Yarl Forum
அம்மம்மா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அம்மம்மா (/showthread.php?tid=2222)

Pages: 1 2


அம்மம்மா - RaMa - 12-01-2005

அம்மம்மா

அம்மா என்று அறிமுகம் ஆனவரே
அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவரே

அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற
புதிய மொழியை சொல்ல வைத்தவரே
ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே
ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு

அன்னை பிரியும் போது உங்கள் மடியில் கிடத்தினாள்
நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள்
ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள
ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது

ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள்
ஆதரவாய் அரவணைப்பீர்களே நாம் தோற்கும் போதும்
எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல்
உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம்

காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர்
நீர் கண் மூடும் போது நாம் இல்லையே அருகில் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
வற்றியது கண்ணீர் மட்டுமல்ல எம் இதய நீரும் தான்
எங்கள் கனவுகளிலே வருகின்றீர்கள்
எழுந்து அனைக்கும் முன் மறைகிறீர்கள்

வாருங்கள் மீண்டும் இவ்வுலகில்
வந்து எமக்கு ஆறுதல் தாருங்கள்
தலைவி இல்லாத வீட்டில்
தலையணை நனைக்கின்றது ஒவ்வொரு இரவும்

நடக்கின்றோம் நீர் சொல்லித்தந்த பாதைகளில்
நடக்கின்றீர் நீரும் நிழலாய் எம்முடன் என்று <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


(கீதாவின் பாட்டி கவிதை வாசித்த பின் எனக்குள் எழுந்த உணர்வு தான் இக்கவிதை. இப்போது தான் நேசரி..... பிழையை சுட்டிக்காட்டுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- suddykgirl - 12-01-2005

அக்கா கவி நன்றாக உள்ளது பாராட்டுக்கள்

உங்கள் கவிப்பயணம்தொடர வாழ்த்துக்கள்


- Mathan - 12-01-2005

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் ரமா. எழுத ஏழுத இன்னும் சிறப்பாக எழுதுவீர்கள். அம்மம்மா உங்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றார் போல இருக்கின்றது. சிலசமயங்களில் அம்மா கூட நாம் செய்யும் சிறு தவறுகள் நமது சொந்த நலனுக்காக கண்டிப்பார். ஆனால் அம்மம்மாவோ பேர குழந்தை மீதுள்ள பாச மிகுதியில் அந்த கண்டிப்பை கூட தாங்கி கொள்ள மாட்டார்.

சக கள உறுப்பினர்களின் கவிதைகள் மற்றவர்களை கவிதை எழுத தூண்டுவதை அறிய மகிழ்ச்சியாக இருக்கின்றது. தொடர்ந்து கவிதைகளை எதிர்பார்க்கின்றேன்.


- RaMa - 12-01-2005

நன்றி சுட்டிகேர்ள் மற்றும் மதன். ஆமா எழுத எழுத வார்த்தைகளில் மெறுகேறும் என்பதை இங்கு பலரின் கவிதைகளில் கண்டிருக்கின்றேன். அதுதான் சின்ன முயற்சி. தொடர்ந்து எழுதுகின்றேன் . உங்கள் ஆதரவுக்கு நன்றி...


- கீதா - 12-01-2005

அடடா ரமா உங்கள் அம்மம்மாவைப் பற்றி எழுதிய கவி நல்லாயிருக்கு நன்றி ரமா தொடர்ந்து எழுதுங்கள்


- shanmuhi - 12-01-2005

<b>ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே
ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு</b>


கன்னிக் கவிதை அருமையாக இருக்கின்றது. சித்திரமும் கைப்பழக்கம் போல்... எழுத எழுத கவிவரிகள் மேலும் மெருகு பெறும்.
மேலும் தொடருங்கள்.


- SUNDHAL - 12-01-2005

வாழ்த்துக்கள் ரம்ஸ்...கவிதை நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 12-02-2005

நன்றி கீதா சண்முகி அக்கா அத்துடன் சுண்டல் உங்கள் கருத்துகளுக்கு


- sathiri - 12-02-2005

அம்மம்மாவை ஞாபக படுத்திய ரமாம்மாவுக்கு நன்றிகள் நல்லாயிருக்கு தொடருங்கள்


- sinnappu - 12-02-2005

ரமாவுக்கு வாழ்த்துக்கள் ம் சிறு வயது ஞாபகம் வருகிறது
நான் என் அம்மம்மாவை நான் 2ம் வகுப்பு படிக்கும் போது இழந்து விட்டேன்...
பேரன் பேத்திகள் மீது அம்மம்மாக்கள் காட்டும் அன்பு அளப்பரியது என் மனைவியின் அம்மம்மாவும் சிறிது காலம் (6 மாதம் இங்கு வந்தார் ) மனதை விட்டு நீங்காத அன்பை காட்டிவிட்டு சென்றார்
என் மனைவியும் அவரது சகோதரங்களும் இன்றும் என்றும் சொல்வார்கள் தமது அம்மம்மா இல்லை என்றால்..... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
தங்களது தாயைக்கூட அவர்கள் இவ்வளவு கவனித்ததாக தெரியவில்லை எனக்கு ஏன்டீயப்பா என்று கேட்டா என் மனைவி சொல்வது செய்நன்றி என்று.......
எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு உள்ளம் .......ஒரு 75 வயது இருக்கும்..



சரி ரமாவுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
உறவுகள் சம்மந்தமான கவிதைகளை என் இனிய கள உறவுகளிடம் இருந்து எதிர்பாக்கிறம்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஓகே இப்ப சின்னா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: :wink:
பிகு: ஓய் ரமா கவிதை எல்லாம் அந்த மாதிரி எழுதிறீர் வாழ்த்துக்கள் ஓய்


- shanmuhi - 12-02-2005

உங்கள் இளமைக்கால கதை நன்றாக இருக்கின்றது சின்னப்பு.
மேலும் தொடருங்கள்...


- அருவி - 12-02-2005

கவிதை நன்றாக இருக்கிறது அக்கா வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்


- ப்ரியசகி - 12-02-2005

ஆகா..ரமாக்கா..கவி அருமை..அழகான வரிகள்....
எனக்கும் அம்மம்மா..அப்பம்மா பிடிக்கும்..ஆனால்..அடிக்கடி பேன் பார்க்க சொல்லி கரைச்சல் படுத்தாவிட்டால் தான் :? :?


- RaMa - 12-03-2005

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சாத்திரி சின்னப்பு அருவி அத்துடன் ப்ரியசகி...


- RaMa - 12-03-2005

ஆமாம் சின்னப்பு எனக்கும் எனது அம்மாவை விட அம்மம்மா என்றால் உயிர். எனக்கு அம்மம்மா இல்லையே என்று சிறுவயதில் அழுதாக சொல்வார்கள். என்னென்றால் அம்மம்மாவை தான் எனது அம்மாவாக நினைத்திருந்தேன்.

ப்ரியசகி.. தாயகத்தில் உள்ளவர்களுக்கு சின்னப்பிள்ளைகளைக் கொண்டு பேன் பார்ப்பது என்றால் அலாதி ப்ரியம். சிலரைக் கண்டு ஒடி ஒளிந்தது இப்பவும் ஞாபகம் இருக்கு.


- MUGATHTHAR - 12-03-2005

ரமா உங்களின் கவிதை மூலம் இறந்த எமது அம்மம்மாவின் நினைவுகளைக் கொண்டு வந்தீங்க நன்றி........ அது சரி அம்மம்மா அன்பு காட்டுவதுபோல் அப்பம்மா அன்பு காட்டுவது குறைவுதானே ஏன் அப்பிடி????????? (எனக்கு மட்டுமா அல்லது பொதுவாகவேயா??)


- RaMa - 12-03-2005

MUGATHTHAR Wrote:ரமா உங்களின் கவிதை மூலம் இறந்த எமது அம்மம்மாவின் நினைவுகளைக் கொண்டு வந்தீங்க நன்றி........ அது சரி அம்மம்மா அன்பு காட்டுவதுபோல் அப்பம்மா அன்பு காட்டுவது குறைவுதானே ஏன் அப்பிடி????????? (எனக்கு மட்டுமா அல்லது பொதுவாகவேயா??)

அங்கிள் அப்படி சொல்ல இயாலாது.. நாங்கள் அம்மம்மாவின் வீட்டுக்கு அருகில் இருந்தபடியால் அவர்களுடன் கூடுதலான பாசம்.. அப்பம்மாவிலும் பாசம் தான்.. ஆனாலும் அம்மம்மாவின் அளவிற்கு இல்லை.


- tamilini - 12-03-2005

MUGATHTHAR Wrote:ரமா உங்களின் கவிதை மூலம் இறந்த எமது அம்மம்மாவின் நினைவுகளைக் கொண்டு வந்தீங்க நன்றி........ அது சரி அம்மம்மா அன்பு காட்டுவதுபோல் அப்பம்மா அன்பு காட்டுவது குறைவுதானே ஏன் அப்பிடி????????? (எனக்கு மட்டுமா அல்லது பொதுவாகவேயா??)

முகம்ஸ் இது தான் உண்மை.. அப்பம்மா தன்ர மகளின்ர பிள்ளையில தான் நிறைய அன்பாய் இருப்பாங்க.. நமது அனுபவமும் இது தான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 12-03-2005

Quote:காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர்
நீர் கண் மூடும் போது நாம் இல்லையே அருகில்
வற்றியது கண்ணீர் மட்டுமல்ல எம் இதய நீரும் தான்
எங்கள் கனவுகளிலே வருகின்றீர்கள்
எழுந்து அனைக்கும் முன் மறைகிறீர்கள்

அம்மம்மாவை நினைத்து வடித்த கவி அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள் ரமா அக்கா ...வரிகளும் சூப்பர் தொடர்ந்து எழூதுங்க ........ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 12-03-2005

நன்றி அனிதா உங்களின் கருத்துகளுக்கு... தொடர்ந்து எழுதுகின்றேன்.