Yarl Forum
போர் வேண்டுமென்றால் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: போர் வேண்டுமென்றால் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் (/showthread.php?tid=4265)



போர் வேண்டுமென்றால் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் - eelapirean - 05-17-2005

போர் வேண்டுமென்றால் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் நாம் பயிற்சி அளிக்கிறோம் - ஜேவிபியினருக்கு சந்திரிகா சவால்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படக்கூடாது என கூறும் ஜேவிபியும் ஜாதிக ஹெல உறுமயவும் மாற்றுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும் அல்லது அவர்கள் யுத்;தம் ஒன்றுக்கு தயாராக இருந்தால் முதலில் அவர்களும் அவர்களின் பிள்ளைகளும் முன்வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு யுத்தப் பயிற்சியளிக்க தாம் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இன்று இரவு சுனாமியின் பின்னரான பொதுக்கட்டமைப்பு தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் தேசிய தொலைக்காடசியான ரூபவாஹினிpயில் செவ்வியளித்த அவர் இதனை தெரிவித்தார். தமிழிழ விடுதலைப்புலிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் போர் நிறுத்த உடன்படிக்கையின் கீழ் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளனர் போராட்த்த்தி;ல் ஈடுபட்ட ஒரு இயக்கம் ஒரேயடியாக எல்லாவற்றையும் கைவிட்டு ஜனாநாயகத்துக்கு திரும்பும் என எதிர்பாhப்பவர்கள் முட்டாள்களாகவே இருப்பர்.

பிரிவினையை வலியுறுத்தி நின்ற அந்த இயக்கம் இன்று அரசாங்கத்துடன் இணைந்து இலஙகையின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் பணியாற்றும் வகையில் சுனாமி பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிலர் குறிப்பிட்ட பொதுக்கட்டமைப்புக்கு மாற்றுதிட்டம் எதனையும் முன்வைக்காமல் சத்தமிடுகின்றனர். கடந்த 50 ஆண்டுக்காலப்பகுதியில் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படாமை காரணமாக அவர்கள் இலங்கையின் அரசாங்கங்கள் மீது நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.

இது யதார்தமானது. தாம் விவசாய அமைச்சராக இருந்த வேளையில் தமது அமைச்சில் கணக்காளரை தவிர அனைவரும் சிங்களவர்களாவே இருந்தனர்; எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி அதனை தம்மால் மாற்றியமைக்க முடியவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் போராட்டங்களை ஆரம்;பித்தனர் 1983 ஆண்டு இனவன்முறைக்கு பின்னர் இந்த போராட்டம் முனைப்பு பெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் புளொட் டெலொ ஈரோஸ் மற்;றும் ஈ பி ஆர் எல் எப் போன்ற அமைப்புகள் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் ஈடுபட்டன.

எனினும் ஜே வி பியை போல அழிவுகளி;ல் ஈடுபடவில்லை. இந்தநிலையில் இலங்கை அரசாங்கங்களின் மீது நம்பிக்கை கொள்ளாத தமிழர்கள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் மீது மாத்திரம் எவ்வாறு நம்பி;க்கை கொள்ள முடியும். என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். பொதுக் கட்டமைப்பானது சமாதான முயற்சியின் ஒரு கட்டம் அல்ல எனினும் அது சமாதானத்துக்கான வழியாக மாறும் வாய்ப்;பு உள்ளது.

20 வருடங்களுக்கு பின்னர் தமிழிழ விடுதலைப்புலிகள் இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த திட்டத்திற்கு இணக்கம் தெரிவித:துள்ளனர்.ரணில் விக்கிரமசிங்க தமிழிழ விடுதலைப்புலிகளுடன் செய்துக்கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இலங்கையின் இறைமை பாதுகாக்கப்படவி;ல்லை அதில் இலங்கைத்தீவு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் பொதுக்கட்டமைப்பு விடயத்தில் இலங்கiயின் இறைமையை ஏற்றுக்கொள்ளவதாக தமிழிழ விடுதலைப்புலிகள் தெரிவிக்காவிட்டாலும்ää அவர்களின் யோசனையை இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பி அரசாங்கத்துடன் பணியாற்றுவது என்பதும் இலஙகையின் இறைமையை மீறாத செயலாகும்.

அத்துடன் முஸ்லிம் மற்றும் சிங்களவர்களுடன் இணைந்து சமாதானமாக செயலாற்ற முன்வந்தமையானது முஸ்லிம் மக்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்ää இந்த நிலையில் பொதுக்கட்டமைப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை எனக்கூறுபவர்கள் யதார்தத்தி;ற்கு அப்பாற்ப்பட்டவர்களாவர். பொதுக்கட்டமைபானது மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. தேசிய குழு மாகாண குழு மாவட்ட குழு என்பனவே அவையாகும். இதில் மாவட்ட குழுவே பிரதானமாகும்.

அதில் மாவட்டத்தின் அனைத்து இன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் விரும்பினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் அல்லது தமிழா புனர்வாழ்வு கழகப்பிரதிநிதிகள் ஆகியோர் அங்கம் வகிப்பர். பொதுக்கட்டமைப்பானது சுனாமியினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் 6 மாவட்டங்களின் 2 கிலோ மீற்றர் பகுதியை புனர் அமைக்கும் நடவடிக்கையாகும்.

இந்த நிலையில் கிழக்கின் குறிப்பிட்ட மாவட்ட குழவில் தமிழர்கள் ஐவர் பிரதிநிதிகளாக இருப்பர் ஏனைய இனத்தை சேர்ந்தவர்கள் ஐவர் பிரதிநிதித்துவம் பெறுவர் வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மை nபுறுவர். இதேவேளை பொதுக்கட்டமைப்பு எதிர்க்கும் ஜே வி பி சுனாமியின் பின்னரான புனர்அமைப்புக்கு 2 பில்லியன் டொலர்களை தேடித்தருமாக இருந்தால் அவர்களின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடிததாக இருக்கும். என ஜனாதிபதி தெரிவித்தார்.

தமழீழ விடுதலைப்புலிகள் பொதுக்கட்டமைப்பு விடயத்தில் இணக்கத்தை கட்ந்த ஏப்ரல் 29 ஆம் திகதி நோர்வேயின் ஊமாக அறிவித்ததும் பிரதமர் உட்பட்ட அமைச்சரவைக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் பொதுக்கட்டமைப்பு தொடர்பாக விளக்கம் அளித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார் மக்களை தூண்டும் வகையில் வீரவசனங்களை பேசி வரும் பௌத்தபிக்குகளும் ஜே வி பியும் அமெரிக்காவில் இருப்பது போல 18 வயதுக்கும் மேற்பட்ட தமது பிள்ளைகளை கட்டாய இராணுவப்பயிற்சிக்கு அனுப்ப தயாராக உள்ளனரா?

ஆதேநேரம் யுத்தம் ஒன்று முன்னெடுக்கப்படுமாக இருந்தால் 500 பில்லியன் ரூபா தேவை அதனை இந்த இரண்டு கட்சிகளும் தேடித்தர தயாரா? என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு ஆதரவளித்தமை காரணமாகவே தமது கணவரான விஜயகுமாரணதுங்க ஐக்கிய தேசிய கட்சியினாலும் ஜே வி பியாலும் கொல்லப்பட்டார் அதேபோல தாமும் சமதான முயற்சிகளின் அடிப்படையில் சிங்கள இனவாதிகளால் கொல்லப்படலாம் என ஜனாதிபதி தெரிவித்தார் சமாதான முய்றச்pகளுக்கு நாட்டின் ஜனாநாயகம் என்பது நூற்றுக்கு 51 சதவீதத்தினரின் அங்கீகராமாகும் தற்சமயம் பொதுக்கட்டமைப்புக்கு 80 வீதமானோர் ஆதரவு தருகின்றனர். இந்தநிலையில் இந்த பொதுக்கட்டமைப்பு மற்றும் சமாதான முயற்சிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக விரைவில் தெரியப்படுத்துவதாக ஜனாதிபதி தமது செவ்வியி;ன் இறுதியில் தெரிவித்தார்.



சங்கதி


- eelapirean - 05-17-2005

பெரிய சாத்தான் வேதம் ஓதுது


- hari - 05-17-2005

இவள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவாள்! பெரிய கில்லாடி!


- sinnappu - 05-17-2005

Åà Åà ¿õÁ¼ Áɢ À¸¢Ê ±øÄ¡õ Å¢ÎÈ¡û
:wink:


- Danklas - 05-17-2005

அடிப்பாவி... பதவியை தக்கவைக்கோனுமெண்டுபோட்டு 50வருடத்துக்கு முன்னம் நடந்த கதையெல்லாத்தையும் இப்ப போய் சொல்லி கொண்டு இருக்கிறேயேடி சிங்களத்தி,, உதையே சாக்கா வைத்து வைக்கப்போறாங்களடி புலிகள் உனக்கு ஆப்பு... பெண் புத்தி பின் புத்தி எண்டுறதை நீருபிச்சு போட்டியேடி... :evil: :oops:

நீ கவலைப்பாடத சந்திரிக்கா.. உனக்கு எதவது நடந்தாலோ அல்லது அரசாங்கத்துக்கு ஆப்பு வைத்தாலோ, அடுத்த வரப்போற சிங்கள இனவாதிக்கு நான் விசுவாசமாக (உனக்கு எப்படி இருந்தனோ அப்படி) இருப்பனடி.. இது உவன் ஆனந்த சங்கரி மேலையும் எச்சிக்கலை கதிர்காமன் மேலையும் ஆனை :|


- Sooriyakumar - 05-17-2005

சிங்களத்தியா இருந்தாலும் சந்திரிக்காவின் கருத்துடன் எனக்கு உடன்பாடு உள்ளது. உங்களுக்கு போர்வேண்டுமெனில் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்.


- anpagam - 05-17-2005

எமக்கல்ல இந்த பொங்கல்... வெளிநாட்டுக்காரருக்காக.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea
----------------------------- -------------------------
ம்ம்ம்.... சந்திரிக்காஅறிக்கைபோராலேயே இனிபுலிகளை வீழ்த்தும் நோக்கமோ.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Sooriyakumar Wrote:சிங்களத்தியா இருந்தாலும் சந்திரிக்காவின் கருத்துடன் எனக்கு உடன்பாடு உள்ளது. உங்களுக்கு போர்வேண்டுமெனில் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்.



- tamilini - 05-17-2005

anpagam Wrote:எமக்கல்ல இந்த பொங்கல்... வெளிநாட்டுக்காரருக்காக.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea


Idea Idea Idea


- kuruvikal - 05-17-2005

Sooriyakumar Wrote:சிங்களத்தியா இருந்தாலும் சந்திரிக்காவின் கருத்துடன் எனக்கு உடன்பாடு உள்ளது. உங்களுக்கு போர்வேண்டுமெனில் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்.

95 இல அம்மையார் என்ன விமுக்தியையும் மகளையும் அனுப்பிப்போட்டோ போருக்குப் போனவா....??! இல்ல ரத்துவத்தையார் அனுப்பினவரோ...இல்ல டக்கிளசு தன்ர குடும்பத்தை அனுப்பினவரோ...! கேப்பியள் பிரபாகரன் அனுப்பினவரோ என்று...அதுகள் அங்கதானே பிறக்குதுகள் வளருதுகள்..பாசறையிலையே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Sooriyakumar - 05-17-2005

வணக்கம் குருவியண்ணா போருக்கு பிரச்சாரம்செய்பவர்களுக்குத்தான் அக்கருத்து சொல்லப்பட்டிருப்பதாக எனக்குப்பட்டது. அக்கருத்துடன் உடன்பட்டு எனது கருத'தும் எழுதப்பட்டுள்ளது.


- KULAKADDAN - 05-17-2005

Sooriyakumar Wrote:வணக்கம் குருவியண்ணா போருக்கு பிரச்சாரம்செய்பவர்களுக்குத்தான் அக்கருத்து சொல்லப்பட்டிருப்பதாக எனக்குப்பட்டது. அக்கருத்துடன் உடன்பட்டு எனது கருத'தும் எழுதப்பட்டுள்ளது.
நீங்கள் சந்திரிகாவை தெரியாத அல்லது அரசியல் தெரியாத ஆளாயிருக்கிறீர்கள். உதவி வழங்கும் நாடுகளுக்காக சந்திரிகா கூறிய நாடக வசனங்கள். அதன் அறுவடையாக 300 கோடி வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஏன் இதுவரை சந்திரிகாவின் உரைகளை கேட்டதே இல்லையா?


- Taraki - 05-17-2005

பொதுக்கட்டமைப்பை பொறுத்தவரை, இதுவரை கசிந்த விடயங்களில் இருந்து,

புலிகளைப் பொறுத்தவரை பொதுக்கட்டமைப்பு என்பது தமிழீழ அரசமைப்பை சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச அமைபுக்களும் , அரசாங்கங்களும் அங்கீகரிப்பதற்கான ஒரு வழிமுறை.

சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது ஒரு வாழ்வாதரப் பிரச்சனை.

அரசாங்கத்தைக் கொண்டு நடாத்துவதற்கோ,போர்புரிவதற்கோ வெளி நாட்டாரின் பணம் அவசியம்.

சந்திரிகாவைப் பொறுத்தவரை இன்னும் ஓர் ,இரு ஆண்டுகள் பதயில் இருந்து பணம் சம்பாதிப்பதுவே இலக்கு.

இதற்கான நடிபே மேல் உள்ள பேச்சு, இதைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்வதற்கு தமிழீழ தமிழரான நாம் அரசியற் தற்குறிகள் அல்ல.

கயுறு விடும் வரை விடுவோம், அரசு ஆட்டங்காணும் வரை.
கவனமாகக் கொடுப்போம், சிறிலங்காவை பலப்படுத்தாமல்.


- hari - 05-18-2005

Quote: தமது கணவரான விஜயகுமாரணதுங்க ஐக்கிய தேசிய கட்சியினாலும் ஜே வி பியாலும் கொல்லப்பட்டார்
இது இப்பதான் சந்திரிக்கா குழந்தைக்கு தெரியுமாம்! ஜேவிப்பியுடன் கூட்டுசேரைக்க தெரியாதாம்!


- Sooriyakumar - 05-19-2005

KULAKADDAN Wrote:
Sooriyakumar Wrote:வணக்கம் குருவியண்ணா போருக்கு பிரச்சாரம்செய்பவர்களுக்குத்தான் அக்கருத்து சொல்லப்பட்டிருப்பதாக எனக்குப்பட்டது. அக்கருத்துடன் உடன்பட்டு எனது கருத'தும் எழுதப்பட்டுள்ளது.
நீங்கள் சந்திரிகாவை தெரியாத அல்லது அரசியல் தெரியாத ஆளாயிருக்கிறீர்கள். உதவி வழங்கும் நாடுகளுக்காக சந்திரிகா கூறிய நாடக வசனங்கள். அதன் அறுவடையாக 300 கோடி வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஏன் இதுவரை சந்திரிகாவின் உரைகளை கேட்டதே இல்லையா?
அங்கு யார்தான் நாடகமாடவில்லை? எல்லோருமே நாடகமாடுகிறார்கள். எல்லாம் பணத்துக்காக. பணம் பந்தியிலே..


- anpagam - 05-19-2005

Sooriyakumar Wrote:அங்கு யார்தான் நாடகமாடவில்லை? எல்லோருமே நாடகமாடுகிறார்கள். எல்லாம் பணத்துக்காக. பணம் பந்தியிலே..
என்னவோ... சொல்ல முயற்சிக்கறீர்கள்... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> ஏதோ ஒருமுறையில்.... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> என்ன.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: Ideaஇனிஇதிலென்ன... :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சொல்லலாமே... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea


- Taraki - 05-19-2005

எனவே தமது மக்களின் வாழ்வியல் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும், தேசியப் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும், தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டிய தார்மீக கடமை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உண்டு.

'போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது' என்று தீர்க்க தரிசனமாக கூறியுள்ள தேசியத் தலைவரின் வழிநடத்தலின் அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்கள் தோள் கொடுத்து உதவ வேண்டிய வேளை நெருங்கி வருவதைத்தான், தற்போதைய அரசியல் நிலைமைகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன.

தமிழ்நாதம்
http://sooriyan.com/index.php?option=conte...id=1696&Itemid=

சூரியக்குமார் உங்கள் சிலாகிப்புக்களுக்கு வெகு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.


- Sooriyakumar - 05-20-2005

தராக்கியல்ல விண்மீன் தாரகை தராகியாகியது. சூரியகுமாருக்கு சூரஜயனா?


- Taraki - 05-20-2005

ஒரு மனிதாபிமானப் பணியைக் கொண்ட பொதுக்கட்டமைப்பிற்கே இந்தக் கதியென்றால் புலிகள் இயக்கம் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை மற்றும் நிரந்தர அரசியற் தீர்வு என்ற அரசியல் விடயங்களைத் தமிழ் மக்கள் கற்பனை செய்து பார்க்கத் தேவையில்லை

மொத்தத்தில் ஈழத்தமிழரின் இனப்பிரச்சனைக்கு அமைதிவழியில் அரசியற்தீர்வு காண்பது என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகவே மாறிவருகின்றது. இத்தகையதொரு அரசியற்தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையும் தமிழர்களிடம் இல்லாது போய்க்கொண்டிருக்கின்றது.

http://www.eelampage.com/?cn=17156