![]() |
|
கனாக்கண்டேன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: கனாக்கண்டேன் (/showthread.php?tid=4266) |
கனாக்கண்டேன் - Mathan - 05-16-2005 கனாகண்டேன் <img src='http://cinesouth.com/images/new/14052005-TRV0image1.jpg' border='0' alt='user posted image'> ஒளிப்பதிவாளர்களாக இருந்து இயக்குனர்களானவர்கள் பட்டியலில் கே.வி. ஆனந்தும் 'கனாக்கண்டேன்' படத்தின் மூலம் சேர்கிறார். ஏழைத்தாய் தண்ணீர் சுமந்து படிக்க வைத்து ஆளாக்கிய ஸ்ரீகாந்த் கடல் நீரை குடிநீராக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றி பெறுகிறார். மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நினைக்கும் அவரது முயற்சிக்கு அரசாங்கமோ வங்கிகளோ நிதி உதவி செய்ய முன்வரவில்லை. பிடிக்காத மாப்பிள்ளையை திருமணத்தன்று உதறிவிட்டு ஸ்ரீகாந்துடன் வந்து தங்கியிருக்கும் அவரது தோழி கோபிகா மட்டும் அவரது லட்சியத்திற்கு துணையாக இருக்கிறார். இருவரும் காதலர்களாகி திருமணமும் செய்துகொள்கின்றனர். இதற்கிடையில் கோபிகாவின் கல்லூரித் தோழனான ப்ருதிவிராஜை கோபிகா சந்திக்கிறார். பெரிய பிஸினஸ் கன்சல்டன்டான ப்ருதிவிராஜ் இவர்களுக்கு நிதி உதவி செய்கிறார். அவர் கொடூரமான கந்துவட்டி தாதா என்பது தெரியாமல், ஸ்ரீகாந்திடமிருந்து அவரது புதிய கண்டுபிடிப்புகளின் உரிமையை அபகரித்து பெரும் தொகையை சம்பாதிக்க நினைக்கும் அவரது வலையில் ஸ்ரீகாந்த் - கோபிகா இருவரும் விழுகின்றனர். உண்மை தெரியும்போது ப்ருதிவிராஜின் பிடி அவர்களை இறுக்குகிறது. அதிலிருந்து இருவரும் விடுபட்டு தங்கள் முயற்சியில் வெற்றி பெறுகிறார்களா என்பது மீதிக்கதை. சமீபகாலமாக ஆக்ஷ்ன் படங்களில் நடித்துவந்த ஸ்ரீகாந்த் 'கனாகண்டேன்' படத்தில் ஆக்ஷ்னுடன் காதலும் செய்கிறார். ஸ்ரீகாந்த் - கோபிகா காதல் காட்சிகள் நெருக்கமோ நெருக்கம். 'ஆட்டோகிராஃப்'பிற்கு பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு வரும் கோபிகா, ரசிகர்களின் உள்ளங்களை அள்ளிப்போகிறார். நடு இரவில் குல்பி விற்பதற்கான காரணத்தை குல்பி விற்கும் பையனிடம் அவர் அப்பாவியாக கேட்பதும் பிறகு புரிந்து கொள்வதும் இளமை அழகு. குல்பி இன்னொரு முருங்கைக்காய் சமாச்சாரம்! ப்ருதிவிராஜின் பின்னணி பற்றி கவலைப்படாமல் ஸ்ரீகாந்த் காட்டும் ஆவேசத்தையும், ' நீ படிச்சவன்தானே, ரௌடி மாதிரி நடந்துட்டியே' என்று ஸ்ரீகாந்தை கோபிகா கோபிப்பதையும் ரசிக்கலாம். கந்துவட்டி தாதா கதாபாத்திரம் படத்தின் ஹை-லைட். அதை மலையாள நடிகர் ப்ருதிவிராஜ் செய்துள்ள விதம் அலாதியானது! அப்பப்பா! இப்படியொரு நுணுக்கமாக நடிக்கத்தெரிந்த கவர்ச்சி வில்லனை தமிழ் சினிமா பார்த்து பல வருடங்களாகிவிட்டன. ஸ்ரீகாந்த், ப்ருதிவிராஜ் ஆபிஸில் பொருட்களை கோபத்தில் உடைக்க, ப்ருதிவிராஜ் கூலாக அந்த பொருட்களின் விலையை கடன் தொகையில் ஏற்றிவிட்டு, அப்போதிலிருந்து அதற்கு வட்டி போடுவதும், சரியான வில்லன்தான். விவேக் காமெடி அமர்க்களம். ஆனால் படு செக்ஸ் நெடி. காண்டம் வார்த்தை சர்வசாதாரணமாக கு.க. விளம்பரம் போலவருகிறது. டி.வி. ஸ்டேஷனில் பெரிய வேலை பார்ப்பதாக மனைவியிடம் பொய் சொல்லியதை உண்மையாக்க ஜெயா டி.வி.யில் ஜெயலலிதா பேசும்போது இடையிடையே இவர் பேசி செல்போனில் மனைவியை கேட்கச்செய்வது கலக்கல் காமெடி. கல்லூரி பெண் ப்ரொபஸர், கப் காப்பிக்காக காபி எஸ்டேட் வாங்கமாட்டேன் என்று சொல்வது ஓவர். கோபிகாவின் அம்மாவாக வனிதா, ப்ருதிவிராஜிடம் சிக்கித்தவிக்கும் பெண்ணாக ஷாலினி, இன்ஸ்பெக்டராக ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கடல் நீரை குடிநீராக மாற்றும் மாறுதலான பின்னணியை எடுத்துக்கொண்டதற்காக கே.வி. ஆனந்தை பாராட்டலாம். ப்ருதிவிராஜ் கார் எரியும்போது, முதலில் காருக்குள்ளிருக்கும் நாயை திறந்துவிடுவது போல சின்ன விஷயங்களைக்கூட கவனத்துடன் செய்திருக்கிறார். ப்ருதவிராஜுக்கு பயந்து தனது கருவை கோபிகா அழித்துக்கொள்வது அபத்தம். இதில் 'நம்ம குழந்தையை ப்ருவிராஜிடமிருந்து காப்பாற்றிவிட்டேன்' என்று வேறு சொல்கிறார். கதை - வசனத்தை சுபா எழுதியிருக்கிறார்கள். கனல் கண்ணில் சண்டைக்காட்சி அமைப்பில் ஆவேசம். சௌந்தர்ராஜனின் ஒளிப்பதிவு சூப்பர். குறிப்பாக லைட்டிங் இதமாக உள்ளது. வித்யாசாகரின் பாடல்கள் நிச்சயம் ஹிட். 'காலையில் அரும்பி' அற்புதமான மெலடி. கனாக்கண்டேன் - விடியல் கனவு சினி சவுத் - KULAKADDAN - 05-16-2005 மதன் படம் வந்திட்டுதா.................இணையத்தில் சுடலாமா? நன்றி - Mathan - 05-16-2005 தெரியவில்லை குளக்ஸ், எங்கேயாவது பார்த்தால் சொல்லுங்கள், தியேட்டரில் பார்க்கலாம் என்று நினைத்தேன் இங்கே வெளியிடவில்லை போல இருக்கின்றது. 20ம் அந்நியன் படம் திரையிடுவதாக சொன்னார்கள். - KULAKADDAN - 05-16-2005 Mathan Wrote:தெரியவில்லை குளக்ஸ், எங்கேயாவது பார்த்தால் சொல்லுங்கள், தியேட்டரில் பார்க்கலாம் என்று நினைத்தேன் இங்கே வெளியிடவில்லை போல இருக்கின்றது. 20ம் அந்நியன் படம் திரையிடுவதாக சொன்னார்கள்.இணையம் தான் நமக்கு தஞ்சம். பாத்தால் சொல்கிறேன்.................... - Mathan - 05-17-2005 தமிழ் டொரண்ஸ் மூலம் படங்களை தரவிறக்கம் செய்ய முடிகின்றதா? யாருக்காவது தெரியுமா? - kavithan - 05-17-2005 KULAKADDAN Wrote:மதன் படம் வந்திட்டுதா.................இணையத்தில் சுடலாமா?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 05-18-2005 rose 4 you.dk இல் இருக்கு................ Tamilblood இலும்............. - stalin - 05-18-2005 KULAKADDAN Wrote:rose 4 you.dk இல் இருக்கு................ Tamilblood இலும்.............tamilblood web adressஐ முழுமையாக தருவீங்களா குளக்காட்டன்---------------------------------------------ஸ்ராலின் - KULAKADDAN - 05-18-2005 stalin Wrote:KULAKADDAN Wrote:rose 4 you.dk இல் இருக்கு................ Tamilblood இலும்.............tamilblood web adressஐ முழுமையாக தருவீங்களா குளக்காட்டன்---------------------------------------------ஸ்ராலின் http://www.tamilblood.tk/ - stalin - 05-19-2005 நன்றிகள் குளக்காட்டான்-----------------------------------------------------ஸ்ராலின் |