Yarl Forum
தமிழ்ச் சொற்களஞ்சியம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: தமிழ்ச் சொற்களஞ்சியம் (/showthread.php?tid=4270)

Pages: 1 2 3


தமிழ்ச் சொற்களஞ்சியம் - Kalai - 05-16-2005

நமது பாவனையில் உள்ள வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்

<b>தமிழ்ச்சொல்----------------------வடசொல்</b>
அந்தளகம்--------------------------கவசம்
அரசுக்கட்டில்,அரியணை------------சிங்காசனம்
அலுவல்---------------------------உத்தியோகம்
அளியன்--------------------------மைத்துனன்(மச்சான்,மச்சினன்)
அறிவன்(கிழமை)-----------------புதன்
ஆண்டை-------------------------எஜமான்
இசை,இன்னிசை-------------------சங்கீதம்
இதள்-----------------------------பாதரசம்
இயம்-----------------------------வாத்தியம்
இரப்பு,ஐயம்-----------------------பிச்சை
இருதலை-------------------------பரஸ்பரம்


- tamilini - 05-16-2005

நல்ல விடயம் கலை.. தொடருங்கள். மற்றவையும் தெரிந்த சொற்களை இணைத்தால் நல்லம். (ஏற்கனவே ஒரு தலைப்பு இருக்கிறது இதற்கு என்று நினைக்கிறன்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kalai - 05-16-2005

ஏற்கனவே ஒரு தலைப்பு இருக்கு என்பதை நான் கவனிக்கவில்லை. தவறுக்கு வருந்துகிறேன். மற்றும் எனக்கு இச் சொற்கள் அடங்கிய புத்தகம் ஒன்று கிடைக்கப் பெற்றது. அதை பகுதி பகுதியாக இங்கு தரலாம என்று நினைக்கிறேன்.


- shobana - 05-17-2005

அப்ப இருதலை கொள்ளி எறும்பு என கூறுவார்களே அப்படி எனின் என்ன கருத்து....


- Raguvaran - 05-18-2005

நல்ல விடயம் கலை.
நன்றி.


- MUGATHTHAR - 05-19-2005

shobana Wrote:அப்ப இருதலை கொள்ளி எறும்பு என கூறுவார்களே அப்படி எனின் என்ன கருத்து....

இது தெரியாதா? எமது கிழக்கு தமிழீழத்து மக்களின் நிலைதான்


- Kalai - 05-20-2005

shobana Wrote:அப்ப இருதலை கொள்ளி எறும்பு என கூறுவார்களே அப்படி எனின் என்ன கருத்து....
எனக்கு இதற்குரிய பதில் சரியாகத் தெரியாது. அச்சொற்றொடருக்குரிய விளக்கத்தை இங்கு களத்தில் உள்ள யாராவது தருவார்கள் என் நம்புகிறேன்.


சொற்களஞ்சியம்-02 - Kalai - 05-20-2005

<b>தமிழ்ச்சொல்----------------------வடசொல்</b>
உயிர்மெய்--------------------------பிராணி
ஊதியம்----------------------------இலாபம்
எடுத்துக்காட்டு---------------------உதாரணம்
ஏதம்------------------------------அபாயம்
ஐயம்------------------------------சந்தேகம்
கதிரவன்--------------------------சூரியன்
கரிசு------------------------------பாவம்
பா,செய்யுள்---------------------- கவி
காரி(கிழமை)--------------------சனி
காருவா-------------------------அமவாசை
கையூட்டு-----------------------லஞ்சம்


Re: சொற்களஞ்சியம்-02 - KULAKADDAN - 05-20-2005

Kalai Wrote:<b>தமிழ்ச்சொல்----------------------வடசொல்</b>
ஊதியம்----------------------------இலாபம்
ஊதியம் சம்பளம்????????
ஆதாயம்.................... இலாபம் ?????


Re: சொற்களஞ்சியம்-02 - Kalai - 05-20-2005

KULAKADDAN Wrote:
Kalai Wrote:<b>தமிழ்ச்சொல்----------------------வடசொல்</b>
ஊதியம்----------------------------இலாபம்
ஊதியம் சம்பளம்????????
ஆதாயம்.................... இலாபம் ?????

நன்றி குழக்காட்டான் தவறைச் சுட்டிக்காட்டியதற்கு. ஊதியம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு சம்பளம் என்ற வடமொழிச் சொல்லே பாவனையில் உள்ளது.


- Sooriyakumar - 05-20-2005

இங்கு எழுதப்படும் வடசொல் தமிழாக்கங்களை பார்க்கும்போது நாங்கள் உந்த மொழி பேசுகின்றோமென்ற ஐயம் (சந்தேகம்)ஏற்படுகின்றது.


- KULAKADDAN - 05-20-2005

கலை எனக்கும் அவ்வாறான சந்தேகம் உண்டு எந்த ஆதாரத்தோடு ????ஃ


- Kalai - 05-20-2005

KULAKADDAN Wrote:கலை எனக்கும் அவ்வாறான சந்தேகம் உண்டு எந்த ஆதாரத்தோடு ????ஃ
கிரியாவின் தற்காலத் தமிழாகரதி என்ற அகராதியில் ஊதியத்துக்கு சம்பளம் என்று பாவித்துள்ளார்கள். ஆனால் பாவாணாரின் "இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?" என்ற நூலில் லாபம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ஊதியம் என்று பாவிக்கப்பட்டுள்ளது.


- Kalai - 05-20-2005

தமிழகராதி என்பதற்குப் பதிலாக தமிழாகரதி என்று தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. திருத்தி வாசிக்கவும்.(எனக்கு திருத்தம் செய்கிற அதிகாரம் தரப்படவில்லை).


- hari - 05-20-2005

Kalai Wrote:ஏற்கனவே ஒரு தலைப்பு இருக்கு என்பதை நான் கவனிக்கவில்லை. தவறுக்கு வருந்துகிறேன். மற்றும் எனக்கு இச் சொற்கள் அடங்கிய புத்தகம் ஒன்று கிடைக்கப் பெற்றது. அதை பகுதி பகுதியாக இங்கு தரலாம என்று நினைக்கிறேன்.
நல்ல பணி தொடருங்கள்!


சொற்களஞ்சியம்-03 - Kalai - 05-21-2005

<b>தமிழ்ச்சொல்----------------------வடசொல் </b>
சிற்றூர்,பட்டி------------------------கிராமம்
சூள்--------------------------------ஆணை
தகுதி-------------------------------யோக்கியம்
தக்கோன்---------------------------யோக்கியன்
நண்பகல்----------------------------மத்தியானம்
நயன்-------------------------------நியாயம்
மாங்காயீரல்------------------------இருதயம்
பண்--------------------------------இராகம்
பண்டுவம்--------------------------சிகிச்சை
பொங்கு----------------------------அதிஸ்டம்
பொந்திகை-------------------------திருப்தி
பொழுதுவணங்கி-------------------சூரியகாந்தி


- thamilvanan - 05-21-2005

சுத்ததமிழ் உருவாக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் நடைமுறையில் எவ்வளவு சாத்தியப்படபோகிறது. உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப நாமும் சில மாறுதலுக்குட்பட்டு விட்டோம். அதில் ஆகசிக்கலான விடயங்களை மாற்றலாம். மற்றவற்றை ஏற்று முன்செல்லவேண்டும்.

அதாவது பஸ் என்பதை வடஎழுத்து உள்ளது என்பதால் மாற்றலாம். ரீ என்பதை தமிழ் இலக்கண நடைமுறைப்படி ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதால் தேனீர் என்று கொள்ளலாம்.

சூரியன் என்பதை என்ன காரணத்துக்காக கதிரவன் என மாற்றிக்கொள்ளவேண்டும். சூரியன் என்பதும் தமிழ் இலக்கண நடைமுறைப்படி சரியென்பதால் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

முதலில் தமிழ் எழுத்துக்கள் இல்லாத, ஆனால் பயன்பாட்டில் உள்ள கொற்களுக்கு நல்ல தமிழை ஏற்றுக்கொண்டு செயற்படுவதே நல்லது.


- Kalai - 05-21-2005

thamilvanan Wrote:சுத்ததமிழ் உருவாக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் நடைமுளறயில் எவ்வளவு சாத்தியப்படபோகிறது. உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப நாமும் சில மாறுதலுக்குட்படட்டு விட்டோம். அதில் ஆகசிக்கலான விடயங்களை மாற்றலாம். மற்றவற்றை ஏற்று முன்செல்லவேண்டும்.

அதாவது பஸ் என்பதை வடமொழி சொல் என்பதால் மாற்றலாம். ரீ என்பதை தமிழ் இலக்கண நடைமுறைப்படி ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதால் தேனீர் என்று கொள்ளலாம்.

சூரியன் என்பதை என்ன காரணத்துக்காக கதிரவன் என மாற்றிக்கொள்ளவேண்டும். சூரியன் என்பதும் தமிழ் இலக்கண நடைமுறைப்படி சரியென்பதால் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

முதலில் தமிழ் எழுத்துக்கள் இல்லாத, ஆனால் பயன்பாட்டில் உள்ள கொற்களுக்கு நல்ல தமிழை ஏற்றுக்கொண்டு செயற்படுவதே நல்லது.
அன்பின் தமிழ்வாணன் அவர்களுக்கு
உங்களுடைய கருத்துக்குளுக்கு மிக்க நன்றி. ஆனால் உங்களுடைய கருத்துக்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை. ஒரு பொருளுக்கு தமிழ்ச் சொல் இருக்கும்போது நாங்கள் வடமொழிச் சொல்லைப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது சூரியன் என்பதற்கு கதிரவன் என்ற அழகான தழிழ்ச் சொல் இருக்கும்போது ஏன் நாம் சூரியன் என்று பாவிக்க வேண்டும்.


Re: சொற்களஞ்சியம்-03 - vasisutha - 05-21-2005

Kalai Wrote:<b>தமிழ்ச்சொல்----------------------வடசொல் </b>
சிற்றூர்,பட்டி------------------------கிராமம்
சூள்--------------------------------ஆணை
தகுதி-------------------------------யோக்கியம்
தக்கோன்---------------------------யோக்கியன்
நண்பகல்----------------------------மத்தியானம்
நயன்-------------------------------நியாயம்
மாங்காயீரல்------------------------இருதயம்
பண்--------------------------------இராகம்
பண்டுவம்--------------------------சிகிச்சை
பொங்கு----------------------------அதிஸ்டம்
பொந்திகை-------------------------திருப்தி
பொழுதுவணங்கி-------------------சூரியகாந்தி

நன்றி கலை.


- hari - 05-22-2005

முடிந்தளவு கள உறவுகள் யாழ் களத்தில் தூயதமிழில் உரையாட முயற்சி செய்வோமா?