Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 570 online users.
» 0 Member(s) | 567 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,648
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,542
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  போர் வேண்டுமென்றால் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்
Posted by: eelapirean - 05-17-2005, 06:49 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (17)

போர் வேண்டுமென்றால் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் நாம் பயிற்சி அளிக்கிறோம் - ஜேவிபியினருக்கு சந்திரிகா சவால்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படக்கூடாது என கூறும் ஜேவிபியும் ஜாதிக ஹெல உறுமயவும் மாற்றுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும் அல்லது அவர்கள் யுத்;தம் ஒன்றுக்கு தயாராக இருந்தால் முதலில் அவர்களும் அவர்களின் பிள்ளைகளும் முன்வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு யுத்தப் பயிற்சியளிக்க தாம் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இன்று இரவு சுனாமியின் பின்னரான பொதுக்கட்டமைப்பு தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் தேசிய தொலைக்காடசியான ரூபவாஹினிpயில் செவ்வியளித்த அவர் இதனை தெரிவித்தார். தமிழிழ விடுதலைப்புலிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் போர் நிறுத்த உடன்படிக்கையின் கீழ் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளனர் போராட்த்த்தி;ல் ஈடுபட்ட ஒரு இயக்கம் ஒரேயடியாக எல்லாவற்றையும் கைவிட்டு ஜனாநாயகத்துக்கு திரும்பும் என எதிர்பாhப்பவர்கள் முட்டாள்களாகவே இருப்பர்.

பிரிவினையை வலியுறுத்தி நின்ற அந்த இயக்கம் இன்று அரசாங்கத்துடன் இணைந்து இலஙகையின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் பணியாற்றும் வகையில் சுனாமி பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிலர் குறிப்பிட்ட பொதுக்கட்டமைப்புக்கு மாற்றுதிட்டம் எதனையும் முன்வைக்காமல் சத்தமிடுகின்றனர். கடந்த 50 ஆண்டுக்காலப்பகுதியில் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படாமை காரணமாக அவர்கள் இலங்கையின் அரசாங்கங்கள் மீது நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.

இது யதார்தமானது. தாம் விவசாய அமைச்சராக இருந்த வேளையில் தமது அமைச்சில் கணக்காளரை தவிர அனைவரும் சிங்களவர்களாவே இருந்தனர்; எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி அதனை தம்மால் மாற்றியமைக்க முடியவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் போராட்டங்களை ஆரம்;பித்தனர் 1983 ஆண்டு இனவன்முறைக்கு பின்னர் இந்த போராட்டம் முனைப்பு பெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் புளொட் டெலொ ஈரோஸ் மற்;றும் ஈ பி ஆர் எல் எப் போன்ற அமைப்புகள் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் ஈடுபட்டன.

எனினும் ஜே வி பியை போல அழிவுகளி;ல் ஈடுபடவில்லை. இந்தநிலையில் இலங்கை அரசாங்கங்களின் மீது நம்பிக்கை கொள்ளாத தமிழர்கள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் மீது மாத்திரம் எவ்வாறு நம்பி;க்கை கொள்ள முடியும். என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். பொதுக் கட்டமைப்பானது சமாதான முயற்சியின் ஒரு கட்டம் அல்ல எனினும் அது சமாதானத்துக்கான வழியாக மாறும் வாய்ப்;பு உள்ளது.

20 வருடங்களுக்கு பின்னர் தமிழிழ விடுதலைப்புலிகள் இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த திட்டத்திற்கு இணக்கம் தெரிவித:துள்ளனர்.ரணில் விக்கிரமசிங்க தமிழிழ விடுதலைப்புலிகளுடன் செய்துக்கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இலங்கையின் இறைமை பாதுகாக்கப்படவி;ல்லை அதில் இலங்கைத்தீவு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் பொதுக்கட்டமைப்பு விடயத்தில் இலங்கiயின் இறைமையை ஏற்றுக்கொள்ளவதாக தமிழிழ விடுதலைப்புலிகள் தெரிவிக்காவிட்டாலும்ää அவர்களின் யோசனையை இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பி அரசாங்கத்துடன் பணியாற்றுவது என்பதும் இலஙகையின் இறைமையை மீறாத செயலாகும்.

அத்துடன் முஸ்லிம் மற்றும் சிங்களவர்களுடன் இணைந்து சமாதானமாக செயலாற்ற முன்வந்தமையானது முஸ்லிம் மக்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்ää இந்த நிலையில் பொதுக்கட்டமைப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை எனக்கூறுபவர்கள் யதார்தத்தி;ற்கு அப்பாற்ப்பட்டவர்களாவர். பொதுக்கட்டமைபானது மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. தேசிய குழு மாகாண குழு மாவட்ட குழு என்பனவே அவையாகும். இதில் மாவட்ட குழுவே பிரதானமாகும்.

அதில் மாவட்டத்தின் அனைத்து இன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் விரும்பினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் அல்லது தமிழா புனர்வாழ்வு கழகப்பிரதிநிதிகள் ஆகியோர் அங்கம் வகிப்பர். பொதுக்கட்டமைப்பானது சுனாமியினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் 6 மாவட்டங்களின் 2 கிலோ மீற்றர் பகுதியை புனர் அமைக்கும் நடவடிக்கையாகும்.

இந்த நிலையில் கிழக்கின் குறிப்பிட்ட மாவட்ட குழவில் தமிழர்கள் ஐவர் பிரதிநிதிகளாக இருப்பர் ஏனைய இனத்தை சேர்ந்தவர்கள் ஐவர் பிரதிநிதித்துவம் பெறுவர் வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மை nபுறுவர். இதேவேளை பொதுக்கட்டமைப்பு எதிர்க்கும் ஜே வி பி சுனாமியின் பின்னரான புனர்அமைப்புக்கு 2 பில்லியன் டொலர்களை தேடித்தருமாக இருந்தால் அவர்களின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடிததாக இருக்கும். என ஜனாதிபதி தெரிவித்தார்.

தமழீழ விடுதலைப்புலிகள் பொதுக்கட்டமைப்பு விடயத்தில் இணக்கத்தை கட்ந்த ஏப்ரல் 29 ஆம் திகதி நோர்வேயின் ஊமாக அறிவித்ததும் பிரதமர் உட்பட்ட அமைச்சரவைக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் பொதுக்கட்டமைப்பு தொடர்பாக விளக்கம் அளித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார் மக்களை தூண்டும் வகையில் வீரவசனங்களை பேசி வரும் பௌத்தபிக்குகளும் ஜே வி பியும் அமெரிக்காவில் இருப்பது போல 18 வயதுக்கும் மேற்பட்ட தமது பிள்ளைகளை கட்டாய இராணுவப்பயிற்சிக்கு அனுப்ப தயாராக உள்ளனரா?

ஆதேநேரம் யுத்தம் ஒன்று முன்னெடுக்கப்படுமாக இருந்தால் 500 பில்லியன் ரூபா தேவை அதனை இந்த இரண்டு கட்சிகளும் தேடித்தர தயாரா? என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு ஆதரவளித்தமை காரணமாகவே தமது கணவரான விஜயகுமாரணதுங்க ஐக்கிய தேசிய கட்சியினாலும் ஜே வி பியாலும் கொல்லப்பட்டார் அதேபோல தாமும் சமதான முயற்சிகளின் அடிப்படையில் சிங்கள இனவாதிகளால் கொல்லப்படலாம் என ஜனாதிபதி தெரிவித்தார் சமாதான முய்றச்pகளுக்கு நாட்டின் ஜனாநாயகம் என்பது நூற்றுக்கு 51 சதவீதத்தினரின் அங்கீகராமாகும் தற்சமயம் பொதுக்கட்டமைப்புக்கு 80 வீதமானோர் ஆதரவு தருகின்றனர். இந்தநிலையில் இந்த பொதுக்கட்டமைப்பு மற்றும் சமாதான முயற்சிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக விரைவில் தெரியப்படுத்துவதாக ஜனாதிபதி தமது செவ்வியி;ன் இறுதியில் தெரிவித்தார்.



சங்கதி

Print this item

  கனாக்கண்டேன்
Posted by: Mathan - 05-16-2005, 10:34 PM - Forum: சினிமா - Replies (9)

கனாகண்டேன்

<img src='http://cinesouth.com/images/new/14052005-TRV0image1.jpg' border='0' alt='user posted image'>

ஒளிப்பதிவாளர்களாக இருந்து இயக்குனர்களானவர்கள் பட்டியலில் கே.வி. ஆனந்தும் 'கனாக்கண்டேன்' படத்தின் மூலம் சேர்கிறார்.

ஏழைத்தாய் தண்ணீர் சுமந்து படிக்க வைத்து ஆளாக்கிய ஸ்ரீகாந்த் கடல் நீரை குடிநீராக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றி பெறுகிறார். மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நினைக்கும் அவரது முயற்சிக்கு அரசாங்கமோ வங்கிகளோ நிதி உதவி செய்ய முன்வரவில்லை. பிடிக்காத மாப்பிள்ளையை திருமணத்தன்று உதறிவிட்டு ஸ்ரீகாந்துடன் வந்து தங்கியிருக்கும் அவரது தோழி கோபிகா மட்டும் அவரது லட்சியத்திற்கு துணையாக இருக்கிறார். இருவரும் காதலர்களாகி திருமணமும் செய்துகொள்கின்றனர். இதற்கிடையில் கோபிகாவின் கல்லூரித் தோழனான ப்ருதிவிராஜை கோபிகா சந்திக்கிறார். பெரிய பிஸினஸ் கன்சல்டன்டான ப்ருதிவிராஜ் இவர்களுக்கு நிதி உதவி செய்கிறார். அவர் கொடூரமான கந்துவட்டி தாதா என்பது தெரியாமல், ஸ்ரீகாந்திடமிருந்து அவரது புதிய கண்டுபிடிப்புகளின் உரிமையை அபகரித்து பெரும் தொகையை சம்பாதிக்க நினைக்கும் அவரது வலையில் ஸ்ரீகாந்த் - கோபிகா இருவரும் விழுகின்றனர். உண்மை தெரியும்போது ப்ருதிவிராஜின் பிடி அவர்களை இறுக்குகிறது. அதிலிருந்து இருவரும் விடுபட்டு தங்கள் முயற்சியில் வெற்றி பெறுகிறார்களா என்பது மீதிக்கதை.

சமீபகாலமாக ஆக்ஷ்ன் படங்களில் நடித்துவந்த ஸ்ரீகாந்த் 'கனாகண்டேன்' படத்தில் ஆக்ஷ்னுடன் காதலும் செய்கிறார். ஸ்ரீகாந்த் - கோபிகா காதல் காட்சிகள் நெருக்கமோ நெருக்கம். 'ஆட்டோகிராஃப்'பிற்கு பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு வரும் கோபிகா, ரசிகர்களின் உள்ளங்களை அள்ளிப்போகிறார். நடு இரவில் குல்பி விற்பதற்கான காரணத்தை குல்பி விற்கும் பையனிடம் அவர் அப்பாவியாக கேட்பதும் பிறகு புரிந்து கொள்வதும் இளமை அழகு. குல்பி இன்னொரு முருங்கைக்காய் சமாச்சாரம்! ப்ருதிவிராஜின் பின்னணி பற்றி கவலைப்படாமல் ஸ்ரீகாந்த் காட்டும் ஆவேசத்தையும், ' நீ படிச்சவன்தானே, ரௌடி மாதிரி நடந்துட்டியே' என்று ஸ்ரீகாந்தை கோபிகா கோபிப்பதையும் ரசிக்கலாம்.

கந்துவட்டி தாதா கதாபாத்திரம் படத்தின் ஹை-லைட். அதை மலையாள நடிகர் ப்ருதிவிராஜ் செய்துள்ள விதம் அலாதியானது! அப்பப்பா! இப்படியொரு நுணுக்கமாக நடிக்கத்தெரிந்த கவர்ச்சி வில்லனை தமிழ் சினிமா பார்த்து பல வருடங்களாகிவிட்டன. ஸ்ரீகாந்த், ப்ருதிவிராஜ் ஆபிஸில் பொருட்களை கோபத்தில் உடைக்க, ப்ருதிவிராஜ் கூலாக அந்த பொருட்களின் விலையை கடன் தொகையில் ஏற்றிவிட்டு, அப்போதிலிருந்து அதற்கு வட்டி போடுவதும், சரியான வில்லன்தான்.

விவேக் காமெடி அமர்க்களம். ஆனால் படு செக்ஸ் நெடி. காண்டம் வார்த்தை சர்வசாதாரணமாக கு.க. விளம்பரம் போலவருகிறது. டி.வி. ஸ்டேஷனில் பெரிய வேலை பார்ப்பதாக மனைவியிடம் பொய் சொல்லியதை உண்மையாக்க ஜெயா டி.வி.யில் ஜெயலலிதா பேசும்போது இடையிடையே இவர் பேசி செல்போனில் மனைவியை கேட்கச்செய்வது கலக்கல் காமெடி. கல்லூரி பெண் ப்ரொபஸர், கப் காப்பிக்காக காபி எஸ்டேட் வாங்கமாட்டேன் என்று சொல்வது ஓவர். கோபிகாவின் அம்மாவாக வனிதா, ப்ருதிவிராஜிடம் சிக்கித்தவிக்கும் பெண்ணாக ஷாலினி, இன்ஸ்பெக்டராக ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கடல் நீரை குடிநீராக மாற்றும் மாறுதலான பின்னணியை எடுத்துக்கொண்டதற்காக கே.வி. ஆனந்தை பாராட்டலாம். ப்ருதிவிராஜ் கார் எரியும்போது, முதலில் காருக்குள்ளிருக்கும் நாயை திறந்துவிடுவது போல சின்ன விஷயங்களைக்கூட கவனத்துடன் செய்திருக்கிறார். ப்ருதவிராஜுக்கு பயந்து தனது கருவை கோபிகா அழித்துக்கொள்வது அபத்தம். இதில் 'நம்ம குழந்தையை ப்ருவிராஜிடமிருந்து காப்பாற்றிவிட்டேன்' என்று வேறு சொல்கிறார்.

கதை - வசனத்தை சுபா எழுதியிருக்கிறார்கள். கனல் கண்ணில் சண்டைக்காட்சி அமைப்பில் ஆவேசம். சௌந்தர்ராஜனின் ஒளிப்பதிவு சூப்பர். குறிப்பாக லைட்டிங் இதமாக உள்ளது. வித்யாசாகரின் பாடல்கள் நிச்சயம் ஹிட். 'காலையில் அரும்பி' அற்புதமான மெலடி.

கனாக்கண்டேன் - விடியல் கனவு

சினி சவுத்

Print this item

  இது தான் காதலா?
Posted by: Malalai - 05-16-2005, 03:48 PM - Forum: கவிதை/பாடல் - Replies (123)

<img src='http://img215.echo.cx/img215/3641/aishwaryabond2zu.jpg' border='0' alt='user posted image'>

வயதில்லை
வரம்பில்லை
விதியில்லை
மதியில்லை
பயமில்லை
காதலுக்கு......!

பாசாங்கில்லாத
பாசமில்லாமல்
காதல் இல்லை......!
பாசாங்கான
சண்டைகளில்லாமல்
காதல் இல்லை.......!

அளவு கடந்த
அன்பில்லாமல்
காதல் இல்லை......!
அளவு கடக்காத
கோபமில்லாமல்
காதல் இல்லை.....!

சின்னச் சின்ன
சீண்டல்களில்லாமல்
காதல் இல்லை......!
நிறைவான
புரிந்துணர்வில்லாமல்
காதல் இல்லை......!

அணை இல்லாத
அன்பை புரிந்திடாத
உள்ளத்திலும்
உணர்வுகளிலும்
காதல் இல்லை......!

Print this item

  ரசிகன்
Posted by: kuruvikal - 05-16-2005, 11:34 AM - Forum: கவிதை/பாடல் - Replies (19)

<img src='http://img21.echo.cx/img21/3980/birds1ya.jpg' border='0' alt='user posted image'>

<b>இயற்கையை ரசித்தவன்
இன்பத்தை ருசித்தவன்
இருப்பவைக்காய் ஆசை வளர்த்தவன்
இழப்பதையே வெறுத்தவன்
இருளுக்குள் ஒளி தேடியவன்
இனிய விடியலுகாய் ஏங்கியவன்
இருப்பவர் எல்லாம் இன்பமாய் வாழ
இலட்சியம் வளர்த்தவன்
இனிய உலகுக்காய்
இனிய கனவு ரசித்தவன்
இனியவளே மலரே உன்
இதயத்தை அளந்ததும்
இயல்பை இழந்துவிட்டான்
இரவும் பகலும் உன் நினைவுகளால்
இந்து சமுத்திரமானான்
இயற்கை எங்கனும் உன்னுருவம்
இயல்பாய் வரையும் ஓவியனானான்
"இன்பத்துக்கு வழியெது
இனியவளின் வார்த்தையது"
இப்படியொரு தத்துவனானான்
இருப்பு இவனுக்கு வெறுப்பு
இன்று அதுவே கடமையாக்கினான்
இனிப்பாய் ஒரு வரி
இயல்பாய் அறியாதவன்
இன்று வரிகளில் தேன் சொரிகிறான்.....
இப்படி இப்படி எத்தனை மாற்றங்கள்
இவை எப்படி இவனுக்குள்
இன்னும் காரணம் அறிந்ததில்லை
இதன் மாயமும் புரியவில்லை
இருப்பவை எல்லாம் இன்பமாய்
இனியவளே உன் ரசிகனாய்
இவன் காண்பதெல்லாம் சொர்க்கமாய்
இவை பிரமையும் அல்ல
இன்றைய நிஜங்களாய்
இனிய நாளைய நினைவுகளாய்
இவன் இள மனதோடு பதிவாகுது
இவையே நாளை
இவன் வரலாறாகும்...!</b>

Print this item

  காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்.
Posted by: ottan - 05-16-2005, 10:49 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (7)

தமிழ்நாட்டு பத்தினித்தெய்வத்தின் கட்சியான அ.திமு.க. காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டை கொள்ளை அடிப்பதற்கு பூலான்தேவிக்கு தமிழ்நாட்டு மக்கள் அடுத்த சட்டசபை தேர்தலிலும் வாய்ப்பு கொடுக்கப்பட இது ஒரு முன்னோடியாக இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Print this item

  தமிழ்ச் சொற்களஞ்சியம்
Posted by: Kalai - 05-16-2005, 10:00 AM - Forum: தமிழும் நயமும் - Replies (48)

நமது பாவனையில் உள்ள வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்

<b>தமிழ்ச்சொல்----------------------வடசொல்</b>
அந்தளகம்--------------------------கவசம்
அரசுக்கட்டில்,அரியணை------------சிங்காசனம்
அலுவல்---------------------------உத்தியோகம்
அளியன்--------------------------மைத்துனன்(மச்சான்,மச்சினன்)
அறிவன்(கிழமை)-----------------புதன்
ஆண்டை-------------------------எஜமான்
இசை,இன்னிசை-------------------சங்கீதம்
இதள்-----------------------------பாதரசம்
இயம்-----------------------------வாத்தியம்
இரப்பு,ஐயம்-----------------------பிச்சை
இருதலை-------------------------பரஸ்பரம்

Print this item

  சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.
Posted by: sathiri - 05-15-2005, 07:55 PM - Forum: புலம் - Replies (322)

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.தொடர்

சுவிசிலை சுரிச்மானிலத்திற்கு பக்கத்தில் ஒரு இடம் டெல்ரி கோன். தமிழ் பெண் ஊரில் சாவகச்சேரி பிறப்பிடம். சுவிஸ்காரரை திருமணம் செய்திருக்கிறார்.இவர் யெகோவாவின் சாட்சிகள் மதத்தின் போதகர். இதென்ன பெரிய விசயம் எண்டு நீங்கள் கேக்கிறது விழங்கிது. அவரின் போதனையில் மண்டை கழுவப்பட்டு போன பல அப்பாவி தமிழ்குடும்பங்கள் அந்த மதத்தை உண்மையா நம்பி அவரின் போதனையின்படி பைபிளும்கையுமா செபித்தபடி வீட்டிலை வீட்டிலை சினிமா பாட்டு கேக்கிறேல்லை படம்பாக்கிறேல்லை ஏன் ரீ வி யேவீட்டிலை இல்லை மது புகை பிடிக்கும் பழக்கம் இல்லை (இது நல்ல விடயம்தான்) ஆனா அவையின்ரை வீட்டிலை சினிமா படம்பாப்பினம் பாட்டு கேப்பினம் அந்த பெண்மணி பியர் அடிச்சிட்டு பாட்டுக்கு ஆடுவா. வெளியிடங்களிற்கு சுற்றுலப போனால் டிஸ்கேவுக்கு கணவனும் மனைவியுமா போவினம். இனியாவது சுரிச் வாழ் தமிழர் விழிக்கவும் தொடரும்<img src='http://img166.echo.cx/img166/5182/365614ht.gif' border='0' alt='user posted image'>

Print this item

  நியூட்டனை கடத்தியது யார்?
Posted by: eelapirean - 05-15-2005, 04:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

நியூட்டனை கடத்தியது யார்?

ழூ தலைநகரில் ஒரே நாளில் இரு முக்கிய புள்ளிகள் கடத்தல்

கொழும்பில் கடந்த மாத பிற்பகுதியில் மோசமான மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர் ஹநியூட்டன்' (தாமோதரம்பிள்ளை சிவகுமார்) கடத்தப்பட்டது அல்லது காணாமல் போனமைஇ கல்கிசை பொலிஸ் நிலையப் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரி.ஜெயரட்ணம் கடத்தப்பட்டமை மற்றும் பிரபல ஊடகவியலாளர் ரி.சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைஇ மேலும் பல சம்பவங்களுக்கு வழிகோலலாமென்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர் நிறுத்த காலத்தில் புலிகளுக்கெதிராக நடைபெறும் நிழல் யுத்தத்தின் தொடர்ச்சியே இந்தச் சம்பவங்கள். கிழக்கில் இதுவரை நடைபெற்ற பல சம்பவங்களை விட ஒருவார காலப் பகுதியினுள் நடைபெற்ற இந்த மூன்று சம்பவங்களினதும் விளைவுகள் எவ்வாறிருக்கப் போகின்றன என்பதை ஊகித்தறிய முடியாதுள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் வெள்ளவத்தையிலிருந்துஇ கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த கனகரத்தினம் மனோகரன் நேரு என்பவருடன் கண்டியை நோக்கி புறப்பட்ட நியூட்டனைஇ அன்று காலை 7.30 மணிக்குப் பின்னர் காணவில்லை. இவருடன் சென்ற நேருவும் இவர்கள் பயணம் செய்த காரும் வாகனச் சாரதியான பண்டிட்ராஜ் என்பவரும் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவால் அல்லது வேறு அரச புலனாய்வுப் பிரிவுகளால் கடத்தப்பட்டிருப்பதாக புலிகள் கருதுகின்றனர். மருத்துவ சிகிச்சைக்காக இவர் கொழும்புக்கு வந்த போதே காணாமல் போயுள்ளதாக புலிகள் கூறும் அதே நேரம்இ மருத்துவ சிகிச்சை அல்லது வேறு அலுவல்களென்றால்இ ஏனைய புலிகளைப் போல் படைத்தரப்பின் அனுமதியைப் பெற்று வந்திருக்கலாமே? ஆனால் அவ்வாறு வராததால் இவரது வருகைக்கு வேறு நோக்கமிருந்திருக்கலாமென படைத்தரப்பு கூறுகிறது.

இதேநேரம் நியூட்டனுடன் வந்தவர்கள் புலிகளுடன் தொடர்புபட்டவர்களல்லர் என்பதால்இ நியூட்டனை கடத்துவதற்காகவே இவ்விருவரும் நியூட்டனுடன் சேர்ந்து கடத்தப்பட்டிருக்க வேண்டும். இதனால் நியூட்டனை கடத்தியவர்கள்இ அவரை விடுவிக்க விரும்பும் பட்சத்திலேயே கார்ச் சாரதியும் கல்வித் திணைக்கள அதிகாரியும் விடுவிக்கப்படுவர். இல்லையேல் அவர்கள் நிலைமை பற்றியும் எதுவும் கூற முடியாது.

20 ஆம் திகதி காலை 7.30 மணிக்குப் பின்னர் நியூட்டனைப் பற்றி அவரைச் சார்ந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது போய்விட்டது. காரில் சென்று கொண்டிருக்கும் போது வேறு வாகனங்களில் வந்து இவர்களது காரைத் திடீரென இடைமறித்து கடத்தும் சாத்தியமில்லை.

அவ்வாறு சம்பவம் ஏதாவது நடைபெற்றிருந்தால் அதனை பெருமளவு மக்கள் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருப்பர். அல்லது நியூட்டனை மட்டும் கடத்தியிருந்தால் ஏனைய இருவரும் தப்பியிருப்பர். அல்லது இவர்கள் சென்ற காரை விட்டு விட்டு அதில் சென்றவர்களைத்தான் கடத்துவதென்றால் இவர்கள் சென்ற கார் இவீதியில் எங்காவது ஓரிடத்தில் கைவிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால்இ இவற்றில் எதுவுமே நடைபெறாததால் மிகவும் தந்திரமாக காருடன் சேர்ந்து நியூட்டனும் மற்ற இருவரும் கடத்தப்பட்டிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

அதற்கேற்பஇ நியூட்டன் கொழும்புக்கு வந்த நேரம் முதல் அவரது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவரது கையடக்கத் தொலைபேசி மிக நுட்பமாக ஒற்றுக் கேட்கப்பட்டு அவர் செல்லும் ஒவ்வொரு இடங்கள் பற்றியும் துல்லியமாக தகவல் பெறப்பட்டுஇ கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வீதியில் வைத்து தந்திரமாகச் கடத்தப்பட்டிருக்கலாம்.

அதாவது இவர்கள் பயணம் செய்யும் வீதியில் வசதியானதொரு இடத்தில் வழமையான வீதிச் சோதனை போன்று வீதித் தடையை ஏற்படுத்தி இவர்கள் அவ்விடத்திற்கு வந்த போது காரை மறிப்பது போல் மறித்து அதற்குள்ளிருந்தவர்களை வெளியே இறக்கிச் சோதனையிடுவது போல் சோதனையிட்டு எல்லோரையும் அல்லது நியூட்டனை மட்டும் இறக்கித் திடீரென அவர்கள் அல்லது நியூட்டன் எதிர்பாராத வேளையில் மடக்கிப் பிடித்து அவர்கள் வந்த காரில் அல்லது வேறு வாகனத்தில் இவர்கள் ஏற்றப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம்.

நியூட்டன் கடத்தப்பட்ட விடயம் எவ்விதத்திலும் வெளியே தெரிந்து விடக் கூடாதென்பதற்காகவேஇ தடயங்கள் எதுவும் இல்லாதவாறுஇ அவருடன் வந்த இருவரும் சேர்த்துக் கடத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் பயணம் செய்த காரும் காணாமல் போயுள்ளது.

ஆனாலும் நியூட்டனும் அவருடன் சென்றவர்களும் காணாமல் போன தகவல் தெரிய வந்த பின்னர்இ இதற்கும் தங்களுக்கும் எதுவித தொடர்புமேயில்லையென்றும் நியூட்டன் இயக்கத்திலிருந்து விலகி வெளிநாடு செல்ல விரும்பியதால் அவர் வெளிநாடு சென்றிருக்கலாமெனப் படைத்தரப்பு கூறுவதுதான்இ இதில் அவர்களுக்கு ஏதோ தொடர்பிருக்கிறது என்ற ஊகத்தை ஏற்படுத்துகிறது.

நியூட்டன் வெளிநாட்டுக்கு இரகசியமாகத் தப்பிச் செல்வதென்றால்இ கொழும்புக்கு வந்த அவர்இ எவருடனும் தொடர்பு கொள்ளாமல் எத்தனையோ வழிகளில் வெளிநாடு சென்றிருக்கலாம். ஏன் நேரு மாஸ்ரருடனும் கார்ச் சாரதியுடனும் சென்று காணாமல் போக வேண்டும்.

இதேநேரம் படைத்தரப்பால் நியூட்டன் கடத்தப்பட்டதை புலிகள் நன்கறிவர். நியூட்டனின் மிகுந்த முக்கியத்துவம் கருதி அவரை எப்படியாவது விடுவித்து விட வேண்டுமென்பதில் அவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். தங்கள் வசமுள்ள சிலரை விடுவித்தாவது நியூட்டனை விடுவிப்பதில் புலிகள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். அதற்கேற்ப தொடர்புகளையும் அவர்கள் ஏற்படுத்தியும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான்இ நியூட்டன் காணாமல் போன 20 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் காணாமல் போனார். இவரை இரவு விருந்துக்கு அழைத்த புளொட் உறுப்பினரான மனோ என்பவரும் பின்னர் காணாமல் போய்விட்டதால்இ மனோவின் துணையுடன் ஜெயரட்ணம் புலிகளால் கடத்தப்பட்டிருக்கலாமென படைத்தரப்பு கருதுகிறது.

அதேநேரம்இ நியூட்டனின் கடத்தலுடன் ஜெயரட்ணம் தொடர்புபட்டோ அல்லது நியூட்டன் கடத்தப்பட்ட தகவல் ஜெயரட்ணத்திற்கு தெரிந்திருந்த நிலையிலோ ஜெயரட்ணம் புலிகளால் கடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் கருதுகின்றனர்.

ஜெயரட்ணத்தை புலிகள் தான் கடத்தியிருந்தால்இ நியூட்டனை விடுவிப்பதற்காக தங்கள் வசமுள்ள எவரையாவது தாங்கள் விடுதலை செய்யத் தயாராயிருப்பதாக புலிகள் கூறியும் நியூட்டனை ஒப்படைத்து ஜெயரட்ணத்தை விடுவிக்கும் முயற்சி எதனையும் அரசு தரப்பு எடுக்கவில்லை.

இதன்மூலம்இ உண்மையிலேயே ஜெயரட்ணத்தை புலிகள்தான் கடத்தியிருந்தாலும்இ அவரை புலிகளிடமிருந்து விடுவிப்பதை விட நியூட்டனை தொடர்ந்தும் தங்கள் வசம் வைத்திருப்பதிலேயே படைத்தரப்பு ஆர்வம் காட்டுவதும்இ நியூட்டனுக்காக உடனடியாக எந்தப் பேரம் பேசலுக்கும் செல்ல படைத்தரப்பு தயாரில்லையென்பதுவும் தெளிவாகிறது.

புலிகளின் சகல நடவடிக்கைகள் பற்றியும் அதிஉயர் இரகசியங்களையும் நியூட்டன் அறிந்து வைத்திருப்பவரென்பதால் அவரிடமிருந்து அவற்றை பெறும் முயற்சியிலும் படையினர் ஈடுபடக் கூடும். அதற்காக அவர்கள் நியூட்டனை சித்திரவதைகள் செய்யலாமெனவும் புலிகள் கருதுகின்றனர்.

புலிகளின் தென்பகுதி நடவடிக்கைகளுக்கான (கொழும்பு நகர் உட்பட) புலனாய்வுப் பிரிவுத் தலைவராக மட்டுமன்றி அந்த நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாக செயற்படுத்துபவராகவும் நியூட்டன் விளங்குவதாக படைத்தரப்பு பல தடவைகள் கூறிவந்ததால் அவரிடமிருந்து புலிகளின் இரகசியங்களைப் பெறவே படைத்தரப்பு பெரிதும் முயலும்.

யுத்த காலத்திலும் சரி போர்நிறுத்த காலத்திலும் சரி கொழும்பு நகர் உட்பட தென்பகுதியில் புலிகளின் நடவடிக்கை தொடர்வதை அரசும் படைத்தரப்பும் நன்கறியும். அந்த நடவடிக்கைகளுக்கான இயக்குநராகவே நியூட்டனை அவர்கள் கருதுவதால்இ மீண்டுமொரு போர் விரைவில் வெடிக்கும் பட்சத்தில் தென் பகுதிக்கான ஆபத்தை எல்லாவிதத்திலும் தடுக்க இரகசியத் தகவல்களை நியூட்டனிடமிருந்து படைத்தரப்பு பெறுவதற்கும் முயலலாம்.

நியூட்டன் கடத்தப்பட்டதையடுத்துஇ கொழும்பு நகரிலும் தென் பகுதியிலுமிருந்த புலிகளின் உறுப்பினர்கள் பலர் வன்னிக்கும் கிழக்கிற்கும் சென்றுவிட்டதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன. நியூட்டனிடமிருந்து ஏதாவது தகவலைப் பெற்று தங்களுக்கெதிராக படைத்தரப்பில் தீவிர நடவடிக்கைகளை எடுக்கக் கூடுமெனக் கருதியே புலிகளின் தலைமைப்பீடம் இவர்களை வன்னிக்கும் கிழக்கிற்கும் திருப்பியழைத்துவிட்டதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் கொழும்பிலோ அல்லது தென்பகுதியிலோ அவ்வாறான செயற்பாடுகள் எதிலும் படைத்தரப்பு இதுவரை ஈடுபட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதேநேரம் நியூட்டன் கடத்தப்பட்ட விடயம் தெரிந்த இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களை கடத்தி அவர்கள் மூலம் நியூட்டன் பற்றிய தகவல்களை புலிகள் பெறக்கூடுமென படைத்தரப்பு கருதுகிறது.இதன் ஒரு கட்டமாகவேஇ நியூட்டன் கடத்தப்பட்டு சுமார் 20 மணிநேரத்திற்குள் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை புலிகள் கடத்தி விட்டதாக படைத்தரப்பு கருதுகிறது.

இதையடுத்தே இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் அவசர அவசரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கல்கிசை பொலிஸ் நிலைய பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி நிலாப்தீன் (புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தப்பியவர்)இ இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் சாம்சன் ரத்நாயக்கஇ அத்துருகிரிய மிலேனியம் சிற்றியில் பாதுகாப்பான வீட்டிலிருந்து புலிகளுக்கெதிரான நீண்டதூரம் ஊடுருவி தாக்குதல் நடத்தும் படைப்பிரிவுப் பொறுப்பதிகாரியான கப்டன் எம்.எல்.எம். நிலாம்இ மேஜர் முத்தலிப் ஆகியோர் இம்மாத முற்பகுதியில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன்இ தமிழ் குழுக்களைச் சேர்ந்த முக்கிய உளவாளிகள் சிலரும் பாதுகாப்புக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இங்குள்ள இராணுவஇ பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டு அவர்களது நடமாட்டங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

மேலும் நியூட்டனிருக்குமிடத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் விஷேட பயிற்சி பெற்ற நாற்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட புலிகளின் அணியொன்றும் கொழும்பு நகருக்குள் வந்துள்ளதாகவும்இ நியூட்டனை கண்டுபிடித்து இமுடிந்தால் அவரை மீட்கவும் இல்லையேல் அவரை விடுவிப்பதற்காக படை உயர் அதிகாரிகள் எவரையாவது கடத்தி நியூட்டனின் விடுதலைக்காக பேரம் பேசும் முயற்சியிலும் புலிகள் ஈடுபடக் கூடுமெனவும் படைத்தரப்பு கருதுகிறது.

நியூட்டனும் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணமும் ஏப்ரல் 20 ஆம் திகதி கடத்தப்பட்டனர். அதுவொரு வியாழக்கிழமை. அடுத்த வியாழக்கிழமை கொழும்பு நகரில் வைத்து கடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளர் சிவராம் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இராணுவ புலனாய்வுப் பிரிவும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழுக்களுமே இவரது கொலைக்குப் பொறுப்பென புலிகள் கடுமையாகக் குற்றஞ்சாட்டினர்.

அதேநேரம் ஜே.வி.பி.இ ஜாதிக ஹெல உறுமய போன்ற மோசமான இனவாதக் கட்சிகளே சிவராமின் படுகொலைக்கான தூண்டுகோலாக இருந்ததாக பல சிங்களக் கட்சிகள் உட்பட பலரும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர். கிழக்கில் மட்டக்களப்பிலும் பொலநறுவை மாவட்ட எல்லைப்புறத்திலும் புலிகளுக்கெதிராக தீவிரமாகச் செயற்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவும் தமிழ் குழுக்களும்இ சிவராமின் கொலையின் மூலம் தலை நகரிலும் செயற்படத் தொடங்கியிருப்பது தெரியவந்தது.

அதற்கு முன்பே நியூட்டனின் கடத்தல் மூலம் கொழும்பிலும் இராணுவ புலனாய்வுப் பிரிவு புலிகளுக்கெதிராக தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளமை தெரியவந்தது.

கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் செயற்படும் புலிகளை கடுமையாக எச்சரிக்கும் நோக்கிலும் நியூட்டனின் கடத்தல் அமைந்துள்ளதுடன் இக் கடத்தல் மூலம் தென் பகுதியில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடலாமென படைத்தரப்பு கருதுகின்றது.

இவ்வாறு கடந்த மாதப் பிற்பகுதியில் இடம்பெற்ற மூன்று சம்பவங்களும் ஏதோவொரு விதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவையாகவேயுள்ளன. ஒருபுறம் புலிகளின் தென்பகுதிச் செயற்பாட்டை முடக்க நியூட்டன் கடத்தப்பட்ட அதேநேரம் மறுபுறம் தெற்கில் தமிழ்த் தேசியத்திற்காக குரலெழுப்பும் ஊடகவியலாளர்களை முடக்கவும் சிவராம் படுகொலை செய்யப்பட்டார்.

ஜெயரட்ணத்தை புலிகளே கடத்தியதாகக் கூறி அந்த விசாரணைகளை மேலும் நகர்த்த முயலாத பொலிஸ் தரப்புஇ சிவராமின் கொலையாளிகளை கண்டறிய முடியாதிருப்பதாக கைவிரித்து வருகிறது. இதுவரை உருப்படியான தகவலெதனையும் பொலிஸாரால் பெறமுடியவில்லை. இராணுவ புலனாய்வுப் பிரிவு மீதும் தமிழ் குழுக்கள் மீதும் குற்றஞ்சாட்டியும் இதுவரை அவ்வாறான கோணத்தில் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

இந்தச் சூழ்நிலையில் போர் நிறுத்த உடன்பாடானதுஇ ஏட்டிக்குப் போட்டியாக பேராபத்தை சந்தித்து வருகிறது. யுத்த காலத்தில் எதிரிகளை பல போர் முனைகளில் வெற்றிகொண்ட புலிகளால்இ போர்நிறுத்த காலத்தில் நடைபெறும் நிழல் யுத்தத்தின் போது எதிரிக்கெதிராக எதனையும் செய்யமுடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமை மேலும் தொடருமா அல்லது நிலைமை மாறுமா என்பது இதுவரை தெரியவில்லை
தினகுரல்

Print this item

  இராணுவ ஆய்வாளர்களுக்கான தகவல் தேடல் இணைப்புக்கள்
Posted by: Taraki - 05-15-2005, 03:27 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

ஒரு பிரியோசனமான வேலையை செய்வோம் எண்டு,
வலைப்பின்னலில் நான் கண்ணுற்ற சில தளங்களின் இணைப்புக்களை இக்கே தந்துள்ளேன்.தமிழ் இராணுவ ஆய்வாளர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

http://www.au.af.mil/au/awc/awcgate/awc-fu...futr.htm#trends

http://www.comw.org/rma/fulltext/asymmetric.html

http://www.loyola.edu/dept/politics/intel.html

Print this item

  நீலக்கடல் ஏன் சிவப்பானது ? (குமுதினிப் படுகொலை நினைவு மீட்டல
Posted by: shanthy - 05-15-2005, 02:41 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

2001ம் ஆண்டு ஏபீசி(பிரான்ஸ்) , ஏரீபீசி(ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) தமிழ் இணையவானொலி ஆகியவற்றில் மீளும் நினைவுகள் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான நிகழ்ச்சி.

http://www.vimpam.net/audio/kumuthini.ram

இன்றைய குமுதினிப்படகு படுகொலையை நினைவில் நிறுத்தி மீளும் நினைவாக மறுஒலிபரப்பாக 4வருடம் கழித்து ஒலிக்கிறது. 4வருடம் கழித்து வரும் நிகழ்ச்சியாக இருந்தாலும் நினைவுகூரலாக மீண்டும் பதிகிறேன்.

நன்றி
அன்புடன் சாந்தி ரமேஷ் வவுனியன்.

Print this item