![]() |
|
பயணங்கள் மாறிடா...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பயணங்கள் மாறிடா...! (/showthread.php?tid=4205) |
பயணங்கள் மாறிடா...! - kuruvikal - 05-26-2005 <img src='http://img279.echo.cx/img279/103/kuruvi67jb.jpg' border='0' alt='user posted image'> <b>வாழ்வெனும் வீதியில் பயணம் வழக்கங்கள் மாறா விதிகள் வழமையானால் இல்லை அவதிகள் வழமைக்கு மாறாய் விதிகள் வடிவமைத்து வடிவாய் வாழினும் வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..! வழமை நாம் விரும்பினும் வழமைகள் மாற்றி வரும் வாகனங்கள் வீதியில் சகஜம் வந்தவை தரும் விபத்துக்கள் வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும் வருமுன் காப்போம் விதிகள்...! வந்த விதி வழி அப்பாவியாய் வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால் வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய் வகை வகையாய் விபத்துக்கள் வந்தவை எதுவும் புதிதல்ல வருந்தவும் அங்கு இடமில்லை வருந்த உன்னில் எதுவுமில்லை வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம் வாடா உன் முகம் என்றும் வேண்டும் வரமது தந்திடு அரு மலரே...! வசந்தம் வந்த வேளையில் வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய் வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன் வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை வரும் என் கை உன்னை நாடியே..! வரும் மரணம் கூட வழி மறிக்கா வகையான அன்பு வழி வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை வருத்தமின்றி வா வகையாய் குதூகலிப்போம் வான வீதியில் வாழ்ந்திடும் வண்ணச் சிட்டுக்களாய்....! </b> - hari - 05-26-2005 நல்ல கவிதை வாழ்த்துக்கள்! குருவிகளே! - Niththila - 05-26-2005 கவிதை நல்லாயிருக்கு குருவி அண்ணா வாழ்த்துக்கள் - hari - 05-26-2005 நித்திலா உங்கள் அப்பா எப்படி இருக்கிறார் இப்ப? - tamilini - 05-26-2005 என்ன புதிசுபுதிசாய் எல்லாம் கவிதை.. நல்லாய் இருக்கு கவிததை குருவீ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 05-26-2005 குருவியண்ணா கவிதை அருமை. வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 05-26-2005 கருத்துரைத்த உரைக்கவுள்ள அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|