிறந்து எங்கோ அடிமைத்தனத்தை...அதுவும் மேற்குலக ஆதிக்கத்தனத்தை அகற்றப் புறப்பட்டவனின்...படத்துக்கு முன்னால படைக்கிற கருத்துக்கள்...இவையா....???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- sathiri - 05-27-2005

[quote="kirubans"]இங்கு விவாகரத்திற்கு எதிராக பல கருத்துக்களை வைப்பவர்கள் நித்திலா கூறிய கருத்தையும் பற்றி சிந்திக்கலாமே. பெரும்பாலான தமிழ் ஆண்கள் எப்போதும் பெண் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்கள் (இது வன்முறை சார்ந்த அடக்குமுறை மட்டுமல்ல, கருத்தியல் சார்ந்ததும்தான்). வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்களும் தங்கள் சொந்தக்காலில் நிற்பதால் ஊர் மாதிரி அடங்கி ஒடுங்கத் தேவையில்லை. பிரச்சினையின் வேர் என்னவென்று ஆராயாமல் எப்படியாவது பெண்களை விவாகரத்து கேட்காமல் பண்ணி அடங்கி ஒடுக்க இருக்க சமூகம், கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் துணைக்கு இழுக்கிறீர்கள்.

ஒன்று மட்டும் உண்மை. என்னதான் நாங்கள் இங்கு கருத்தெழுதி விவாதம் செய்தாலும், நாங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எங்களை நாங்களே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான்.

விவாகரத்துக்கள் அதிகரிக்கும். திருமணத்துக்கு முன்னர் ஆண்களும், பெண்களும் ஐரோப்பியர்போல கூடிவாழ்வர். பிடிக்காவிடில் பிரிந்து இன்னுமொருவரைத் தேடுவர். இதற்குக் கூப்பாடு போட்டுப் பிரயோசனமில்லை. [quote]சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த விடயங்களைப் பற்றி அலசி ஆராய தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பணி செய்ய முன்வரவேண்டும்.[/[/quote]quote]இதுக்கும் தொண்டு நிறுவனமா????

- kirubans - 05-27-2005

kuruvikal Wrote:சும்மா சோகுவராவின் படத்தைப் போட்டாப் போல சிந்தனைகளும் அவனைப் போன்றதா...எங்கோ பிறந்து எங்கோ அடிமைத்தனத்தை...அதுவும் மேற்குலக ஆதிக்கத்தனத்தை அகற்றப் புறப்பட்டவனின்...படத்துக்கு முன்னால படைக்கிற கருத்துக்கள்...இவையா....???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

நடைமுறையிலுள்ளதைத்தான் சொன்னேன். நடக்கப்போவதைத் சொன்னேன். இந்தத் தலைப்பே ஏன் வந்தது? விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளன என்பதால்தான்.

இப்போதைய இளவட்டங்களைப் பாருங்கள். கூடிவாழ்வது இப்போதே தொடங்கிவிட்டது என்றுதான் எண்ணுகிறேன். 9 மணிக்குப் பின் வீட்டுக்குள் நிற்க வேண்டும் என்பது எல்லா இடமும் நடைபெறாது. மேற்படிப்புக்காக செல்லுபவர்கள் தங்கள் வீடுகளில் இருப்பதில்லை, வெளியில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தமிழ் பண்பாடு வீட்டில் பெற்றோருக்கு முன்னிலையில் மட்டும்தான்.

தமிழ் கலாச்சாரம் பண்பாடு என்றவற்றில் தெளிவுள்ளவர்கள் எத்தனை பேருள்ளனர். தெரியாதவர்கள்தான் அதிகம்.

சேலை அணிவதும், தமிழில் பேசுவதும், பரதம், மிருதங்கம் பழகுவதும் எம்மைத் தமிழர் என்று ஆக்கிவிடா. இவை ஒரு தமிழர் என்ற அடையாளத்தை மட்டுமே தரும்.

எமது சமூகத்துக்கெனப் பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்க்க தற்போதே முயற்சிக்க வேண்டும். இவற்றை தனிய யாழ் களத்தில் மட்டும் கதைத்துப் பிரயோசனமில்லை. இங்கு நாம் ஒன்றில் இப்படியான பிரச்சினைகளை நீக்கி ஊரில் இருந்ததுபோல் இருக்கவேண்டும் என்று விவாதிப்போம், அல்லாவிடில் புலத்தில் நடைபெறும் பிரச்சினைகளை ருசிகரமாக கிசுகிசுபாணியில் எழுத்தித் தள்ளுவோம்.

யாராவது தீர்வு என்று ஏதாவது சொல்லியிருக்கிறீர்களா? பிரச்சினைகளின் வேரை அறியாமல் சும்மா குருட்டு விவாதம் புரிந்து விவாத்தில் வென்றுவிட்டுப் போகலாம். இதனால் உங்கள் அறிவை நீங்களே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான் (பக்கப் பாட்டிற்கும் சிலர் வருவார்கள்).

சமூகத்தில் அக்கறை உள்ள நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டு எமது பண்பாட்டின் பெருமையையும், கலாச்சாரத்தின் சிறப்பையும் பிரச்சாரம் செய்ய முன்வரவேண்டும்., முக்கியமாக இளையோரை தமிழ் பண்பாட்டில் தெளிவுள்ளவர்களாக மாற்றவேண்டும் (அவர்கள்தான் வருங்காலத்தில் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கப் போகிறவர்கள்).

ஆக்கபூர்வமான முயற்சிகளில் புலத்தில் யாராவது, அல்லது எந்த நிறுவனமாவது ஈடுபடுகின்றதா? சமய நிறுவனங்கள் என்பவை, தமது இலாபத்தில் மட்டும் குறியாக இருக்கின்றன. அவை சமயத்தையோ, தமிழ் பண்பாட்டையோ பிரச்சாரம் செய்வதில்லை.
அதுபோல தமிழ் தொண்டு நிறுவங்கள் (charities) தமிழர் பெயரில் தங்கள் வயிறுகளை வளர்க்கின்றன. சுயநலப் போக்கற்றுப் பணியாற்ற முன்வருபவர்களால்தான் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்.

இல்லாவிடில் ஐரோப்பிய வலங்களில் கிசுகிசுக்களும், தமிழரின் வன்முறைகளும்தான் செய்திகளாக வரும். சிலர் எமது சமூகம் இப்படியாகிவிட்டதே என்று இரண்டு சொட்டுக் கண்ணீரைச் சிந்திவிட்டு, மறுபடியும் தத்தமது வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள்.

- kuruvikal - 05-27-2005

kirubans Wrote:இங்கு விவாகரத்திற்கு எதிராக பல கருத்துக்களை வைப்பவர்கள் நித்திலா கூறிய கருத்தையும் பற்றி சிந்திக்கலாமே. பெரும்பாலான தமிழ் ஆண்கள் எப்போதும் பெண் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்கள் (இது வன்முறை சார்ந்த அடக்குமுறை மட்டுமல்ல, கருத்தியல் சார்ந்ததும்தான்). வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்களும் தங்கள் சொந்தக்காலில் நிற்பதால் ஊர் மாதிரி அடங்கி ஒடுங்கத் தேவையில்லை. பிரச்சினையின் வேர் என்னவென்று ஆராயாமல் <b>எப்படியாவது பெண்களை விவாகரத்து கேட்காமல் பண்ணி அடங்கி ஒடுக்க இருக்க சமூகம், கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் துணைக்கு இழுக்கிறீர்கள்</b>.

ஒன்று மட்டும் உண்மை. என்னதான் நாங்கள் இங்கு கருத்தெழுதி விவாதம் செய்தாலும், நாங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எங்களை நாங்களே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான்.

விவாகரத்துக்கள் அதிகரிக்கும். திருமணத்துக்கு முன்னர் ஆண்களும், பெண்களும் ஐரோப்பியர்போல கூடிவாழ்வர். பிடிக்காவிடில் பிரிந்து இன்னுமொருவரைத் தேடுவர். இதற்குக் கூப்பாடு போட்டுப் பிரயோசனமில்லை. சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த விடயங்களைப் பற்றி அலசி ஆராய தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பணி செய்ய முன்வரவேண்டும்.

kirubans Wrote:
kuruvikal Wrote:சும்மா சோகுவராவின் படத்தைப் போட்டாப் போல சிந்தனைகளும் அவனைப் போன்றதா...எங்கோ பிறந்து எங்கோ அடிமைத்தனத்தை...அதுவும் மேற்குலக ஆதிக்கத்தனத்தை அகற்றப் புறப்பட்டவனின்...படத்துக்கு முன்னால படைக்கிற கருத்துக்கள்...இவையா....???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

நடைமுறையிலுள்ளதைத்தான் சொன்னேன். நடக்கப்போவதைத் சொன்னேன். இந்தத் தலைப்பே ஏன் வந்தது? விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளன என்பதால்தான்.

இப்போதைய இளவட்டங்களைப் பாருங்கள். கூடிவாழ்வது இப்போதே தொடங்கிவிட்டது என்றுதான் எண்ணுகிறேன். 9 மணிக்குப் பின் வீட்டுக்குள் நிற்க வேண்டும் என்பது எல்லா இடமும் நடைபெறாது. மேற்படிப்புக்காக செல்லுபவர்கள் தங்கள் வீடுகளில் இருப்பதில்லை, வெளியில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தமிழ் பண்பாடு வீட்டில் பெற்றோருக்கு முன்னிலையில் மட்டும்தான்.

தமிழ் கலாச்சாரம் பண்பாடு என்றவற்றில் தெளிவுள்ளவர்கள் எத்தனை பேருள்ளனர். தெரியாதவர்கள்தான் அதிகம்.

சேலை அணிவதும், தமிழில் பேசுவதும், பரதம், மிருதங்கம் பழகுவதும் எம்மைத் தமிழர் என்று ஆக்கிவிடா. இவை ஒரு தமிழர் என்ற அடையாளத்தை மட்டுமே தரும்.

எமது சமூகத்துக்கெனப் பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்க்க தற்போதே முயற்சிக்க வேண்டும். இவற்றை தனிய யாழ் களத்தில் மட்டும் கதைத்துப் பிரயோசனமில்லை. இங்கு நாம் ஒன்றில் இப்படியான பிரச்சினைகளை நீக்கி ஊரில் இருந்ததுபோல் இருக்கவேண்டும் என்று விவாதிப்போம், அல்லாவிடில் புலத்தில் நடைபெறும் பிரச்சினைகளை ருசிகரமாக கிசுகிசுபாணியில் எழுத்தித் தள்ளுவோம்.

யாராவது தீர்வு என்று ஏதாவது சொல்லியிருக்கிறீர்களா? பிரச்சினைகளின் வேரை அறியாமல் சும்மா குருட்டு விவாதம் புரிந்து விவாத்தில் வென்றுவிட்டுப் போகலாம். இதனால் உங்கள் அறிவை நீங்களே மெச்சிக் கொள்ளவேண்டியதுதான் (பக்கப் பாட்டிற்கும் சிலர் வருவார்கள்).

சமூகத்தில் அக்கறை உள்ள நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டு எமது பண்பாட்டின் பெருமையையும், கலாச்சாரத்தின் சிறப்பையும் பிரச்சாரம் செய்ய முன்வரவேண்டும்., முக்கியமாக இளையோரை தமிழ் பண்பாட்டில் தெளிவுள்ளவர்களாக மாற்றவேண்டும் (அவர்கள்தான் வருங்காலத்தில் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கப் போகிறவர்கள்).

ஆக்கபூர்வமான முயற்சிகளில் புலத்தில் யாராவது, அல்லது எந்த நிறுவனமாவது ஈடுபடுகின்றதா? சமய நிறுவனங்கள் என்பவை, தமது இலாபத்தில் மட்டும் குறியாக இருக்கின்றன. அவை சமயத்தையோ, தமிழ் பண்பாட்டையோ பிரச்சாரம் செய்வதில்லை.
அதுபோல தமிழ் தொண்டு நிறுவங்கள் (charities) தமிழர் பெயரில் தங்கள் வயிறுகளை வளர்க்கின்றன. சுயநலப் போக்கற்றுப் பணியாற்ற முன்வருபவர்களால்தான் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்.

இல்லாவிடில் ஐரோப்பிய வலங்களில் கிசுகிசுக்களும், தமிழரின் வன்முறைகளும்தான் செய்திகளாக வரும். சிலர் எமது சமூகம் இப்படியாகிவிட்டதே என்று இரண்டு சொட்டுக் கண்ணீரைச் சிந்திவிட்டு, மறுபடியும் தத்தமது வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள்.

கிருபன்ஸ் நீங்கள் முதல் சொல்ல வந்த முறைக்கும் பின் அதே கருத்தைச் சொன்ன முறைக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது...! முதலாவதில் நீங்களே தமிழர் கலாசாரம் பண்பாட்டை விழுமியத்தை ஏற்றுக்கொள்ளாதது போல அடக்குமுறைக்குத்தான் அவை சரி என்றீர்கள்.... பிற்பாடு அதுவே தமிழர்கள் என்றாவது அடையாளம் காட்ட உதவும் என்கிறீர்கள்..! உங்களுக்குள்ளேயே இந்தளவுக்கு ஒரு குழப்பம் இருக்கும் போது.. மேற்குலக நாகரிகமே உயர்ந்தது என்ற குழப்ப சிந்தனையையே தாயகத்தில் கூட வலுவாக்கி வாழ்ந்து கொண்டிருந்த தமிழர் வாரிசுகள் மேற்கில் வாழும் போது மட்டும் எப்படி தமிழர் பண்பாடு கலாசாரம் அவை தரும் விழுமியங்கள் பற்றி சிந்திப்பர்....! அவர்களின் சிந்தனையை தெளிவூட்ட கருத்துக்கள் விதைக்கப்படுதல் அவசியம்...அதை இக்களமும் செய்யும்...நிச்சயம்... குறைந்தது நாங்களாவது சிந்தனையை சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளவாவது உதவும்...!

லண்டனில் அம்மா சேலை கட்டுவா என்றா பிள்ளை ஜீன்ஸ் போடும்...அம்மா ஜீன்ஸ் போட்டா என்றா பிள்ளை அம்மணமாப் போகும்..இதுதான் அவை கண்டிருக்கும் கலாசார மாற்றம்...அம்மணமாப் போறதோ...இல்லை கண்டதோட கூடிட்டு விட்டிட்டு வாறதோ நாகரிகம் அல்ல...சாதாரண...விலங்கு நடத்தை....! முதலில் அதை புரிஞ்சு கொள்ள பகுத்தறிவு அவசியம்...அதை சரிற்றி போட்டு ஊட்ட முடியாது ஒவ்வொருவராகப் பிடிச்சு....! குறைந்தது கருத்துக்களை விதைத்து சிந்திக்கக் கூடியவனை சிந்திக்க வைப்பம்...அதுவாவது குறிப்பிடத்தக்க பலன் தருகிறதா என்று பார்ப்போம்...புதிய சூழலில் இரண்டு பேர் தமிழர்களின் பண்பாட்டோடு வாழ்ந்து வெற்றி கண்டிட்டார்கள் என்றால் மூன்றாமவன் தன்பாட்டில் வாழ முனைவான்...! அதுமட்டுமன்றி சரிற்றி போட முதல் நாங்க சரிற்றி போறிற நிலையில் தெளிவா வாழுறமா என்றதைப் பார்க்க வேணும்...சரிற்றி போறிறவனிடமே தெளிவான நிலை இல்லாத போது சரிற்றி எதைச் சாதிக்கும் என்கிறீர்கள்..!

சரி உங்கள் விருப்பம் சரிற்றி வைச்சு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதானால் அதை லண்டனில் என்ன மேற்கில் எங்குமே செய்வது மிக இலகு...! அதுதானே வீதிக்கு வீதி கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்திருக்கிறியளே...அவற்றை கொஞ்சம் சரிற்றியாகவும் பாவியுங்கள்... யாராவது கோயிலுக்கும் போகும் போதாவது தமிழர் பண்பாட்டோட போக வேண்டும் என்று நினைக்கிறார்களா... கிடையாது... பிறகெப்படி பிள்ளை உங்கள் நாகரிகத்தைத் தெரிந்து கொள்ளும்..பின்பற்ற ஆர்வம் கொள்ளும்..பாடசாலையிலோ..இல்ல நண்பர்களிடத்திலோ இருந்தல்ல....அது முற்றிலும் மாறுபட்ட சூழல்...எனவே அப்பா அம்மா இது தொடர்பில் வழிகாட்ட வேணும் பிள்ளையைச் சிந்திக்க வைக்க வேணும்...ஆனா அப்பா அம்மா இது தொடர்ப்பில் தெளிவாக இருக்கினமோ....இல்லை....! அவையைத் தெளிவுபடுத்த என்ன வழி...???! நகைக்கடையில் விளம்பரம் ஒட்டினா நடக்கச் சாத்தியம் இருக்கு...இல்லை நகை விற்க முதல் இதை படிங்க என்று கட்டாய நிபந்தனை போட்டால்...அது கூட நல்ல சரிற்றிச் சேவைதான்....!

புலத்தில் பிரித்தானியா கனடாவில் தான் தமிழர்கள் தமிழ் மொழியை தங்கள் வாரிசுகளுக்கு ஊட்டுவது அவசியமில்லை நாகரிகம் அற்றது என்று பெரிதும் நினைக்கின்றனர்...இந்தச் சிந்தனை எப்பவோ வந்திட்டு..ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்குள் இருந்த எங்க பாட்டா காலத்திலையே வந்திட்டு...இப்ப அவரின் பூட்டன் காலத்தில் அது விஸ்வரூபம் எடுத்திருக்கு அவ்வளவும் தான்....! மற்றைய நாடுகளில் ஆங்கிலம் பிரயோசனம் இல்ல...பின்ன வழியில்லாம வீட்டில பந்தா இல்லாம தமிழில பேச அதையே பிள்ளைகளும் பொறுக்கி...தமிழைக் குறைஞ்சது பேசவாவது கற்றுக்கொள்ளுதுகள்..அந்த வயதில அதுபோதும்...பின்னாடி தமிழ் படிக்க ஆர்வத்தைத் தூண்ட....! இப்படித்தான் தமிழர் பண்பாடும் கலாசார விழுமியங்களும் விதைக்கப்பட வேண்டுமே தவிர சரிற்றி போட்டு ஆலோசனை வழங்கி இளசுகளுக்கு ஊட்ட முடியாது..வேண்டும் என்றால் பெரிசுகளை கொஞ்சம் தெளிவு படுத்தலாம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- kirubans - 05-27-2005

ஏன் விவாகரத்து கோருகிறார்கள் என்று யோசித்து அதற்கு ஏற்றமாதிரி தீர்வை முன்வைக்க முயலாமல், விவாகரத்து கோரும் பெண்களை இழிவுசெய்வது நியாமாகப் படவில்லை.

நான் முதலில் வைத்த கருத்து விவாகரத்தை பிழையென சொல்லுபவர்கள் அதற்கு பண்பாடு, கலாச்சாரத்தைத் துணைக்கிழுத்து, ஆணாதிக்க சமூகத்தை நிலைநாட்ட விரும்புவர்களுக்கு. எங்கள் பண்பாடுகளில் உள்ள பல நல்லவிடயங்களை ஆதரிக்கும் அதே நேரம், காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை நிராகரிக்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவன் நான்.

தமிழர்கள் புலத்தில் எவ்வாறு நடந்து கொள்ளுகிறார்கள் என்பது உங்கள் கருத்துக்கள் மூலம் நன்கு புலப்படுகின்றது. அதையே நானும் நடைமுறையில் பார்க்கிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து, அதனை செம்மையாக நடைமுறைபடுத்த எவரும் முன்வராமல் ஒதுங்கி இருக்கிறார்கள். பிறகு எப்படி நீங்கள் நினைக்கும் தமிழரின் பண்பாடு, விழுமியங்கள் என்பன தமிழரிடம் விதைக்கபடமுடியும்?

எமது பண்பாடு, கலாச்சாரங்களை தாழ்வாக நினக்கும் இளையோரே அதிகம். இதனால் அவர்கள் பிற கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இது அவர்களின் குறைபாடு இல்லை. இவற்றை ஊட்டாத பெற்றோரினதும், சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் வைத்திருப்போரினதும் பிழை.

- kuruvikal - 05-27-2005

kirubans Wrote:<b>ஏன் விவாகரத்து கோருகிறார்கள் என்று யோசித்து அதற்கு ஏற்றமாதிரி தீர்வை முன்வைக்க முயலாமல், விவாகரத்து கோரும் பெண்களை இழிவுசெய்வது நியாமாகப் படவில்லை</b>.

நான் முதலில் வைத்த கருத்து விவாகரத்தை பிழையென சொல்லுபவர்கள் அதற்கு பண்பாடு, கலாச்சாரத்தைத் துணைக்கிழுத்து, ஆணாதிக்க சமூகத்தை நிலைநாட்ட விரும்புவர்களுக்கு. எங்கள் பண்பாடுகளில் உள்ள பல நல்லவிடயங்களை ஆதரிக்கும் அதே நேரம், காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை நிராகரிக்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவன் நான்.

தமிழர்கள் புலத்தில் எவ்வாறு நடந்து கொள்ளுகிறார்கள் என்பது உங்கள் கருத்துக்கள் மூலம் நன்கு புலப்படுகின்றது. அதையே நானும் நடைமுறையில் பார்க்கிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து, அதனை செம்மையாக நடைமுறைபடுத்த எவரும் முன்வராமல் ஒதுங்கி இருக்கிறார்கள். பிறகு எப்படி நீங்கள் நினைக்கும் தமிழரின் பண்பாடு, விழுமியங்கள் என்பன தமிழரிடம் விதைக்கபடமுடியும்?

எமது பண்பாடு, கலாச்சாரங்களை தாழ்வாக நினக்கும் இளையோரே அதிகம். இதனால் அவர்கள் பிற கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இது அவர்களின் குறைபாடு இல்லை. இவற்றை ஊட்டாத பெற்றோரினதும், சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் வைத்திருப்போரினதும் பிழை.

ஆண்களோ பெண்களோ எடுத்ததுக்கும் விவாகரத்து என்று ஆகும் நிலை ஆபத்தானது...அது புரிந்துணர்வுக்கான அன்புக்கான நேசத்துக்கான தேடலையே இல்லாமல் செய்துவிடும்...! வெறும் பாலியலுக்காகவோ ஈகோவுக்காகவே திருமணம் செய்வதில்லை... இரு மனங்கள் பல விடயங்களில் ஒருமித்து ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்புக்கள் மூலம் புரிந்துகொண்டு மற்றவங்க தேவை என்ன என்று அறிந்து அதைப் பூர்த்தி செய்ய ஒத்துழைத்து தவறுகள் தப்புக்கள் நடக்காமல் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கி சமூகத்துக்கு அவசியமான அடிப்படைக் கட்டமைப்பான அழகிய குடும்பத்தை நிறுவி அவங்க மனம் மகிழ வாழவே திருமணம் செய்கிறார்கள் என்று நினைக்கின்றோம்...அப்போதான் குடும்பமும் சமூகமும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கும்...மனித இன விருத்தியும் அவன் வினைத்திறனும் ஆரோக்கியமாக இருக்கும்.. அதைவிடுத்து கண்டதுக்கும் காமக் களியாட்டத்துக்கும் விவாகரத்துக்கும் விட்டிட்டு ஓடுதலும் என்றால்....அது பெண்களாக இருக்கட்டும் ஆண்களாக இருக்கட்டும் இழிவான செயலையே செய்கின்றனர்..! மனித சமூகத்தைப் பலவீனப்படுத்தும் அப்படிப்பட்டவர்களை...ஆரோக்கியமானவர்கள் என்று சொல்ல எதிர்பார்க்கக் கூடாது...அப்படிச் சொல்வது உண்மையும் அல்ல...!

- tamilini - 05-27-2005

அப்ப கருத்து முரண்பட்டு.. பிடிக்காமல் போனாலும். நொந்து கொண்டு.. இருவரும் வாழனும். அப்படியா..?? கடைசிவரை.. ஏன் பிடிக்காட்டால் இனி ஒத்துவராது என்று தெரிஞ்சால் பிரிஞ்சு போய்விட்டால் என்ன.?? :roll: :roll: :mrgreen: :evil:

- Mathan - 05-27-2005

முழுமையாக படித்து கருத்து எழுதமுடியலை. அதனை பின்பு செய்கின்றேன். மேலே தமிழினி சொன்னது போல் மனவேற்றுமைகள் அதிகரித்து இருவருக்கும் மனரீதியில் பிளவு உண்டான பின்பு சமுதாய நிர்பந்தங்களின் பேரில் போலியாக உள்ளங்கள் இணையாத ஒரு வாழ்க்கை வாழ்வதில் பயனில்லை. அப்படியான நிலைமை யாருக்கும் வரகூடாது வந்தால் விவாகரத்து செய்வதில் தவறேதும் இல்லல.

- kuruvikal - 05-27-2005

tamilini Wrote:அப்ப கருத்து முரண்பட்டு.. பிடிக்காமல் போனாலும். நொந்து கொண்டு.. இருவரும் வாழனும். அப்படியா..?? கடைசிவரை.. ஏன் பிடிக்காட்டால் இனி ஒத்துவராது என்று தெரிஞ்சால் பிரிஞ்சு போய்விட்டால் என்ன.?? :roll: :roll: :mrgreen: :evil:

கருத்து முரண்பாடுகள் ஒரு பொதுவிடயம்... ஒரு தனி மனிதனே சூழ்நிலைக்கு ஏற்ப... அவசியத்திற்கு ஏற்ப... மாற்றத்துக்கு ஏற்ப தன் கருத்தை மாற்றி அமைக்கும் போது (உதாரணமாக தாயகத்தில் வாழ்ந்த ஒருவன் புலத்துக்கு வந்ததும் எப்படி தற் கருதுகோளுக்கு மாற்றம் அளிக்கிறான் அதுபோல) இரு மனம் ஒத்திருக்க வேண்டியவர்கள் ஏங்க புரிந்துணர்வு வேண்டு தங்கள் கருத்தை மாற்றி அமைக்கக் கூடாது.. கணவன் மனைவி இரு தனியன்கள் என்பதிலும் உணர்வு ரீதியாக ஒருமைப்படக் கூடிய ஒரு மனிதன் என்பதுதான் சரியான கருதுகோளாக இருக்கும்..!

கருத்து முரண்பாடுகளுக்காக விவாகரத்து என்றால் வாழ்க்கை பூரா விவாகரத்தாத்தான் இருக்கும்... ஒரு முரண்பாட்டைத் தீர்க்க வலு வில்லாதவரால் எப்படிங்க மற்றவரோடு வேறொரு விடயத்தில் முரண்படாதிருக்க முடியும்...! இப்ப யானைகளும் சமூகமாத்தான் வாழுது குரங்கும் சமூகமாத்தான் வாழுது உணர்வு அல்லது அதுகளின் கருத்து வேறுபாட்டுக்காக நீதிமன்றம் அமைச்சு விவாகரத்தா வாங்குதுகள்...! :wink: Idea

விவாகரத்திற்காக அடிப்படையில் தகுதி பெறுபவர்கள் போலித்திருமணத்தால் மனமிணையாமலே வாழ வேண்டி வருபவர்கள்...பாலியல் பிரச்சனை உள்ளவர்கள்... சோரம்போபவர்கள்... உள உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாபவர்கள்...! இப்படித்தான் இலங்கையின் திருமணச் சட்டம் சொல்கிறது...! அது உரோமன் டச்சு ஆங்கிலேயச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்தது...! தமிழர்கள் அதுவும் யாழ்ப்பாணத்தமிழர்கள் தேச வழமை எனும் விசேடித்த சட்டவரம்புக்குள் ஆளப்படுகின்றார்கள்...! அங்கு கணவன் மனைவி ஒற்றுமை என்பது புரிந்துணர்வின் மூலம் இயலுமானவரை தீர்க்கப்படவே வழி சொல்லப்படுகிறது,,,,! விவாகரத்து
அங்கு இலகுவில் அனுமதிக்கப்படவில்லை..அப்படி வரும் போது மனிதர்கள் தங்கள் மனதை இழக்கி புரிந்துணர்வுக்கு வர ஒரு தூண்டுதல் அளிக்கப்படுகிறது...அது சமூக வாழ்க்கைக்கு அடிப்படையான விடயம்...! அதில் யாரின் சுதந்திரமும் பறிக்கப்படுவதாக எண்ண முடியாது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea