![]() |
|
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? (/showthread.php?tid=4285) |
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? - MUGATHTHAR - 05-13-2005 [b] புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா?????????? இன்று காலை தீபம் தொலைக்காட்சியில் மேலே குறிப்பிட்ட விடயம் தொடர்பான ஒரு உரையாடல் இடம்பெற்றது. அனேகா; இந்த நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பு இருந்திருக்காது. இப்போ தீபம் சந்தாஅட்டை மூலமாகவே ஒளிபரப்பாவதாலும் வேலை காரணமாகவும் நேரம் கிடைத்திருக்காது. சரி நாங்களும் யாழ் களத்தில் இதைப்பற்றி ஒரு கருத்துகளை அலசுவம் என்ன? புலம் பெயா; மக்கள் எத்தனையோ வகையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் அதை மறுக்கவே முடியாது. முக்கியமாக பொருளாதாரத்தை குறிப்பிடலாம் இதைவிட 1).தொழில் நுட்பஅறிவு (கணணி. இனையத்தளம் என) 2) பெண்கள் சுதந்திரம் 3) பிள்ளைகள் சுதந்திரம் 4) சமய.கலாச்சார.கலை அறிவு 5) பெண்ணும் ஆணுக்கு சமனாக வேலைக்கு போவதால் குடும்பத் தலைவனின் சுமைகள் கனுஷமான அளவு குறைந்திருக்கிறது இப்படி நிறைய நன்மையான விடயங்கள் இருக்கிறது இதை விட இவர்களுக்குத் தெரியாமலே ஒரு சில பாதிப்புக்கள் தாயகத்திலிருக்கும் எமது உறவுகளை சென்றடைகின்றன. நிகழ்ச்சியில் ஒரு நேயா; குறிப்பிட்டது போல வெளிநாட்டில் இருப்பவர்களின் சில உறவுகள் கல்வியில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை இதுக்குக் காரணம் படிப்புச் சரிவராவிட்டால் அண்ணனைப் பிடிச்சு எப்பிடியும் வெளிநாடு போகலாம் எண்ட நினைப்பு இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறைகிறது.பெற்றோரும் இதையே ஊக்கிவிக்கிறார்கள் அடுத்தது நாம் அனுப்பும் பணம் அவர்களின் அத்தியாவசிய தேவையைவிட மேலதிகமாக இருப்பதால் வீண்செலவுகள் செய்வதற்கு வழி வகுக்கிறது அவர்கள் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே போய்விடுகிறது ஆனபடியால் நாங்கள்தான் அவர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றோம்..உண்மைதானே? இன்று ஊரில் வரதட்சனை இவ்வளவு தூரம் உயர்ந்தமைக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள் 4அண்ணன்கள் வெளிநாட்டிலிருந்தால் அவர்களின் தங்கைக்கு வரதட்சனையாக கேட்காமலே அள்ளிக் கொடுத்து பெருமைப் பட்டுகொள்கிறார்கள் இது தமிழ் சமூகத்துக்கு நன்மையா?? சரி இதேபோல் நீங்களும் உங்கள் கருத்துகளை இங்கே வையுங்கள் - Mathan - 05-13-2005 Quote:அடுத்தது நாம் அனுப்பும் பணம் அவர்களின் அத்தியாவசிய தேவையைவிட மேலதிகமாக இருப்பதால் வீண்செலவுகள் செய்வதற்கு வழி வகுக்கிறது அவர்கள் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே போய்விடுகிறது ஆனபடியால் நாங்கள்தான் அவர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றோம்..உண்மைதானே? கஷ்டத்தில் இருந்த பல குடும்பங்களுக்கு வெளிநாட்டு பணம் ஆரம்பத்தில் மிக உதவியாக இருந்ததையும் பின்பு அதிகமாக கிடைக்கும் போது வீண் செலவுகளுக்கு சில குடும்பங்களில் வழிவகுப்பதையும் கண்டிருக்கின்றேன். அளவோடு கொடுப்பது நல்லது. Quote:இன்று ஊரில் வரதட்சனை இவ்வளவு தூரம் உயர்ந்தமைக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள் 4அண்ணன்கள் வெளிநாட்டிலிருந்தால் அவர்களின் தங்கைக்கு வரதட்சனையாக கேட்காமலே அள்ளிக் கொடுத்து பெருமைப் பட்டுகொள்கிறார்கள் இது தமிழ் சமூகத்துக்கு நன்மையா?? சீதணம் உயர்ந்தற்கு வெளிநாட்டு பணம் முக்கிய காரணம் என்பது உண்மைதான். அதேசமயம் சீதணம் இல்லாமல் திருமணம் சாத்தியமற்றது என்ற நிலையில் இருந்த சமூகத்துக்குள் பல திருமணங்களுக்கு இந்த பணம் உதவியது என்பதும் உண்மை. - Nitharsan - 05-13-2005 Quote:1).தொழில் நுட்பஅறிவு (கணணி. இனையத்தளம் என)அது அதிகமானதாலதான் பிரச்சினையே இப்ப... அவனவன் இணையத்தில் கட்சி நடத்திறான் அதை விட குடும்ப பிரச்சினை எல்லாத்தையும் இணையத்தில போடுறான்..ஏன் யாழ் களத்திலையே தனிப்பட்ட பிரச்சினைகளை பலர் கொண்டு வர்ற மாதிரி இருக்கே.. எல்லாமாய் பார்த்தால் தமிழன் இதல அதிகம் முன்னேறீடடான்... Quote:2) பெண்கள் சுதந்திரம்ஆகா....பெண்கள் சுகந்திரம் இங்கு அளவுக்கு மீறியதால் தமிழர் கலாச்சாரம் தலைகீழாய் இருக்கிறது (ஆண்களாலும் தான் ஆனால் இதில் பெண்கள் பற்றி கதைப்பதால்அப்படி சொன்னேன்) Quote:3) பிள்ளைகள் சுதந்திரம்ம்ம் ...பிள்ளைகள் சுகந்திரம்... கூடீயதால் தான் சிகரெட் முதல் கஞ்சா வரை அடிக்கிறானுகளாக்கும்...அதை விட பள்ளிக்கு பொறன் என்றிட்டு சண்டைக்கு பொறது மற்றது.. அதான் நம்ம தமிழ் மானத்தை வேண்ட இருக்கே சண்டை அணிகள் அதுவும் பிள்ளைகளுக்கு நீங்க கொடுத்த சுகந்திரத்தால தான் Quote:4) சமய.கலாச்சார.கலை அறிவுஅருமை..அருமை...சமய கலாச்சார கலையறிவு நெடுக இருக்கிறாக்களுக்கு இருக்கும் இங்க பிறந்த பிள்ளைகளுக்கு????... மதம் மாறும் மனிதர்களுக்கு???.... Quote:5) பெண்ணும் ஆணுக்கு சமனாக வேலைக்கு போவதால் குடும்பத் தலைவனின் சுமைகள் கனுஷமான அளவு குறைந்திருக்கிறதுசுமைகள் கஸ்டங்கள் குறையுதோ இல்லையே கட்டாயம் வேதனையும் அலைச்சலும் கூடும்....பெண்கள் வேலைக்கு பொவதால் எந்த பிரச்சினையில்லை..வேலையிடத்தில் இருக்கும் மற்ற தமிழ் பெண்கள் ஏத்தி விட.. இங்கு வீட்டில சங்காரம்....புரியல்லையா...? உவருக்கென்ன மரியாதை நீயும் அவர் போல தானே வேலை செய்யிறாய் என்று ஏத்தி விடுவினம்..அது மட்டுமா ஏதாவது ஊசிபோற அளவு பிரச்சியேன்றால் அதை எப்பிடியும் பெரிதாக்கி விவாகரத்து வரைக்கும் கொண்டந்து விட்டிடுங்கள்... இவை தான் எங்கள் சமூகத்தின் முன்னேற்றமா? பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள். அதை வைத்து என்ன செய்ய.. - poonai_kuddy - 05-13-2005 நிதர்சனண்ணா அப்ப நீங்களும் சிகரட் கஞ்சா அடிக்கிறனிங்களா? :evil: உங்களுக்கும் சுதந்திரமிருக்குத்தானே நீங்கள் நாட்டில இருந்திருநஇதால் அதப்டி இதப்டியெண்டு உங்கட அம்மா அபஇபா கட்டயப்படுத்தியிருப்பனந்:தானே இஙஇக இருக்கிற படியத் தானே நீங்கள் விரும்பினதபடிக்க முடியுது. அதால புது புது விசயத்த தமிழாக்கள் படிக்கிந்தானே :evil: சும்மா சும்மா குற்றஞ்சாட்டாதங்கோ
- kuruvikal - 05-13-2005 தமிழரிண்ட பூனைக்குட்டிகளுக்கும் புலத்தில தீனி... கட் பூட் சத்துக் கூடிட்டு..வாய் மிஞ்சி...மியா மியாக்குப் பதில..இப்படித்தான் புலம்புதுகள்...போற இடமெல்லாம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- poonai_kuddy - 05-13-2005 குருவியண்ணாக்கு நான் கேட்டது பிடிக்கல அதுக்கு பதில் சொல்லத் தெரியல அந்தக் கோவத்த இபஇபிடி என்மேல தனிப்பட்ட முறைல தாக்குறார் இதுக்கு அணஇணாக்களும் அக்காக்களும் சப்போர்ட் பண்ணுயினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இந்த கருத்த நீக்காட்டி இனி நான் இங்க எழுதமாட்டன் கருத்துக்களத்துக்கு வரமாட்டன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 05-13-2005 குருவிகள் சொன்னது வீட்டில உள்ள பூனைக்குட்டிகள...தெருவில திரிகிறதுகள இல்ல...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 05-13-2005 கடவுளே.. கண்திறவாயோ.. பு}னையும்.. குருவியும் சண்டைபோடுதுகள். :wink: - kuruvikal - 05-13-2005 tamilini Wrote:கடவுளே.. கண்திறவாயோ.. பு}னையும்.. குருவியும் சண்டைபோடுதுகள். :wink::wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 05-13-2005 Nitharsan Wrote:Quote:1).தொழில் நுட்பஅறிவு (கணணி. இனையத்தளம் என)அது அதிகமானதாலதான் பிரச்சினையே இப்ப... அவனவன் இணையத்தில் கட்சி நடத்திறான் அதை விட குடும்ப பிரச்சினை எல்லாத்தையும் இணையத்தில போடுறான்..ஏன் யாழ் களத்திலையே தனிப்பட்ட பிரச்சினைகளை பலர் கொண்டு வர்ற மாதிரி இருக்கே.. எல்லாமாய் பார்த்தால் தமிழன் இதல அதிகம் முன்னேறீடடான்... நிதர்சன் உங்கள் பார்வை பல நிதர்சனங்களை கண்டு சொல்கிறது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- poonai_kuddy - 05-13-2005 குருவியண்ணா என்னில தன்ர கோவத்த காடு்டுறார் மட்டுறந்துனரில கோவம் எண்டால் அவையோட போய் சண்டை பிடிக்கவேண்டியது தானே எதுக்கு எனனோட வந்து சணட பிடிக்கிறார் இத அழிக்காட்டி பிறவு நானும் எழுதுவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- கறுணா - 05-13-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! அய்யோ! அய்யய்யோ!! ஓஓஓஓஓஓ.................... புலத்தில் முன்னேற்றமோ? ஒரே முன்னேற்றம்தான்! உந்த முன்னேற்றங்களை உங்கத்தையான் வானொலி, தொலைக்காட்சி எல்லாம் அடிக்கடி காட்டுதாம்!! ஐயோஓஓஓஓஓஓ........ 1. வெட்டுக் கொத்துகள். 2. வீடு வீடாக களவுகள் 3. ஊர் கோஷ்டிச் சண்டைகள் 4. கிறடிக்காட் மோசடிகள் 5. இளசுகள் தனியத் திரியேலாது 6. வெளியே வராத பாலியல் வன்முறைகள் 7. வீட்டுக்கு வீடு கோள், குண்டனி 8. காட்டிக்கொடுப்புகள் 9. ....... 10. .. அய்யோ அய்யோ முன்னேற்றம் வந்து றொக்கட்டுலைதானாம் போகுது! உதுகளை விட பிசினஸ் கூட்டத்தின் எங்கடை சமூகத்தை ஏமாற்றுவதும் முன்னேற்றம்தானாம். 1. கடைகளிலை கதைகளைக் கொடுத்து விட்டு கூட அடித்திடுவார்களாம். 2. பழசு, புதுசு என்டு உந்த எக்ஸ்பயரி டேற்றுகளில் உவையளுக்கு நம்பிக்கை இல்லையாம். டேற் முடிந்தால் வேறொரு லேபல் மேல் விழுமாம். 3. உந்த சொலிஸிஸ்டர்மாரென்றால் கேட்கத் தேவையில்லையாம். அரைவாசிச் சனத்தின்ரை வாழ்க்கையையே அநியாயப்படுத்திப் போட்டாங்களாம். சரிவாற கேசுகலையும் காசுக்காக பிழைக்கப் பண்ணிப் போடுவாங்களாம். உவங்கலைப் பற்றி பேந்தொருக்கால் தனியே வாறன். 4. வீடு வாசலிலை இருக்கும் கக்கூசு, கிச்சின், காடின் திருத்த எண்டு ஒரு கூட்டமாம். வேலையை இந்த முடிக்கிறன் எண்டு தொடங்குங்களாம். பேந்து வீட்டுக்காறன்பாடு அரோகராத்தானாம். வேலை செய்ய பேசிய காசும் நாலு மடங்காகிவிடுமாம், மாசங்கள் இழுபட்டு அரைகுறையாக முடியுமாம். 5. ..... 6. ..... இப்படி ஏமாத்துக் கூட்டமும் றொக்கட்டுலைதானாம். உதுகளை விட பெரிய முன்னேற்றம் ஒண்டுள்ளதாம் சொல்ல மறந்திட்டன். மொழிப்பற்றாம்!!!!!!! ஐயோ! அய்யய்யோ!!!!!!! உதைக் கேட்கவே கட் அற்றாக் வந்து விடும். ஐயோ, பிழையாக நினைத்துப் போடதையுங்கோ தமிழ் மொழி வீது பற்று எண்டு! உன்ட்ர்க்த ஆங்க்கிலீசோ! பிரச்சுவோ! சேமன் போண்டதிலைதானாம் காதல்!!!!!!!! 1. தமிழே வீடுகளிலை கதைக்காத ஒரு கூட்டமாம். 2. பிள்ளைகள் தமிழ் கதைத்தால் வெட்கமாக எண்ணும் ஒரு மானஸ்தர் கூட்டமாம். 3. தாய் தேப்பனுக்கு அடிச்சுப் போட்டாலும் உந்த நாட்டுப் பிர மொழிகள் வாயுக்குள்ளேயும் உள்ளடாதாம். ஆனால் பொடியலுக்கு தமிழ் தெரியக் கூட்டாததென்பதில் உறுதியாக நிற்கும் கூட்டமாம். 4. பிறக்கும் பொடியலுக்கு பெயராம். ஐயோ, வாயுக்குள்ளேயும் கோதாரி உள்ளடுதில்லையாம். யப்பான், சீனா மொழிப் பெயருகள் கூட வந்துட்டுதாம். கோதாரி விழட்டும்... 5. .... இப்படி எல்லாத்திலையும் ஓகோவாம்! பூரிசு வானம் விட்ட மாதிரித்தானாம் எல்லாம்! விடேக்கை ஏதோ உலகத்தை சுத்துமென்டமாதிரித்தானாம்!! எங்கேயே போய் "டுப்" எண்டு வெடிக்கேக்கைதான் எல்லாம் வெளிக்குமாம்!!!!!!!!!!!!!!!!!!!!! எதோ சலசலப்புக் கேக்குது! நிண்டால் போட்டுடுவாங்கள் பேந்து உசிரோடிருந்தால் வாறன்.................... onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - ottan - 05-14-2005 யூ இடியட் கன்றிபரூட் வாட்ஸ் டமில். தற்ஸ் கன்றிபுரூட் லாங்குயிச் . வீ கான்ற் ஸ்பீக் டமில். வை யூ றைற் ஹியர் ஸபீக் டமில். வீ டேன்ற் லைக் டமில். தற்ஸ் வெரி பாட். அவர் பேரன்ஸ ஓல் சோ டோன்ற் லைக் டமில். வாட்ஸ் யூ ஸபீக்.? திஸ் இஸ் first ரைம். வென் யூ நெக்ஸ் ரைம் யூ றைற் டமில் வீ வில் கில் யூ. வீ லைக் ஒன்லி வைற் வுட் தற்ஸ் வெரி நைஸ்..அவர் மதர் லாங்குயிச் இங்கிலீஸ். கருத்து மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது யாழினி - Mathan - 05-16-2005 Nitharsan Wrote:[quote=Nitharsan][quote=Nitharsan]Quote:5) பெண்ணும் ஆணுக்கு சமனாக வேலைக்கு போவதால் குடும்பத் தலைவனின் சுமைகள் கனுஷமான அளவு குறைந்திருக்கிறதுசுமைகள் கஸ்டங்கள் குறையுதோ இல்லையே கட்டாயம் வேதனையும் அலைச்சலும் கூடும்....பெண்கள் வேலைக்கு பொவதால் எந்த பிரச்சினையில்லை..வேலையிடத்தில் இருக்கும் மற்ற தமிழ் பெண்கள் ஏத்தி விட.. இங்கு வீட்டில சங்காரம்....புரியல்லையா...? அதற்காக கீழே தாழ்த்தி வைத்திருந்தால் பிரைச்சனை வராது என்று நினைக்கிறீர்களா? - Nilavan - 05-17-2005 ottan Wrote:யூ இடியட் கன்றிபரூட் வாட்ஸ் டமில். தற்ஸ் கன்றிபுரூட் லாங்குயிச் . வீ கான்ற் ஸ்பீக் டமில். வை யூ றைற் ஹியர் ஸபீக் டமில். வீ டேன்ற் லைக் டமில். தற்ஸ் வெரி பாட். அவர் பேரன்ஸ ஓல் சோ டோன்ற் லைக் டமில். வாட்ஸ் யூ ஸபீக்.? திஸ் இஸ் first ரைம். வென் யூ நெக்ஸ் ரைம் யூ றைற் டமில் வீ வில் கில் யூ. வீ லைக் ஒன்லி வைற் வுட் தற்ஸ் வெரி நைஸ்..அவர் மதர் லாங்குயிச் இங்கிலீஸ்.hello ottan! if you don't want to speak Tamil thats fine. but don't tell anyone that you are a tamil and get out from the yarl tamil forum. if you don't like tamil. thats your problems why are you talking about here. I hope that even you don't know how to write in english. next time I show you pasting as a Thangalish I will kill you. "if you wan't to kill some one I don't care but don't kill our language" there are no excuse for that.... Thank you Nilavan உங்களுக்கு தமிழ் பேச பிடிக்கவில்லையாயின் அது பிரச்சினையில்லை. ஆனால் நீங்கள் யாரிடமும் தமிழன் என்று சொல்லாதீர்கள் அத்தோடு யாழ் தமிழ் களத்தில் இருந்து வெளியேறிவிடுங்கள்உங்களுக்கு தமிழ் பிடிக்கவில்லை எனில் அது உங்கள் பிரச்சினை அதை பற்றி இங்கே ஏன் கதைக்கிறீர்கள்? நா நினைக்கிறேன் உங்களுக்கு ஒழுங்காக ஆங்கிலம் எழுத தெரியவில்லை என்று. அடுத்த முறை உங்களது கரத்துக்கள் தமிழ் கந்த ஆங்கிலமாக இருப்பின் நான் உங்களை கொல்லுவேன்..... யாரையும் கொலை செய்ய போகின்றீர்கள் என்றால் அதை பற்றிநான் கவலை கொல்ல மாட்டேன் ஆனால் எமது மொழியை கொல்லாதீர்கள் அதற்க்கு இங்கு மன்னிப்பே இல்லை நன்றி நிலவன் குறிப்பு: இடையில் ஏற்ப்பட்ட குழப்பங்களுக்கnhய் வருந்து கின்றேன்.....அதே நேரம் ஒற்றனின் கருத்துக்கள் நீக்கப்பட்ட தேவையில்லை - Mathan - 05-17-2005 [size=14]நிலவன்: அந்த கருத்து ஆரம்பத்தில் நீக்கப்பட்டிருந்தது. அது பதில் கருத்தை வரவழைப்பதற்காகவும் விவாதத்தை தொடர்வதற்காகவும் என்று கேட்டு கொண்டதால் மீண்டும் இணைக்கப்பட்டது. அந்தசமயம் இதே போக்கு தொடர்ந்தால் அது குறித்து கவனம் செலுத்தலாம் என்று நினைத்தோம், இப்போது பதில் ஆங்கிலத்தில் வந்துள்ளததை பார்த்தால் இது தவறான முன்மாதிரியாகிவிடுமோ என்று தோன்றுகின்றது. எப்போதும் கள உறுப்பினர் கருத்துக்களை தாமே சுய தணிக்கை செய்து கொண்டால் மட்டுறுத்தினர்கள் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படாது. - vasisutha - 05-17-2005 Nilavan Wrote:hello ottan! hock: hock: நான் கதைச்சா என்னையும் கொலை பண்ணுவீங்களா?
- tamilini - 05-17-2005 அவர் என்ன எழுதியிருக்கார்.. தமிழில சொல்லுங்கையா நமக்கும்..
- vasisutha - 05-17-2005 யார் எழுதியது? :?: 8) - sathiri - 05-17-2005 :roll: :roll: :roll: |