Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 262 online users.
» 0 Member(s) | 260 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,068
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  நீர்வேலி படுகொலையில் தனது பங்கை ஒத்துக்கொள்கிறது ஈ.பி.டி.பி
Posted by: sri - 12-07-2005, 01:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

நீர்வேலியில் அண்மையில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.டி.பி.யே ஈடுபட்டது என்பதை அப்பகுதி மக்களின் தகவல்களின் அடிப்படையிலும், சம்பவம் நடந்த பின்னர் குற்றவாளிகள் தப்பிச் சென்ற திசையை நோக்கியும் அறிய முடிகிறது.


இந்நிலையில் இன்று ஈ.பி.டி.பி.யால் வெளிநாட்டுத் தூதரகங்களிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையொன்று இது பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

கிழக்கில் முஸ்லிம்களின் படுகொலைகளின் பின்னால் அரசே இருப்பது ஆதாரபூர்வமாக அம்பலமான நிலையில் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில், கிழக்கில் முஸ்லிம்களின் கொலைகளை புலிகளே புரிந்ததாகக் குறிப்பிட்டுள்ள ஈ.பி.டி.பி. இதன் மூலம் புலிகள், இனங்களிற்கிடையேயான வன்முறையைத் தோற்றுவிக்க முனைவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்தோடு, யாழ் குடாநாட்டில் இராணுவத்தினர் மீதான இரண்டு கிளைமோர்த் தாக்குதல்களையும் விடுதலைப் புலிகளே நடத்தியுள்ளனர் என்றும் இராணுவத்தினரைச் சினமூட்டிப் போருக்குள் இழுக்கும் செயற்பாட்டைப் புலிகள் மேற்கொண்டுள்ளார்கள் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சிறிலங்கா இராணுவத்தினர், தம்மீதான தாக்குதல்களிற்கு நீர்வேலிப் படுகொலைகளே காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்திருந்த போதும், மேற்படி விவசாயிகளின் கொலைகள் குறித்த விபரங்களை ஈ.பி.டி.பி.யின் அறிக்கை முற்றாகத் தவிர்த்திருந்தது. இதுவே அவர்களின் இச்சம்பவங்களினுடனான தொடர்பை முற்றாக நிரூபித்து நிற்கிறது.

அரசாங்கத்தின் பரிவில் வாழ்க்கை நடத்தும் ஈ.பி.டி.பி. தங்களிற்குத் தேவையான போதெல்லாம் இவ்வாறான நாசகாரச் செயல்களைச் செய்வதில் வழமையாக ஈடுபடுபவர்கள். தற்போது மகிந்தவின் அமைச்சரவைக் குறைப்பில் டக்ளசுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருக்கவே இவர்கள் யாழ். நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வாறான நெருக்கடியேற்பட்டால் தங்களின் தேவை இராணுவத்திற்கு இன்றியமையாதது என்பதால் தங்களைத் தொடர்ந்தும் முக்கியத்தும் தந்து அரசு வைத்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகும்.

அரச தலைவர் தேர்தல் காலத்திலும், தேர்தலைப் புறக்கணிக்குமாறு புலிகள் கோருவதான துண்டுப்பிரசுரமொன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை என்ற பெயரில் விநியோகித்துக் கொண்டிருந்த நபர்களைப் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

அவர்களை விசாரித்த போது அவர்கள் ஈ.பி.டி.பி. குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேற்படி நால்வரும் தற்போதும் விளக்கமறியலில் உள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பதட்டத்தை ஏற்படுத்தி தங்களின் முக்கியத்துவத்தைப் பேணும் ஈ.பி.டி.பி.யின் மேற்படி அறிக்கையில் சர்வதேச நாடுகள் புலிகளை தடைசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டின் மீதான முற்றுகை ஓயாத அலைகள் - 04-ல் இறுக்கப்பட்ட போது, படைகளை முந்திக் கொண்டு தமது மூட்டை முடிச்சுக்களுடன் ஓடுவதற்குத் தயாராக நின்றவர்களையே தற்போதும் நம்பியிருக்க வேண்டிய துர்ப்பக்கிய நிலையில் சிறிலங்கா அரசும் அதன் படைகளும் தற்போதும் இருப்பதையே மேற்படி சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

புதினம்

Print this item

  தமிழ் சினிமா
Posted by: AJeevan - 12-06-2005, 11:41 PM - Forum: குறும்படங்கள் - No Replies

[size=15]<b>உலகின் முதல் பேசும் படம் "ஜாஸ் சிங்கர்"</b>
<img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/001.jpg' border='0' alt='user posted image'>
இருபதாம் நூற்றாண்டில் மனிதன் கண்டுபிடித்த உன்னத சாதனங்களில் முக்கியமான ஒன்று, சினிமா.

இன்று, உலகில் சினிமாக் காட்சிகள் நடைபெறாத நாடுகள் இல்லை; சினிமா பார்க்காத நபர்கள் அபூர்வம். இந்தியாவில், சினிமாதான் இரண்டாவது பெரிய தொழில்.


"ஜாஸ் சிங்கர்" படம், நிïயார்க் நகரில் திரையிடப்பட்டபோது, தியேட்டரில் அலைமோதிய கூட்டம். (6_10_1927)
தமிழ்த் திரைப்பட வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு முன், சினிமா எப்போது கண்டு பிடிக்கப்பட்டது, முதல் சினிமா படம் எது என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.

பொருள்கள் அசைவதைப் படமாக்கும் முயற்சியில் 1826_ம் ஆண்டு முதலே பல்வேறு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1872_ல் குதிரைகளின் கால்கள் அசைவதைச் சிலர் வெற்றிகரமாகப் படம் பிடித்தனர். அதற்காக 24 காமிராக்கள் பயன்படுத்தப்பட்டன.

இதில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு, 1889_ல் தாமஸ் ஆல்வா எடிசன் "35 எம் எம்" பிலிமில் சினிமாப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.

எடிசன் 1894 வரை பல ஆராய்ச்சிகள் செய்து, அசையும் சினிமாப்படத்தைக் காட்டும் கருவியைத் தயாரித்தார்.

1895_ல் லூமிரே சகோதரர்கள், ஒரு ரெயில் ஓடுவதையும், அது ரெயில் நிலையத்தில் போய் நிற்பதையும் படமாக்கி, ரசிகர்களிடம் கட்டணம் வசூலித்து திரையிட்டுக் காட்டினார்கள்.

அக்காட்சியைப் பார்த்த சில ரசிகர்கள், பயந்து ஓட்டம் பிடித்தார்கள். இதன்பின், சினிமாப்படத்துடன் ஒலியையும் பதிவு செய்யும் முறையை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்தார்.
<img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/004.jpg' border='0' alt='user posted image'>
<i>முதல் சினிமா கேமரா!</i>

ஜெர்மனி விஞ்ஞானிகள் சிலரும் சினிமாப்படம் தயாரிப்பதில் சில முன்னேற்றங்களைக் கண்டுபிடித்தனர்.

ஊமைப் படங்கள்

இதைத்தொடர்ந்து மவுனப் படங்கள் தயாரிக்கப்பட்டன. பேச்சு இல்லாவிட்டாலும், பின்னணி இசை உண்டு. இந்தக் காலக் கட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் சார்லி சாப்ளின்.

பேசாமல் சைகைகள் மூலமாகவே நகைச்சுவையை வெளிப்படுத்தி, அகில உலகப் புகழ் பெற்றார்.

1926_ல் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், முதல் பேசும் படத்தைத் தயாரித்தது. இது சிறிய படம். பெயர் "டான்டுவான்". பரீட்சார்த்தமாகத் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும் படம் வெற்றி பெற்றதால், அடுத்த ஆண்டே "தி ஜாஸ் சிங்கர்" என்ற படத்தை வார்னர் பிரதர்சார் தயாரித்தனர்.

முதல் முழு நீளப் பேசும் படமான "தி ஜாஸ் சிங்கர்",

1927 அக்டோபர் 6_ந்தேதி திரையிடப்பட்டது. திரையில் நட்சத்திரங்கள் ஆடுவதையும், பாடுவதையும், பேசுவதையும் கண்டு ரசிகர்கள் பிரமித்துப் போனார்கள்.

முதல் பேசும் படத்தை உலகுக்கு அளித்த ஹாலிவுட், தொடர்ந்து உலகின் புகழ் பெற்ற திரைப்படக் கேந்திரமாக விஸ்வரூபம் எடுத்தது.
<img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/002.jpg' border='0' alt='user posted image'>
<i>"ஜாஸ் சிங்கர்" படத்தில் ஒரு காட்சி. </i>

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது ஹாலிவுட்.

1883_ல் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 7 மைல் தூரத்தில், சுமார் 120 ஏக்கர் நிலத்தை ஒருவர் வாங்கி, வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கத் திட்டமிட்டார். பத்திரப் பதிவின்போது, அந்தப் பகுதியின் பெயர் "ஹாலிவுட்" என்று குறிப்பிடப்பட்டது.

1907_ம் ஆண்டில், இந்தப் பகுதியில் ஸ்டூடியோக்களை அமைக்க, நியுயார்க் பிலிம் டிரஸ்ட் ஊக்கமளித்தது.

அதன்பின், கொலம்பியா, பாரமவுண்ட் ஆகிய நிறுவனங்கள் அங்கே பிரமாண்டமான ஸ்டூடியோக்களை அமைத்தன. பிறகு, மேலும் பல ஸ்டூடியோக்கள் உருவாயின.
<img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/003.jpg' border='0' alt='user posted image'>
<i>சினிமா படம் எடுப்பதை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்.</i>
1930_ம் ஆண்டிலிருந்து, ஹாலிவுட்டில் சினிமாப்படத் தயாரிப்பு சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆண்டுக்கு சராசரியாக 750 படங்கள் தயாரிக்கப்பட்டன.

எம்.ஜி.எம்., ட்வண்டியத் சென்சுரி பாக்ஸ், வார்னர் பிர தர்ஸ் போன்ற ஸ்டூடியோக்கள், மிகவும் பிரமாண்டமான முறை யில் அமைக்கப்பட்டன. ஹாலிவுட் விரிவடைந்து கொண்டே போயிற்று. எம்.ஜி.எம். ஸ்டூடியோ மட்டும் 117 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 23 அரங்கங்களைக் கொண்ட இந்த ஸ்டூடியோவில் 4 ஆயிரம் பேர் வேலை பார்த்தனர்.

கிரீடா கார்போ, கிளார்க் கேபிள், ஸ்பென்சர் டிரேசி, எலிசபெத் டெய்லர் முதலிய புகழ் பெற்ற நட்சத்திரங்களை உருவாக்கியது, "எம்.ஜி.எம்." தொடரும்............

நன்றி: மாலை மலர்

Print this item

  பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்.
Posted by: shanmuhi - 12-06-2005, 11:00 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (31)

<b>பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயான 13 வித்தியாசங்கள்:</b>

1. பெயர்கள்:

வாணி, ரெய்னா, மேகலா, ரீட்டா ஆகியோர் வெளியில் சாப்பிடச்
சென்றால் அவர்கள் தங்களுக்குள் பெயர் சொல்லியேக் கூப்பிடுவார்கள்

மாலிக், ராபர்ட், வேதாந்த், வினாயக் சேர்ந்து வெளியில் சென்றால்
அவர்கள் குண்டா, சொட்டை தலையா, வழுக்கை, அழுக்கா என்று அன்புடன்
அழைப்பார்கள்.D (அனைவரும் ஜாலியாக எடுத்துக் கொள்ளவும்)

ஹோட்டலில்:

பில் வந்ததும் மாலிக், ராபர்ட், வேதாந்த், வினாயக் ஆகியோர்
ஏகக்காலத்தில் 450 ரூபாய் பில் வந்திருந்தாலும் 500 ரூபாய் நோட்டை
எடுத்து ஸ்டைலாக வீசுவார்கள்.ஒருத்தரிடத்திலும் வேறு சில்லறை நோட்டு
இருக்காது. யாரும் திரும்பச் சில்லறை வேண்டும் என்று எதிர்ப்பார்க்க
மாட்டார்கள் (எதிர்ப்பார்க்க மாட்டோம் என்பதுப் போல நடிப்பார்கள்)

ஆனால் பெண்கள் பில் வந்ததும் கணக்குப் போடத் தொடங்குவார்கள்.

3. பணம்

ஆண் 50 ரூபாய் மதிப்புள்ளப் பொருளை 100 ரூபாய் கொடுத்து வாங்குவான்.

பெண் 50 ரூபாய் கொடுத்து 100 ரூபாய் மதிப்புள்ள பொருளை ஆடித் தள்ளுப்படி
அதிரடி விற்பனையில் தேவையே இல்லாமல் வாங்குவாள்.

4. குளியலறை

ஒரு ஆணின் குளியலறையில் முக்கியமாக ஒரு பல் விளக்கி,பற்பொடி, சவரம்
செய்ய உபயோகிக்கும் சோப்பு, மற்றும் கத்தி, குளியல் மற்றும் துணி
சோப்பு, துடைக்கும் துண்டு இருக்கும்.

ஆனால் ஒரு பெண்ணின் குளியலறையில் பலவிதமான சுமார் 337 ஆண்களைக்
குழப்பும் பொருள்கள் இருக்கும் (என்னக் கணக்கு என்றுத் தெரியவில்லை)

5. விவாதம்

எந்த ஒரு விவாதத்திலும் பெண் சொல்வதே இறுதியான வார்த்தையாக இருக்கும்.
அதற்குப் பிறகு ஆண் ஏதாவது சொன்னால் அந்த வார்த்தை புதிய ஒரு
விவாதத்திற்கு அடிக்கோலும். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பமாகும். (பழையக்
குருடி, கதவைத் திறடி)

6. பூனைகள்

பெண்களுக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும் (எத்தனைப்பேருக்கு?)

ஆண்களும் பூனையைப் பிடிக்கும் என்று சொல்வார்கள், ஆனால் பெண்கள் பார்க்காத
நேரத்தில் அதற்கு ஒரு உதை விடுவார்கள்.

7. எதிர்காலம்

கணவன் கிடைக்கும் வரை ஒரு பெண் தன் எதிர்காலத்தைப்பற்றிய நினைப்பில்
கவலையுடன் இருப்பாள்.

ஒரு ஆண் தனக்கு கல்யாணம் ஆகும் வரை (மனைவி வரும் வரை) எதிர்காலத்தைப்
பற்றி சிந்திக்கவே மாட்டான்.

8. வெற்றி

ஒரு வெற்றிகரமான ஆண் தனது மனைவி செலவு செய்வதை விட அதிகமாக
சம்பாதிப்பான்.

ஒரு வெற்றிகரமானப் பெண் அப்படிப்பட்ட கணவனைக் கைப்பிடிப்பாள்.

9. திருமணம்

ஒரு பெண் தன் கணவன் மாறிவிடுவான் என்று எதிர்ப்பார்ப்பாள், ஆனால் அவன்
மாற மாட்டான்.

ஒரு ஆண் தன் மனைவி மாற மாட்டாள் என்று நினைப்பான், ஆனால் அவள் மாறி
விடுவாள்.

10. ஆடை அணிதல்

ஒரு பெண், கடைக்குச் செல்வதற்கும்,செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கும், குப்பையை
வெளியேப் போடப் போவதற்கும், தொலைப்பேசியில் பதில் சொல்வதற்கும்,
புத்தகம் படிப்பதற்கும், தபால்களைப் படிப்பதற்கும் உடை மாற்றுவாள்.

ஒரு ஆண் கல்யாணம் அல்லது கருமாதிக்குப் போவதற்கு உடை மாற்றுவான்.

11. இயல்பு

ஆண்கள் தூங்கப் போகும் போது எப்படி இருப்பார்களோ அப்படியே தூங்கி
எழும்போதும் இருப்பார்கள்

ஆனால் பெண்கள் ஒரு மாதிரி சோகையாக இருப்பார்கள்

12. குழந்தைகள்

ஒரு பெண் குழந்தைகளைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பாள். பல்
மருத்துவரை பார்க்கவேண்டிய நேரம், காதல், நெருங்கிய நண்பர்கள்,
விருப்பமான உணவு வகைகள், ரகசியமான பயங்கள், எதிர்ப்பார்ப்புகள்,
நம்பிக்கைகள், கனவுகள்.

ஒரு ஆண் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதைக் கூட பல சமயங்களில்
மறந்து அஜாக்கிரதையாக இருப்பான்

13. இறுதியாக

கல்யாணமான ஆணகள் தங்கள் தவறுகளை மறந்துவிடவேண்டும். ஏனென்றால் ஒரே
விசயத்தை இரண்டுப் பேர் ஞாபகம் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை.


சுட்டது - இணையதளம் ஒன்றில்

Print this item

  மன்னார் பள்ளிமுனை 5 புலிகள் கைது: ஒருவர் சயனைட் அருந்தினார்!
Posted by: Vaanampaadi - 12-06-2005, 10:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மன்னார் பள்ளிமுனையில் 5 புலிகள் கைது: ஒருவர் சயனைட் அருந்தினார்!
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 23:57 ஈழம்] [ம.சேரமான்]
மன்னார் பள்ளிமுனை கடற்பிரதேசத்தில் பயணம் செய்த 5 தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா கடற்படை கைது செய்துள்ளதாக தமிழ்நெற் இணைய தளம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழ்நெற் இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தி:

மன்னார் பள்ளிமுனை கடற்பிரதேசத்தில் பைபர் இழைப் படகில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 விடுதலைப் புலி போராளிகள் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரில் அரசியல் துறை போராளியான குணாரத்னம் புவனேசுவரி என்ற உதயா(வயது 20) சயனைட் அருந்தியதையடுத்து மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் வவுனியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆறுமுகம் ஜெயந்தன்(வயது 23), கந்தசாமி பகீரதன்(வயது 22), அந்தோணி சகாயநாதன்(வயது 18), சிவநாதஞானம் சஞ்சினி என்ற மதி(வயது 18) ஆகியோர் கைது செய்யப்பட்ட போராளிகள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் மாலை 5.30 மணி அளவில் மன்னார் சிறிலங்கா காவல்துறையிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். மன்னார் காவல்நிலையத்தில் 4 போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போராளிகள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் கைக் குண்டுகள் இருந்ததாகவும் மன்னார் காவல்துறையினர் தெரிவித்தனர் என்று தமிழ்நெற் செய்தி தெரிவிக்கிறது.


puthinam

Print this item

  சிங்கப்பூரில் உரிமையற்று தவிக்கும் பணிப் பெண்கள்
Posted by: AJeevan - 12-06-2005, 10:24 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

[size=15]<b>சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு அடிப்படை உரிமை கூட இல்லை </b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41092000/jpg/_41092308_maidsap203index.jpg' border='0' alt='user posted image'>
<i>வீட்டுப் பணிப் பெண்கள்</i>

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்ய வந்திருக்கும் வெளி நாட்டுப் பெண்களுக்கு மிகவும் அடிப்படையான உரிமைகளைக்கூட உறுதி செய்ய சிங்கப்பூர் அரசு தவறுவதாக அமெரிக்காவிலிருந்து இயங்கும் , மனித உரிமைகள் கண்காணிப்பு, ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச், என்ற அமைப்பு கூறுகிறது.

வெளிநாட்டுப்பெண்கள் , தாக்கப்படுவது, நிர்ப்பந்தமாக தடுத்துவைக்கப்படுவது, அடிக்கடி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது, கொலை செய்யப்படுவது போன்றவை நடப்பதாக இந்த அமைப்பு ஒரு அறிக்கையில் கூறுகிறது.

இந்த துஷ்பிரயோகங்கள், சிங்கப்பூரின் சட்டதிட்டங்களின் படி, வீட்டு வேலை செய்யும் பெண்கள் தொழில் சட்டத்திலிருந்து விலக்கிவைக்கப்படுவதாலேயே நடக்கிறது என்று இந்த அறிக்கை கூறியது.

இந்த மாதிரி குற்றங்கள் இழைப்பவர்களுக்கு சிங்கப்பூர் அரசு கடுமையான தண்டனை அளிக்கிறது ஆனால் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மற்ற ஊழியர்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் தரப்படவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

-BBC தமிழ்

Print this item

  கலிபோர்னியாவின் சக்கிரமன்டோ பகுதியில் கன்னிமேரியின் சிலையிலி
Posted by: கீதா - 12-06-2005, 08:49 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (36)

<img src='http://img469.imageshack.us/img469/3888/sneha35ys.jpg' border='0' alt='user posted image'>



கலிபோர்னியாவின் சக்கிரமன்டோ பகுதியில் கன்னிமேரியின் சிலையிலிருந்து இரத்தம்
கலிபோர்னியாவின் சக்கிரமன்டோ பகுதியில் கன்னிமேரியின் சிலையிலிருந்து இரத்தம் என கருதப்படும் செந்நிறப் பதார்த்த மொன்று வடிவதை இங்கு காணலாம். கன்னி மேரியின் முகத்தில் காணப்படும் கறுப்புக் கோடுகளை கண்ணீர் என கருதுவது நீண்ட காலமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
http://www.vaddakkachchi.com/viduppu/index.php

Print this item

  இங்கிலாந்து ராணி குடும்பத்திலும் மாமியார்-மருமகள் சண்டை
Posted by: கீதா - 12-06-2005, 08:41 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://img189.imageshack.us/img189/5158/preover0tp.gif' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'>இங்கிலாந்து ராணி குடும்பத்திலும் மாமியார்-மருமகள் சண்டை
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மகன் இளவரசர் சார்லஸ் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலி கமீலாவை திருமணம் செய்து கொண்டார். அரச குடும்பத்தில் மருமகளாக சென்ற கமீலா மீது ராணி எலிசபெத்துக்கு இன்னும் பற்றுதல் ஏற்படவில்லை.

சாதாரண குடும்பத்தை போலவே ராணி குடும்பத்திலும் மாமியார்- மருமகளுக்கு இடையே தகராறு ஆரம்பித்துவிட்டது. குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் கமீலாவை ராணி புறக்கணித்தார்.

ராணியின் குடும்பத்தினரின் நன்மைக்காக முக்கிய தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடப்பது வழக்கம். ராணி, அவரது கணவர், இளவரசர் உள்பட ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டு அவர்களுக்கு கடவுள் அருள் புரியட்டும் என்று பிரார்த்திப்பது வழக்கம்.

ஆனால் இந்த முறை நடக்க இருக்கும் பிரார்த்தனையில் கமீலாவின் பெயர் இடம் பெறவில்லை.

இது பாராளுமன்றத்திலும் பிரச்சினையை கிளப்பி உள்ளது. ஆனால் ராணி இன்னும் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

கார் விபத்தில் மரணம் அடைந்த டயானா முன்பு இளவரசரை திருமணம் செய்த உடனேயே டயானாவின் பெயர் இந்த பிரார்த்தனை பட்டியலில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது</span>
http://www.vaddakkachchi.com/viduppu/index.php

Print this item

  தமிழகத்தில் இரு கலை, இலக்கிய நிகழ்வுகள்
Posted by: இளைஞன் - 12-06-2005, 08:23 PM - Forum: நிகழ்வுகள் - Replies (2)

<b>பன்னாட்டுக் கருத்தரங்கம்:</b>

<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/ks1.jpg' border='0' alt='user posted image'>

மேலதிக விபரங்கள்

<b>குறும்பட திரையிடல்:</b>
<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/tti_salanam.jpg' border='0' alt='user posted image'>

மேலதிக விபரங்கள்

Print this item

  தமிழீழ வெள்ளப் பெருக்கு உங்கள் பங்களிப்பு என்ன?
Posted by: kurukaalapoovan - 12-06-2005, 06:47 PM - Forum: தமிழீழம் - No Replies

அண்மையில் பெய்த கடும் மழையால் தமிழீழத்தில் வெள்ளப் பெருக்கு பற்றிய பல செய்திகளை அறிந்திருக்கிறோம். அதற்கு சில காரணங்களாக பூமியின் வேகம் குறைந்தது, பூமி வெப்பமடைதல் என விளக்கங்கள் வைக்கப்பட்டன. வழமைக்கு மாறான அதிகளவு மழை வெள்ளப் பெருக்கை உருவாக்குவதை தவிர்க்க முடியாது என் நினைத்தாலும் கடந்த ஆண்டிலும் ஆழிப்பேரலைக்கு முன்னர் தமிழீழப்பகுதிகள் வெள்ளத்தால் இடப்பெயர்வுகளை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. முழு அளவு யுத்தம் நடக்கும் பொழுது இவ்வாறான இன்னல்களை மக்கள் எதிர்கொள்ளுவது இன்னும் பல மடங்கு கடினம்.


பெய்யும் மழையை முதலில் கடலுக்கு சென்று விரையமாக்காமல் சரியான முறையில் வடிகால் முறைகளால் சேர்க்கப்பட்டு நீர்தேக்கங்களிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். பின்னர் சிறந்த நீர்ப்பாசன முறையில் அவற்றை தேவையான காலங்களின் பயிற் செய்கைக்கு பயன்படுத்தப்பட வேண்டும். வழமைக்கு மாறக அதிக மழை நீர் தேக்கத்திற்கு வரும் பொழுது நீர்தேக்க படலைகளை திறந்து விடுகிறார்கள் மழை நீர் கட்டுப்பாடான முறையில் கடலைச் சேர. இந்த அடிப்படை நாம் எல்லோரும் அறிந்தது.

முறையான வடிகால், நீர்தேக்கம் மற்றும் நீர்பாசன கட்டமைப்புக்கள் வெள்ளப் பெருக்கு அவதிகளை குறைத்துக் கொள்ள மாத்திரம் அல்ல அடிப்படி உணவுத் தேவையில் தமிழீழம் தன்னிறைவை அடைவதற்கு உரிய பயிர்ச் செய்கை சவால்களிற்கு மிகவும் அவசியமான ஒன்று. தமிழீழ பொருண்மிய மேம்பாடு பற்றி புத்தகத்தில் இவை பற்றி என்ன இருக்கிறது, அறிந்தவர்கள் இங்கே பகிருங்கள்.

தமிழீழத்தின் உயிர்நாடி என்றே கூறக்கூடி இந்த மிக முக்கியமான கட்டமைப்பை வலுப்படுத்த புலம் பெயர்ந்த உணர்வாளர்களின் பங்களிப்பு அதி முக்கியமானது. இவை சார்ந்த பொறியல் துறை Civilengineering இன் பிரிவுகளான Irrigation, Drainage போன்றவையாக பார்க்கப்படுகிறது என நினைக்கிறேன்.

இந்த பின்னணியில் கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்கள், வேலை செய்பவர்கள், ஆரவமுள்ளவர்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

Print this item

  free tamil movies download
Posted by: tamil03 - 12-06-2005, 06:03 PM - Forum: சினிமா - Replies (4)

<img src='http://pirasath.skyblog.com/pics/photo_7068895.gif' border='0' alt='user posted image'>


<img src='http://pirasath.skyblog.com/pics/286925787_small.jpg' border='0' alt='user posted image'>

படம் - ஏபீசீடீ
(¯`·.>:::..NEW..:::<.·`¯)
நடிகன் - சியாம்
நடிகை - சினேகா

இந்த படத்தை நீங்கள் தரையிரக்கலாம்


பிரபாகரனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அத்துடன் நமது மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடீயோ பாட்டை பாருங்கள்

[size=24]HTTP://PIRASATH.SKYBLOG.COM/

Print this item