Yarl Forum
அமெரிக்க சிறையில் சதாம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அமெரிக்க சிறையில் சதாம் (/showthread.php?tid=4241)



அமெரிக்க சிறையில் சதாம் - Mathan - 05-21-2005

அமெரிக்க சிறையில் சதாம்

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/05/20050520114759saddam_underwear_2.jpg' border='0' alt='user posted image'>
<b>உள்ளாடையுடன் சதாம் படம்</b>

'சன்' ஏட்டில் உள்ளாடையுடன் சதாம் ஹுசைன் படம் - விசாரணை வேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர் புஷ்

இராக்கின் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், அரை நிர்வாணமாக, தமது உள்ளாடைகளுடன், அமெரிக்கப்படைகளின் காவலில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பிரித்தானிய 'சன்' பத்திரிகையில் முகப்பில் இன்று பிரசுரமாகியுள்ளன.

ஜட்டியுடன் ஒரு கொடுங்கோலன் என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்கள் குறித்து அமெரிக்க இராணுவம் கருத்து வெளியிடுகையில் இந்தப் படங்கள் உண்மையான படங்களாக இருக்கலாம் என்றும், ஒரு வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்டவையாக அவை இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, இந்தப் படங்கள் ராணுவச் சட்டங்களையும், கைதிகள் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவது பற்றிய ஜெனிவா உடன்படிக்கையையும் மீறியதாக கருத இடமிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இந்தப் படங்கள் எப்படி பிடிக்கப்பட்டன, எப்படி 'சன்' பத்திரிகைக்கு அனுப்பப்பட்டன என்றெல்லாம் இப்போது விசாரணை நடப்பதாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இத்தகைய விசாரணையை தாம் வலுவாக ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் புஷ் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்துடன் 'சன்' பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியில், முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், இந்நாளில் எளிமையான நிலையில் உள்ள முதுமையடைந்துவரும் ஒரு வயோதிபர் என்று இராக்கில் உள்ள கிளர்ச்சிப் படைகளுக்குக் காட்டி, அவர்களை ஊக்கமிழக்கச் செய்யவே இந்தப் படம் பிரசுரிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி எழுதியிருந்தது

பிபிசி தமிழ்


- kavithan - 05-21-2005

நன்றி


- THAVAM - 05-21-2005

நன்றியப்பா மதன் இதைவிட பெரிய பெரிய சாதனைகள் எங்கட நாட்டிலையும் நடக்குது அதை வெளிக்கொண்டுவர சரியான ஆளில்லாமல் இருக்குது
_____________________________________________________________
<span style='font-size:25pt;line-height:100%'>'' உன்னையறிந்தால்..... உன்னையறிந்தால்.. . உலகத்தில் போராடலாம்''</span>______________________________________________________________________


- Mathan - 05-21-2005

நேற்றய சண் பத்திரிக்கை சதாம் குறைந்தபட்ட ஆடைகளுடன் ஜெயில் இருப்பது, காற்சட்டையை துவைப்பது உள்ளிட்ட பல படங்களை வெளியிடிருந்ததுடன் இன்று மேலும் அதிரடியான படங்கள் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் சதாம் இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் செய்திகள் வெளியாகி இருந்தன. அத்துடன் இந்த படங்கள் எவ்வாறு வெளியாகின என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது. ஆனால் இந்த சூழ்நிலையிலும் சண் பத்திரிகை தொடர்ந்து சதாம் ஜெயில் வாழ்க்கை படங்களை இன்று வெளியிட்டுள்ளது.

நன்றி - பிபிசி மற்றும் சண்


- Mathan - 05-21-2005

சிறையில் ஜட்டியுடன் சதாம் உசேன் கேவலம்!:புகைப்படங்களை வெளியிட்டு பிரிட்டன் பத்திரிகை பரபரப்பு

சண்பத்திரிகை முகப்பு படம் http://msnbcmedia.msn.com/j/msnbc/Componen...med_330a.h2.jpg

லண்டன்:ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் ஜட்டியுடன் துணி துவைப்பது, படுக்கையில் துõங்கிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களை பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிகை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க பிரிட்டன் கூட்டுப் படை, அதிபர் சதாம் உசேனை 2003ம் ஆண்டு ஏப்ரலில் ஆட்சியில் இருந்து கவிழ்த்தது. திக்ரித் அருகே சிறிய பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாமை, அதே ஆண்டு டிசம்பர் மாதம் பிடித்தது. தனது கட்டுப்பாட்டில், அடையாளம் தெரியாத மர்ம இடத்தில் அமெரிக்க ராணுவம் அவரை சிறை வைத்துள்ளது.

இன படுகொலையில் ஈடுபட்டதாகவும், மனித இனத்துக்கு எதிராக குற்றம் புரிந்ததாகவும் சதாம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக கடந்தாண்டு கோர்ட்டில் இரண்டு, மூன்று முறை சதாம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கோட், சூட்டில் வந்தார். அதன் பின், சதாமை பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. கோர்ட்டிலும் அவர் ஆஜர்படுத்தப்படவில்லை.

சதாமை மிகவும் ரகசியமான இடத்தில் அமெரிக்க ராணுவம் சிறை வைத்துள்ளது. அந்த இடம் ஈராக்கில் இருந்தாலும், எந்த இடம் என்று யாருக்கும் தெரியாது. இந்நிலையில், சிறையில் சதாம் ஜட்டியுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருக்கிறது. பிரிட்டனில் புகழ்பெற்ற, அதிகம் விற்பனையாகும் " சன்' பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலை முடிக்கும், மீசைக்கும் "டை' அடித்திருக்கும் சதாம், ஜட்டியுடன் நின்று தனது பேன்ட்டை தானே துவைப்பது போன்ற புகைப்படமும், படுக்கையில் அவர் உறங்கிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களையும் இப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. ரகசிய இடத்தில் அடைக்கப்பட்டுள்ள போது, சதாமின் புகைப்படங்கள் எப்படி வெளியானது, யார் இதை எடுத்து பத்திரிகைக்கு தந்தது என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இப்படங்களை தனக்கு தந்ததாக "சன்' பத்திரிகை கூறி இருக்கிறது.

ஈராக்கில் உள்ள அபுகிரைப் சிறையில், ஈராக்கியர்களை நிர்வாணப்படுத்தி அமெரிக்க, பிரிட்டன் வீரர்கள் சித்ரவதை செய்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் கடந்தாண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், அமெரிக்க, பிரிட்டன் ராணுவத்துக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டது. இச்சம்பவத்துக்காக அமெரிக்க அதிபர் புஷ்சும், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரும் மன்னிப்பு கேட்டனர்.

இதுபோன்ற நிலையில், சிறையில் சதாம் எப்படி இருக்கிறார் என்பதை காட்டும் புகைப்படங்கள் பல்வேறு பாதுகாப்பு வளையங்களையும் மீறி எடுக்கப்பட்டு, பிரிட்டன் பத்திரிகை வரை அவை சென்றிருப்பது அமெரிக்க ராணுவத்தை நிலை குலைய வைத்துள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "இவை ஓராண்டுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருக்கலாம். சதாமின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தான் இதற்கு பொறுப்பு. அமெரிக்க பிரிட்டன் கூட்டுப் படைக்கு இச்சம்பவத்தால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. புகைப்படங்கள் வெளியாவதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

சதாமின் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள செய்தியில் "சன்' பத்திரிகை கூறியுள்ள விவரம்:

அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த புகைப்படங்களை தந்தனர். "ஈராக்கில் சதாமுக்கு இன்னும் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர் ஒன்றும் கடவுளோ அல்லது சூப்பர் மேனோ அல்ல. அவர் ஒரு வயதான, சாதாரண மனிதன். ஈராக்கில் அவரை தலை மேல் துõக்கி வைத்துக் கொண்டு ஆடும் ஆதரவாளர்களுக்கு பாடம் கற்பிக்கவும், சதாம் பற்றிய அவர்களின் நினைப்பை நொறுக்கவும் இந்த புகைப்படங்களை வெளியிடுகிறோம்' என்று புகைப்படங்களை தந்த அவர்கள் கூறினர்.

சதாம் மிகவும் ரகசியமான இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். பத்து அடி நீளமும், ஏழு அடி அகலமும் கொண்ட அறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய நடவடிக்கைகள் அனைத்தையும் அமெரிக்க ராணுவ வீரர்களும், சிறப்பு கமாண்டோக்களும் 24 மணி நேரமும் ரகசிய கேமிரா மூலம் காண்காணிக்கின்றனர்.

Dinamalar


- KULAKADDAN - 05-21-2005

மதன் நன்றி..........இதையே அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் கைதிகளுக்கு யாரும் செய்தால் என்ன ஆட்டம் ஆடுவார்கள்............... :evil: :evil:


- vasisutha - 05-21-2005

தகவலுக்கு நன்றி மதன்.


- eelapirean - 05-21-2005

உலக போலிஸ்தானே யார் கேடகிறது :evil: :evil:


- kavithan - 05-21-2005

vasisutha Wrote:தகவலுக்கு நன்றி மதன்.

பிஸ்டலோடை அமெரிக்க சிறை உடைக்கப் போற போலை சொல்லீட்டு போறியள்..வசி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 05-21-2005

:mrgreen: :mrgreen:


- tamilini - 05-21-2005

பாவம் எப்படியிருந்த சதான் இப்படி ஆகிட்டார். :? இதால என்ன புரியுது..?? :| :? Confusedhock:


- vasisutha - 05-21-2005

யானை இளைச்சால் எலி சண்டைக்கு கூப்பிடுமாம் :roll:


- tamilini - 05-21-2005

எப்ப யாரை எலி என்கிறியள்.. Cry Cry


- vasisutha - 05-21-2005

உங்களை இல்லை புஸ்சை சொன்னேன் :mrgreen:


- Danklas - 05-21-2005

[quote=tamilini]பாவம் எப்படியிருந்த <b>சதான்</b>

சதாம்,, சதானா மாறீட்டார் எண்டு புரீது.... :evil: :oops:


- Niththila - 05-22-2005

Danklas Wrote:[quote=tamilini]பாவம் எப்படியிருந்த <b>சதான்</b>

சதாம்,, சதானா மாறீட்டார் எண்டு புரீது.... :evil: :oops:

ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு வாழ்த்துகள் டக் அங்கிள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 05-22-2005

vasisutha Wrote::mrgreen: :mrgreen:
:mrgreen: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 05-22-2005

tamilini Wrote:பாவம் எப்படியிருந்த சதான் இப்படி ஆகிட்டார். :? இதால என்ன புரியுது..?? :| :? Confusedhock:


உங்களுக்கும் விவேக் ஜோக் தெரிஞ்சிருக்கு என்று புரியுது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnappu - 05-23-2005

tamilini Wrote:பாவம் எப்படியிருந்த சதான் இப்படி ஆகிட்டார். :? இதால என்ன புரியுது..?? :| :? Confusedhock:

உமக்கு என்னும் முறியேல்லை !!!!!
என்று புரியுது
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: