| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 303 online users. » 0 Member(s) | 300 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,066
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| "இருந்தால்" இல்லாமல் ஆனா போது |
|
Posted by: தூயா - 12-08-2005, 10:24 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (17)
|
 |
[size=18]"இருந்தால்" இல்லாமல் ஆன கதை
[size=13]"பெத்தவள் மேல் கொஞ்சமாவது அன்பு இருந்தால், உடனே புறப்பட்டு வா.." - அம்மாவின் கடிதம்.
இந்த கல்யாணத்திற்கு போனால் தான் எனக்கு அம்மாவின் மேல் இருக்கும் அன்பு வெளிவருமா?அல்லது நிரூபணமாகுமா?
அம்மா எப்பொழுதும் இப்படி தான். நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்து இருக்கிறேனே.
சரி வீட்டிற்கு போயும் கனநாட்கள்...அல்ல வருடங்கள் ஆகிவிட்டது. 5 வருடங்களாக அதிகமாக வேலைகள் இருந்ததால் , எதற்கும் இடமில்லாமலே இருந்தது.
இப்பொழுதுதான் கொஞ்சம் பரவாயில்லை. கல்யாணமும் வேற்று மனிதருக்கு அல்லவே. என் கூட பிறந்த சகோதரிக்கு தானே.சரி போகலாம் என நினைத்து வந்தது தவறோ என தோன்றியது.
நினைவில் ஆழ்ந்திருந்த போது பக்கத்தில் படுத்திருந்த குழந்தை சிணுங்கியது. 2 வயது தான் இருக்கும், என் மூத்த சகோதரியின் மகன். அழகான சிசு. ரவியுடன் எனக்கும் திருமணமாகி இருந்தால்...அது தான் எதுவுமே இல்லாமல் போய்விட்டதே!
குழந்தையை காலில் போட்டு ஆட்டி தூங்க வைக்க முயற்சி செய்த போது சற்று தொலைவில் என் மூத்த சகோதரியும் அவள் மாமியாரும்..
"இஞ்ச ராஜி உன்ட தங்கச்சிக்கு என்ன தெரியும் என்று குழந்தையை குடுத்திருக்காய்? துவக்கு பிடிக்கிற கையால என்ட பேரனை தொடுறது எனக்கு பிடிக்கலை. சொல்லிட்டேன்"
மாமியாரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசவும் முடியாமல், என்னிடம் எப்படி சொல்லி குழந்தையை வாங்குவது எனவும் தெரியாமல் அக்கா ராஜி தயங்க, குழந்தையை அவளிடம் ஒப்படைத்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.
வந்ததில் இருந்து இப்படிதான். தாய் நாட்டை காக்க ஒருவராவது போக வேண்டும் என நினைத்து 5 வருடங்கள் முன்னர் எனை நாட்டிற்காய் அர்ப்பணித்தேன். உறவும் , அயலும் பேசும் பேச்சு எதற்கு என ஒதுங்கியதன் காரணமே 5 வருடம் பெற்ற தாயை பார்க்காமல் ஓர் வனவாசம்.
என்னடா இது ஊர் பேச்சுக்கு இவ்வளவு மதிப்பா என நினைக்கலாம்!! நான் என்றால் சரி. ஆனால் என்னை பெற்றவள், கூட பிறந்தவர்கள்.... அவர்கள் இன்னும் மாறவில்லையே. எனக்காக மாறச் சொல்லி கேட்பதிலும் நியாயம் இல்லையே.
போராளியானால் ஒரு பெண், பெண் இல்லையா? வெட்டிய தலை முடிக்கு ஒரு கதை, குடும்பம் பற்றி என்ன தெரியும் என ஒரு கதை, குழந்தை பற்றி தெரியுமா என ஒரு கதை...அப்பப்பா எதற்கடா இங்கு வந்தோம் என சலிப்பாய் இருக்கிறது.
சிறிது நேரம் எங்காவது போய்வரலாம் என நினைத்த போது. உடனே மனதிற்கு வந்த இடம் வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்த கடற்கரை தான்.
உடனேயே மனதும் துள்ளி குதித்தது. இதோ இந்த இடத்தில் தானே சிறு வயதில் விளையாடினேன், இதோ இந்த இடத்தில் தானே ரவியுடன் பேசி இருக்கிறேன்... ரவி....என்னையும் மீறி அகத்திலும், முகத்திலும் ஓர் இனிய உணர்வு.
8 வருடங்களுக்கு முன்னர் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி பயின்ற காலம். தூரத்து உறவினன் கூட..நட்பாய் இருந்த எங்கள் அன்பு பின்னர் ஓர் முதிர்ச்சி அடைந்த காலம் அது.
ரவியின் அண்ணன் வெளிநாடு செல்ல என, கொழும்பு சென்றிருந்தார். கொழும்பில் விடுதியில் தங்கி இருந்தவரை சிறீலங்கா காவல் துறையினர் ஓர் இரவு சோதனை என்ற பெயரில் கூட்டி சென்றது தான் தெரியும்.
அதன் பின்னர் சிறிது காலம் தகவல் இல்லை, பின்னர் வந்த தகவலின் படி அவர் தவறியிருந்தார். உடலை கூட காணாமல் ரவியின் குடும்பம் அழுது உடைந்தது இப்பொழுதும் கண் முன்னே.
இது நடந்த சில நாளில் இதே கடற்கரை மணலில், "நாட்டிக்காக போராட நான் போகிறேன்" என ரவி கூற, அவன் முடிவில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்டதால் விடைகொடுத்தேன்.
அன்று இரவு தூங்க நினைத்தும் முடியவில்லை. சின்ன பிள்ளைகளாக அக்கா, தங்கை, நான் இருந்த காலம்,கடைக்கு சென்ற அப்பாவை ஆமிக்காரன் வெட்டி கொன்றுவிட்டான் என செய்தி வந்தது.
எங்கள் அனைவைரையும் நெஞ்சில் சுமந்தவர் நெஞ்சை கூறுபோட்டு இருந்தார்கள்.
அன்று நான் சிறு பிள்ளை ஆனால் இன்று?? சிந்தித்தேன், முடிவெடுத்தேன். நாட்டை காக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை.
இடையே ரவியை பார்த்ததுண்டு. 3 வருடங்களின் பின்னர் கூட இருந்த ஒரு போராளி "அக்கா ரவி அண்ணா வீரமரணமாம்" என செய்தி கூற, கண்ணீருக்கு பதில் பெருமை தான் மேலோங்கி நின்றது.
3 வருடங்களில் நானும் சற்று முதிர்ச்சி அடைந்து இருந்தேனே.
"அக்கா மாலை எடுக்க போகணும். ஒருக்கா எடுத்துகொண்டு வாறிங்களா" என கேட்டபடி தங்கை வர நினைவுகளுக்கு விடை கொடுத்தேன்.
அடுத்த நாள் தங்கை திருமணம் இனிதே நிறைவேற, அமாவிடம் விடை பெற்றுகொண்டேன்.
7 நாட்களின் பின்னர் பேஸுக்கு திரும்பும் போதே, கடமைகள் ஒவ்வொன்றாய் மனதிற்குள் அணிவகுக்க தொடங்கின.
தூரத்தில் என்னை கண்டதும் "அக்கா வந்திடா" என ஓடி வந்த சக போரளிகளை பார்த்த போது.. "ரவியை மணந்திருந்தால், முடி வெட்டாமல் இருந்திருந்தால், ஓர் குழந்தைக்கு தாயாகி இருந்தால்..."அத்தனை "இருந்தால்" களும் பறந்தோடிவிட்டிருந்தன.
எதற்காக நான் பிறந்தேன், எதற்காக நான் வாழ்கிறேன்..மனது நிறைவாய் மலர என் வீட்டிற்குள் காலடி எடுத்துவைக்கிறேன்....
தூயா
08/12/05
|
|
|
| உணர்வோடும் உயிரோடும் ஒன்றிவிட்ட பதுங்குகுழி வாழ்வு |
|
Posted by: தூயவன் - 12-08-2005, 08:02 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (17)
|
 |
ஒரு வீட்டிற்கு அத்தியவசிய தேவைகளாக கிணறு, மலசலகூடம், சமயலறை போன்றவற்றோடு ஈழத்தமிழர் வாழ்வில் ஒன்றிப் போன இன்றுமொன்று பங்கர் எனப்படும் பதுங்குகுழியாம். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பல உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்கு எமக்கு அது தேவையானதாக ஒன்றாக இருந்தே வந்திருக்கின்றது.
90ம் ஆண்டு காலப்பகுதியில் தான் பதுங்குகுழி எனக்கு அறிமுகம் அல்லது நினைவில் நிற்கின்றது. கோட்டை சமர் நடைபெற்ற காலமாதலால், அந்த நேரத்தில் இராணுவம் பலாலியில் இருந்து தாக்குதல் நடத்துவான் என அஞ்சி, நாமும் எமது உறவுகளும் சாவகச்சேரிக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அப்போதைய தென்மராட்சிப் பொறுப்பாளராக இருந்து, புூநகரி சமரில் வீரச்சாவடைந்த குணா அண்ணாவின் உறவினர் ஒருவர் தான் எமக்கு வாழ்விடம் தந்திருந்தார். மொத்தம் 9 குடும்பங்கள் தங்கியிருந்தோம். கிட்டத்தட்ட 40 பேர் அளவில் வரும்.
அக்காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்திடம் பொம்மர் வகை விமானங்களே இருந்தன. தொடந்து பத்து, இருபது விமானங்கள் ஒரே வரிசையில் வந்து குண்டு போடும் பார்க்க அழகாக இருந்தாலும் ஈனத்தனமாக எம் உறவுகளின் உயிரை குடித்தது. அப்போதைய பங்கர்கள் ஒரு சிறிய அறையின் தோற்றத்தை கொண்டிருந்தன. பொதுவான நீள-அகலத்தை கொண்டமைக்கப்பட்டிருந்தன. மேலே பனைமரக்குற்றிகள் போடப்பட்டு மூடப்பட்டிருக்கும். வாசல் பகுதியில் நீர் உள்வராத வகையில் கூரை போடப்பட்டு மேயப்பட்டிருக்கும். எம்மோடு இருந்த 40 பேரும் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறான பதுங்குகுழி அது.
அங்கேயும் நம் கலையுணர்வு குன்றி விடவில்லை. சகோதரிமார்கள் கீழே மெழுகி, மேலே மட்டைகளை அழகாக அடித்து ஒரு அறைக்கு ஏற்ற புதுப்பொழிவை கொடுத்திருந்தனர். பிற்பட்ட காலப்பகுதியில் அங்கே சுவாமிப்படம் வைத்து, புூப்போட்டு வழிபட்டதும் உண்டு. உயி;ர்காத்த தெய்வமல்லவா. 2003 ஆண்டு சமாதான காலத்தில் யாழ் சென்றபோது அது சிதைவடைந்து மண்ணால் மூடப்பட்டு இருந்தாலும் பழைய நினைவுகள், சுகமாக தட்டிச் சென்றன.
பிற்பட்ட காலப்பகுதியில் பொம்மர் போய் கிபிர், சுப்பசோனிக் ஆட்சிக்கு வந்தன. எனவே பதுங்குகுழிகளின் கட்டுமானங்களிலும் மாற்றம் ஏற்பட்டன. கிபிர் போடும் குண்டுகள் மண்ணை ஆழமாகத் தோண்டியதால் சிலவேளைகளில் பங்கர் மீது விழுந்தால் அதனுள்ளவர்கள் யாவரும் பலியாவதுடன், சிலவேளைகளில் வாசல்புறம் மூடப்பட்டு, உள்ளுள் பலர் மாட்டுப்பட்டு காற்றோட்டம் இன்றி சாவார்கள் என்பதை கொண்டு, திறந்த பங்கர்கள் அமைக்கும் முறை மேற்கொள்ளப்பட்டது.
திறந்த பங்கர்கள் ஒரு மனிதனின் இரண்டு தோள்பட்டைகள் அளவு அகலத்தேயே கொண்ட ஒடுங்கிய வடிவமாகும். பெரும்பாலும் நிற்கக்கூடிய அளவு ஆழத்தில் தான் அமைக்கப்பட்டது. மேலும் ஒரே நேராக அமைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, "ட" வடிவில் தான் அமைக்கப்படும். இதனால் அங்கே குண்டு விழுந்தாலும் இழப்புக்கள் குறைக்கப்படும் என்ற நப்பாசை தான்.
96ம் ஆண்டு இடப்பெயர்வில் நாம் கடைசி நேரம் தான் வன்னிக்கு போனோம். கடைசி வள்ளங்களில் நாம் போனதும் ஒன்று. அப்போது கிளாலிக்கடற்கரையில் சில பொழுதுகள் கழிக்கவேண்டிய சூழ்நிலை. அப்போதெல்லாம் து}ங்கும்போது காலை பங்கருக்கு மேல் வைத்து தான் து}ங்குவோம். ஆனையிறவிலோ, புூநகரியிலோ செல் அடிக்கும் சத்தம் மெதுவாக கேட்டாலே நித்திரையில் கூட தானாகவே பதுங்குகுழியில் இறங்கும் அளவுக்கு இசைவாக்கம் அடைந்திருந்தோம்.
பின் வன்னி வாழ்வில் முள்ளியவளை தான் தங்குமிடம். அங்கே முல்லைத்தீவில் இராணுவம் இருந்ததால் அவனின் தொல்லைகளுக்கு குறை இருக்கவில்லை. தினமும் மாலை 6.00- 7.00 மணிவரை செல் அடிப்பதால், அவ் நேரத்தை பதுங்குகுழி நேரமாக பதிந்து வைத்திருந்தோம். தினமும் 5.45 இற்கே அதற்குள்ளோ, அல்லது அதற்கு அருகாமையிலோ ஆஜர் ஆகிவிடுவோம். "செல்" அடிக்கும்போது அனுப்பும் பொது சத்தம் தெளிவாக எமக்கு கேட்டுவிடும் அளவு து}ரத்திலேயே வசித்தால் உடனே பதுங்குகுழிக்குள் பாய்ந்து விடுவோம்.
வன்னியில் பங்கர்கள் தொடராக தான் அமைக்கப்படும். ஒரு பக்கத்தில் குதித்தால் வேறு எங்காவது போய் எழூந்து கொள்ளமுடியும். மேலும் தண்ணீர்பாயும் வாய்க்காலும் இருந்தால் அதுவும் ஒரு பதுங்குகுழி மாதிரி அவசரத்துக்கு பயன்படுத்தப்பட்டன. படித்த முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லு}ரியி;ல் கூட தொடரான பதுங்குழி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்தன. சிலவற்றின் வடிவம் பாடசாலைப் பெயரைக் குறிக்கும் வண்ணம். MVC என்று அமைக்கப்பட்டும் இருந்தன.
பின் முல்லைச்சமர் நேரம் நாம் கனகராயன்குளத்துக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அதன் நிறைவின் பின் திரும்பி வீடு வரும்போது நாம் வெட்டிவைத்த பதுங்குகுழிகள் மீதும் மணலாற்றில் இருந்து அடித்த செல்கள் விழுந்திருந்தன. நாங்கள் அங்கு இருந்திருப்பின் அது புதைகுழிகளாகத் தான் இருந்திருக்கும் என்பதில் ஜயமில்லை. மேலும் நாம் அவதானித்த விடயம் யாதெனில் இராணுவம் செல் அடிக்கும் அதிகூடிய வீச்சு என்பது எமது வீட்டை அண்டியதாகத் தான் இருக்கவேண்டும். ஏனென்றால் எமது வீட்டிற்கு நேர் ஒத்த திசைகளில் தான் நிறைய வெடித்திருந்தன. அப்பால் ஒன்றும் இல்லை. பதுங்குகுழி வாழ்வு என்பது 97ம் ஆண்டு கார்த்திகை மாதம் வன்னியை விட்டு நாம் வெளியேறியவுடன் நிறைவுக்கு வந்து விட்டாலும் நினைவுகளின் ஒன்றித்தே இருக்கின்றது
|
|
|
| வணக்கம் என் பெயர் மோகன் தாஸ் |
|
Posted by: mohandoss - 12-08-2005, 08:01 AM - Forum: அறிமுகம்
- Replies (20)
|
 |
வணக்கம் என் பெயர் மோகன் தாஸ், சமீபத்தில் என்னுடைய கதையொன்றை யார்ல்.கொம்மில் போரமில் வெளியிட்டிருந்தார்கள். (http://www.yarl.com/forum/viewtopic.php?t=7918)
அதற்கு முதலில் நன்றி. தமிழினி என்பவர் நான் அதில் நன்றாய் மட்டம் தட்டியிருப்பதாய் சொல்லியிருந்தார், அதற்கான காரணம் தெரியவில்லை. விளக்குவாறேயானால் பின்நாட்களில் திருத்திக்கொள்ள வாய்ப்பாகயிருக்கும்.
முன்பே சொல்லிவிடுகிறேன் தமிழீழ மக்களை மட்டம்தட்ட நான் நினைக்கவில்லை. என்னையும் மீறி அந்த தொனி வெளிப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
|
|
|
| ஒஸ்ரேலியா எட்டப்பன் நாகராஜா |
|
Posted by: கந்தப்பு - 12-08-2005, 12:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (33)
|
 |
மீண்டும் ஜானக பெரோரா? நிதர்சனம் இணையாத்தளத்தில் வந்த செய்தி.
http://www.nitharsanam.com/?art=13640
உந்த நாகராஜா ஒஸ்திரெலியாவில் இருந்து வரும் உதயம் என்ற தமிழ் தேசியத்துக்கு எதிராகப் பொய் கட்டுரை எழுதுகிரவர். ஆசியன்............என்ற ஆங்கில இனையத்தளத்திலும் தமிழ் தேசியத்துக்கு எதிராக எழுதுகிரவர். உதயம் பத்திரிகை இலவசமாக ஒஸ்திரெலியாவில் உள்ள கடைகளில் துரொகிகளினால் வைக்கப்படும். இதற்கு சிறிலங்கா அரசாங்கம் நிதி உதவி செய்கிறது. அத்துடன் இப்பத்திரிகையில் வரும் விளம்பரங்களினால் அதிகப் பணமும் கிடைக்கிறது. சன் தொலைக்காட்சி(ஒஸ்திரெலியா) அதிகப்பணத்தினை (கடைசிப்பக்கதில் விளம்பரம் செய்வாதல்)
கொடுக்கிராது. இப்பத்திரிகையில் அங்கிலத்திலும் செய்திகள் வாரதால் வேறு நாட்டவர்களும் எமது போரட்டத்தினைப் பிழையாக விளங்குவார்கள். உந்த நாகராஜா எழுவான் கரையான் என்ற பெயரிலும் புலிகளை எதிர்ப்பாதகச்சொல்லி புலிகள் செய்யாதவற்றையும் புலிகள் மீது பழி போடுவார்
|
|
|
| தமிழ்த்தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால்... |
|
Posted by: Sriramanan - 12-07-2005, 08:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
தமிழ்த்தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால், ஆக்கிரமிப்புப் படை, ஒட்டுப்படையில் பலர் கொல்லப்படுவர் - யாழில் எச்சரிக்கை
Written by Paandiyan Thursday, 08 December 2005
தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு காரணமாக இருந்த ஆக்கிரமிப்பு படையிலும், துணைபுரியும் ஒடடுப்படையிலும் பலர் கொல்லப்படுவர் என பொங்கி எழும் தமிழீழ மக்கள் படை என்ற பெயரில் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் சிறீ லங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பப்பகுதிகளில், தொடர்நது இடம்பெற்றுவரும் இராணுவ வன்முறைகள், படுகொலைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் இராணுவத்தினரின் நெருக்குவாரங்கள், அண்மைக் காலங்களில் அதிகரித்துக் கொண்டு செல்வதினால் மக்களின் இயல்புவாழ்வு சீர்குலைக்கப்பட்டு நெருக்கடியான ஒரு நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்வுகளுக்கு சிறீ லங்கா படையினரும். சிறீலங்கா புலனாய்வுப்பிரிவும், ஒட்டுக்குழுக்களுமே காரணமாக இருநது வருகின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக சிங்கள பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்ட அடிப்படையில் தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்துவதற்காக தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும், அறிஞர்களையும் அழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியள்ளன. இந்த வகையில் கடந்த மாதம் 20ம் நாள், நெடுந்தீவிலும், 24ம் நாள் நீர்வேலியிலும், 26ம் நாள் ஊர்காவற்துறையிலும் படுகொலை முதயற்சிகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்தி தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தொடர்ந்தும் கொலை செய்வதற்கு நாம் இனி அனுமதிக்க மாட்டோம். இனிமேலும் தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு காரணமான ஆக்கிரமிப்புப்படையிலும், ஒடடுக்குழுக்களிலும் பலர் மோசமாகக்கொல்லப்படுவர்.
இனி பதிலுக்குப்பதில் நடவடிக்கைகள் பொங்கி எழும் தமிழீழ மக்கள் படையாகிய நாங்கள் மேற்கொண்டே தீருவோம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
|
|
|
| Not So Fast |
|
Posted by: Vaanampaadi - 12-07-2005, 08:02 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>Not So Fast </b>
7 December 2005 18:56 hours
OSLO, Dec 7 (AFP) - Norway's government on Wednesday said it would agree to a Sri Lankan request to relaunch its bid to broker peace between Colombo and Tamil Tiger rebels, but only if certain conditions were met.
"Our initial reaction is that it is positive that we have been asked to continue our work. This is a vote of confidence," said Erik Solheim, Norway's minister of international development, who has been involved in mediation in the Sri Lankan conflict for more than five years.
"But we want to make sure we agree with the government as well as with the LTTE (Tamil Tigers) on the conditions before we accept to take on that role again," he told AFP.
Solheim's remarks come after Sri Lanka's new President Mahinda Rajapakse on Wednesday asked Norway to keep trying to broker peace with the rebels despite an election vow to review Oslo's role.
The president told Norway's ambassador Hans Brattskar to keep up the effort even though two key allies of the government had earlier insisted that Norway should be expelled from the peace process.
Rajapakse's main Marxist backer, the JVP, or People's Liberation Front, and the nationalist all-Buddhist monks' party JHU, had demanded that Norway be expelled as peace broker after accusing it of siding with the rebels.
Solheim on Wednesday refused to elaborate on which conditions needed to be met before Norway would again agree to wear the mediator cap in the crisis.
"This is something that we will discuss with the different parties, and not through the media," he said.
One problem facing Norway if it does agree to return to the negotiating table is a recent flare-up in violence.
In the past week alone at least 26 people have died in clashes, including 14 soldiers killed when two mines thought to have been planted by the rebels exploded. The LTTE has denied having anything to do with that attack.
"This is a very serious development, and the parties will need to find a means to stop the violence," Solheim said. - AFP
|
|
|
| உருளைக்கிழங்கு மூட்டைகளை அனுப்பி மோசடி செய்த தாத்தாக்கள் |
|
Posted by: SUNDHAL - 12-07-2005, 04:52 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (15)
|
 |
டிவி செட்டுகளுக்கு பதிலாக உருளைக்கிழங்கு மூட்டைகளை அனுப்பி மோசடி செய்த தாத்தாக்கள்
இத்தாலி நாட்டின் மிலன் நகரைச் சேர்ந்த 2 நண்பர்கள் -
ஒருவருக்கு வயது 74. அடுத்தவருக்கு வயது 75. இவர்கள் ஸ்டீரியோ, டி.வி.டி. பிளேயர் டி.வி. செட்ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பதாக இணைய தளத்தில் விளம்பரம் செய்தனர்.
இதைப் பார்த்துவிட்டு, பலர் பணத்தை அனுப்பி வைத்ததும் இவர்கள் டி.வி.டி. ஸ்டீரியோ ஆகியவற்றை அனுப்புவதற்குப் பதிலாக உருளைக்கிழங்கு மூட்டைகளை அனுப்பி மோசடி செய்து வந்தனர்.
5 லட்சம் ரூபாய் கொடுத்து உருளைக்கிழங்கு மூட்டையை வாங்கிய ஒருவர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து போலீசார் அந்த 2 தாத்தாக்களும் தங்கி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர்.
அங்கு போலீசார் சோதனை போட்டபோது, 10-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மூட்டைகள் அனுப்புவதற்குத் தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு 350 ரூபாய்க்கு மேல் இருக்காது என்று போலீஸ் அதிகாரி கியோலானி ரோக்கா கூறினார்.
அந்த 2 தாதாக்களையும் போலீசார் கைது செய்தனர்.
Thanks:Thanthi.......
|
|
|
|