![]() |
|
ரிரிஎன் தொலைக்காட்சி: தடை வேண்டுகிறார் சந்திரிகா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ரிரிஎன் தொலைக்காட்சி: தடை வேண்டுகிறார் சந்திரிகா (/showthread.php?tid=2190) |
ரிரிஎன் தொலைக்காட்சி: தடை வேண்டுகிறார் சந்திரிகா - sompery - 12-05-2005 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சியான ரிரிஎன் தமிழ்ஒளி ஒளிப்பரப்பு சேவையை தடை செய்யுமாறு சிறிலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா பிரான்ஸை வேண்டியுள்ளர். இச் செய்தியை பிரான்சில் இருந்து வெளியாகும் 'லபிகாரோ" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்ரோபர் மாதம் சந்திரிகா பிரான்ஸ் சென்று பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக்கை சந்தித்து உரையாடிய போதே இவ்வேண்டுகோளை பிரான்ஸ் அதிபரிடம் அவர் விடுத்துள்ளார். இதன் பின் ரிரிஎன் தொலைக்காட்சிக்கெதிராக பாரிசில் உள்ள இலங்கை து}தர் கடந்த ஜுலை 7 ம் நாள் வழக்கொன்றையும் தொடுத்துள்ளார். ர்pரிஎன் தொலைக்காட்சியானது ஐரோப்பா எங்கும் தமிழ் மக்களின் கலை, பண்பாட்டு, சமூக விழுமிய கருத்துக்களை பேணும் தமிழ்த் தொலைக்காட்சி என்பதுடன் ஐரோப்பா வாழ் தமிழ் மக்களின் பேரபிமானத்தை பெற்ற ஒரே ஒரு தொலைக்காட்சி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். உங்கள் தலைப்பு நகர்த்தப்பட்டுள்ளது. அறிமுகம் பகுதியில் அறிமுகம் தொடர்பான கருத்துக்களை வையுங்கள் பொருத்தமா தலைப்பின் கீழ் தகவல்களை இணைத்தால் உறுப்பினர்களிற்கு இலகுவாக இருக்கும். யாழினி - ஜெயதேவன் - 12-05-2005 ரோகரா! ஈழ்பதீஸுக்கு அரோகரா!! உண்டியலுக்கு ரோகரா!!! ஓமோம் பாருங்கோ! இங்கை கொஞ்சப்பேர் உதுக்கு கொஞ்சம் கஸ்டப்ப்டுகிறம்!!! * ஆறு சனலான்! * டீபாம் டொலைக்காட்சி! இவையலோடு சேர்ந்து இந்த உண்டியலானும் பாடுபடுகிறம்!!! உதோடை ஐ.பி.சியிலையும் ஒரு கண்!!! உதிலை பாருங்கோ, என்னை டீபாம் களட்டி விட்ட பின்பும், இந்த விசயத்திலை மட்டும் நாங்கள் ஒன்றாகி விட்டோம்!!! நாங்கள் மாற்றுக்கருத்தாளர்களல்லோ!! தாய் நாட்டையென்ன? மனைவி, பிள்ளை குட்டிகளைக்கூட விற்கத் தயங்கமாட்டோம்!! ரோகரா1 அரோகரா!! - Selvamuthu - 12-06-2005 இன்று இலண்டனில் "சுனாமி" பற்றி BBC இல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதிலே அவர்கள் எங்கள் பெண் கடற்புலிகளையும் நேர்காணல் செய்திருந்தார்கள். முன்னர் நாம் சுனாமி அனர்த்தத்தின்போது "ரிரிஎன்" தொலைக்காட்சியில் பார்த்த சில காட்சிகளும் ஒளிபரப்பாகின. அவற்றை மீண்டும் பார்த்தபோது நெஞ்சத்தை என்னவோ செய்தது, கண்களில் நீர் மீண்டும் முட்டியது. எமது "ரிரிஎன்" இருந்திருக்காது விட்டிருந்தால் நாம் பலவற்றைப் பார்த்திருக்க முடியாது. தாம் செய்கின்ற தவறுகளை மறைப்பதற்காகவே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். இவையொன்றும் எமக்குப் புதிதல்ல. நேருக்குநேர் நின்று வெல்ல முடியாமல் தமது நயவஞ்சக சுூழ்ச்சிகளால் வெல்ல முனைகிறார்கள் அவ்வளவுதான். ஆனால் நீதியும், நேர்மையும் ஒருபோதும் தோற்காது. - தூயவன் - 12-06-2005 ஊடகம் என்பதின் முக்கியத்துவம் யாதெனில், கடந்த காலங்களில் எம் சமுதாயம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் வெளிக்கொணராமல் போனதற்கு எம்மிடம் அப்போது அதை வெளிப்படுத்தக் கூடிய ஊடகத்துறை இல்லாமல் இருந்தது தான் நல்ல சான்று. செம்மணிப்படுகொலை, நாகர்கோவில் பள்ளிச்சிறுவர் கொலை, புதுக்குடியிருப்பு விமானக்குண்டு வீச்சால் ஏற்பட்ட இழப்பு, யாழ் இடப்பெயர்வால் ஏற்பட்ட அவலம், கொக்கட்டிச்சோலை படுகொலை என்று எதுவுமே எம்மால் உலகிற்கு அடையாளப்படுத்த முடியாமல் போனது. அவ்வாறே சந்திரிக்கா அரசும் வடக்கில் பத்திரிக்கையாளர் எவரும் செல்லமுடியாமல் தடையைப் போட்டிருந்தது. ஏன் என்றால் அங்கே நடக்கும் தனது இரத்தவெறியைத் தீர்க்கும் நிகழ்வை வெளியுலகம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்கே. எனவே தான் இப்போதும் தங்களின் கொடுரத்தை TTN வெளிக்காட்டும் ஜத் தடை செய்ய அவள் முயல்கின்றாள் - Thala - 12-06-2005 அட "ttn" இல்லாட்டால் என்ன "tnt" எண்டு பேர் வைச்சாப் போச்சு... இதுக்குப் போய் கவலைப் படலாமா..??? பேரை மாத்தேக்க இன்னும் புதுப் பொலிவோட வரும்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 12-06-2005 இது பழைய செய்திதான் என்றாலும் தடை செய்வதற்காக முயற்சிகள் நடந்தன ஆனாலும் தமிழ் தொலை காட்சியை தடை செய்ய கூடிய சாத்தியங்கள் இல்லை அதற்கான பெரிய முயற்சியையும் பிரான்ஸ் மேற் கொள்ளவில்லை - sanjee05 - 12-14-2005 முதலில் மகே அம்மே என்று ஒலம் இட்டு வருபவர்கனள வெளிநாடு தனட செய்ய வேண்டும் |