Yarl Forum
காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல். (/showthread.php?tid=4269)



காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல். - ottan - 05-16-2005

தமிழ்நாட்டு பத்தினித்தெய்வத்தின் கட்சியான அ.திமு.க. காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டை கொள்ளை அடிப்பதற்கு பூலான்தேவிக்கு தமிழ்நாட்டு மக்கள் அடுத்த சட்டசபை தேர்தலிலும் வாய்ப்பு கொடுக்கப்பட இது ஒரு முன்னோடியாக இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.


- Mathan - 05-16-2005

இரு தொகுதிகளுலும் அண்ணா(அம்மா) திமுக வென்றுள்ள்து


- MUGATHTHAR - 05-16-2005

கேரளா கோயிலுக்கு யானைக்குட்டி குடுத்தது வேலை செய்யுதுதான்


- Vasampu - 05-16-2005

நீங்கள் ஒன்று தமிழ் நாட்டு மக்களை நம்பேலாதப்பா. இப்ப அம்மாவை குஷி ஏத்த 2 தொகுதிகளிலும் வெற்றியை கொடுக்க அவ அந்தக் குஷியில் சட்டசபையை கலைத்து தேர்தல் நடாத்த அந்த தேர்தலில் கவிழ்த்தாலும் கவிப்பாங்களப்பா.


:roll: :roll: :roll: :roll:


- Mathan - 05-16-2005

தமிழக அரசியல் வரலாற்றில் பொதுவாக சட்டசபை இடைதேர்தலில் ஆளும் கட்சி வென்று வந்திருக்கின்றது, அதை வைத்து எதிர்வரும் தேர்தலில் அம்மா திமுக வெல்லும் என்று சொல்ல முடியாது. திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் எதுவித பிரைச்சனையும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கின்றது. பாஜக தேர்தலில் தனித்து போட்டியிடும் போல உள்ளது அப்படி செய்தால் அது அதிமுக வாக்குகளை ஓரளவிற்கு பிரிக்கும்


- Vasampu - 05-16-2005

பா.ஜ.க தனித்து போட்டியிட சான்ஸே இல்லை. இருக்கவே இருக்கிறார் விஜயகாந்த். அவருடன் தான் சேர்ந்து போட்டியிடுவார்கள். விஜயகாந்திற்கும் எவ்வளவுதான் வீம்பாக பேசினாலும் தனித்து களமிறங்க சற்று பயமுள்ளது.


- Sriramanan - 05-16-2005

Quote:திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் எதுவித பிரைச்சனையும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கின்றது.
உண்மைதான் மதன்
இருந்தாலும் ஜெயலலிதாவின் பக்கமும் மக்கள் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகிறது. மக்கள் விரோத செயற்பாடுகளை ஜெயலலிதா தற்போது ஒட்டு மொத்தமாக நிறுத்திவிட்டு அவர்களைக் கவரும் விதத்தில் திட்டங்களைச் செயற்படுத்தி வருவதாகவே தெரிகிறது.
இதன் மூலம் வரும் சட்டசபைத் தேர்தலில் கடுமைiயான போட்டி நிலவும் என்று நினைக்கிறன்


- Sooriyakumar - 05-17-2005

நம்மநாட்டு அரசியலே புரியல்ல. எப்படி தமிழ்நாட்டு அரசியல் புரியும்? ஆளைவிடுங்கோ.