Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 625 online users.
» 0 Member(s) | 622 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,494
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  கண்டு பிடியுங்கள்
Posted by: inizhaytham - 12-02-2005, 09:33 AM - Forum: போட்டிகள் - Replies (1)

முத்தான மூன்றெழுத்து...
முன்னையது இழக்கின், ஐயா! பெரியவரே!!
பின்னையது இழக்கின், போதையில் மயக்கமேனோ?
இடையது இழக்கின் விலங்கது வந்திடுமோ?

Print this item

  Download கஸ்தூரிமான்
Posted by: vasisutha - 12-01-2005, 09:03 PM - Forum: சினிமா - No Replies

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2005/kasthuriman.jpg' border='0' alt='user posted image'>

கஸ்தூரிமான் திரைப்படத்தை இங்கே தரவிறக்கலாம்.

http://www.tamilearth.net

Print this item

  சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லேக்குள்ளை!!!!!!!
Posted by: cannon - 12-01-2005, 03:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவ தளபதி ஆலோசனை
[வியாழக்கிழமை, 1 டிசெம்பர் 2005, 16:58 ஈழம்] [வவுனியா நிருபர்]
இந்தியாவின் தென்பகுதி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் பி.எஸ் தக்கார் இன்று வியாழக்கிழமை வவுனியாவின் சிறிலங்கா இராணுவ முன்னரங்க காவல் நிலைகளுக்கு சென்று பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.


இன்று காலை வவுனியாவுக்கு உலங்குவானூர்தியில் சென்ற அவர் சிறிலங்கா இராணுவ தளபதியை வவுனியா ஜோசப் முகாமில் சந்தித்தார்.

பின்னர் வவுனியா ஓமந்தை பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக அப்பகுதி இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் முன்னரங்க காவல் நிலைக்கும் சென்று அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுகளை செய்து செய்ய வேண்டிய மாற்றீடுகள் தொர்டபாகவும் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது வவுனியாவின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும் வவுனியா மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு இருப்பதாகவும் இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.eelampage.com/index9.php?cn=22162

Print this item

  சிறிய உதவி தேவை.
Posted by: Paranee - 12-01-2005, 02:22 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (15)

வணக்கம்

எனக்கு சிறிய உதவி தேவை. வீடியோ தொழில் நுட்பத்தில் அவ்வளவாக அனுபவம் இல்லை. இருந்தும் கற்கும் முயற்சியில் உங்களிடம் ஒரு சிறிய உதவி கேட்கின்றேன்.

எனது சிறிய [size=18]title logo (SHUBO DIGITAL) கு ஒரு 2mnts 3d clips செய்து தரவேண்டும். யாராவது உதவினால் நன்றாக இருக்கும்

நட்புடன் பரணீதரன்

Print this item

  இங்கே ஏமாற்றப்படுவது யார்?
Posted by: kurukaalapoovan - 12-01-2005, 02:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

தமிழர் தரப்பு ஊடகங்களில் இவை உதாரணங்கள்
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=14444
http://www.sangam.org/taraki/articles/2005...ndependence.php
http://www.battieezhanatham.com/2005/modul...ews&new_topic=1
http://www.yarl.com/eelam/article_932.shtml
http://www.yarl.com/eelam/article_928.shtml

ஆனால் கொழும்பு ஊடகங்கள் நிலமையை எப்படி சித்தரிக்கிறார்கள்?
http://www.tamillinks.net/archive/2005/new..._28112005_a.htm
http://www.tamillinks.net/archive/2005/new..._30112005_b.htm

வேறு சில...
http://www.thepeninsulaqatar.com/Display_n...05113032719.xml
http://www.hindustantimes.com/news/7752_15...04100180006.htm
http://www.hindustantimes.com/news/181_156...560204,0012.htm


ஒரே விடையம் (உரை) பற்றி, ஊடகங்கள் மக்களுக்கு சொல்லும் செய்தியிலும் நிவர்த்தி செய்ய முடியாத இடைவெளி?

இங்கே ஏமாற்றப்படுவது யார்?

Print this item

  வேட்டையாடு விளையாடு
Posted by: Birundan - 12-01-2005, 12:29 PM - Forum: சினிமா - No Replies

அமெரிக்காவில் வேட்டையாடு விளையாடு
<img src='http://img204.imageshack.us/img204/7137/kamal15b15d2on.jpg' border='0' alt='user posted image'>
கமல்ஹசன், கெளதமி

<img src='http://img210.imageshack.us/img210/487/jyothika16oz.jpg' border='0' alt='user posted image'>
ஜோதிகா.

Print this item

  அம்மம்மா
Posted by: RaMa - 12-01-2005, 09:20 AM - Forum: கவிதை/பாடல் - Replies (30)

அம்மம்மா

அம்மா என்று அறிமுகம் ஆனவரே
அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவரே

அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற
புதிய மொழியை சொல்ல வைத்தவரே
ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே
ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு

அன்னை பிரியும் போது உங்கள் மடியில் கிடத்தினாள்
நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள்
ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள
ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது

ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள்
ஆதரவாய் அரவணைப்பீர்களே நாம் தோற்கும் போதும்
எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல்
உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம்

காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர்
நீர் கண் மூடும் போது நாம் இல்லையே அருகில் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
வற்றியது கண்ணீர் மட்டுமல்ல எம் இதய நீரும் தான்
எங்கள் கனவுகளிலே வருகின்றீர்கள்
எழுந்து அனைக்கும் முன் மறைகிறீர்கள்

வாருங்கள் மீண்டும் இவ்வுலகில்
வந்து எமக்கு ஆறுதல் தாருங்கள்
தலைவி இல்லாத வீட்டில்
தலையணை நனைக்கின்றது ஒவ்வொரு இரவும்

நடக்கின்றோம் நீர் சொல்லித்தந்த பாதைகளில்
நடக்கின்றீர் நீரும் நிழலாய் எம்முடன் என்று <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


(கீதாவின் பாட்டி கவிதை வாசித்த பின் எனக்குள் எழுந்த உணர்வு தான் இக்கவிதை. இப்போது தான் நேசரி..... பிழையை சுட்டிக்காட்டுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  a news from cbc online
Posted by: Sabesh - 12-01-2005, 12:01 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

கனேடிய CBC online news இல் வந்த செய்திக்கு எதிர்ப்பை அல்லது உங்கள் பக்க நியாயத்தை தெரிவிக்கலாமே!



http://www.cbc.ca/toronto/story/to_tamil20051130.html[/url]

Print this item

  ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரே
Posted by: AJeevan - 11-30-2005, 11:42 PM - Forum: குறும்படங்கள் - Replies (9)

<span style='color:brown'><b>விருதுகளை தேடிப் போகவில்லை....
ஆனால் விருதுகள் தேடி வந்தன!
-ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரேயின் வரலாறு</b>
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/satyajitray01.jpg' border='0' alt='user posted image'>
மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா நகரில் 1921-ம் ஆண்டு மே மாதம் 2-ம் நாள் பிறந்தார். தந்தை ரே. தாயார் சுப்ரபா. இவரது குடும்பம் நடுத்தர வகுப்பைச் சார்ந்தது. இவருடைய தாத்தாவும், தந்தையும் வங்க மொழியில் தலைசிறந்த எழுத்தாளர்களாக திகழ்ந்தனர்.

சத்யஜித்ரேவிற்கு இரண்டு வயதாகும்போது இவருடைய தந்தை மரணம் அடைந்தார்.

ரவீந்தநாத் தாகூர் சத்யஜித்ரேயை தனது சாந்திநிகேதனில் கலாபவனில் கலைத்துறையில் சேர்த்து கல்வி கற்பித்தார். இந்திய கலைத்துறையின் ஒப்பற்ற பேராசிரியர் நந்தலால் போஸிடம் மாணவனாக இருந்துகல்வி கற்றார். சாந்தி நிகேதனில் தன்னுடைய கல்வி முடிவடைவதற்கு முன்னரே கொல்கத்தா வந்துவிட்டார்.

1942-ம் ஆண்டு விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆர்ட் டைரக்டராக வேலைக்கு சேர்ந்தார். இசையிலும், சினிமாவிலும் ஆர்வத்துடன் விளங்கினார். மேற்கத்திய இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதிக திரைப்படங்களை பார்த்து தன்னுடைய சினிமா அறிவினை வளர்த்து கொண்டார்.

1947-ம் ஆண்டு கொல்கத்தாவில் முதலாவது பிலிம் சிட்டியை சித்தானந்த தாஸ் குப்தாவுடன் இணைந்து தோற்றுவித்தார்.

1950-ம் ஆண்டு லண்டன் சென்ற அவர் அங்கு ஏராளமான திரைப்படங்களை பார்த்தார். லண்டனில் இருந்து கொல்கத்தா திரும்பியதும் பிபூதி பூஜன் பானர்ஜியின் ''பதர் பாஞ்சாலி'' நாவலை குழந்தைகள் இலக்கியமாக எழுதி தருமாறு கொல்கத்தா நகரின் பிரபலமான ஒரு பதிப்பகத்தார் கேட்டு கொண்டனர். பின்னர் இதையே தன்னுடைய முதலாவது திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தார். இந்த படத்தை ரே ஸ்டுடியோக்களுக்கு வெளியே தத்ரூபமான இடங்களில் எடுத்தார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பொருளாதார உதவியுடன் படத்தை முடித்து வெளியிட்டார். இந்த படம் மிகச்சிறந்த படமாக அமைந்தது. பல்வேறு சர்வதேச விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது.

1959-ம் ஆண்டு ''த அபுடிராய்லசி'' என்ற திரைப்படத்தினை வெளியிட்டார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கினார். இவருடைய திரைப்படங்களை பெரும்பாலும் ஏதாவது ஒரு சமூக பிரச்னையை மையமாக வைத்து சமுதாய கண்ணோட்டத்துடன் அமைந்திருக்கும்.

1987-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் கவுரவ பரிசுகளில் ஒன்றான ''லிஜியன் டி'' என்ற பரிசினை பெற்றார். இந்த பரிசு பிரெஞ்சு நாட்டின் ஜனாதிபதி ஃபிராங்காய்ஸ் மித்தரண்டு கொல்கத்தா நகரத்திற்கு வந்து வழங்கி கவுரவித்தார்.

இவர் உயிருடன் இருக்கும்போதே இவரைப்பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன.
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/sathyaraj03.jpg' border='0' alt='user posted image'>
சத்ஜித்ரே திரைப்பட தயாரிப்பாளர் என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வங்க மொழியில் எழுதப்பட்ட இவருடைய நூல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. தனது நாவல்களில் பதினைந்திற்கும் மேலானவற்றை திரைப்படமாக தயாரித்துள்ளார்.

ரேயின் வங்க மொழி காலம், இந்திய திரைப்பட துறையின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது.

1967-ம் ஆண்டு ''மகஸாஸே'' விருது வழங்கப்பட்டது. யூகோஸ்லோவியா ''கொடி விருது'' உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 1992-ம் ஆண்டு திரை உலகின் மிகச்சிறந்த விருதான ''ஆஸ்கர்'' விருதினை பெற்றார். அதே ஆண்டு இந்திய அரசு ''பாரத ரத்னா'' விருது வழங்கி கவுரவித்தது.

திரை உலக வரலாற்றில் அளப்பறிய சாதனை புரிந்த சத்யஜித்ரே 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் நாள் தன்னுடைய இன்னுயிரை துறந்தார்.

<img src='http://www.raitre.rai.it/Static/immagine/27/fuoriorario_SatyajitRay.jpg' border='0' alt='user posted image'>

<b>-கேன்ஸ் திரைப்பட விழாவில் சத்யஜித்ரே!</b>


சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் உலகத் திரைப்பட விழா நடந்தது. அதில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்கள் இரு ராய்'கள். ஒருவர் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் மாமேதை சத்யஜித்ராய். (விருப்பமுள்ளவர்கள் சத்யஜித்ரே என்றும் அழைத்துக் கொள்க) இன்னொருவர் ஐஸ்வர்யராய். திரைப்படவிழாவில், ரேயின் படைப்புகள் அமோக வரவேற்பு பெற்று நல்ல விலைக்கு விற்கப்பட்டது. மறைந்தும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த மாமேதை! (கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் இந்திய அரசின் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் கலந்து கொண்டு, அதன் வசமுள்ள திரைப்படங்களின் டி.வி. மற்றும் வீடியோ உரிமைகளை 1,35,000 டாலருக்கு (நம்ம ஊர் மதிப்பில் கணக்கு போட்டால்... அப்பாடியோவ்!) விற்பனை செய்துள்ளது. இதில் 60 சதவீத வருவாய் சத்யஜித்ரே படங்களின் விற்பனை மூலம் கிடைத்துள்ளது.
சத்யஜித்ரே முதன் முதலாக இயக்கிய பதர் பாஞ்சாலி படத்தின் சர்வதேச உரிமை என்.எப்.டீ.சி.யிடம் உள்ளது. இந்த படம் உள்பட கணஷத்ரூ, காரி, பெய்ரீ மற்றும் அகன்டக் போன்ற என்.எப்.டீ.சி தயாரிப்பில் சத்யஜித்ரே இயக்கிய, காலத்தால் அழியாத காவியங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வீடியோ உரிமை நல்ல அளவில் விலை போயுள்ளது.

இங்கு சத்யஜித்ரே படங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அவற்றின் டி.வி மற்றும் வீடியோ உரிமைகளை ஃபிரான்ஸ் நாட்டின் ஃபிலிம்ஸ் வித்தவுட் ஃப்ரான்டியர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இவை ஃபிரான்ஸ் நாட்டிலும் பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிராந்தியங்களிலும் வெளியிடப்படுமாம்.</span>

நன்றி: செந்தில்.ஆர்.பி (தமிழ்சினிமாவிலிருந்து..........)

Print this item

  ரூ.1800 கோடி வசூலை குவித்த ஹாரிபாட்டர் படம்
Posted by: கீதா - 11-30-2005, 09:20 PM - Forum: சினிமா - No Replies

<img src='http://img433.imageshack.us/img433/7554/1533015rv6rb.gif' border='0' alt='user posted image'>



ரூ.1800 கோடி வசூலை குவித்த ஹாரிபாட்டர் படம்
ஹாரிபாட்டர்' படம் 2 வாரத்தில் ரூ.1800 கோடி வசூலை குவித்து சாதனை படைத்து உள்ளது.

இங்கிலாந்து பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரிபாட்டர் நாவல்கள் திரைப்படமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுவரை 3 ஹாரிபாட்டர் திரைப்படங்கள் வெளியாகி விட்டன.

இப்போது `ஹாரிபாட்டர் ஆன் தி குளோப் லெட் ஆப் பைர்' என்ற 4-வது படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிறுவர்களை கவர்ந்துள்ள இந்த படம் உலகின் பல்வேறு நாடுகளிலும் திரையிடப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன் திரையிடப்பட்ட இந்த படம் இதுவரை ரூ.1800 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.

இதில் வட அமெரிக்க நாடு களில் இருந்து மட்டும் பாதி தொகை வசூல் ஆகி இருப்பதை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் மட்டும் ரூ.200 கோடி வசூல் ஆகி இருக்கிறது. ஜெர்டுனியாவில் ரூ.135 கோடியும், மெக்சிகோவில் ரூ.70 கோடியும் வசூலி ஆகி உள்ளது

Print this item