Yarl Forum
காதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதல் (/showthread.php?tid=4258)



காதல் - kuruvikal - 05-18-2005

<img src='http://img276.echo.cx/img276/2658/296530092992300929973007296529.gif' border='0' alt='user posted image'>

<b>உணர்வோடு உருவாகி
உள்ளத்தை ஆளும் - நோய்
உள்ளவர்கள் சித்தம்
உறங்காமல் சிந்திக்கும் - அறிகுறி
உலகில் காண்பதெல்லாம்
உள்ளத்தில் உள்ளவர்க்காய் ஏங்கும் - ஏக்க நிலை
உறங்கா விழிகள்
உறங்க தொடரும் கனவு - பரவல் நிலை
உளறல் என்பது
உண்மையாகும் - தன்னை உணரா நிலை
உண்பது கூட உணர மறுக்கும்
உண்மை தளரும் - முத்திய நிலை
உண்மைக் காதல் உனையாள
உன்னை நீயே
உன் வாழ்வில் ஓர் உறவுக்காய் இழப்பாய்
உன்னத நிலை....!

உண்மை இதுவும் ஆகலாம்...
உலகில் கலப்படம் என்பது
உண்மை மனிதருக்குள் - ஒரு நிலை
உண்மைக் காதல் என்று உலகை ஏய்த்து
உடல் தேடும் காமம் - அசுர நிலை
உண்மைக்குள் அசுரம் அரசாள
உன்னை மதியால் நீ இழந்து
உடலைக் கலங்கடிக்கும் - ஆபத்து நிலை
உண்மை அறியா உன்னை இழந்து
உயிர் உள்ளவரை
உள்ளம் வருத்தித் துடிக்கும்
உலகில் கொடிய நிலை...!

உண்மைகள் இப்படியும் அமையலாம்....
உலகில் எத்தனை மனிதர் எத்தனை கோலம்
உண்மை எது - யாரும் அறியா நிலை
உள்ளத்தாலன்றி
உணர்வுக்கு வடிகால் தேடும் - ஒரு நிலை
உன்னைக் கண்டதும் கவரும்
உண்மை அறிந்து உன்னை அளந்து - கழரும் நிலை
உண்மையாய் இது
உணர்வுக்கு அடிமையான - இழி நிலை
உன்னை கவர்ந்தழிக்கும்
உலகின் அசிங்க நிலை
உண்மையில் இதுதான்
உலகில் சாதாரணம்
உண்மைக் காதலின் பெயரால்....!

உள்ளத்தே உணரும்
உணர்வுக்கு முன்
உன் அறிவுக்கும் சுயத்துக்கும்
உண்மைக்கும் மதிப்பளி
உண்மையில் காதல்
உண்மையாகி உன்னதமாகும்...!
உன் கண்களால் பேசி
உள்ள கணணியை நம்பி
உள்ளம் இழந்து காதல் என்று உளறாதே
உண்மையில் காதல்தன் புனிதம் அன்றி
உன் உள்ளத்தின் புனிதமிழந்து
உன்னத வாழ்வையே இழப்பாய்...!
உணர்ந்து தெளிந்து
உணர்வுகள் ஆளப்பழகிக் கொள் - அன்றி
உண்மை உணர்ந்து
உள்ளத்தால் காதல் செய்
உண்மைக் காதலுக்கு
உறுதியான ஆயுள் கொடு...!</b>


- tamilini - 05-18-2005

என்னங்க சொல்லுறீங்க.. ஒன்றுமே புரியலை..காதலை பேசுறீங்களா.. இல்லை வாழ்த்திறீங்கள.. Cry Cry Cry உ வில அசத்திறியள்.. புரியல. :? Confusedhock: :wink:


- kuruvikal - 05-18-2005

tamilini Wrote:என்னங்க சொல்லுறீங்க.. ஒன்றுமே புரியலை..காதலை பேசுறீங்களா.. இல்லை வாழ்த்திறீங்கள.. Cry Cry Cry உ வில அசத்திறியள்.. புரியல. :? Confusedhock: :wink:

ஒன்றும் பேசல்ல.. காதல் என்று குருவிகள் உணர்வதையும்...உலகம் காட்டுற கோலங்களையும்... கண்டதுகளை கேட்டதுகளை வைச்சுச் சொன்னம்... அவ்வளவும் தாங்க...! நீங்க ஏன் அழுகுறீங்க அதுக்கு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- tamilini - 05-18-2005

ஓ அப்படியா அப்ப சரி 2..3 தரம் வாசிச்ச தான் புரியுது. சரிங்க நல்லாய் இருக்கு கவிதை.. :wink:


- வெண்ணிலா - 05-18-2005

Quote:உள்ளத்தே உணரும்
உணர்வுக்கு முன்
உன் அறிவுக்கும் சுயத்துக்கும்
உண்மைக்கும் மதிப்பளி
உண்மையில் காதல்
உண்மையாகி உன்னதமாகும்...!


உண்மையிலேயே
உங்கள் கவி
உன்னதமாக இருக்கிறது.
உங்கள் சுட்டியின்
உளங்கனிந்த வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 05-18-2005

சுட்டிக் கவிதையால்
சுட்டித் தங்கை தந்த
சுகந்தமான வாழ்த்துக்கு
சுருக்கமான நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 05-18-2005

வாழ்த்துக்கள் குருவிகளே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- KULAKADDAN - 05-18-2005

கவிதை நல்லாயிருக்கு உ வில போகுது..................
வாழ்த்துக்கள்


- Kurumpan - 05-18-2005

குருவிகள் ஒரு மார்க்கமாத்தான்....கூவுது (கீச்சிடுது)....
எங்க போய் முடியப்போகுதோ.... (அங்கோடை பக்கம் பறக்காவிட்டால் சரி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )

கவித சூப்பராகூவுது மாமு!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-18-2005

Quote:குருவிகள் ஒரு மார்க்கமாத்தான்....கூவுது (கீச்சிடுது)....
எங்க போய் முடியப்போகுதோ.... (அங்கோடை பக்கம் பறக்காவிட்டால் சரி )
நமக்கெல்லாம் புரியுது.. உங்களுக்கும் தான் புரியுது.. புரியவேண்டியவங்களுக்கு புரியலையே..?? :wink:


- Malalai - 05-18-2005

உன்னதமான உணர்வில்
உருவாகிட்ட காதல்
உண்மையின்றி வளர்ந்திடுமா?
உள்ளங்களை இணைத்திடும்
உறுதியான காதல்
உண்மையாக உள்ளவரை
உணர்வுகளும்
உறங்குவதில்லை
உண்மைக் காதலும் தோற்பதில்லை....!

குருவி அண்ணா அசத்திட்டிங்க..வாழ்த்துக்கள்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 05-18-2005

நன்றி குளக்காட்டான்.. மற்றும் மழலைத் தங்கை..!

குறும்ஸ்..மம்ஸ்...இது குருவி மம்ஸ்...அங்கொடைக்கெல்லாம்..போகாது...மலர் கூடப் போயிடும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-18-2005

எங்க போனாலும் களத்தில ஒரு தகவல் போடுங்க.. நாங்களும் அறிஞ்சுக்குவம். அனுபவம் ஆச்சே உதவும் நமக்கும். :wink: Idea


- Mathan - 05-19-2005

வாழ்த்துக்கள் குருவி.

காதல் கவிதைகளாவே போட்டு அந்த உணர்வை தூங்க விடுகிறீர்கள் இல்லை :mrgreen:


- sathiri - 05-19-2005

உருவிக்கு உழ்த்துக்கள் சே குருவிக்கு வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- stalin - 05-19-2005

குருவியாரே உங்கடை மரத்துக்கு கீழே ஒதுங்குகிற காதல் ஜோடியையே மட்டும் பார்ப்பதால் காதல் கவிதை யாய் எழுதி கொண்டிருக்கிறீங்கள்---அங்கை பாருங்க மரத்துக்கங்காலை ஒட்டிய வயிற்றோடை பிச்சைக்காகரன் இரூக்கிறான்பார்த்திங்களா--- பாருங்கள் மரத்துக்கு அங்காலை பசியாலே அழும் குழந்தையின் குரலை கேளுங்கள் --------காதலை மட்டும் பாடமால் சமூக சிந்தனையுள்ள பாடலையும் பாடுங்களென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளும்---------ஸ்ராலின்


- shanmuhi - 05-19-2005

Quote:உண்மை அறியா உன்னை இழந்து
உயிர் உள்ளவரை
உள்ளம் வருத்தித் துடிக்கும்
உலகில் கொடிய நிலை...!
அற்புதமான வரிகள்.
கவிதை மிக மிக அருமையாக வடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.


- hari - 05-19-2005

Quote:உண்மை உணர்ந்து
உள்ளத்தால் காதல் செய்
உண்மைக் காதலுக்கு
உறுதியான ஆயுள் கொடு...!

அருமையான கவிதை
வாழ்த்துக்கள் குருவிகளே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->