Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 341 online users.
» 0 Member(s) | 338 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,064
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,490
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  விழி மூடி நீயும் தூங்காலாமோ?
Posted by: iruvizhi - 12-09-2005, 10:40 PM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

<b>ஏறாவூ என்னுமோர் காலணியில்
அங்கே படப்போகுதாம்
சிங்களச்சிப்பாயின் காலணி.
இதனை கேட்ட பின்னும்
மௌனமாய் இருக்கலாமோ தமிழா நீ?

வீண் வம்பு செய்கின்ற
வீணருக்கு.
விடிவு இனி இல்லையென
உரத்து
உரைக்காது.
விழி மூடி நீயும் தூங்காலாமோ?

அண்ணன் தம்பிகள்
நமக்கிடையே
பகையுணர்வைத்தூண்டி விட எண்ணிவிட்டான்.
எட்டப்பர் கூட்டத்தை நம்பாதீர்!
அவன் எரியும் தீயில்
எண்ணையை ஊற்றிடுவான்.
அன்னியனின் சதி வலையில்
நாங்கள் எரிகையிலே.
எட்டப்பன் எட்டிநின்று சிரித்து
மகிழ்ந்திடுவான்.

சிங்கள நேவிக்கு
இடங்கொடுத்து.
இரண்டாயிரன் குடும்பங்களிற்கு
குழி பறித்து.
தமிழர்களின் குடிகெடுக்கும்
சிங்களத்தின் கோரமுகம்
இன்னுமா உங்களுக்குப்
புரியவில்லை?

புரிந்துவிடும்
வானில் குண்டுகள்
கொண்டு வந்து கொட்டுவான்.
வழியில் நங்கயரை சீண்டுவான்.
நாளை கோவில் மசூதிக்குள்
அரசமரம் நடுவான்.
அதற்கப்புறம் என்ன?
அதற்கு ஒரு சிங்கள பெயரிமிட்டு
பேரூர் ஆக்கிடுவான்.

இதுதான் காலம் காலமாய்
தமிழனின் வரலாறு.

இனிப்பைக் கொடுத்து இடத்தை
பிடுக்கும் வேலையில் அவன்.
இனிப்பை பதுக்கி
இலையான் கலைக்கும் எண்ணத்தில்
...............</b>

Print this item

  இராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான நேரடித் தாக்குதல் வீடியோப
Posted by: narathar - 12-09-2005, 10:21 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

இராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான நேரடித் தாக்குதல் வீடியோப் படம்.


http://www.jubaonline.net/2-12-2005.rmvb

Print this item

  கேணல். கிட்டு நினைவு நாள்
Posted by: ஈழமகன் - 12-09-2005, 09:54 PM - Forum: நிகழ்வுகள் - Replies (20)

கேணல். கிட்டு மற்றும் அவருடன் மரணித்த வீரர்களுக்குமான நினைவு நாள் நிகழ்வுகளை இலண்டனில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.......

Print this item

  ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் புதிய கடற்படைத்தளம் அமைக்க
Posted by: ஈழமகன் - 12-09-2005, 09:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் புதிய கடற்படைத்தளம் அமைக்க முடிவு- 5000 முஸ்லீம் குடும்பங்களை வெளியேற்ற முடிவு.
ஜ சனிக்கிழமைஇ 10 டிசெம்பர் 2005 ஸ ஜ செனிவிரட்ண ஸ
மட்டக்களப்பு ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் சும்மார் 5000 முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த 25000 பேரை வெளியேற்றி பாரிய நிலப்பரப்பில் ஜப்பான் மற்று இந்தியாவின் உதவியுடன் சிறீலங்கா கடற்படையினரின் கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. புதிய படை முகாம்களை போர் நிறுத்த உடன்படிக்கை கட்டுப்படுத்துகின்ற போதும் தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த புதிய தளத்தை நிறுவதற்கு சிறீலங்கா கடற்படையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த கடற்படைத்தளம் நிறுவப்படும் பட்சத்தில் ஏறாவுூர் புன்னைக்குடாப் பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கண்காணிப்பில் இருந்து வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை தென்தமிழீழ முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு அருகில் காவல்கண்காணிப்பு நிலைகளை நிறுவதற்கு சிறிலங்கா காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிறீலங்கா பாதுகாப்பு படையினரின் இத்தகைய திட்டங்கள் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளை மேற்கொள்ளும் வகையிலேயே அமைகின்றது


நன்றி - நிதர்சனம்.

Print this item

  வனூஸ் என்னும் சுறாவழி இலங்கயின் வடக்கை நோக்கி நகர்ந்து கொன்ட
Posted by: narathar - 12-09-2005, 08:27 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (2)

வனூஸ் என்னும் சுறாவழி இலங்கயின் வடக்கை நோக்கி நகர்ந்து கொன்டிருபதாகா வழி மண்டல் நிலயங்கள் எச்சரிக்கை செய்த வண்ணம்

APCEDI Alert Sri Lanka-BOBW, Cyclone Fanoos (06B/TD 2), #5, 2006: Cyclone Fanoos strengthens in Bay of Bengal, threatens Sri Lanka and Southeast IndiaThe Joint Typhoon Warning Center (JTWC) and the Sri Lanka and India Departments of Meteorology are continuing to provide guidance on Cyclone Fanoos (06B/TD2) in the Bay of Bengal.

Cyclone Fanoos is located about 540 km northeast of Trincomalee, Sri Lanka or 650 km east-southeast of Chennai, Tamil Nadu and is moving to the west-northwest at 04 kt. It is slowly strengthening. The JTWC has issued 6 cyclone alerts for this system.

With the continuing increase in intensity and the movement to the west-northwest, this is increasingly becoming a serious situation for both Southeast India and Northern Sri Lanka. Both countries are warning all maritime and fishing interests in affected areas to stay in port or if at sea, to seek shelter at the closest point immediately.

Given the heavy flooding in Tamil Nadu from Cyclone Baaz, and the saturation of soils throughout much of Southeast India and Sri Lanka from subsequent tropical waves, Cyclone Fanoos has the potential to cause widespread severe to localised devastating flooding across the area in and around where it comes ashore. This includes storm surge flooding, continued flooding of large area rivers and flash-flooding in hill areas. Chennai's 2 main rivers, the Adyar and Cooum continue at or near flood stage in many areas throughout the city and in rural areas. Thus any additional heavy rain in and around Chennai in the few days has the potential to make the situation much worse. More details on the news of the flooding in Chennai can be found in The Hindu

Authorities, aid workers and residents, especially in Northern and Eastern Sri Lanka and in Tamil Nadu and Southern Andhra Pradesh should maintain extreme vigilance with this system. Government and aid workers (including all AFAP, NSRC, RRI and other affiliated aid workers) along the Sri Lankan coast and in flood prone areas, should continue to carefully monitor this system and be prepared to assist communities in which they are working should the situation warrant and the Government of Sri Lanka issue any flood or storm warnings.
http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900S...JD?OpenDocument

Print this item

  வடக்கு கிழக்கில் அதிகரித்த குளிர்.
Posted by: அகிலன் - 12-09-2005, 06:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

<b>அதிகரித்த குளிர் - வடக்கு கிழக்கு மாவட்டங்களில் தீடிரென ஏற்பட்ட மாற்றம் </b>
Written by Pandara Vanniyan Friday, 09 December 2005

யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு அடங்கலாக பரவலான வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது கடுமையான குளிர் நிலவுகின்றது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை நோக்கி நகரும் வானூஸ் சூறாவளி இன்று நள்ளிரவுக்கும் நாளை காலைக்கும் இடையில் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கடக்கக்கூடும் என எதி;ர்பார்க்கப்படும் இந்த நிலையில் இன்று மாலையில் இருந்து திடீர் என இப்பிரதேசங்களில் கடுமையான குளிர் நிலவுகின்றது.

இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இது பற்றி வளிமண்டல அவதானிப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தற்போது நிலவுகின்ற காற்றழுத்தம் காரணமாக ஈரலிப்பு அதிகமாகவே வளிமண்டலத்தில் மாற்றமைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும் பாரிய அளவில் காற்று எதுவும் இது வரை வீசவில்லை எனவும் ஆனால் இலேசான மிக குளிரான காற்று வீசிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
1978 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற சூறாவளிக்கு முன்னர் கூட இதே போல குளிரானதொரு காலநிலையே நிலவியது என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

[சங்கதி]

Print this item

  நியூயார்க் விமானத்தில் 'மப்பு' பார்ட்டி ரகளை..
Posted by: Danklas - 12-09-2005, 05:00 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (10)

சென்னையில் இருந்து நியூயார்க் செல்ல இருந்த விமானத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த பயணியை அதிகாரிகள் இறக்கி விட்டனர்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த அங்கப்பன் என்பவர் நியூயார்க் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். 65 வயதாகும் அவர் குடித்து விட்டு முழு மப்பில் தான் விமான நலையத்திற்கு வந்திருந்தார்.

நியூயார்க் விமானத்தில் ஏறிய அவர் தனது இருக்கையில் அமர்ந்தார். விமானம் கிளம்பும் முன்பு, அனைவரும் தங்களது பெல்ட்டை அணியுமாறு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைக் கண்டு கொள்ளாத அங்கப்பன், தனது இடுப்பில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

சரக்கு உள்ளே போனதும், குடிபோதையில் சக பயணிகளிடம் ரகளை செய்ய ஆரம்பித்தார். இதையடுத்து விமான நிலைய மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விமானி தகவல் கொடுத்தார்.அவர்கள் விரைந்து சென்று அங்கப்பனை விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதன் பின்னர் விமானம் நியூயார்க் புறப்பட்டுச் சென்றது.

குடிபோதையால் ரகளை செய்து இறக்கி விடப்பட்ட அங்கப்பன் விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்து தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தார்.

குடிப்பது எனது பிறப்புரிமை, அது குற்றமா, யார் தடுத்தாலும் நான் குடிப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்த அவரை பாதுகாவலர்கள் அங்கிருந்து கிளம்பிப் போகச் செய்தனர். அங்கப்பன் செய்த அலம்பலால் நியூயார்க் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

ThatsTamil.com....(சுண்டலுக்காக டன்) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓய்ய் சின்னா, பார்த்து பழகுமோய்ய்,, ஒரு நாளைக்கு இப்படித்தான் ஒரு செய்தி வரும்,, ஆனால் கொஞ்சம் வித்தியாசமா வரும்,, சூரிச் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் ரகளை செய்த ம***பு பார்ட்டியை விமானத்திலிருந்து பைலட் கீழே தள்ளிவிட்டார் எண்டு,,, :evil: :evil: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  கலாபக் காதலி
Posted by: mayooran - 12-09-2005, 12:41 PM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

காற்றெழும்
கடற்கரையோரம்
கால் நனைத்த
கன்னியவள் சுடிதாரோ
வானவில்லின் வர்ணம் காட்ட
சீறிவரும் அலைகளை
ரசித்தபடி
தேவதையாக நின்ற
அவள் அழகை
ரகசியக் கண்களால்
ஆராதனை செய்தேன்

ஓப்பனையில்லா
துருதுருத்த விழிகளுடன்
கன்னத்தில் வியர்வை
éத்திருந்த நிலவு முகமாக
ஒளி தந்தாள்

முதல் பார்வையிலேயே
அந்த வசீகர முகம்
இதயத்துள் புகுந்துவிட்டது
வெந்து துடித்து
வேதனையில் மடிந்து
திருடிய முகத்தை
ஓராயிரமுறை
பார்க்கத் தூண்டியது

அவஸ்தையைக் கொடுத்து
உள்ளத்துள் புயலாகப்
புகுந்தவள் நினைவோ
என்னை தென்றலாகத்
தாலாட்ட
என் உள்ளம் நினைத்ததை
சொல்லத் துணிகிறேன்

இதயத்துள் புரளும்
ஆசையது திரளும்போதில்
மனமோ வரைகிறது
உன்மீது என் உள்ளம் கொண்ட
காதலை

கலாபக் காதலியே
பிக்காசோ வரைந்த
ஓவியம் போலிருந்தே
ஒரு பேச்சும் பேசாத கண்ணே
நெஞ்சின் உணர்வுக்குள்
ஒன்றிவிட்ட காவியப்பெண்ணே
கண் வீச்சைக் காட்டிவிட்டாய்
என் மூச்சில் உயிரில்லையடி
விழியசைவால் விடை பகரும்வரை
துடிக்கிறேன் துவள்கிறேன்

வெண்ணிலவு மங்கையின்
தங்கையே
முல்லைப்é மணமெடுத்து
என் மனதிற்குள் மணக்கின்ற
தித்திப்பு இனிப்éற
சித்தத்தில் இனிக்கின்ற
சுகச் சொல்லொன்று
கூறாயோ கண்ணே
www.autham.com

Print this item

  கூத்தடித்த கடலே விடை கொடு..!
Posted by: kuruvikal - 12-09-2005, 12:17 PM - Forum: கவிதை/பாடல் - Replies (12)

<img src='http://kuruvikal.yarl.net/archives/tsunami_31.jpg' border='0' alt='user posted image'>

<b>கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
"சுனாமி" அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!

படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்...!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!

கண் முன்னே காவியங்கள்
அலையோடு அள்ளுப்பட
கைகள் இருந்தும்
கருவி இருந்தும்
கையாலாகாதவர்களாய் உறவுகள்..!
பாசப்பிணைப்புக்கள் அறுபட
அன்புறவுகள் முறிபட
கதறி அழக்கூட அவகாசம் இன்றி
பாவிகளான பந்தங்கள்
அப்படி ஒரு அலங்கோலம்..!

மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!

அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ...??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன....
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி...
தீருமோ அது...???!
கூத்தடித்த கடலே விடை கொடு...!</b>

கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...!

Print this item

  பிரபாகரனுடன் நோர்வே உயர்நிலைக் குழு மிகவிரைவில் சந்திப்பு
Posted by: sri - 12-09-2005, 11:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

அமைதிப் பேச்சுகள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நோர்வே உயர்நிலைக் குழுவின் மிகவிரைவில் சந்திக்க உள்ளதாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்காவுக்கான நோர்வே அரசின் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கார் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் சந்தித்துக் கலந்துரையாடினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில் முற்பகல் 9.30மணியளவில் இச் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு சு.ப. தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்:

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: இன்றைய சந்திப்பானது வழமையாக நோர்வே தூதுக் குழுவை சந்திக்கின்ற சந்திப்பாக இருப்பினும் சிறிலங்காவில் புதிய அரசுத் தலைவர் பதவியேற்ற நிலையில் நோர்வே அனுசரணையாளர்களைச் சந்தித்திருக்கிறோம்.

புதிய அரசாங்கத்தினுடைய சமாதான முயற்சிகள் தொடர்பான நிலைபாடுகள் பற்றியும் நோர்வே தரப்பை மீண்டும் அனுசரணைப் பணியை வழங்கும் படி சிறிலங்கா அரசு அழைத்திருப்பது பற்றிய செய்தியையும் நோர்வே தரப்பு அதிகாரப+ர்வமாக எமக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

கேள்வி: நோர்வே அரசு தொடர்ந்து அனுசரணைப் பணி வகிப்பதற்கு அரசு நிபந்தனைகள் விதிப்பதுபோல் தாங்களும் ஏதாவது நிபந்தனைகள் விதிப்பீர்களா?

பதில்: எங்களைப் பொறுத்தவரையில் நோர்வேயினுடைய அனுசரணைப் பணியை நாம் எப்போதும் நிராகரிக்கவில்லை. நோர்வேயினுடைய அனுசரணைப் பணியை தொடர்ச்சியாக எமது தலைமைப்பீடம் வரவேற்றுள்ளது. புதிதாக எந்தவொரு நிலைப்பாட்டையும் வலியுறுத்த வேண்டிய தேவை எமக்கில்லை. ஆனால் அரச தரப்புக்கு சில நிலைப்பாடுகளை தெரியப்படுத்தும் படி தெளிவுபடுத்தியுள்ளோம்.

கேள்வி: தங்களின் அழைப்பில் தான் நோர்வே தூதர் கிளிநொச்சிக்கு வந்ததாக தெரிவித்தார். அப்படியென்ன முக்கிய விடயங்கள் இன்றைய சந்திபில் கலந்துரையாடப்பட்டது?

பதில்: நோர்வே தூதுவரை ஏற்கனவே சந்திப்பதற்கான ஒழுங்குகள் இருந்தது. தேர்தல், ஆட்சி மாற்றங்களினால் அந்த சந்திப்பு பின்போடப்பட்டது. தற்போதுள்ள நிலைமைகளை சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி இன்றைய சந்திப்பில் வலியுறுத்திள்ளோம். யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுல் படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்.

அதற்கான சந்திப்புக்களை ஒழுங்குபடுத்தி யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்துவதை செயற்படுத்த வேண்டும். யுத்த உடன்பாடு தான் எல்லா நடவடிக்கைகளினுடைய அடிப்படையாக அமைகிறது.

அமைதி முயற்சிகளோ, சமாதான முன்னெடுப்புக்களோ எல்லாமே யுத்த நிறுத்த உடன்பாட்டில்தான் தான் தங்கியுள்ளது. யுத்த நிறுத்த உடன்பாடு பலவீனப்பட்டு தகர்ந்து போகும் நிலைக்கு செல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும். அண்மைக் காலத்தில் பொது மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் தீவிரமான தாக்குதல்களையும், குழப்பங்களையும் அச்சுறுத்தல்களையும் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த போக்கு தொடருமானால் மக்களின் கொந்தளிப்பை எவருமே கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றும். ஆகவே இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டில் உள்ள நடைமுறைகளை அமுல் படுத்துவதற்குரிய உத்தரவாதங்கள் கொடுக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அப்போது தான் மக்கள் மத்தியில் நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்படும். மக்கள் மத்தியிலுள்ள பதற்றம், கொந்தளிப்பான சூழல் தணியும் போன்ற விடயங்களை இன்றை சந்திபில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,அம்பாறை போன்ற இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியுள்ளோம். அப்பாவி தமிழ் மக்கள் மீது இராணுவமும், அதனோடு இணைந்து இயங்கும் ஆயுத கும்பல்களும் தொடுக்கும் தாக்குதல்களினால் மக்கள் மிகவும் ஆத்திரமுற்ற நிலையில் உள்ளார்கள். ஒரு கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சீராக்கிக் கொள்வதற்கு ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இராணுவ நெருக்குவாரங்கள் தணிக்கப்பட்டு இயல்பு நிலையை கொண்டுவரவும் விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைய+டாகவே நிலைமைகளை சீர் படுத்திக் கொள்ளலாம் என்பதை நோர்வே தூதுவர் ஊடாக அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.

தலைவரின் கால அவகாசத்தை மகிந்த சரியாக பயன்படுத்துவாரா?


கேள்வி: புதிய அரசு பதவியேற்றதன் பின்பு இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் கடும்போக்கைக் கைக்கொண்டு வருகிறது. நோர்வேயின் அனுசரணையாளரின் பங்குகூட கேள்விக் குறியாகவுள்ளது. இப்படியான சூழலில் தங்களின் ன்வண்டுகோள்?

பதில்: எங்களைப் பொறுத்த வரையில் எமது தலைவர் அவர்கள் மாவீரர் நாள் கொள்கை விளக்கவுரையில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். நாங்கள் மகிந்தாவின் சிந்தனையோ அரசின் நிலைப்பாடுகளிலோ பாரிய இடைவெளியிருந்தாலும் புதிய அரசு பதவிக்கு வந்திருக்கும் சூழலில் கால அவகாசத்தை வழங்கியிருக்கிறோம்.

தேர்தலுக்காக கடும்போக்கை எடுத்தார்களா கூட்டுக்களை அமைத்துக் கொண்டார்களா, உண்மையிலேயே மகிந்த ராஐபக்ச, தமிழ் மக்களுக்கு தீர்வினை முன்வைப்பதற்கு மனப்ப+ர்வமாக விரும்புகிறாரா, அல்லது இனவாத கூட்டுகளுடன் இணைந்து கடும்போக்கைத் தான் மேற்கொள்ளப்போகின்றாரா என்பதை உறுதியாக கண்டறிய வேண்டிய ஒரு தேவையுள்ளது.

அதனடிப்படையில் தான் எமது தேசியத் தலைவர் ஒரு கால அவகாசத்தை புதிய அதிபருக்கும் புதிய அரசுக்கும் வழங்கியுள்ளார். இதனை சந்தர்ப்பமாக பயன்படுதிக் கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு செயற்படுவதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளார். இக்கால அவகாசத்தை சரியாக முறையில் பயன்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


இந்தியத் தலையீடு குறித்து.....


கேள்வி: சமாதான முயற்சிகளிலும், போர் நிறுத்த உடன்பாட்டு விடயங்களிலும் இனிவரும் காலங்களில் தூக்கலாக இந்தியாவின் முன்னெடுப்பு தெரிகிறது. இது தொடர்பாக தங்களின் கருத்தென்ன?

பதில்: அறிவுரைகளை வைத்துக் கொண்டு நாங்கள் கருத்துக்கள் கூற முடியாது. நாங்கள் மக்களின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகள் என்ற படி நிலையில் அறிகுறிகளையோ ஊகங்களையோ வைத்துக் கொண்டு கருத்துக்கள் கூற முடியாது. இன்று நோர்வே தூதுவர் தெரிவித்த கருத்துக்களின் படி கடந்த காலங்களைப் போலவே நோர்வேயின் அனுசரணைப் பணிக்கானதும் சமாதான முன்னெடுப்புக்களுக்குமானதுமான பங்களிப்பையும் இந்தியா வரவேற்றுள்ளதாகவும் இந்தியா கடந்த காலங்களைப் போலவே தனது தார்மீக ஆதரவையும் தன்னுடைய ஒத்துழைப்பையும் நோர்வேக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக நோர்வே தூதர் இன்று எமக்குத் தெரிவித்துள்ளார்.

கேள்வி: அரச தரப்பிடமிருந்து ஏதாவது செய்திகள் கொண்டுவரப்பட்டதா?

பதில்: சிறிலங்கா அரசாங்கம் தமக்கு அனுசரணைப் பணியை தொடரும் படி உத்தியோகப்ப+ர்வமாக அறிவித்துள்ளது என்பதையும் நேரடியாகவே மகிந்த ராஐபக்ச அழைத்து தன்னிடம் அதனைத் தெரிவித்திருப்பதாகவும் நோர்வே தூதுவர் அதிகாரப+ர்வமாக எமக்கு இன்று தெரிவித்தார்.

கேள்வி: தாங்கள் ஏதாவது பதிலை அளித்துள்ளீர்களா?

பதில்: எம்மைப் பொறுத்த வரையில் பதில் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. நோர்வேயின் அனுசரணைப் பணியும் கண்காணிப்புப் பணியும் ஏற்கனவே இங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளது. தெற்கிலேதான் அதற்கான குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு மாறியிருக்கிறது. இங்கே எவ்விதமான குழப்பமான சூழல் நிலையில்லை.

கேள்வி: கண்காணிப்பு பணியிலிருந்து நோர்வேயை விலக்குவதற்கு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான தகவல்கள் ஏதாவது தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதா?

பதில்: அப்படியான செய்திகள் எதையும் நோர்வேத் தரப்பு எங்களுக்கு தெரிவிக்கவிலிலை.


ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு பேச்சுக்கு போகமுடியாது

கேள்வி: மகிந்த ராஐபக்ச ஒற்றையாட்சி முறையில் தான் தீர்வு என்று பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்தியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு மகிந்த தனது நிலைப்பாட்டில் வந்தால் பேசுவீர்களா?

பதில்: தலைவரின் மாவீரர் நாள் உரையில் இக் கேள்விக்கான பதில் உள்ளது. அதாவது தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன அபிலாசை என்ன என்பதை தலைவர் தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது ஒற்றையாட்சியையோ அல்லது தற்போது ஏற்பட்டிருக்கின்ற கூட்டுக்களின் கடும்போக்கையோ ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களோ தமிழ் மக்களின் தலைமையோ பேச்சுக்கு போவார்கள் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது. தற்போது அரசாங்கம் அனுசரணையாளர்கள் ஊடாக எதுவித நிலைப்பாட்டையும் முன்வைக்காத காரணத்தால் நாம் எதுவித கருத்தையும் கூறமுடியாது. அப்படியான சூழல் எழும்போழுது அனுசரணையாளர்களுடாக நாம் எமது நிலைப்பாட்டை ஆணித்தரமாக வெளிப்படுத்துவோம்.


பிரபாகரனுடன் நோர்வே குழு விரைவில் பேச்சு


கேள்வி: நோர்வே அனுசரணையாளர் பணி தொடருமாக இருந்தால் நிறுத்தபட்ட இடத்திலிருந்து பேச்சுவார்தை ஆரம்பிக்குமா? அல்லது புதிதாக ஆரம்பிக்குமா?

பதில்: நோர்வேயின் உயர் மட்ட தூதுக்குழுவினர் மிகவிரைவில் எமது தலைமைப் பீடத்தைச் சந்திக்கவுள்ளனர். அப்போதுதான் அது பற்றி விவாதித்து எங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இன்று நாம் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றியும் அதிகாரப்ப+ர்வமாக தெளிவுபடுத்தும் நோக்குடன் தான் நோர்வே தூதுவரின் பயணம் அமைந்திருந்தது.

கேள்வி: போர் நிறுத்த உடன்பாடிக்கை தொடர்பாக அரசும், விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைமைகள் சந்திக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்: சந்திப்புக்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளோம். தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துந்துள்ளோம். இன்றும் சந்திப்புக்களின் அவசியத்தை கூடுதலாக வலியுறுத்தியுள்ளோம். ஏனெனில் யுத்த நிறுத்த உடன்பாடு சூழல் தகர்ந்து போகும் ஆபத்து மிக நெருக்கமாகிக்கொண்டு இருக்கின்றது. அண்மைக் காலத்தில் இராணுவ நெருக்குவாரங்கள் தாக்குதல்கள், பொதுமக்கள் கொல்லப்படுத்தல், பொதுமக்குளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே உடனடியாக விரைவாக இரண்டு தரப்பு உயர் மட்டக் குழுவும் சந்தித்து யுத்த நிறுத்த உடன்பாட்டை பலப்படுத்துவதற்கும் அமுலாக்குவதற்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கவேண்டும் என்பதையும் இன்றைய சந்திப்பில் வலியுறுத்தியுள்ளோம்.

கேள்வி: இருதரப்பும் சந்திக்க வேண்டும் என்பதை நோர்வே தூதுவரும் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசாங்கத்திடம் அவ்வாறான சந்திப்புக்களை ஏற்படுத்தக் கூடிய அறிகுறிகள் ஏதும் உள்ளதா?

புதில்: அதை அனுசரணையாளர்களிடம் தான் கேட்கவேண்டும். ஏனெனில் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்திருக்கின்றோம். யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாக இரு தரப்பு உயர்மட்டக்குழுவும் கலந்துரையாடி யுத்த நிறுத்த அமுலாக்கதை உறுதி செய்யகொள்ள வேண்டும். இது மிக மிக அவசியமானதாகும். தற்போதுள்ள சூழலை தக்க வைக்க வேண்டுமாக இருந்தால் உடனடியாக இரு தரப்பு சந்திப்பையும் நடத்த வேண்டும் என்பதை எமது தலைமைப்பீடம் சார்பாக வலியுறுத்தியுள்ளோம்.

தலைவரின் குறுகிய காலம் எது?

கேள்வி: இழுத்தடிப்புக்கள் போக்குக்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அது தொடர்ந்தால் தலைவரின் செய்திப்படி குறுகிய காலம் என்பது?

பதில்: மாவீரர் செய்தியில் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளர். கால அவகாசத்தை தீர்மானிக்க வேண்டியவர்கள் சிறிலங்கா அரசும் படைத் தரப்பும் தான். நிலைமைகளைச் சீர் கெடுத்து நிலைமைகளை இழுத்தடித்துச் சிக்கல்களை உருவாக்குவது என்பது எல்லாம் அரசின் கையில் தான் உள்ளது.

அரசு ஒரு தீர்க்கமான முடிவை விரைவில் எடுத்து சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் மக்களுடையதும் எங்களுடையதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

கேள்வி: யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம். அதிகரிதுள்ளது இது தொடர்பாக?

பதில்: இது விடயம் தொடர்பாகத்தான் நோர்வே தூதரிடம் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். யாழ்ப்பாணத்திலும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகமாகியுள்ளதுடன் மக்கள் மீதான நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளதைப் பற்றியும் கொலை அச்சுறுத்தல்கள், கொலைகள் நடைபெறுகின்ற சம்பவங்களையும் எடுத்து விளக்கியுள்ளோம்.

அப்பாவி பொது மக்கள் எவ்வித காரணமின்றி சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன் ஒரு வெளிப்பாடாகத் தான் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது. இந் நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டுமானால் யுத்த நிறுத்த அமுலாக்கதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்த நிறுத்த அமுலாக்கத்தை கொண்டு வருவதன் மூலம் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த இருவர் எம்மிடம் சரணடைந்ததையடுத்து இருவரது குடும்பதைச் சேர்ந்தவர்களை மிகக் கொடூரமான முறையில் பழிவாங்கியுள்ளார்கள். இக் கொலைகளின் பின்னணியில் சிறிலங்கா இராணுவமும் ஆயுதக் குழுவும் உள்ளது என்பது நிரூபனமாகியுள்ளது.

இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந் நிலைமைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்பதை இன்றைய சந்திப்பில் மிக ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளோம்.

பேச்சுகளை உதாசீனம் செய்த சிறிலங்கா இராணுவம்

கேள்வி: யாழ்ப்பாண அரசியல்துறைப் பொறுப்பாளருடன் நடைபெற இருந்த சந்ததிப்பு சிறிலங்காவின் சமாதானச் செயலகம் அனுமதி வழங்காததால் இடம்பெறவில்லையென கூறப்பட்டது. இது தொடர்பாக?

பதில்: யாழ்ப்பாணத்திலே முறுகல் நிலையெற்பட்டு நிலைமைகள் தீவிரமடைந்த நிலையில் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இராணுவத்தின் தலைமைகளை சந்திப்பதற்கு எமது தலைமை பீடம் அதற்கான ஒழுங்குகளை செய்த நிலையில் இராணுவத்தினர் அதனை உதாசீனம் செய்து தட்டிக் கழித்திருக்கிறார்கள்.

நோர்வே தரப்பு அடிக்கடி கூறுவதுபோல் இரு தரப்பும் சந்ததிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தட்டிக்கழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எமது கவலையையும் தெரிவிப்பதுடன் எமது நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்படுவது நடைமுறை சாத்தியமற்றது

கேள்வி: போர் நிறுத்த உடன்பாட்டில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது. விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்ன?

பதில்: அதிகாரப்ப+ர்வமாக நோர்வே ஊடாக எமக்கு அரசினால் எதுவும் அனுப்பப்படவில்லை. ஊடகங்களில் தான் அந்த செய்தியை கேள்விப்படுகின்றோம். யுத்த நிறுத்த உடன்பாடு என்பது நீண்ட கால முயற்சிக்கூடாக கொண்டு வரப்பட்ட நடைமுறைச் சாத்தியமான ஒரு உடன்பாடாகும். இதில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது எந்த விதத்திலும் சாத்தியமற்றது. இதில் நடைமுறைப் படுத்தலாம். யுத்த நிறுத் உடன்பாட்டை மாற்றி அமைப்பது என்பதை விட யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுலாக்கம் செய்வது இன்றை காலத்தின் தேவையாக உள்ளது. சர்வதேச சமூகமும் நோர்வே தரப்பும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். அரச தரப்பிடம் இருந்து வருகின்ற எதிர் மறையான கருத்துக்கள் எந்தவிதத்திலும் நடைமுறை சாத்தியமற்றது. அதிகாரப+ர்வமான கருத்தா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

கேள்வி: போர் நிறுத்த உடன்பாட்டில் மாற்றம் ஒன்றை விரும்புகின்றார்களா?

பதில்: யுத்த நிறுத்த உடன்படிக்கையை மாற்றி அமைப்பது என்பதை விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். விரும்பவும் மாட்டார்கள்.

கொழும்பிலிருந்து பலாலி விமான நிலையம் ஊடாக நேற்று கிளிநொச்சியை சென்றடைந்த ஹான்ஸ் பிறட்ஸ்கர், ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவை பார்வையிட்டதுடன் மக்களுடனும் கலந்துரையாடினார்.

புதினம்

Print this item