Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 302 online users.
» 0 Member(s) | 300 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,068
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  அவர்களின் ஆசைகள்
Posted by: AJeevan - 12-04-2005, 03:08 PM - Forum: சினிமா - No Replies

<span style='font-size:20pt;line-height:100%'><img src='http://www.kumudam.com/kumudam/301105/pg17-t.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் சினிமாவில் மீண்டும் ஓர் அதிசயம் நடந்திருக்கிறது. பார்க்காமலே காதல், பறந்து பறந்து போடும் சண்டைகள், வெளிநாட்டில் டூயட் போன்ற சமாச்சாரங்கள் எதுவும் இல்லாமலே அழகான ஒரு நல்ல சினிமாவை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

மல்லி, டெரரிஸ்ட் என்று ஏற்கெனவே இரண்டு தமிழ்ப் படங்களை இயக்கிய சந்தோஷ் சிவன் இப்போது நவரசா என்கிற படத்தையும் எடுத்திருக்கிறார். படம் முடிஞ்சு பத்து மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. ஃபிரான்ஸ் உள்பட பல நாட்டுத் திரைப்பட விழாக்களிலே நவரசா மிகச் சிறந்த படம் என்கிற பாராட்டையும் வாங்கியாச்சு. இருந்தாலும், தமிழ்நாட்டில் இப்ப படம் ரிலீசாகிறதைப் பாக்குறப்பதான் மனசுக்கு நிறைவா, சந்தோஷமா இருக்கு_ சந்தோஷிக்கிறார் சந்தோஷ் சிவன்.

நவரசாவின் கதை என்ன? _ சந்தோஷிடம் கேட்டோம். இந்த முறை நான் எடுத்துக் கொண்டது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை. ஒரு குடும்பத்தில் திடீரென ஒருவன் பெண்தன்மை கொண்டவனாக உணருகிறான். வீட்டில் அவனை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. வெளியிலும் ஆதரவு இல்லை. இந்த நிலையில் அவன் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் நவரசா.

ஆணாகப் பிறப்பதும், பெண்ணாகப் பிறப்பதும் நம் கையில் இல்லை. இயற்கை செய்யும் ரசவாதம் அது. அந்த ரசவாதத்தில் நடந்துவிட்ட விபத்துகளை பரிவோடு அணுகி, புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய, கேலி பேசுவதோ வெறுத்து ஒதுக்குவதோ கூடாது. இந்தப் படத்தின் மூலம் அரவாணிகளின் மனநிலையை, உள்ளதை உள்ளபடி யதார்த்தமாகக் காட்டியிருக்கிறேன். படத்தை ஒரே ஒரு முறை நீங்கள் பார்த்தால் கூட அது உங்களுக்குள் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும்!_உறுதியாகச் சொல்கிறார் சந்தோஷ் சிவன்.

கூவாகத்தில் நடக்கும் அரவாணிகள் திருவிழாவில் பத்து நாள், சென்னையில் பன்னிரண்டு நாள் என்று இருபத்தியிரண்டு நாட்களில் மொத்தப் படத்தையும் எடுத்துவிட்டாராம் சந்தோஷ் சிவன். விழுப்புரத்தில் நடக்கும் அரவாணிகள் அழகிப் போட்டியை அப்படியே லைவாக எடுக்க நினைத்தோம். எனவே, சினிமா சூட்டிங் நடக்கிறது என்று யாரிடமும் சொல்லவில்லை. பாபி டார்லிங் என்கிற நாங்கள் அனுப்பிய நடிகர் ஒருவரும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். எதிர்பாராத விதமாக அவருக்கு முதல் பரிசு கிடைத்ததில் எங்களுக்கே நம்ப முடியாத ஆச்சரியம்.

மல்லியில் நடித்த சுவேதா இந்தப் படத்திலும் நாயகி. அவர் படத்தில் நடிக்கவில்லை. வாழ்கின்றார். மிகச் சிறந்த நடிகையாக வருவார்.

கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக நான் சென்னையில்தான் இருக்கிறேன். தமிழ்நாடும், தமிழ் மக்களும் எனக்கு நெருக்கமாக இருப்பதால் மீண்டும் மீண்டும் தமிழில் படம் எடுக்கிறேன். தமிழ் சினிமா உலகில் புதிது புதிதாக யோசிக்கும் நடிகர்களும், இயக்குநர்களும் நிறைய இருக்கிறார்கள். அதிகமாக, செலவு செய்யாமல், நல்ல படங்களை எடுக்கும்போது நாம் நினைக்கிற விஷயங்களை சமரசம் செய்து கொள்ளாமல் சொல்ல முடிகிறது. இந்த திருப்தி ஒவ்வொரு கலைஞருக்கும் மிகவும் முக்கியம் தெளிவாகப் பேசுகிறார் சந்தோஷ் சிவன்.

இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்க உதவியதோடு, படத்தின் வசனத்தையும் எழுதியிருக்கிறார் ராஜா சந்திரசேகர். பாரதிராஜாவின் தயாரிப்பான இவர், சந்தோஷ் சிவனின் மல்லி, டெரரிஸ்ட் படத்துக்கு வசனம் எழுதியவர்.

சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி எனக்குள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நாவல். நவரசாவுக்காகப் பல அரவாணிகளுடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் மனதில் கிடக்கும் ஆசைகளை, ஏக்கங்களை, வெறுப்புகளை அப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. நாம் யோசிப்பதை கேரக்டர்கள் பேசவேண்டும் என்று நினைப்பதை விட, கேரக்டர்கள் பேசுவதை நாம் சொல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த எண்ணம் வெகுவாக நிறைவேறியிருக்கிறது. பல கமர்ஷியல் படங்களுக்கு நடுவே இதுபோன்ற படங்கள் வருவது மிக மிக முக்கியம் என்றார் ராஜா சந்திரசேகர்.

_ ஏ.ஆர். குமார்</span>
(குமுதம்)

Print this item

  வவுனியாவில் பெண்கள் உரிமை நிகழ்வு
Posted by: Mathan - 12-04-2005, 02:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வவுனியாவில் பெண்கள் உரிமை நிகழ்வு

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051203162312womenpro152.jpg' border='0' alt='user posted image'>

வவுனியா, அனுராதபுரம், மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் இளைஞர் யுவதிகள் இன்று வவுனியாவில் ஒன்றுகூடி, பெண்களுக்கு எதிராக குடும்பங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பி, அவற்றை ஒழிப்பதற்கு உழைக்கப்போவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

மனிதச் சங்கிலி ஊர்வலம் ஒன்றையும் அவர்கள் நடத்தினார்கள்.

இலங்கையில் 60 வீதமான பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேறொரு பெண்ணைத் திருமணம் செய்தல், இளவயதுத் திருமணங்கள், பாலியல் ரீதியான வன்முறைகள் போன்ற பல்வேறு உளத்தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் மட்டுமன்றி உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் பெண்கள் குடும்பங்களில் ஆளாகின்றார்கள் என்று குடும்ப வன்முறைகளுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் திட்ட அலுவலர் திருமதி பத்மினி பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த வன்முறைகளை ஒழிப்பதற்காக இலங்கை நாடாளுமன்றம் சட்டம் ஒன்றையும் கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய மட்டம் தொடக்கம் மாவட்ட மட்டம் வரையில் பல நிலைகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை உருவாக்குதல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியான மாற்றங்கள் மாவட்ட, கிராம மட்டங்களைச் சென்றடைவதற்கு நடத்தையிலும், மனப்பான்மையிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ள காரணத்தினால், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துநர்கள் மூலமாகததாக்கமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

BBC Tamil

Print this item

  எட்டாப்பழம் புளிக்கும்
Posted by: Mathan - 12-04-2005, 12:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

<span style='font-size:20pt;line-height:100%'>எட்டாப்பழம் புளிக்கும் என்று இதைத்தான் சொல்வார்களோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </span>

சிறிலங்கா பிரதமர் பதவி பயனற்றது: சுற்றுலா அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க

சிறிலங்காவின் பிரதமர் பதவி பயனற்றது அது எனக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க கூறியுள்ளார்.

இது தொடர்பாக அனுரா பண்டாரநாயக்க கூறியுள்ளதாவது:

சிறிலங்கா பிரதமர் பதவியை எனக்கு மகிந்த ராஜபக்ச அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் நடைமுறையை உணர்ந்தவன். முட்டாள் அல்ல.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எனது பெயர்தான் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறிலங்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக கட்சியின் மத்தியக் குழு பரிந்துரைத்த நபர் அல்லாத வேறு நபருக்கு பிரதமர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீண்டும் மத்தியக் குழுவில்தான் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை.

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக நியமித்ததில் எனக்கு வருத்தம் இல்லை. யாராக இருந்தாலும் பிரதமர் என்பவர் பயனற்றவர். வாகன வசதிகளோடு ஆடம்பரமாகச் சென்று திறப்பு விழாக்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்லத்தான் அந்தப் பதவி பயன்படும். அந்த வகையான பதவியை நான் விரும்பவில்லை. அதிகாரத்துடன் இயங்கக் கூடிய பதவிதான் நான் விரும்புவது.

எனக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நான் செயற்படவில்லை. கம்பஹாவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த வெற்றி பெறுவார் என்று அவரிடம் உறுதியளித்திருந்தேன். அதுதான் நடந்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயஇ ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளும் சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுக்களும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுதான் மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தில் என்னை முழுமையாக ஈடுபட விடாமல் தடுத்தது.

ஒருகாலத்தில் ஜே.வி.பி.யை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைத்தது நான் தான். ஆனால் அவர்கள் எப்போதே ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலக முடிவெடுத்தார்களோ அப்போதே தனக்கும் ஜே.வி.பிக்குமான உறவு முறிந்துபோய்விட்டது.

சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு சந்திரிகா மீண்டும் வருவாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அது தொடர்பில் முன்பு என்னோடு கதைத்திருக்கிறார். பின்னர் அது குறித்து கதைப்பதில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் வரைதான அவருடன் தொடர்பில் இருந்தேன். அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ளவில்லை. சாதாரணமாக தொலைபேசியில் பேசுவதை சந்திரிகா தவிர்ப்பார். அது பாதுகாப்பற்றது என்றும் கருதுபவர் அவர். அதனால் அவரை நேரில்தான் சந்திக்க வேண்டும். அவரைச் சந்திப்பதற்கு காத்திருக்க வேண்டும்.

தென்னிலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை இனப்பிரச்சனை தொடர்பாக பெறுவதை விட அரசாங்கம் முதலில் தனது கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். தென்னிலங்கையின் லங்கா சம சமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இனப்பிரச்சனை தொடர்பான கொள்கைகள் நல்ல முற்போக்கானவை என்றார் அனுரா பண்டாரநாயக்க.

<b>நன்றி - புதினம்</b>

Print this item

  வணக்கம்-சதுரங்கன்
Posted by: sathurangan - 12-04-2005, 11:43 AM - Forum: அறிமுகம் - Replies (32)

வணக்கம் நான் சதுரங்கன்
கொழும்பிலிருந்து. வந்தேறுகுடியாக வாழ்கின்றேன். யாழ் இணையத்துடன் இணைந்ததற்கு மகிழ்ச்சியடைகின்றேன். என்னையும் ஓர் அங்கத்தவனாக ஏற்றுக்கொண்டதற்கு திரு. மோகன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்
சதுரங்கன்.

Print this item

  யாழ். கோண்டாவிலில் கிளைமோர் தாக்குதல்: 6 இராணுவத்தினர் பலி
Posted by: cannon - 12-04-2005, 10:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

யாழ். கோண்டாவிலில் கிளைமோர் தாக்குதல்: 6 இராணுவத்தினர் பலி- 2 பேர் படுகாயம்!!
[ஞாயிற்றுக்கிழமை, 4 டிசெம்பர் 2005, 14:08 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் உள்ள திருநெல்வேலி விவசாய பயிற்சிக் கல்லூரிக்கு அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 6 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளார்கள். 2 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

அச்சுவேலி 511 ஆவது இராணுவ படைப்பிரிவு தலைமையகத்திலிருந்து யாழ். நகரிலுள்ள 513 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு இவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான இராணுவத்தினர் பயணம் செய்து கொண்டிருந்த உழவு இயந்திரம் கிளேமோர் குண்டொன்றில் சிக்கி தூக்கி வீசப்பட்டதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப்பாய் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

http://www.eelampage.com/index7.php?cn=22234

Print this item

  இதய அஞ்சலி - பெரியார் சீலன்
Posted by: Muthukumaran - 12-04-2005, 09:45 AM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

இதய அஞ்சலி - பெரியார் சீலன்

நேற்று அந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தே போய் விட்டேன். அது எனது நண்பனின் தந்தையின் மரணம் என் பெற்றோரை தவிர்த்து நான் அம்மா அப்பா என்று கூப்பிட்டது அவர்களைத்தான். கிட்டத்தட்ட அது எனது இரண்டாம் தாய் வீடு. அவர்கள் வீட்டின் 5 வது பிள்ளையாகவே நான் வலம் வந்தேன். அப்பாவும் சரி அம்மாவும் சரி. அவர்கள் 4 பேருக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் காட்டியது கிடையாது. பசித்தால் நானாகவே தட்டை எடுத்து சாதம் போட்டு சாப்பிட்டுக் கொள்வேன் கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து வரும் உறவு இது. அப்பா ஒரு வாரத்திற்கு முன் இறந்துவிட்டார்கள் என்று என் தம்பி சொன்னபோது மனம் அறுபட்டு துடித்தேன். என் மனம் மேலும் வேதனைப்படக் காரணம் 15 நாட்களுக்கு முன் நான் கண்ட கணவு. அதில் பெரியார்சீலன் அப்பா இறந்துவிடுவது போலவும் நான் பாலாஅம்மாவை கட்டிக் கொண்டு விம்மி அழுவதாகவும் அண்ணன்கள் என் தோளைப்பற்றி அழுவதுமான கனவு அது, கனவில் நான் மொத்தமாக அழுது தீர்த்துவிட்டேன். இப்போது செய்தியறிந்தும் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழ வாய்ப்பில்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். பெரியார்சீலன் உண்மையிலே பெரியார் சீலனாக வாழ்ந்தவர். இறுதிவரை, கடவுள் மறுப்பு, சுயமரியாதை, ஒழுக்கம், குறிப்பாக அவர் தன் குழந்தைகளுக்கு கொடுத்த சுதந்திரம், அவர்களின் கடவுள் நம்பிக்கையில் தலையிடாது வாழ்ந்தவர். நான் பலமுறை அவர்கள் வீட்டிற்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டையுடன் பலமுறை சென்றிருக்கிறேன். ஒரு முறை கூட எனது நம்பிக்கையை கிண்டல் செய்ததில்லை. எப்போதும் என்னடா முத்து செய்ற என்று அன்புடன் விசாரிப்பார். இன்று நண்பனின் தொலைபேசி எண் தொலைந்து விட்டது. எல்லா வகையிலும் தேடிப்பார்த்துவிட்டேன். என்று அம்மாவிடம் பேசுகிறோனோ அன்றுதான் என் பாரம் குறையும். என் சோகத்தை என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் நானறிந்த கவிதை மொழியில்.

<b>இதயம் அறுப்பட்டுக் கிடக்கிறது அப்பா..
கேட்ட நொடியிலிருந்து
இதயம் அறுபட்டுக்கிடக்கிறது அப்பா.
இனி என்றும் பேசமுடியாது அப்பா
இனி என்றுமே பேசமுடியாதே அப்பா
ஏனிந்த தண்டனை அப்பா

எனக்கெல்லாம் ஞாபகம் வருதே
பழையது எல்லாம்
உங்கள் பாசமெல்லாம்
அய்யோ
அதை தடுப்பது எப்படி அப்பா

தாய்க்கு தலைமகன்
தந்தைக்கு கடைமகன் தானே
கடை மகன் நானின்று
கண்களின் நீரில் உங்கள் முகம் நிறுத்தி
கடைசியாய் பார்க்க முடியாமலே
போய்விட்ட தூரத்தில் நின்றின்று
துடிக்கிறேன் அப்பா
துடிக்கிறேன்

எப்படி பார்ப்பேன் அம்மாவை
இனி நீங்களில்லாமல்
நீங்களில்லாத அம்மாவை
எப்படி பார்ப்பேன்

என்ன பேசுவேன் அம்மாவிடம்
உங்களை பார்க்க வராததற்கு
என்ன காரணம் சொல்வேன் அப்பா
என்ன காரணம் சொல்வேன் அப்பா

எப்படி கழித்தேன் மகிழ்ச்சியாய்
அந்த நாளை
நீங்கள் இல்லாது தெரியாமலே
எப்படிக் கழித்தேன்
அந்த நாளை

எதற்கு என் மீதத்தனை
பாசம் உங்களுக்கு
ஏன் ஏன்
எல்லோரும் என்னை நேசித்தீர்கள்
வேதனையில் நானிங்கு
துண்டு துண்டாகிக் கிடக்கிறேன்

இப்படித் தவிப்பேன் என்றா
என் கனவில் இறந்தீர்கள்
அம்மாவை நான் கட்டியழ
பாருடா அப்பாவை
பாருடா அப்பாவையென
அம்மா சொல்லியழ
வாய் பொத்தி
நானும் அண்ணன்களோடு கதறியழ
எல்லாக் கடமையும் செய்யத்தான்
என் கனவில் வந்தீர்களோ
அத்துணை பாசமா அப்பா உங்களுக்கு?

கனவிற்கே நொறுங்கிவிட்ட எனக்கு
எப்படித் தாங்க முடியும் இதை
எப்படித் தாங்க முடியும் இதை
என்னடா பண்ற முத்து
என்னடா பண்ற முத்து
நீங்கள் கேட்பதுதான்
என் காதுகளில் நிறைஞ்சிருக்கு அப்பா
காதுகளில் நிறைஞ்சிருக்கு அப்பா

அழுது கொண்டுதான் இருக்கிறேன் அப்பா
அழுது கொண்டுதான் இருக்கிறேன் அப்பா
உங்களுக்கு கேட்குதாப்பா
என் அழுகை
உங்களுக்கு கேட்குதாப்பா
என் அழுகை

கனவிலாவது வந்து சொல்லுங்கள் அப்பா
கனவிலாவது வந்து சொல்லுங்கள் அப்பா</b>

Print this item

  புதிய தளம். - பலருடைய தகவல்கள் மிகவிரைவில்.
Posted by: ஜெயதேவன் - 12-04-2005, 12:40 AM - Forum: தளமுகவரிகள் - No Replies

[url=http://www.eddappar.com/.' target='_blank'>http://www.eddappar.com/.<span style='color:white'>..............[/url]

Print this item

  கஸ்தூரிமான்
Posted by: AJeevan - 12-03-2005, 10:33 PM - Forum: சினிமா - No Replies

<img src='http://www.kumudam.com/kumudam/301105/pg5-t.jpg' border='0' alt='user posted image'>

<b>ஒரு பெண் நினைத்தால், எந்த ஓர் ஆணின் வாழ்க்கையையும் வெற்றிகரமாக மாற்றிக் காட்டமுடியும் என்ற பாஸிட்டிவ் ஸ்டோரி. அதுவும் ரொம்ப டீஸண்டாக எடுத்திருப்பதற்காக, டைரக்டர் லோகித்தாஸைப் பாராட்டியே ஆகவேண்டும்.</b>

ரொம்பநாள் கழித்து ஓரு ஹீரோயின் சப்ஜெக்ட். கேரக்டராக அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார் மீராஜாஸ்மின். இத்தனை நாளும் இவ்வளவு நடிப்பை எங்கே மறைத்து வைத்திருந்தீர்கள் சேச்சி?

அக்கா கணவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் போதாகட்டும், பணப்பற்றாக்குறை இருந்து அதை வெளிக்காட்டாமல் உற்சாகமாக நான்கு வீடுகளில் நர்ஸாகப் பணிபுரிந்து, அந்தப் பணத்திலேயே ஹீரோவுக்கு ஃபீஸ் கட்டுவதாகட்டும், பிரசன்னா தன் காதலைச் சொல்லும்போது, ஆதுரமாய்ச் சாய்ந்து கொள்வதாகட்டும், அக்காவின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலையில், அரிவாளால் அக்கா கணவனைக் கொத்திச் சாய்ப்பதாகட்டும், மீரா_ஜாஸ்மினாக மணக்கிறார். கைகளை விரித்துக்கொள்ளுங்கள் மீரா, விருது நிச்சயம்.

அனைவரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் படத்தில் கொஞ்ச நேரமே வரும் ஒரு பயங்கரக் கிழவி. தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, அட்டைக்கரியாக, ஆங்காரமாய்க் கத்தியபடி கலக்குகிறாரே சூப்பர்ப்.

அழகிய தீயே பிரசன்னா, அழகாகச் செய்திருக்கிறார். நடையடி நாகராஜனாக வரும் ஷம்மி, மாட்டு கன்னையனாக வரும் சுபகுணராஜன் என்று ஒவ்வொரு கேரக்டரையும் அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

<b>இசை இளையராஜாவா? தாலாட்ட, வருவாளா பாடலையெல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்தினால் எப்படி?</b>

வசனம் ஜெயமோகன். சில இடங்கள் பளீர். சில இடங்கள் வெளீர்.

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டாக ஓடிய படமாம். ஆனால், நம் ஊருக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் மாற்றி, மலையாள வாசனை அடிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

அழகிய மான்தான். ஆனால் கால் ஒடிந்த!

<b>இவ்வளவு நாளாக இந்த நடிப்பை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்?</b>

(சிரிக்கிறார்) லோகித்தாஸ் சாதாரண களிமண்ணையும நடிக்க வைத்துவிடுவார். என்னிடம் கதைக்கு என்ன தேவையோ அதைக் கேட்டார். நானும் அவர் எதிர்பார்ப்பிற்குச் செய்திருக்கிறேன்.

<b>ஒரு கிழவி கதாபாத்திரம் வருகிறது. சும்மா பின்னிவிட்டார். யார் அந்த கிழவி?</b>

ஓ. அவரா! உங்களின் பாராட்டைக் கேட்டால் நிச்சயம் சந்தோஷப்படுவார். அவர் பெயர் குழபுழி லீலா. நாடக நடிகை. நிறைய மலையாளப் படங்களில் சின்னச் சின்ன கேரக்டர் பண்ணியிருக்கிறார். மலையாள கஸ்தூரிமானிலும் அவர்தான் நடித்தார். அப்போதும் அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. விஷயமுள்ள பெண்மணி.

படத்தில் காமெடியே இல்லை.

லோகித்தாஸ் மிகப் பெரிய டைரக்டர். ஐம்பத்தாறு படங்களை இயக்கியிருக்கிறார். எந்தப் படத்திலும் காமிக் டைப் காமெடியில்லை.

<b>படத்தில் நிறைய மலையாள முகங்கள் தெரிகிறதே?</b>

ஏன் முகங்களைப் பார்க்கிறீர்கள்! எந்த கேரக்டரில் எப்படி நடிக்கிறார் என்று மட்டும் பாருங்கள். சினிமாவிற்கு மொழியோ, இந்த முகம், அந்த முகம் என்ற இலக்கணமெல்லாம் கிடையாது. கதையும், கதாபாத்திரமும்தான் பேசும். இந்தப் படத்தில் எல்லாம் முழுதாகப் பொருந்தியிருக்கிறது.

நன்றி: குமுதம்

Print this item

  கதையும் கானமும்
Posted by: கீதா - 12-03-2005, 09:16 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (19)

கதையும் கானமும்
----------------

காலை நேரம்5மணி பறவைகள் கீச்சிடும் சத்தங்கள்
(கருப்பையா) கண்களை விழித்து அடடா 5மணி ஆச்சு வேலைக்கு நேரம் ஆச்சு
கனகம் கனகம் எழும்பு தேத்தண்ணி வைத்து தா
என்று கருப்பையா குரல் கொடுத்தார்

(கனகம் )என்னால ஏலாது நீங்களே வைத்து குடியுங்கள் என்று குமுறினால்

கருப்பையா ) எல்லாம் என் தலைவிதி வேலை இடத்திலும் நிம்மதியில்லை வீட்டிலும் நிம்மதி இல்லை இவள் எழும்பி ஒரு தேத்தண்ணி வைத்து தந்தா குறஞ்சா போச்சு ஆ என்று கருப்பையா தனக்குள் முனுமுனுத்தான்

கருப்பையாவேலைக்கு கிளம்பிபோய் விட்டார்

காலை7மணி கனகம் தேணீர் தயாரித்துக் கொண்டு

தன் மகனை

கண்ணா கண்ணா எழும்பு இந்தா தேத்தண்ணி குடி நான் சாப்பாடு செய்கின்றேன் நீவேலைக்கு றெடியாகி வாகண்ணா என்றால்
கனகம்) நன்றாக சமைத்து முடிந்ததும்
கண்ணா கண்ணா வந்து சாப்பிடு என்றால்

மகன்
ஓம் அம்மா இதோ வந்துற்றன் என்ன சாப்பாடு
கனகம் )தோசை தான் இந்தா நன்றாகச் சாப்பிடு
மகன் நன்றாக சாப்பாட்டை முடித்துக் கொண்டான்

அம்மா அம்மா எனக்கு 200ருPபாய் காசு தேவை அம்மா தா அம்மா என்றான்

கனகம் காசை கொடுக்கின்றால் கவனமாக போய் வாப்பு என்று அன்புடன் வளிpஅனுப்புகின்றால்

கனகம் அவசர அவசரமாக சமைத்து வைத்து விட்டு
பக்கத்து வீட்iடாPவி பார்க்கச் சென்று விட்டால்

மாலைநேரம் 5 மணி

கருப்பையா வேலை முடிந்து விட்டுக்கு வருகின்றார் வீட்டில் யாரும் இல்லை

(கருப்பையா )கனகம் கனகம் என்று குரல் கொடுக்கின்றார்

(கனகம் )இதோ வாறேன் என்றால்
கனகம் வந்து விட்டா ல்

(கருப்பையா )பசிக்கின்றது கனகம் சாப்பாடு போட்டுத் தான்
(கனகம் )நீங்களே போட்டுச் சாப்பிடுங்கள் நல்ல படம் போகுது பார்த்த குறை பாத்திற்று வாறேன்
என்று Üறி அவள் போய் விட்டால்

(கருப்பையா) நான் வேலையாள கலைத்துப் போய் வந்திருக்கிறன் வயிற்றுப்பசிக்கு சோறு கேட்டால் அவளுக்கு படம் முக்கியம் என்று போய்விட்டால்அவளைமாதிரி அவனையும் பழக்கி வைத்திருக்கின்றால் நான் எத்தனை நாளைக்கு உழைத்துப் பாக்கின்றது என்று தனக்குள் முனுமுனுத்தவாறு சாப்பாட்டை போட்டு சாப்பிட்டு விட்டு மறுபடியும் தன் வீட்டுத் தோட்டத்துக்குச் சென்று விட்டான்

கருப்பையா மளமளவென்று தோட்ட வேலைகளைச் செய் தான்

கருப்பையா எனக்கு 57 வயது ஆச்சு நான் எத்தனை நாளைக்கு இப்படி வேலை செய்கின்றது என் பிள்ளை என்னை இருக்க வைத்து சோறு போடுவான் என்று நினைத்தேன் அவனைத் தான் நான் இருக்க வைத்து சோறு போடுகின்றேன்
கனகம் அவனை செல்லம் கொடுத்து பலுதாக்கி வைத்திருக்கின்றால் பிள்ளை பிள்ளை என்று சாகின்றால் அவன் எல்லாருக்கும் ஒரு நாளைக்கு ஆப்பு வைச்சிட்டு போடுவான் அப்பத்தான் கனகத்துக்குத் தெரியும் என்று நினைத்து பெரும் முச்சு விட்டான் கருப்பையா

ஒரு நாள் கருப்பையாவுக்கு நெஞ்சு வலி வந்து இறந்து விட்டான்

கருப்பையா இறந்து 6மாதங்கள் ஆச்சு மகன் தாயை தனிமையில் விட்டுட்டு காதலித்து கலியாணம் செய்து கொண்டு போய் விட்டான்

கனகம் ) கதறிக் கொண்டு என் புருசன் உயிரோட இருக்கேக்கில நான் ஒன்றுமே பார்க்க வில்லை ஆனால் என்பிள்ளை பிள்ளை என்று பார்த்தேன் அவன் இப்ப என்னை தூக்கி எறிந்து விட்டு போய் விட்டான் என்று தான் புருசனை நினைத்து நினைத்து கதறினாள்

எனி கனகத்தின் நிலை என்ன ?
(ஊர்கதை)
புருசன் நல்ல புருசன் கனகம் உயிருடன் இருக்கேக்கில ஒன்றுமே செய்து கொடுக்க மாட்டால் இப்ப மோனும் விட்டுட்டு போட்டான் இவா புருசனுக்கு செய்த கொடுமைகளை எல்லாம் எனி தனியாக இருந்து அனுபவிக்கட்டும்

Print this item

  சென்னை முழுவதும் வெள்ளம் அவதியுறும் எங்கள் உறவுகள்.
Posted by: iruvizhi - 12-03-2005, 08:49 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

<b>சென்னை முழுவதும் வெள்ளம் அவதியுறும் எங்கள் உறவுகள்.</b>


தகவல் தற்ஸ்தமிழ் http://thatstamil.indiainfo.com/news/2005/...03/chennai.html

Print this item