Yarl Forum
குமுதினிப் படுகொலை... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: குமுதினிப் படுகொலை... (/showthread.php?tid=4278)



குமுதினிப் படுகொலை... - kuruvikal - 05-14-2005

<img src='http://img42.echo.cx/img42/4166/one18co.jpg' border='0' alt='user posted image'>

<b>குமுதினிப் படகேறி
உறவுகள் சென்றனர்
கரைதனை எட்டாமல்
கறைதனில் வீழ்ந்தனர்
அலைகடல் நடுவினில்
அராஜகம் நடந்தது
புத்தன் புதல்வர்கள்
கொலைவெறியாட்டம் போட்டனர்
அகிம்சை என்பது
அகத்தினில் அழிந்தது
ஆயுதம் என்பது
ஆர்ப்பரித்து எழுந்தது
திசைகள் எங்கினும்
முடிவுகள் கோரம்...!
புலிதனின் வீரத்தில்
கிளர்ந்தனர் வேங்கைகள்
அப்பாவிகள் அழித்தவன்
கலம்தனைத் தகர்த்தனர்
ஆதிக்கம் என்பது
அடங்கியே போக...!
வேங்கையின் வீரத்தில்
விடுதலைக்காய் ஏங்கினர்
வேள்விகள் தனில்
ஆயிரம் ஆயிரமாய்
உயிர்கள் உறங்கின...!
விடியல் என்பது
விலை கொடுத்த பொருளாய்
வாங்க மடியேந்தும் நிலை
இன்னும் தொடர்கதையாய்..!
முடிவுகள் என்பது
முடிவிலியாய்.....
தமிழன் குருதியென்பது
பெருகும் ஆறாய்
தீர்வுகள் மட்டும்
கேள்விக் குறியாய்...???!
காலம் என்பது
மக்களுக்காய் கனிய
தலைவன் வழியில்
காத்திருப்புத் தொடருது..!
சேதி ஒன்று வரும்
தேசம் விடிந்ததென்று
எதிர்பார்ப்பு விரைவாக
ஒற்றுமை என்பது திடமாக
கடந்ததுகள் நினைவாக்கி
வேற்றுமைகள் கலைத்துக்
கலந்திடுவோம்
இலட்சியப் பயணத்தில்
வேங்கையின் பாதையில்...!</b>


- shobana - 05-14-2005

குருவி அண்ணா இந்தப்போட்டோ எங்கே எடுத்தீர்கள் இவ்வளவு நாட்களுக்குப்பிறகு... அனைத்து போட்டோவும் வைத்து இருக்கிறீர்களா??? இந்த்ப்படத்தை பார்க்கும் போது பழைய உறவுகளின் நினைவுகள் வருகின்றன...


- kuruvikal - 05-14-2005

இணையத்தில் இருந்துதான் பெற்றோம்...இப்போ தமிழ்நாதத்தில் போட்டிருக்கிறார்கள்...! குமுதினிப் படகுப் படுகொலையின் 20ம் ஆண்டு நினைவாக... 15 - 05 - 2005...!

http://www.tamilnaatham.com/photos/kumuthini20050514/


- tamilini - 05-14-2005

அதென்னங்க குழுதினிப் படகுபடுகொலை.. விவரமாய் தெரிந்தவர்கள் சொல் சொல்லுங்களேன். நன்றி குருவியாரே.. காலமறிந்த தந்த கவிக்கு. Confusedhock:


- shobana - 05-14-2005

நன்றி குருவிகளே


- kuruvikal - 05-14-2005

tamilini Wrote:அதென்னங்க குழுதினிப் படகுபடுகொலை.. விவரமாய் தெரிந்தவர்கள் சொல் சொல்லுங்களேன். நன்றி குருவியாரே.. காலமறிந்த தந்த கவிக்கு. Confusedhock:

என்ன நாங்களும் சின்னனா இருக்கேக்க நடந்ததுதான்...பின்னர் காலத்தால் அறிந்த விடயங்கள்... தமிழ்நாதத்தில் சுருக்கமாப் போட்டு இருக்காங்க...பாருங்க...! Idea


- Mathan - 05-14-2005

குருவிகள்: நினைவுறுத்தியதற்கு நன்றி

தமிழினி: அது குறித்த தகவலை இணைத்துள்ளேன்


- tamilini - 05-14-2005

நன்றி மதன் தமிழ்நாதத்திலையும் பார்த்தன். பாவிகள் :evil: :twisted:


- KULAKADDAN - 05-14-2005

குருவிகள் கவிதை காலமறிந்து இட்டிருக்கிறீர்கள். கருமை படர்ந்த நாள்


- anpagam - 05-14-2005

விபரமாக கூறிஇருக்கு இங்கே
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/05/KumudhiniMemorial_41456_200.jpg' border='0' alt='user posted image'>
Photo: Tamilnet


- Malalai - 05-14-2005

நன்றிகள் குருவி அண்ணா Cry Cry


- hari - 05-14-2005

நன்றிகள் குருவி ,


- eelapirean - 05-14-2005

காலத்தின் கோலம்களை உதிக்கச் செய்த குருவிக்கு நன்றி.
இந்த படகில் இருந்து ஒருவர் தப்பினார் என்று செய்திகள் வந்தன.யாருக்காவது விபரம் தெரிந்தால் அறியத்தரவும்.


- Nitharsan - 05-14-2005

<img src='http://www.goodsrilanka.com/news/data/upimages/kumithni-pp.gif' border='0' alt='user posted image'>