Yarl Forum
பிரபாகரனுடன் நோர்வே உயர்நிலைக் குழு மிகவிரைவில் சந்திப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பிரபாகரனுடன் நோர்வே உயர்நிலைக் குழு மிகவிரைவில் சந்திப்பு (/showthread.php?tid=2130)



பிரபாகரனுடன் நோர்வே உயர்நிலைக் குழு மிகவிரைவில் சந்திப்பு - sri - 12-09-2005

அமைதிப் பேச்சுகள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நோர்வே உயர்நிலைக் குழுவின் மிகவிரைவில் சந்திக்க உள்ளதாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்காவுக்கான நோர்வே அரசின் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கார் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் சந்தித்துக் கலந்துரையாடினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில் முற்பகல் 9.30மணியளவில் இச் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு சு.ப. தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்:

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: இன்றைய சந்திப்பானது வழமையாக நோர்வே தூதுக் குழுவை சந்திக்கின்ற சந்திப்பாக இருப்பினும் சிறிலங்காவில் புதிய அரசுத் தலைவர் பதவியேற்ற நிலையில் நோர்வே அனுசரணையாளர்களைச் சந்தித்திருக்கிறோம்.

புதிய அரசாங்கத்தினுடைய சமாதான முயற்சிகள் தொடர்பான நிலைபாடுகள் பற்றியும் நோர்வே தரப்பை மீண்டும் அனுசரணைப் பணியை வழங்கும் படி சிறிலங்கா அரசு அழைத்திருப்பது பற்றிய செய்தியையும் நோர்வே தரப்பு அதிகாரப+ர்வமாக எமக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

கேள்வி: நோர்வே அரசு தொடர்ந்து அனுசரணைப் பணி வகிப்பதற்கு அரசு நிபந்தனைகள் விதிப்பதுபோல் தாங்களும் ஏதாவது நிபந்தனைகள் விதிப்பீர்களா?

பதில்: எங்களைப் பொறுத்தவரையில் நோர்வேயினுடைய அனுசரணைப் பணியை நாம் எப்போதும் நிராகரிக்கவில்லை. நோர்வேயினுடைய அனுசரணைப் பணியை தொடர்ச்சியாக எமது தலைமைப்பீடம் வரவேற்றுள்ளது. புதிதாக எந்தவொரு நிலைப்பாட்டையும் வலியுறுத்த வேண்டிய தேவை எமக்கில்லை. ஆனால் அரச தரப்புக்கு சில நிலைப்பாடுகளை தெரியப்படுத்தும் படி தெளிவுபடுத்தியுள்ளோம்.

கேள்வி: தங்களின் அழைப்பில் தான் நோர்வே தூதர் கிளிநொச்சிக்கு வந்ததாக தெரிவித்தார். அப்படியென்ன முக்கிய விடயங்கள் இன்றைய சந்திபில் கலந்துரையாடப்பட்டது?

பதில்: நோர்வே தூதுவரை ஏற்கனவே சந்திப்பதற்கான ஒழுங்குகள் இருந்தது. தேர்தல், ஆட்சி மாற்றங்களினால் அந்த சந்திப்பு பின்போடப்பட்டது. தற்போதுள்ள நிலைமைகளை சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி இன்றைய சந்திப்பில் வலியுறுத்திள்ளோம். யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுல் படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்.

அதற்கான சந்திப்புக்களை ஒழுங்குபடுத்தி யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்துவதை செயற்படுத்த வேண்டும். யுத்த உடன்பாடு தான் எல்லா நடவடிக்கைகளினுடைய அடிப்படையாக அமைகிறது.

அமைதி முயற்சிகளோ, சமாதான முன்னெடுப்புக்களோ எல்லாமே யுத்த நிறுத்த உடன்பாட்டில்தான் தான் தங்கியுள்ளது. யுத்த நிறுத்த உடன்பாடு பலவீனப்பட்டு தகர்ந்து போகும் நிலைக்கு செல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும். அண்மைக் காலத்தில் பொது மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் தீவிரமான தாக்குதல்களையும், குழப்பங்களையும் அச்சுறுத்தல்களையும் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த போக்கு தொடருமானால் மக்களின் கொந்தளிப்பை எவருமே கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றும். ஆகவே இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டில் உள்ள நடைமுறைகளை அமுல் படுத்துவதற்குரிய உத்தரவாதங்கள் கொடுக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அப்போது தான் மக்கள் மத்தியில் நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்படும். மக்கள் மத்தியிலுள்ள பதற்றம், கொந்தளிப்பான சூழல் தணியும் போன்ற விடயங்களை இன்றை சந்திபில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,அம்பாறை போன்ற இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியுள்ளோம். அப்பாவி தமிழ் மக்கள் மீது இராணுவமும், அதனோடு இணைந்து இயங்கும் ஆயுத கும்பல்களும் தொடுக்கும் தாக்குதல்களினால் மக்கள் மிகவும் ஆத்திரமுற்ற நிலையில் உள்ளார்கள். ஒரு கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சீராக்கிக் கொள்வதற்கு ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இராணுவ நெருக்குவாரங்கள் தணிக்கப்பட்டு இயல்பு நிலையை கொண்டுவரவும் விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைய+டாகவே நிலைமைகளை சீர் படுத்திக் கொள்ளலாம் என்பதை நோர்வே தூதுவர் ஊடாக அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.

தலைவரின் கால அவகாசத்தை மகிந்த சரியாக பயன்படுத்துவாரா?


கேள்வி: புதிய அரசு பதவியேற்றதன் பின்பு இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் கடும்போக்கைக் கைக்கொண்டு வருகிறது. நோர்வேயின் அனுசரணையாளரின் பங்குகூட கேள்விக் குறியாகவுள்ளது. இப்படியான சூழலில் தங்களின் ன்வண்டுகோள்?

பதில்: எங்களைப் பொறுத்த வரையில் எமது தலைவர் அவர்கள் மாவீரர் நாள் கொள்கை விளக்கவுரையில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். நாங்கள் மகிந்தாவின் சிந்தனையோ அரசின் நிலைப்பாடுகளிலோ பாரிய இடைவெளியிருந்தாலும் புதிய அரசு பதவிக்கு வந்திருக்கும் சூழலில் கால அவகாசத்தை வழங்கியிருக்கிறோம்.

தேர்தலுக்காக கடும்போக்கை எடுத்தார்களா கூட்டுக்களை அமைத்துக் கொண்டார்களா, உண்மையிலேயே மகிந்த ராஐபக்ச, தமிழ் மக்களுக்கு தீர்வினை முன்வைப்பதற்கு மனப்ப+ர்வமாக விரும்புகிறாரா, அல்லது இனவாத கூட்டுகளுடன் இணைந்து கடும்போக்கைத் தான் மேற்கொள்ளப்போகின்றாரா என்பதை உறுதியாக கண்டறிய வேண்டிய ஒரு தேவையுள்ளது.

அதனடிப்படையில் தான் எமது தேசியத் தலைவர் ஒரு கால அவகாசத்தை புதிய அதிபருக்கும் புதிய அரசுக்கும் வழங்கியுள்ளார். இதனை சந்தர்ப்பமாக பயன்படுதிக் கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு செயற்படுவதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளார். இக்கால அவகாசத்தை சரியாக முறையில் பயன்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


இந்தியத் தலையீடு குறித்து.....


கேள்வி: சமாதான முயற்சிகளிலும், போர் நிறுத்த உடன்பாட்டு விடயங்களிலும் இனிவரும் காலங்களில் தூக்கலாக இந்தியாவின் முன்னெடுப்பு தெரிகிறது. இது தொடர்பாக தங்களின் கருத்தென்ன?

பதில்: அறிவுரைகளை வைத்துக் கொண்டு நாங்கள் கருத்துக்கள் கூற முடியாது. நாங்கள் மக்களின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகள் என்ற படி நிலையில் அறிகுறிகளையோ ஊகங்களையோ வைத்துக் கொண்டு கருத்துக்கள் கூற முடியாது. இன்று நோர்வே தூதுவர் தெரிவித்த கருத்துக்களின் படி கடந்த காலங்களைப் போலவே நோர்வேயின் அனுசரணைப் பணிக்கானதும் சமாதான முன்னெடுப்புக்களுக்குமானதுமான பங்களிப்பையும் இந்தியா வரவேற்றுள்ளதாகவும் இந்தியா கடந்த காலங்களைப் போலவே தனது தார்மீக ஆதரவையும் தன்னுடைய ஒத்துழைப்பையும் நோர்வேக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக நோர்வே தூதர் இன்று எமக்குத் தெரிவித்துள்ளார்.

கேள்வி: அரச தரப்பிடமிருந்து ஏதாவது செய்திகள் கொண்டுவரப்பட்டதா?

பதில்: சிறிலங்கா அரசாங்கம் தமக்கு அனுசரணைப் பணியை தொடரும் படி உத்தியோகப்ப+ர்வமாக அறிவித்துள்ளது என்பதையும் நேரடியாகவே மகிந்த ராஐபக்ச அழைத்து தன்னிடம் அதனைத் தெரிவித்திருப்பதாகவும் நோர்வே தூதுவர் அதிகாரப+ர்வமாக எமக்கு இன்று தெரிவித்தார்.

கேள்வி: தாங்கள் ஏதாவது பதிலை அளித்துள்ளீர்களா?

பதில்: எம்மைப் பொறுத்த வரையில் பதில் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. நோர்வேயின் அனுசரணைப் பணியும் கண்காணிப்புப் பணியும் ஏற்கனவே இங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளது. தெற்கிலேதான் அதற்கான குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு மாறியிருக்கிறது. இங்கே எவ்விதமான குழப்பமான சூழல் நிலையில்லை.

கேள்வி: கண்காணிப்பு பணியிலிருந்து நோர்வேயை விலக்குவதற்கு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான தகவல்கள் ஏதாவது தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதா?

பதில்: அப்படியான செய்திகள் எதையும் நோர்வேத் தரப்பு எங்களுக்கு தெரிவிக்கவிலிலை.


ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு பேச்சுக்கு போகமுடியாது

கேள்வி: மகிந்த ராஐபக்ச ஒற்றையாட்சி முறையில் தான் தீர்வு என்று பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்தியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு மகிந்த தனது நிலைப்பாட்டில் வந்தால் பேசுவீர்களா?

பதில்: தலைவரின் மாவீரர் நாள் உரையில் இக் கேள்விக்கான பதில் உள்ளது. அதாவது தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன அபிலாசை என்ன என்பதை தலைவர் தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது ஒற்றையாட்சியையோ அல்லது தற்போது ஏற்பட்டிருக்கின்ற கூட்டுக்களின் கடும்போக்கையோ ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களோ தமிழ் மக்களின் தலைமையோ பேச்சுக்கு போவார்கள் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது. தற்போது அரசாங்கம் அனுசரணையாளர்கள் ஊடாக எதுவித நிலைப்பாட்டையும் முன்வைக்காத காரணத்தால் நாம் எதுவித கருத்தையும் கூறமுடியாது. அப்படியான சூழல் எழும்போழுது அனுசரணையாளர்களுடாக நாம் எமது நிலைப்பாட்டை ஆணித்தரமாக வெளிப்படுத்துவோம்.


பிரபாகரனுடன் நோர்வே குழு விரைவில் பேச்சு


கேள்வி: நோர்வே அனுசரணையாளர் பணி தொடருமாக இருந்தால் நிறுத்தபட்ட இடத்திலிருந்து பேச்சுவார்தை ஆரம்பிக்குமா? அல்லது புதிதாக ஆரம்பிக்குமா?

பதில்: நோர்வேயின் உயர் மட்ட தூதுக்குழுவினர் மிகவிரைவில் எமது தலைமைப் பீடத்தைச் சந்திக்கவுள்ளனர். அப்போதுதான் அது பற்றி விவாதித்து எங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இன்று நாம் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றியும் அதிகாரப்ப+ர்வமாக தெளிவுபடுத்தும் நோக்குடன் தான் நோர்வே தூதுவரின் பயணம் அமைந்திருந்தது.

கேள்வி: போர் நிறுத்த உடன்பாடிக்கை தொடர்பாக அரசும், விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைமைகள் சந்திக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்: சந்திப்புக்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளோம். தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துந்துள்ளோம். இன்றும் சந்திப்புக்களின் அவசியத்தை கூடுதலாக வலியுறுத்தியுள்ளோம். ஏனெனில் யுத்த நிறுத்த உடன்பாடு சூழல் தகர்ந்து போகும் ஆபத்து மிக நெருக்கமாகிக்கொண்டு இருக்கின்றது. அண்மைக் காலத்தில் இராணுவ நெருக்குவாரங்கள் தாக்குதல்கள், பொதுமக்கள் கொல்லப்படுத்தல், பொதுமக்குளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே உடனடியாக விரைவாக இரண்டு தரப்பு உயர் மட்டக் குழுவும் சந்தித்து யுத்த நிறுத்த உடன்பாட்டை பலப்படுத்துவதற்கும் அமுலாக்குவதற்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கவேண்டும் என்பதையும் இன்றைய சந்திப்பில் வலியுறுத்தியுள்ளோம்.

கேள்வி: இருதரப்பும் சந்திக்க வேண்டும் என்பதை நோர்வே தூதுவரும் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசாங்கத்திடம் அவ்வாறான சந்திப்புக்களை ஏற்படுத்தக் கூடிய அறிகுறிகள் ஏதும் உள்ளதா?

புதில்: அதை அனுசரணையாளர்களிடம் தான் கேட்கவேண்டும். ஏனெனில் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்திருக்கின்றோம். யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாக இரு தரப்பு உயர்மட்டக்குழுவும் கலந்துரையாடி யுத்த நிறுத்த அமுலாக்கதை உறுதி செய்யகொள்ள வேண்டும். இது மிக மிக அவசியமானதாகும். தற்போதுள்ள சூழலை தக்க வைக்க வேண்டுமாக இருந்தால் உடனடியாக இரு தரப்பு சந்திப்பையும் நடத்த வேண்டும் என்பதை எமது தலைமைப்பீடம் சார்பாக வலியுறுத்தியுள்ளோம்.

தலைவரின் குறுகிய காலம் எது?

கேள்வி: இழுத்தடிப்புக்கள் போக்குக்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அது தொடர்ந்தால் தலைவரின் செய்திப்படி குறுகிய காலம் என்பது?

பதில்: மாவீரர் செய்தியில் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளர். கால அவகாசத்தை தீர்மானிக்க வேண்டியவர்கள் சிறிலங்கா அரசும் படைத் தரப்பும் தான். நிலைமைகளைச் சீர் கெடுத்து நிலைமைகளை இழுத்தடித்துச் சிக்கல்களை உருவாக்குவது என்பது எல்லாம் அரசின் கையில் தான் உள்ளது.

அரசு ஒரு தீர்க்கமான முடிவை விரைவில் எடுத்து சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் மக்களுடையதும் எங்களுடையதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

கேள்வி: யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம். அதிகரிதுள்ளது இது தொடர்பாக?

பதில்: இது விடயம் தொடர்பாகத்தான் நோர்வே தூதரிடம் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். யாழ்ப்பாணத்திலும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகமாகியுள்ளதுடன் மக்கள் மீதான நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளதைப் பற்றியும் கொலை அச்சுறுத்தல்கள், கொலைகள் நடைபெறுகின்ற சம்பவங்களையும் எடுத்து விளக்கியுள்ளோம்.

அப்பாவி பொது மக்கள் எவ்வித காரணமின்றி சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன் ஒரு வெளிப்பாடாகத் தான் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது. இந் நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டுமானால் யுத்த நிறுத்த அமுலாக்கதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்த நிறுத்த அமுலாக்கத்தை கொண்டு வருவதன் மூலம் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த இருவர் எம்மிடம் சரணடைந்ததையடுத்து இருவரது குடும்பதைச் சேர்ந்தவர்களை மிகக் கொடூரமான முறையில் பழிவாங்கியுள்ளார்கள். இக் கொலைகளின் பின்னணியில் சிறிலங்கா இராணுவமும் ஆயுதக் குழுவும் உள்ளது என்பது நிரூபனமாகியுள்ளது.

இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந் நிலைமைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்பதை இன்றைய சந்திப்பில் மிக ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளோம்.

பேச்சுகளை உதாசீனம் செய்த சிறிலங்கா இராணுவம்

கேள்வி: யாழ்ப்பாண அரசியல்துறைப் பொறுப்பாளருடன் நடைபெற இருந்த சந்ததிப்பு சிறிலங்காவின் சமாதானச் செயலகம் அனுமதி வழங்காததால் இடம்பெறவில்லையென கூறப்பட்டது. இது தொடர்பாக?

பதில்: யாழ்ப்பாணத்திலே முறுகல் நிலையெற்பட்டு நிலைமைகள் தீவிரமடைந்த நிலையில் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இராணுவத்தின் தலைமைகளை சந்திப்பதற்கு எமது தலைமை பீடம் அதற்கான ஒழுங்குகளை செய்த நிலையில் இராணுவத்தினர் அதனை உதாசீனம் செய்து தட்டிக் கழித்திருக்கிறார்கள்.

நோர்வே தரப்பு அடிக்கடி கூறுவதுபோல் இரு தரப்பும் சந்ததிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தட்டிக்கழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எமது கவலையையும் தெரிவிப்பதுடன் எமது நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்படுவது நடைமுறை சாத்தியமற்றது

கேள்வி: போர் நிறுத்த உடன்பாட்டில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது. விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்ன?

பதில்: அதிகாரப்ப+ர்வமாக நோர்வே ஊடாக எமக்கு அரசினால் எதுவும் அனுப்பப்படவில்லை. ஊடகங்களில் தான் அந்த செய்தியை கேள்விப்படுகின்றோம். யுத்த நிறுத்த உடன்பாடு என்பது நீண்ட கால முயற்சிக்கூடாக கொண்டு வரப்பட்ட நடைமுறைச் சாத்தியமான ஒரு உடன்பாடாகும். இதில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது எந்த விதத்திலும் சாத்தியமற்றது. இதில் நடைமுறைப் படுத்தலாம். யுத்த நிறுத் உடன்பாட்டை மாற்றி அமைப்பது என்பதை விட யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுலாக்கம் செய்வது இன்றை காலத்தின் தேவையாக உள்ளது. சர்வதேச சமூகமும் நோர்வே தரப்பும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். அரச தரப்பிடம் இருந்து வருகின்ற எதிர் மறையான கருத்துக்கள் எந்தவிதத்திலும் நடைமுறை சாத்தியமற்றது. அதிகாரப+ர்வமான கருத்தா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

கேள்வி: போர் நிறுத்த உடன்பாட்டில் மாற்றம் ஒன்றை விரும்புகின்றார்களா?

பதில்: யுத்த நிறுத்த உடன்படிக்கையை மாற்றி அமைப்பது என்பதை விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். விரும்பவும் மாட்டார்கள்.

கொழும்பிலிருந்து பலாலி விமான நிலையம் ஊடாக நேற்று கிளிநொச்சியை சென்றடைந்த ஹான்ஸ் பிறட்ஸ்கர், ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவை பார்வையிட்டதுடன் மக்களுடனும் கலந்துரையாடினார்.

புதினம்


- தூயவன் - 12-09-2005

தலைவரை சந்திப்பதில் மட்டும் நல்ல விளைவு ஏற்படப் போவதில்லை. உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் வரை சமாதானம் கதைப்பாங்கள். பிறகு பழைய குருடி கதவைத் திறவடி கதை தான்.