| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 357 online users. » 0 Member(s) | 355 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,068
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| வாடகை வீடு இவர்களுக்கு இல்லை |
|
Posted by: Vaanampaadi - 12-06-2005, 07:54 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
வாடகை வீடு இவர்களுக்கு இல்லை
<img src='http://www.dinamalar.com/2005Dec06/photos/science.jpg' border='0' alt='user posted image'>
கடந்த பிப்ரவரியில் மட்டும் 10 ஆயிரம் எச்.ஐ.வி., பாசிடிவ் தாய்மார்கள், குழந்தைகளைப் பெற்று மாஸ்கோவின் தெருக்களில் அனாதைகளாக விட்டுச் சென்றுள்ளனர். "ரஷ்ய சட்டங்கள், எச்.ஐ.வி., பாசிடிவ் மனிதர்களைப் பாகுபடுத்துவதைக் கண்டிக்கின்றன. ஆனால், இந்த பெண்களும், குழந்தைகளும் படும் துன்பங்களை பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்கிறது' என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். எச்.ஐ.வி., பற்றிய சமூக ஒதுக்கல், பள்ளிகளிலும், கிளினிக்குகளிலும், அவர்களின் வீடுகளிலும் கூடக் காணப்படுகின்றது. எச்.ஐ.வி., பாசிடிவ் பெண்கள் பலரை டாக்டர்கள் வார்த்தைகளால் சாடுவதும், சிகிச்சை தர மறுப்பதும் ரஷ்யாவில் சாதாரணமாக காணக்கூடியதாக இருக்கின்றது.
அனாதைகளாக விடப்படும் குழந்தைகள், எச்.ஐ.வி., பாசிடிவ் குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களிலோ, அல்லது ஆஸ்பத்திரிகளில் உள்ள தனி வார்டுகளிலோ வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர். ரஷ்ய பார்லிமென்டில் உள்ள எம்.பி.,க்களும், உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் எச்.ஐ.வி., பாசிடிவ் குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் நிறைய பேராடியிருந்தாலும், இன்னும் பேராடுவதற்கு நிறைய தேவைகள் உள்ளன. ரஷ்யாவில் எச்.ஐ.வி., பாசிடிவ் மனிதர்கள் வேலையில் இருந்து விரட்டப்படுகின்றார்கள். வாடகைக்கு இருப்பவர்கள் உடனே வீட்டை காலி செய்யப்படுகிறார்கள். எச்.ஐ.வி., வைரஸ் தாக்கப்பட்டவர் என்று தெரிந்தால், டாக்டர்கள் கூட சரியாக சிகிச்சை தருவதில்லை.
Dinamalar
|
|
|
| சிங்களத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி-தமிழ்/முஸ்லிம் உறவு மீது |
|
Posted by: மேகநாதன் - 12-06-2005, 04:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (21)
|
 |
தமிழ்-முஸ்லிம் கலவரத்தைத் தூண்டும் சதி தொடருகிறது: மேலும் 2 முஸ்லிம் மீனவர்கள் சுட்டுக்கொலை!!
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 08:19 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் மருதமுனையில் நேற்று திங்கட்கிழமை இரவு 2 முஸ்லிம் மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மருதமுனைக் கடற்கரையில் வழமை போல் தூண்டில் போட்டு அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத போதிலும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கலவரத்தை தூண்டும் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவினரே இதற்கு பொறுப்பு என்று தெரியவந்துள்ளது.
முஸ்லிம்கள் படுகொலைச் சம்பவத்தையடுத்து அந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மருதமுனை, பாண்டிருப்பு எல்லைப்புறத்திலுள்ள ஆழிப்பேரலை அகதி முகாம்களிலிருந்து தமிழ் குடும்பங்கள் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளன.
சேனைக்குடியிருப்பில் நேற்றிரவு கடை ஒன்று அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
<b>தகவல்மூலம்; புதினம் </b>
|
|
|
| ஒட்டுக்குழுவைச் சேர்ந்த இனிய பாரதி உட்பட 4 பேர் |
|
Posted by: மேகநாதன் - 12-06-2005, 04:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (16)
|
 |
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் மீது தாக்குதல் நடத்த முயற்சி: 4 பேர் சுட்டுக்கொலை!
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 08:23 ஈழம்] [கல்முனை நிருபர்]
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த முயன்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கருணா குழுவின் பயிற்சியாளர் எனக் கூறப்படும் சுமன், பாரதி, தேவன், சுரேஸ் ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இந்தக் குழுவினரால் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியில் புதிய முகாம் அமைக்கப்பட்டது.
மாந்தோட்டத்தை அண்மித்த பகுதியில் இந்த முகாம் அமைக்கப்பட்டு வருவது குறித்து ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்ன, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் புகார் செய்திருந்தார்.
இந்தச் சூழலில் இன்று அதிகாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்துவதற்கு இந்தக் குழுவினர் நுழைந்த போது அவர்களை விடுதலைப் புலிகள் வழிமறித்துத் தாக்கியதாக கூறப்படுகின்றது.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் அந்த ஆயுதக்குழுவினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
தொடர்புபட்ட செய்திகள்: http://அம்பாறையில் ஆயுதக் குழுவினரின் பு...ேண்டுகோள்!
http://மாந்தோட்டம் முகாம் குறித்து ஆராய காவல்துறை குழு
<b>தகவல்மூலம்; புதினம் </b>
|
|
|
| இந்துவின் பொய் பித்தலாட்டம் நிறைந்த ஊடக தர்மம் |
|
Posted by: kurukaalapoovan - 12-06-2005, 12:47 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
இந்துவின் பொய் பித்தலாட்டம் நிறைந்த வரட்டுத்தனமான ஊடக தர்மம்.
யுத்தக் களமுனை நிரூபர் எனக் கூறிக்கொள்வோர் தலைநகரின் பாதுகாப்பில் இருந்து கொண்டு புனைக்கதை எழுதியதை ஒத்துக் கொள்கிறார்கள்.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் நடந்த யுத்தத்தை சிறப்பாக சோடிச்சு புனைக்கதை எழுவருடமாக (1995-2002) எழுதி கற்பனை வளத்தை நிரூபித்ததால் இலங்கை சார்ந்த விடையங்களின் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவராக இந்துவால் பதவி உயர்வு வழங்கப்பட்டவர்.
அந்தப்புனைக் கதைகளை எழுதிய அனுபவ அடிப்படையில் ஒரு புத்தகம் எழுதிய பொருமைக்குரியவர்...
http://www.sangam.org/taraki/articles/2005...in_the_Head.php
|
|
|
| ரிரிஎன் தொலைக்காட்சி: தடை வேண்டுகிறார் சந்திரிகா |
|
Posted by: sompery - 12-05-2005, 11:42 AM - Forum: புலம்
- Replies (6)
|
 |
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சியான ரிரிஎன் தமிழ்ஒளி ஒளிப்பரப்பு சேவையை தடை செய்யுமாறு சிறிலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா பிரான்ஸை வேண்டியுள்ளர். இச் செய்தியை பிரான்சில் இருந்து வெளியாகும் 'லபிகாரோ" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் சந்திரிகா பிரான்ஸ் சென்று பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக்கை சந்தித்து உரையாடிய போதே இவ்வேண்டுகோளை பிரான்ஸ் அதிபரிடம் அவர் விடுத்துள்ளார். இதன் பின் ரிரிஎன் தொலைக்காட்சிக்கெதிராக பாரிசில் உள்ள இலங்கை து}தர் கடந்த ஜுலை 7 ம் நாள் வழக்கொன்றையும் தொடுத்துள்ளார்.
ர்pரிஎன் தொலைக்காட்சியானது ஐரோப்பா எங்கும் தமிழ் மக்களின் கலை, பண்பாட்டு, சமூக விழுமிய கருத்துக்களை பேணும் தமிழ்த் தொலைக்காட்சி என்பதுடன் ஐரோப்பா வாழ் தமிழ் மக்களின் பேரபிமானத்தை பெற்ற ஒரே ஒரு தொலைக்காட்சி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உங்கள் தலைப்பு நகர்த்தப்பட்டுள்ளது. அறிமுகம் பகுதியில் அறிமுகம் தொடர்பான கருத்துக்களை வையுங்கள் பொருத்தமா தலைப்பின் கீழ் தகவல்களை இணைத்தால் உறுப்பினர்களிற்கு இலகுவாக இருக்கும். யாழினி
|
|
|
| யாழ்ப்பாண மாவட்ட நிலைமைகள்:கலந்துரையாடல் |
|
Posted by: thiru - 12-05-2005, 08:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
தற்போதைய யாழ்ப்பாண மாவட்ட நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக போர்நிறுத்தக்கண்காணிப்புக் குழு முன்னிலையில் இன்று விடுதலைப் புலிகளும் சிறிலங்கா இராணுவ தரப்பும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளின் தரப்பில் யாழ் மாவட்ட அரசியற் துறைப்பொறுப்பாளர் சி. இளம்பருதி அவர்களும், சிறிலங்கா இராணுவத்தின் பிரதிநிதியாக சிறிலங்கா இராணுவத்தின் யாழ் மாவட்டத் தளபதி மேஜர் ஜெனரல் தென்னக்கூன் அவர்களும் முகமாலையிலுள்ள யுத்த சூனியப்பிரதேசத்தில் இந்தக் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் அறியமுடிகிறது.
இந்தச் சந்திப்பு சிறிலங்கா நேரப்படி இன்று திங்கட்கிழமை மாலை 04 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கொழும்பிலுள்ள விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
<b>நன்றி:</b> தமிழ்நெற் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16474
<b>தமிழில்:</b> திருமகள்
|
|
|
| பொறுமைக்கும் எல்லையுண்டு |
|
Posted by: iruvizhi - 12-04-2005, 09:11 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
<b>வீதிகள் தோறும்
அடாவடித் தனத்துடன்
அலரிமாளிகை
ஆட்களின் சத்தம்.
ஐயோ என ஒரு குரல்
அப்பாவித்தனமாய்
அலறிய போதும்
அத்து மீறி அப்பாவித் தமிழரின்
மேனியில்
ஆணவத்தோடு
சிங்களச்சிப்பாயின் கால்கள்
மேய்ந்து பதம் பார்க்கும்.
பாதகரின் கண்கள்
தமிழ் பாவயர் என்பதால்.
மேலும் கீழுமாய்
வெறியுடன் அலையும்.
அந்த போக்கிரி
சிங்கள சிப்பாயின் கைகள்
.ஐயகோ....
சொல்ல முடியாது மௌனித்து போகின்றேன்.
காறி அவன் முகத்தினில்
உமுழ்வதை தவிர
எனக்கு வேறு வெளி ஒன்ரும் தெரியவில்லை.
கொடுமைகள் பல இங்கு
நடந்தாலும்.
மௌனாமாய் அனைத்தையும்
தாங்கிடும்
சடப்பொருட்களாய் இருந்திட வேண்டுமாம்.
இல்லையெனில் பயங்கர வதி
என எம்மையும் அழைப்பாராம்.
இது சில மேலாண்மை நாடுகளின்
ஒப்பாரிக் கூச்சல்.
இதென்ன நியாயமைய்ய?
ஒரு இனத்தின் பிறப்புரிமை
மீறப்படும் போது
அவன் வாழ்ந்தென்ன
செதென்ன?
உலகம் புரியாது போனாலும்
உன் உரிமை உனக்குமா புரியவில்லை?
பாவிகளாய்
வாழ்ந்தது போதும்!
புறப்படுவோம்
பொறுமைக்கும்
எல்லையுண்டு.
வேடதாரிகளை
விரட்டி.
தமிழ் ஈழமெனும்
ஞாலமதை
காண்போம் வாரீர்...</b>
|
|
|
|