Yarl Forum
பொறுமைக்கும் எல்லையுண்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பொறுமைக்கும் எல்லையுண்டு (/showthread.php?tid=2192)



பொறுமைக்கும் எல்லையுண்டு - iruvizhi - 12-04-2005

<b>வீதிகள் தோறும்
அடாவடித் தனத்துடன்
அலரிமாளிகை
ஆட்களின் சத்தம்.

ஐயோ என ஒரு குரல்
அப்பாவித்தனமாய்
அலறிய போதும்
அத்து மீறி அப்பாவித் தமிழரின்
மேனியில்
ஆணவத்தோடு
சிங்களச்சிப்பாயின் கால்கள்
மேய்ந்து பதம் பார்க்கும்.

பாதகரின் கண்கள்
தமிழ் பாவயர் என்பதால்.
மேலும் கீழுமாய்
வெறியுடன் அலையும்.
அந்த போக்கிரி
சிங்கள சிப்பாயின் கைகள்
.ஐயகோ....
சொல்ல முடியாது மௌனித்து போகின்றேன்.
காறி அவன் முகத்தினில்
உமுழ்வதை தவிர
எனக்கு வேறு வெளி ஒன்ரும் தெரியவில்லை.

கொடுமைகள் பல இங்கு
நடந்தாலும்.
மௌனாமாய் அனைத்தையும்
தாங்கிடும்
சடப்பொருட்களாய் இருந்திட வேண்டுமாம்.
இல்லையெனில் பயங்கர வதி
என எம்மையும் அழைப்பாராம்.
இது சில மேலாண்மை நாடுகளின்
ஒப்பாரிக் கூச்சல்.
இதென்ன நியாயமைய்ய?

ஒரு இனத்தின் பிறப்புரிமை
மீறப்படும் போது
அவன் வாழ்ந்தென்ன
செதென்ன?

உலகம் புரியாது போனாலும்
உன் உரிமை உனக்குமா புரியவில்லை?
பாவிகளாய்
வாழ்ந்தது போதும்!

புறப்படுவோம்
பொறுமைக்கும்
எல்லையுண்டு.

வேடதாரிகளை
விரட்டி.
தமிழ் ஈழமெனும்
ஞாலமதை
காண்போம் வாரீர்...</b>


- Vishnu - 12-04-2005

இருவிழி... உங்கள் கவிதைக்க வாழ்த்துக்கள்... காலத்தின் தேவைக்கான கவிதை.... மேலும் சிறந்த ஆக்கங்களை படைக்க வாழ்த்துக்கள்


- iruvizhi - 12-04-2005

நன்றி விஸ்ணு. நீங்களும் உங்கள் படைப்புக்களை இங்கே இணைக்கலாமே........


- RaMa - 12-04-2005

உலகம் புரியாது போனாலும்
உன் உரிமை உனக்குமா புரியவில்லை?
பாவிகளாய்
வாழ்ந்தது போதும்!

புறப்படுவோம்
பொறுமைக்கும்
எல்லையுண்டு

இருவிழி கவிதை அருமை.... இப்போ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறியுள்ளீர்கள்.. நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.


- Eelathirumagan - 12-05-2005

இருவிழி எழுதிய
அழகிய கவிதை
கடிதென வந்து
உண்மை விளம்பும்

அலரி மாளிகை
ஆட்கள் சத்தம்
புலரும் பொழுதில்
அடங்கும் காண்பாய்

செருக்குடன் வந்திடும்
சிங்களர் படையை
நெருப்பாய் எழுந்து
பொசுக்கும் தமிழ்ப்படை

தங்கத் தமிழினம்
மிடுக்குடன் எழுந்து
வாழும் காலம்
தொலைவில் இல்லை


- அருவி - 12-05-2005

ஈரவிழி உங்கள் ககவிதை நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து இவ்வாறான எம் உணர்வுகளைக் கொணரும் கவிகளை எழுதுங்கள்.


- iruvizhi - 12-05-2005

கவிதை தனை புரிந்து என்னை ஊக்கப்படுத்தியது போல. ஈழம் என்னும் இனிய இல்லம் அமையும் வரையும் என்ன இன்னல் நம்மை சூழ்ந்தாலும் தமிழர் நாம் சூழ்ச்சிகளுக்குள் வீழாது சிரத்தையோடு சிறுத்தை போல் பணியாற்றுவோமென உறுதி எடுத்துக் கொள்ளுவோம். ஈழத்திருமகன் ஐயா உங்கள் கவியும் இலட்சிய வேட்கையோடு உறுமுகின்றது.


- tamilini - 12-06-2005

பொறுமை மீறி பொங்கி எழுந்த கவிதை நன்று. உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் இருவிழி.

Quote:கொடுமைகள் பல இங்கு
நடந்தாலும்.
மௌனாமாய் அனைத்தையும்
தாங்கிடும்
சடப்பொருட்களாய் இருந்திட வேண்டுமாம்.
இல்லையெனில் பயங்கர வதி
என எம்மையும் அழைப்பாராம்.
இது சில மேலாண்மை நாடுகளின்
ஒப்பாரிக் கூச்சல்.
இதென்ன நியாயமைய்ய?

Quote:உமிழ்வதை தவிர
எனக்கு வேறு வெளி ஒன்றும் தெரியவில்லை

வெளியா வழியா?


- Vishnu - 12-06-2005

iruvizhi Wrote:நன்றி விஸ்ணு. நீங்களும் உங்கள் படைப்புக்களை இங்கே இணைக்கலாமே........

ம்ம்ம்.. இருவிழி.. நான் பெரிய படைப்பாளி இல்லை.. இருப்பினும்.. எனது சிறிய ஆக்கங்களையும் இங்கே பதிக்க முயற்சிக்கிறேன். நன்றி


- Mathan - 12-06-2005

கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் இருவிழி


- தூயவன் - 12-06-2005

வாழ்த்துக்கள் இருவிழி. உணர்ச்சி மிக்க வரிகளைக் கொண்ட கவிதை.


- iruvizhi - 12-10-2005

tamilini Wrote:பொறுமை மீறி பொங்கி எழுந்த கவிதை நன்று. உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் இருவிழி.

Quote:கொடுமைகள் பல இங்கு
நடந்தாலும்.
மௌனாமாய் அனைத்தையும்
தாங்கிடும்
சடப்பொருட்களாய் இருந்திட வேண்டுமாம்.
இல்லையெனில் பயங்கர வதி
என எம்மையும் அழைப்பாராம்.
இது சில மேலாண்மை நாடுகளின்
ஒப்பாரிக் கூச்சல்.
இதென்ன நியாயமைய்ய?

Quote:உமிழ்வதை தவிர
எனக்கு வேறு வெளி ஒன்றும் தெரியவில்லை

வெளியா வழியா?

வளி என்று எழுத வந்தேன். ஏனோ தவறுதலாக வெளி என எழுதிவிட்டேன். அது வளி தான்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி தமிழினி.