05-23-2005, 10:00 PM
<img src='http://img58.echo.cx/img58/6573/angel0pc.gif' border='0' alt='user posted image'>
அன்பின் அடிப்படையில்
ஆழமாகவும் பாசமாகவும்
அரும்பிய அன்புக் காதல்
ஆழ்கடலதனில் சிக்கிய படகாக
சென்றிடும் திசை தெரியாது
திக்கிமுக்காடி தறிகெட்டு தவிக்கிறதே.....!
காதலின் பார்வை தந்து
கண்களைப் பறிக்கும்
எண்ணம் ஏன் கண்ணே?
கண்களில் கவி பாடியே
களித்திருந்தேன் - ஆனால்
காலம் செய்யும் கோலம்
இதயத்தை இன்று
நார்நாராகக் கிழிக்கிறதே.........!
உன் பார்வைகளின்
பரிமாணங்களைப்
புரிந்து கொண்டது என் தவறா?
இல்லை தவறாகப் புரிந்து கொண்டேனா?
உன் இதயத்தின் அறைகளுக்குள்
என்னை வைத்தாய்
என நான் நினைத்தது தவறா?
இல்லை.......!
உன் இதயக் கூட்டினின்
இதமான வெப்பமதில்
இனியவளாய் இன்புற்று
இருந்தேன்
உன் இதய ராணியாக..............!
இதமான வெப்பமதை
எரிமலைக் குழம்பாக்கி
ஏன் என்னை எரிக்க நினைக்கின்றாய்?........!
நீ எரிப்பது என்னை மட்டுமல்ல
உன்னையும் சேர்த்து என்பது தெரியதா?
உன் மீது நான் கொண்ட காதலாலும்
உன் மீது நான் வைத்த பாசத்தாலும்
தாங்கும் சக்தி பெற்று
தகிக்கும் வெந்தணலை
தாங்குகிறேன் நம் காதலுக்காக.....!
என்று உனக்கு என் உள்ளம் புரிகிறதோ
அன்று நிச்சயம் ஜெயிக்கும் நம் காதல்....!
என்றென்றும் உன்னை நேசிக்கும்
இளகிய இதயம் ஒன்று
இங்கே ஏங்குது உனக்காக.....!
அன்பின் அடிப்படையில்
ஆழமாகவும் பாசமாகவும்
அரும்பிய அன்புக் காதல்
ஆழ்கடலதனில் சிக்கிய படகாக
சென்றிடும் திசை தெரியாது
திக்கிமுக்காடி தறிகெட்டு தவிக்கிறதே.....!
காதலின் பார்வை தந்து
கண்களைப் பறிக்கும்
எண்ணம் ஏன் கண்ணே?
கண்களில் கவி பாடியே
களித்திருந்தேன் - ஆனால்
காலம் செய்யும் கோலம்
இதயத்தை இன்று
நார்நாராகக் கிழிக்கிறதே.........!
உன் பார்வைகளின்
பரிமாணங்களைப்
புரிந்து கொண்டது என் தவறா?
இல்லை தவறாகப் புரிந்து கொண்டேனா?
உன் இதயத்தின் அறைகளுக்குள்
என்னை வைத்தாய்
என நான் நினைத்தது தவறா?
இல்லை.......!
உன் இதயக் கூட்டினின்
இதமான வெப்பமதில்
இனியவளாய் இன்புற்று
இருந்தேன்
உன் இதய ராணியாக..............!
இதமான வெப்பமதை
எரிமலைக் குழம்பாக்கி
ஏன் என்னை எரிக்க நினைக்கின்றாய்?........!
நீ எரிப்பது என்னை மட்டுமல்ல
உன்னையும் சேர்த்து என்பது தெரியதா?
உன் மீது நான் கொண்ட காதலாலும்
உன் மீது நான் வைத்த பாசத்தாலும்
தாங்கும் சக்தி பெற்று
தகிக்கும் வெந்தணலை
தாங்குகிறேன் நம் காதலுக்காக.....!
என்று உனக்கு என் உள்ளம் புரிகிறதோ
அன்று நிச்சயம் ஜெயிக்கும் நம் காதல்....!
என்றென்றும் உன்னை நேசிக்கும்
இளகிய இதயம் ஒன்று
இங்கே ஏங்குது உனக்காக.....!
" "
" "
" "


:roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->