Yarl Forum
கேன்ஸ் பட விழா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: கேன்ஸ் பட விழா (/showthread.php?tid=4287)



- Mathan - 05-13-2005

கேன்ஸ் விழா: தொடங்கி வைத்த ஐஸ்வர்யா

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/asih-450.jpg' border='0' alt='user posted image'>

கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழாவை பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி வைத்தார்.

பிரான்சிலுள்ள கேன்ஸ் நகரில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இவ்வருட திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதை பிரபல இந்தி நடிகையான ஐஸ்வர்யா ராய் மற்றும் அமெரிக்க டைரக்டர் அலெக்சாண்டர் பெய்ன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் தயாரான படங்கள் திரையிடப்படுகின்றன. சிறந்த படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு விழாவின் இறுதி நாளில் விருதுகள் வழங்கப்படும்.

விருதுக்கான படங்களை தேர்வு செய்யும் ஜூரி குழுவில் அழகி படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை நந்திதா தாஸ், டோனி மாரிசன், மெக்சிகோ நடிகை சல்மா ஹெய்க், பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஜான் வூ,

ஸ்பெயின் நடிகர் ஜேவியர் பார்டம், பிரான்ஸ் படத்தயாரிப்பாளர்கள் பெனாய்ட் ஜேக்கட், ஆக்னஸ் வர்டா, ஜெர்மன் இயக்குனர் பதி அகின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த வருடம் நடைபெற்ற விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயும் ஜூரி குழுவில் இடம்பெற்றிருந்தார்.

இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன. முதன் முதலாக ஈராக் நாட்டை சேர்ந்த ஒரு படமும் இந்த விழாவில் பங்கு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.indiainfo.com/specials/c...shwarya-21.html


- Mathan - 05-13-2005

கேன்ஸ் பட விழாவில் இந்தியர்கள்

<img src='http://cinesouth.com/images/new/13052005-THN11image1.jpg' border='0' alt='user posted image'>

அமெரிக்காவில் தயாராகும் படங்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் விருது ஆஸ்கார். ஒரேயொரு வெளிநாட்டுப்படம் மட்டும் சிறந்த அயல்நாட்டுப்படம் என்ற பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும். அந்த வகையில் சர்வதேச விருது என ஆஸ்கார் விருதை சொல்லமுடியாது.

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் வருடம் தோறும் உலக திரைப்பட விழா நடத்தப்பட்டு சிறந்த படம், இயக்குனர் உள்பட பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் அளிக்கப்படுகிறது. இந்த கேன்ஸ் திரைப்பட விழாவே உண்மையான பிரசித்திப் பெற்ற சர்வதேச திரைப்பட விழாவாகும்.

58-வது கேன்ஸ் திரைப்பட விழாவை துவக்கி வைக்கும் கௌரவத்தைப் பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யாராய். "58-வது ஆண்டாக நடக்கும் இந்த உலகப்பட விழாவை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்று ஆங்கிலத்தில் கூறி விழாவை தொடங்கி வைத்தார் ஐஸ்வர்யாராய்.

உலகமெங்கும் தயாராகும் சிறந்த திரைப்படங்கள் இங்கு வெளியிடப்படும். மொத்தம் 12 ஜூரிகள் விருதுக்கான படங்களை, கலைஞர்களை தேர்ந்தெடுப்பார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன் கேன்ஸ் திரைப்படவிழா ஜூரியாக இருந்து விருதுக்குரிய படங்களை தேர்வு செய்தார் ஐஸ்வர்யாராய்.

<img src='http://cinesouth.com/images/new/13052005-THN11image2.jpg' border='0' alt='user posted image'>

இந்த முறை அந்த பெருமை நந்திதாதாஸுக்கு கிடைத்திருக்கிறது.

கேன்ஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவை அசலான கலைப்படங்கள். திரைப்படத் துறையில் ஆழ்ந்த விமர்சனமும், ஞானமும் கொண்டவர்களே நடுவர்களாக இருந்து வந்தனர். சமீப ஆண்டுகளில் பாப்புலர் மீடியாவில் இருக்கும் ஐஸ்வர்யாராய், நிக்கோல் கிட்மேன் போன்றவர்கள் இந்தப் பணிக்கு அமர்த்தப்படுவது தீவிர கலைஞர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கார் விருதுகளைப் போல, பாப்புலர் மனநிலைக்கு கேன்ஸ் விருதுகளும் திரும்புவதாக இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கேன்ஸ் விருது தன் பெருமையை திரும்பப் பெறுமா?

சினி சவுத்


- kavithan - 05-15-2005

நன்றி மதன்