Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 566 online users.
» 0 Member(s) | 563 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  தமிழ் திரைப்பட வரலாறு
Posted by: AJeevan - 11-29-2005, 12:30 PM - Forum: குறும்படங்கள் - Replies (5)

<span style='color:brown'><span style='font-size:22pt;line-height:100%'><b>தமிழ் திரைப்பட வரலாறு</b>
-எஸ். தியடோர் பாஸ்கரன்
<img src='http://www.indiafilm.com/veedu.gif' border='0' alt='user posted image'>
இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு, சலனப்படங்களே அன்று திரையிடப்பட்டன. இது நடந்த இடம் ரிப்பன் கட்டிடத்திற்கு அடுத்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில்தான். சினிமாஸ்கோப் என்று விளம்பரப்பட்டிருந்த அந்த காட்சி, ஒரு மாபெரும் கலாச்சார தாக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல சலனப்படக் காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இக்காட்சிகளுக்கு நாளடைவில் ஆதரவு கூடியது. இதைத் தொடர்ந்து 1900இத்தில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, அன்றைய மௌன்ட் ரோடில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். மின் விளக்கு மூலம் ஒளியெறியப்படும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அந்தப் பெயர்.
1905இல் திருச்சி இரயில்வேயில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப் பார்த்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட், எடிசன் சினிமாட்டோகிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனத்தை துவக்கினார். தென்னிந்தியாவின் முதல் டூரிங் டாக்கீஸ் இதுவே. பல ஊர்களுக்குச் சென்று இயேசுவின் வாழ்க்கை போன்ற குறும்படங்களைத் திரையிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸை கட்டி, வள்ளி திருமணம் போன்ற படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் கட்டப்பட்ட கெயிட்டியே, இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு (இது இன்றளவும் செயல்பட்டு வருகிறது). இதையடுத்து சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன.

கதைப் படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படக் காட்சிகளுக்கு வரவேற்பு கூடியது. ஆனால் இங்கு திரையிடப்பட்ட படங்கள் பெரும்பாலும் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான ஹரிஷ் சந்திரா போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இப்படங்கள் பெற்ற வரவேற்பைக் கண்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், இந்தியா பிலிம் கம்பெனி என்பதை நிறுவி, 1916இல் கீசக வதம் என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப்படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் ஏ.நாராயணன். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்குப் பலமான அஸ்திவாரமிட்டவர் இவர்தான். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விவரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால் நாகர்கோயிலில் தயாரான மார்த்தாண்டவர்மன் என்ற ஒரு படத்தைத் தவிர, மற்ற எதுவும் மிஞ்சவில்லை.

திரைப்படக் காட்சிகள் நிலைக்கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரிட்டிஷ் அரசு இந்த வெகுஜனத் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்க தீர்மானித்தது. தொடர்ந்து இந்திய சினிமாட்டோகிராப் சட்டத்தின் மூலம் தணிக்கை துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான தி மெட்ராஸ் பிலிம் லீக் நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி.

1931 ஆம் வருடம் முதல் தமிழ் பேசும் படம் திரையிடப்பட்டதுடன் ஒரு புதிய சகாப்தம் துவங்கியது. தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பாயிலிலுள்ள சாகர் மூவிடோன் என்னும் கம்பெனியால் 1931இல் மேற்கொள்ளப்பட்டது. குறத்திப் பாட்டும் டான்ஸ§ம் என்ற நான்கு ரீல் கொண்ட குறும்படமே முதன்முதலில் வெளி வந்த தமிழ் பேசும் படம். அதே வருடம் எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீள தமிழ்ப் படமான காளிதாஸ் வெளிவந்தது. காளிதாஸ் படத்தைத் தொடர்ந்துப் பல தமிழ் படங்கள் வெளிவந்து திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவை கூட்டின. தமிழ் பேசும் படத்தின் வரவால் தமிழ் படங்களுக்கு ஒரு தனித் தளம் கிடைத்தது. மேற்கத்திய சலனப்படங்களுடன் ஒரே தளத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் ஆனது. படத்தயாரிப்பு சீராக பெருகியது. 1931இல் ஆரம்பித்த தமிழ்படத் தயாரிப்பு வேகமாக வளர்ந்தது. 1935 ஆம் ஆண்டில் மட்டும் 34 தமிழ்படங்கள் தயாரிக்கப்பட்டன. திரைப்படம் புதிய ஒரு வெகுஜன கேளிக்கை சாதனமாக மக்களிடையே நிலைப்பெற்றது.

முதல் நான்கு ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. அக்காலத்தில் சென்னையில் ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் ஏதும் கிடையாது. 1934 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் முதல் டாக்கி ஸ்டுடியோ நிறுவப்பட்டது. 1934இல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் சீனிவாசக் கல்யாணம் ஏ.நாராயணனால் இயக்கப்பட்டது. அதன் பின் பல ஸ்டுடியோக்கள் சென்னையில் நிறுவப்பட்டன. திரைப்படத் துறையில் அவ்வப்போது தோன்றிய தொழில்நுட்ப முன்னேற்றம், திரைப்படங்களின் சாத்தியக்கூறுகளை விரிவாக்கியது. ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதல் முதலாக கையாளப்பட்டது. அந்தப்படத்தில் சிவபாக்கியம், ஒரு ராணியாகவும், அவரின் கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றினார்.

முதல் ஐந்து ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்ப்படங்கள் யாவும் புராணக்கதைகளே. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே. இக்காலக்கட்டத்தில்தான் முதல் சமகாலக் கதையன்று தயாரிக்கப்பட்டது. 1935ல் சோஷியல் என்று அழைக்கப்பட்ட, சமகாலக் கதைகளை கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. முதலில் கௌசல்யா என்ற திகில் படம். இதையடுத்து, வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான மேனகா, டம்பாச்சாரி ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பிறகு, சில சமகாலத்து கதைப் படங்கள் தயாரிக்கப்பட்டாலும் பெருவாரியான திரைப்படங்கள் புராணக் கதை கொண்டவையாகவே இருந்தன. நாடகப் பாணியிலேயே திரைப்படங்கள் அமைக்கப்பட்டன. சமகாலக் கதைகளைப் படமாக்கிய போதும்கூட இதே பாணி கடைப்பிடிக்கப்பட்டது.

முப்பதுகளில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைபடங்கள் பெரும்பாலும் கம்பெனி நாடகங்களின் நகல்களாகவே அமைந்தன. நாடகத்தை அப்படியே படமாக்குவதுதான் வழக்கம். ஆகவே திரைப்படத்தின் பண்புகள் வளராமல் நாடகத்தன்மையே மேலோங்கியிருந்தது. திரைப்படம் எனும் புதிய கட்புல ஊடகத்தின் சாத்தியக்கூறுகளை ஆரம்பகால பட இயக்குநர்கள் கண்டு கொள்ளவேயில்லை. பாட்டும், இசையும் திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக விளங்கின. (தமிழ் திரைப்படத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து இன்று வரை அந்த பாணி மாறாமலிருக்கிறது). புராணக்கதைகளும் ராஜா ராணிக் கதைகளுமே மிகுதியாகப் படமாக்கப்பட்டன. 1937 இல் வெளியான சிந்தாமணி ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது. 1939 ஆம் ஆண்டு வாக்ஷினி, ஜெமினி ஸ்டுடியோக்கள் சென்னையில் அமைக்கப்பட்டன.;; தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர்.

பிரிட்டிஷ் அரசு காலத்தில், தணிக்கை வாரியம் போலீஸ் கமிஷனரின் கீழ் செயல்பட்டது. 1918இல் ஆரம்பித்த தணிக்கை, சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில் கடுமையானது. சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டது. தேசியக் கருத்துக்களையோ, காந்தீய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே, சச்சரவிற்கு உள்ளாக முடியாத புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் விரும்பினர்.

சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் தியாக பூமி, மாத்ருபூமி போன்ற நாட்டுபற்றைப் போற்றும் தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. இப்படங்களில் தேசியக் கருத்துகளும் அரசியல் பிரச்சாரமும் நேரிடையாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை நடைமுறையில் இல்லாததால் அந்தப் படங்களுக்கு வெளியே வந்தபோது பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரில், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அரசுகள் விலகியபோது பிரிட்டிஷ் அரசு தியாகபூமி போன்ற படங்களுக்கு தடை விதித்தது. போர்காலத்தில் கச்சாபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் எடுப்பது வெகுவாகக் குறைந்தது. தென்னகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திப்படம் பிரேம்சாகர் கே.சுப்ரமணியன் இயக்கி, 1939இல் வெளிவந்தது.

திரைப்படத்தை அதன் ஆரம்ப வருடங்களில் பத்திரிக்கைகள் கண்டு கொள்ளவே இல்லை. (1927 இல் மூவி மிரர் என்ற ஆங்கில மாத இதழை எஸ்.கே.வாசகம் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான பத்திரிக்கை. (பின்னர் இதன் பெயர் அம்யூஸ்மென்ட் வீக்லி என்று மாற்றப்பட்டு வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1935இல் தான் முதல் தமிழ் திரைப்படப் பத்திரிக்கை சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. பின்னர் சில்வர் ஸ்கிரீன் என்ற வார இதழும், ஆடல்-பாடல் இதழும் தோன்றின. பல சினிமா இதழ்களுக்கிடையே குண்டூசி, பேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்புற்று விளங்கின.

அன்றைய திரைப்படங்களில் பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக சோபிக்க முடிந்தது. பி,யு,சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என அன்று கோலாச்சிய நடிகர்கள் யாவரும் வாய்ப்பாட்டில் வல்லவர்கள், கர்நாடக சங்கீத விற்பன்னர்கள். திரைப்படத்தையும், திரை இசையையும் இகழ்ந்து பேசினாலும் திரையுலகில் வருமானமும் புகழும் அதிகம் என்பதை உணர்ந்த பல செவ்வியல் இசை வல்லுநர்களும்- எம்.எம்.தண்டபாணி தேசிகர், ஜி.என்.பால சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்தனர். இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னனி பாடகர்கள் வர, இசை வல்லுனர்கள் நடிகர்களாக ஜொலித்த காலம் முடிவுற்றது. இப்போது பல கர்நாடக இசை வல்லுநர்கள் வெற்றிகரமான பின்னனி பாடகர்களாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. ஏ.ஏ.சோமயாஜுலுவும் , இளங்கோவன் ஆகியோர் சில படங்களுக்கு வசனம் எழுதி, தமிழ்த் திரைப்படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர். 1940இல் வந்த மணிமேகலைக்கு சோமையாஜுலுவும், 1943இல் வந்த சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்த்துப் பெற்றனர். திரைப்படத்தில் வார்த்தை ஜாலங்களின் ஆதிக்கத்தை இது மேலும் வலுப்படுத்தியது. மாறாக பிம்பங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளரவில்லை. இன்றளவும் பாத்திரப் பேச்சு தமிழ் திரைப்படங்களில் ஓங்கியிருப்பது திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது. தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியன, உரையாடல் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்றன. 1953இல் வெளிவந்த ஒளவையார் படத்தில் இந்த போக்கு முழு வீச்சுடன் இருப்பதைக் காணலாம்.

இந்திய திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற விவரணைப் படம் (டாக்குமென்டரி) ஏ.கே.செட்டியார் தயாரித்து 1940இல் வெளிவந்த மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பியா மற்;றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான அடிகள் கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார். ஆனால் இந்த அரிய தயாரிப்பு தற்போது எங்கே இருக்கிறது என்ற கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் விவரணைப் படம் எடுப்பது, மௌனப்படக் காலத்திலேயே தோன்றிவிட்டிருந்தாலும், அந்த பாரம்பரியம் வளரவேயில்லை. விவரணைப் படங்களுக்கென்றே உருவான 16 மில்லி மீட்டர் காமிராவும், புரஜக்டரும் தமிழ்நாட்டில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்திய அரசின் திரைப்படப் பிரிவு பல சீறிய விவரணைப் படங்களை தயாரித்தது. இவை மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழக திரையரங்குகளில் காட்டப்பட்;டன. ஆனால் திரையரங்கு உரிமையாளர்களின் பொறுப்;பின்மையாலும், விளம்பரப் படங்களின் ஆக்கிரமிப்பாலும், டாக்குமென்டரிகளைக் கதைப் படங்களுடன் திரையரங்குகளில் திரையிடும் வழக்கம் தற்போது மறைந்து விட்டது. இந்த நிலையில், அண்மையில் விவரணைப் படங்கள் திரையரங்குகளில் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. விவரணைப் பட இயக்கம் தமிழ்நாட்டில் குன்றிபோனதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே திரைப்பட ரசனை வளராமல் போனதும், டாக்குமென்டரி என்ற திரைப்பட வகைக்கான ஆர்வலர்கள் உருவாகாததும்தான். திரைப்படம் என்றவுடன் கேளிக்கைத் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எண்ணும் நோக்குதான் இந்த வளர்ச்சியை தடுத்து விட்டது. ஆயினும் ஒரு கண் ஒரு பார்வை (1998) விவரணைப் படமெடுத்த ஞான.ராஜசேகரன், அதிசயம் அற்புதம் (1997) எடுத்த சிவக்குமார் போன்றோரை விவரணைப்பட இயக்குநர்களாக குறிப்பிட வேண்டும். 1990இல் சலம் பென்னுர்கர் எடுத்த குட்டி ஜப்பானின் குழந்தைகள் விருதுகள் பெற்ற ஒரு விவரணைப்படம்.

உலகப்போர் ஓய்ந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின், திரைப்படத்துறை மீண்டும் தொழில் ரீதியாக வளர ஆரம்பித்தது, திரைப்படத் தயாரிப்பு அதிகரித்தது. படங்களுக்கு வரவேற்பும் கூடியது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டவுடன், டூரிங் திரையரங்குகள் பெருகி, திரைப்படம் கிராமவாசிகளையும் எட்டியது. இந்த ஆண்டுகளில் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் வெளிவந்த அதே சமயத்தில் பாதாள பைரவி (1951), கணவனே கண் கண்ட தெய்வம் (1955) போன்ற மாயாஜாலப் படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தின. எஸ்.எஸ்.வாசன் இயக்கிய சந்திரலேகா (1948) பொழுது போக்கு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, வியாபார ரீதியில் பெரும் வெற்றியைக் கண்டது. மாயாஜாலம், பக்தி, தமிழ்ப்பற்று இவை மூன்றும் கலந்த படைப்பாக வந்த முக்கிய படைப்புகளில் ஒன்று ஒளவையார். நாடக ஆசிரியர்களாகப் புகழ்ப் பெற்ற சில திராவிட இயக்கத் தலைவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபாடுக் கொண்டனர். 1949 இல் நல்லதம்பி படத்திற்கு கதைவசனம் எழுதி சி.என்.அண்ணாதுரை திரையுலகில் பிரவேசித்தார். வேலைக்காரி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி மந்திரி குமாரி (1950) படத்திற்கு வசனம் எழுதினார். சினிமா வரலாற்றாசிரியர்களால், திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்றழைக்கப்படும் திரைப்படங்கள் பலவும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன.

மு.கருணாநிதி வசனம் எழுதி வெளியான பராசக்தி (1952)யின் வெற்றிக்குப் பாத்திரப் பேச்சு முக்கிய காரணமானது. இந்த படத்தின் அடுக்குமொழி வசனம், ஒலிநாடாவில் இன்றளவும் விற்பனையாகிறது. சிவாஜி கணேசனின் முதல் படம் என்றும், இந்த படத்திற்குத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. கருணாநிதி திரும்பி பார் (1953), மனோகரா (1954) உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் ஈட்டினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முரசொலிமாறன், ஏ.வி.பி.ஆசைதம்பி, கண்ணதாசன் போன்றோரும் திரைப்பட உலகில் வசனகர்த்தாக்களாக பிரவேசனம் செய்தனர். இந்தக் காலகட்டத்தில் வசனமே திரைப்படங்களில் மேலோங்கியிருந்தது. காட்சி பிம்பங்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் திரையுலகில் பிரவேசித்தது தமிழ்த் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணி ஆரம்பம் ஆனது.

1951இல் தென்னகத்தில் முதல் முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே.பி.சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றார். 1952இல் இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைப்பெற்றது. சென்னை உட்பட மும்பை, கல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் பன்னாட்டுத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.

1918இல் அமுல்படுத்தப்பட்ட இந்தியன் சினிமாட்டோகிராப் சட்டம் 1952ல் மறுவடிவில் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை. இதே வருடம், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில திரைப்படமான காடு (கூ£ந தரபேடந) சேலம் மாடர்ன் தியேட்டர்சாரின் கூட்டுடன் தயாரானது. 1955ல் திரைபடத்திற்கான தேசிய விருதுகள் அளிக்கும் மரபு உருவானது. அந்த வருடம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கதையான மலைக் கள்ளன் (எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தது) தேசிய விருது பெற்றது. 1956ல் தென்னிந்தியாவின் முதல் பிலிம் சொசைட்டியான தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி, திருமதி அம்மு சுவாமிநாதனால் அமைக்கப்பட்டது.

1959ஆம் ஆண்டு, திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, தமிழ் நடிகர் சங்கம் இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது. எனினும் தொழிற்சங்க இயக்கம் திரையுலகில் வேரூன்ற பல ஆண்டுகள் ஆயின. (ஏற்கனவே 1940ல் சினி டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை இயக்குனர் கே.ராம்நாத் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது).

ஐம்பதுகளின் துவக்கத்தில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன் போன்றோரின் நட்சத்திர ஆதிக்கம் துவங்கியது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அப்போது வந்த மதுரை வீரன், ரங்கோன் ராதா (1956) போன்ற படங்களில் காணலாம். இவ்விரு நடிகர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலம் புகழின் உச்சியில் இருந்தனர். அவர்கள் நடிக்கும் படங்களின் இயக்குநரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்தது. ஆண் நட்சத்திரங்களை சுற்றியே கதைகள் அமைக்கப்பட்டன. ஐம்பதுகளில் திரைப்பட உலகில் தாக்கம் ஏற்படுத்திய மற்றொருவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். 1954இல் தொடங்கி 1959 வரை பதிபக்தி, பாசவலை போன்ற பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. இன்றளவும் அந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. இவரது மறைவுக்குப் பின் கண்ணதாசன் பாடலாசிரியர் வரிசையில் முதலிடம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் நிகரற்று விளங்கினார்.
1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான மாடர்ன் தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர். பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது. ஆயினும் கருப்பு வெள்ளைப் படங்கள் அரிதாக, முற்றிலும் வண்ணப்படங்கள் மட்டுமே வர ஏறக்குறைய இருபதாண்டுகளாயின. வண்ணத்திற்கு மாற்றம், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சியை வெகுவாக பாதித்தது. வண்ணப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிகர்கள் பல உடைகளை மாற்றுவதும், பல இடங்களில் ஒரு பாடலை படமாக்குவதும் வழக்கமாயிற்று. இத்துடன் இசையின் தாக்கமும் சேர்ந்தமை, திரைப்படப்பாடல் காட்சிகளுக்கு ஒரு புதிய வடிவை ஏற்படுத்தியது. பின்னர், இசை விழாவின் வரவு இந்த பாடல் காட்சிகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960ல் சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இந்தக் கல்லூரியில் பயின்றவர்களின் தாக்கத்தை காண முடிந்தது. அறுபதுகளின் ஆரம்ப வருடங்களில் சில புதிய இயக்குநர்கள் தோன்றி தமிழ் திரைப்படத்திற்கு வலுவூட்டினார்கள். இதில் நினைவுக் கூறத்தக்கவர் ஸ்ரீதர். 1959ல் வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964) போன்ற வெற்றிப் படங்களையும் தந்தார். முக்கோணக் காதல் கதை இவர் படங்களின் அடிப்படை. இதே காலக்கட்டத்தில் தான் பீம்சிங்கும் படங்களை இயக்கினார். பாவ மன்னிப்பு (1961), பார்த்தால் பசி தீரும் (1962) ஆகிய இவரது படைப்புகள் இன்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றன.. கம்பெனி நாடக பாரம்பரியத்தில் வளர்ந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கற்பகம் (1963) படத்தின் மூலம் இயக்குநரானார். உணர்ச்சி மிக்க குடும்பக்கதைகள் பல எடுத்து சில ஆண்டுகள் புகழோச்சினார், மேடை நாடக ஆசிரியராக திகழ்ந்த கே.பாலசந்தர், நீர்க்குமிழி (1965) படத்தின் மூலம் இயக்குனராக பரிணமித்தார். பல புதிய நடிகர்களை- கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட- இவர் அறிமுகப்படுத்தினார். இயக்குநரை குறிப்பிட்டு ஒரு படத்தை அடையாளம் காட்டும் சாத்தியம் பாலசந்தர் காலத்தில்தான் துவங்கியது. ஜெயகாந்தனின் குறுநாவலான உன்னைப்போல் ஒருவன் அவராலேயே இயக்கப்பட்டு, 1964ல் படமாக வெளிவந்து, தேச அளவில் விருதைப் பெற்றது. இது யதார்த்த திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நீர்க்குமிழி மூலம் திரையுலகில் பிரவேசித்த கே.பாலசந்தர், பல படங்களைத் தயாரித்து புகழீட்டினார். தொழில் சாரா நாடக மேடையிலிருந்து வந்த இவரது படைப்புகளின் முக்கிய அம்சங்கள் புதிய முகங்கள், நகர்ப்புற, மத்தியதர மக்களின் பிரச்சனைகள், கண்ணதாசன் பாடல்கள், மக்களிடம் முன்னமே வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் போன்றவையே, இதே சமயம் பாவமன்னிப்பு (1961) போன்ற அகில இந்திய விருது பெற்ற படங்களை பீம்சிங் அளித்தார். இவரது படங்கள் வெற்றிப்பெற சிவாஜிகணேசன் போன்ற நட்சத்திரக் கூட்டமைப்பு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, குடும்ப உறவுகளைச் சார்ந்த கதைகள் போன்றனவே, ஏ.பி.நாகராஜன் சரஸ்வதி சபதம் (1966) போன்ற சில புராணப்படங்களை தயாரித்து கடவுளர்களையும், தேவர்களையும் வண்ணத்தில் காட்டினார். புராணப் படங்களுக்கு தமிழ் திரைப்படத்தில் சிறிது காலம் மறுவாழ்வு கிடைத்தது. 1963ல் மாநில அளவில் திரைப்பட விருதுகள் அமைக்கப்பட்டன. காவல்காரன் இவ்விருதைப் பெற்ற முதல் படம்.
அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் நேரிடையாக ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ்.சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி.நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் நேரிடையாக அரசியலில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பிண்ணி பினைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கங்களுடன் இணைந்திருந்த என்.எஸ்கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமியிலிருந்து பின்னர் எம்.ஜி.ராமசந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் நேரடி அரசியலில் இறங்கினர். 1967ல் தேனி பகுதியிலிருந்து எஸ்.எஸ்.ஆரும், பரங்கி மலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆரும் தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டசபையில் நுழைந்தனர். எம்.ஜி.ஆரின் படங்களில் நேரிடையாகவும், குறியீடுகள் மூலமாகவும் கட்சிப் பிரச்சாரம் வெளிப்படுத்தப் பட்டது. வண்ணப்படங்களில் அரசியல் கட்சிகளின் கொடியின் நிறங்கள்; குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன. இத்துடன் ரசிகர் மன்றத்தின் ஆதரவும் சேர்ந்து, நட்சத்திர அரசியல்வாதிகளின் கைகளைப் பலப்படுத்தியது.

1972இல் தி.மு.கவிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனிக் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் ஆதரவுடனும், நட்சத்திர ஆளுமையின் துணையுடனும் அவரது அரசியல் வாழ்வு உயர்ந்தது. 1977 இல் எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வரான பின், திரைப்படத்துறைக்குப் பயனளிக்கும் திட்டங்கள் சிலவற்றை அமுலாக்கினார். மூப்படைந்த திரைப்படக் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.75ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தினார். சிறந்த படங்களுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் இவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை. எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது. 1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர். இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் திரைப்படத்தில் மூன்று ராஜாக்களின் வரவு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா ஆகியோரே இம்மூவர். பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே 1977.ல் வெளிவந்தது. புதிய நடிகர்கள், இளையராஜாவின் இசை, கிராமியப் பின்னணி, யதார்த்தத்தில் அழுத்தம் இவைகளே பாரதிராஜா படைப்புகளின்; முக்கிய அம்சங்கள். மோழத்தனமான (ளுவலடளைநன) நடிப்பை விட்டு இயல்பு நடிப்பை பின்பற்ற இவர் முயற்சி செய்தார். 1979இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் பாக்கியராஜ் இயக்குநரானார். நகைச்சுவை கலந்த கதையோட்டம், பாலியல் அழுத்தம் இவை பாக்கியராஜ் படங்களின் வெற்றிக்கு காரணமாயிருந்தது. இந்த ஆண்டுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு இளையராஜாவின் வளர்ச்சி. 1976ல் அன்னக்கிளி படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த இளையராஜா, வெகு விரைவிலேயே நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார். இவர் இதுவரை நான்கு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

ஜே.மகேந்திரன் இயக்குநராக முள்ளும் மலரும் (1978) படத்தில் அறிமுகமானதும் இவ்வேளையில்தான். அவரது அடுத்த படமான உதிரிப்பூக்கள் யதார்த்த பாணியில் அமைந்து தமிழின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. 1975ல் அவளும் ஒரு பெண்தானே படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானார். பசி (1979) இவருக்கு தமிழ் தி[ரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொடுத்தது, அப்படத்தில் நடித்த ஷோபா அகில இந்தியாவின் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். (விருது பெற்ற சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்துக் கொண்டார். நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழ்த் திரையிலகிற்கு புதிதல்ல. விஜயஸ்ரீ, படாபட் லட்சுமி, கல்பனா, லட்சுமிஸ்ரீ, சில்க் ஸ்மிதா என பட்டியல் நீள்கிறது).

புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை முறையாகப் பயின்ற பாலு மகேந்திராவின் முதல் படம் அழியாத கோலங்கள் (1979) வெளிவந்தது. இக்காலக்கட்டங்களில் பாரதிராஜா, மகேந்திரன், துரை, பாலு மகேந்திரா போன்றோரின் வரவால் தமிழ்த் திரைப்படத்; துறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் பெருவாரியான படங்கள் துரத்தல், பாட்டு, கோஷ்டி நடனம், வன்முறைக் காட்சிகள், பாலியல் கிளுகிளுப்பு என்ற பழைய பாதையிலேயே சென்றன. தமிழ்த் திரைப்படத்தின் போக்கை திசை திருப்ப இவர்களால் இயலவில்லை. ஒரு தலை ராகம் (1980) மூலம் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைத்த டி.ராஜேந்தர், இன்றளவும் மக்களிடையே வரவேற்பு பெரும் படங்களை இயக்கி வருகிறார். கதை வசனம், ஒளிப்பதிவு, இசை ஆகிய சகல பணிகளையும் தானே செய்து டிநே அய« ஜீசடினரஉயவ¬டி« ர«வை என்ற பெயர் வாங்கினார். இவரது தனித்துவம் ஆடம்பர செட்டுகள், அடுக்கு மொழி வசனங்கள் இவையே.

எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் தமிழ்ப் பட தயாரிப்பு முன் காணாத அளவு அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 129 படங்கள் வெளியாயின. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தி திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருப்பது தமிழ் திரைப்படங்கள்தான். ஆனால் தயாரிப்பு உயர்ந்த அளவிற்கு தரம் உயரவில்லை. கோமல் சுவாமிநாதனின் நாடகம் தண்ணீர் தண்ணீர் 1981 இல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்தது. இதுபோன்றதுதான் இவரது அச்சமில்லை அச்சமில்லையும். அரசியல் அங்கதம் நிறைந்த படம். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ராஜபார்வையும் அதே ஆண்டுதான் வெளிவந்தது. நட்சத்திர ஆளுமையில் கமலஹாசன் புகழ் ஓங்கியதும் இந்த ஆண்டுகளில்தான்.

அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்தரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு. பெண்ணிய சித்தாந்தத்தை, சீரிய திரைப்படப் பண்பு நிறைந்த ஒரு படத்தின் மூலம் தமிழர்களுக்கு தந்தார் இவர். எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்தினம், பல்லவி, அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன், ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் இவருக்கு அகில இந்திய அளவில் புகழீட்டி தந்தது. 1980 ஆம் ஆண்டில் மற்றொரு அம்சம் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா தனது காந்த நடிப்பால் தமிழத்;திரையுலகில் கோலோச்சியதும் இந்த ஆண்டுகளில்தான்.
<

Print this item

  உருப்படாத முனுசாமி!!
Posted by: Birundan - 11-29-2005, 12:27 PM - Forum: நகைச்சுவை - Replies (1)

உருப்படாத முனுசாமி!!
http://www.youtube.com/watch.php?v=JjvzQm4...earch=deepavali

நன்றி>உருப்படாதது

Print this item

  வரையப்பட்ட படங்கள்
Posted by: தூயவன் - 11-29-2005, 06:29 AM - Forum: தளமுகவரிகள் - Replies (18)

இத்தளத்தலில் வரையப்பட்ட படங்கள் இருக்கின்றன. இயற்கையுடன் கூடிய அழகுத்தன்மை நிறைந்தவை. ஆனால் இவற்றின் முழுமையான படத்தை பணம் கொடுத்தே வாங்க முடியும். காட்சிகளைப்பாருங்கள்.
http://www.elmspuzzles.com/

http://www.elmspuzzles.com/Kinkade.html

Print this item

  இறந்து பிழைத்தவர்கள் பற்றி ஒர் ஆய்வு!
Posted by: adithadi - 11-29-2005, 03:06 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (16)

சில வருடங்களுக்கு முன்பு எனது சக தொழிலாலியின் சகோதரன் இரண்டு சிறுநீர்ப்பைகளை இழந்த மயக்க நிலையில் இருந்த போது, அவரது ஆன்மா அவரை விட்டுசென்று அங்கு என்ன நடக்கின்றது என அவரால உணர முடிந்தது, பின்பு வெளிச்சத்தை நோக்கி தான் நகர்ந்த போது அளவில்லா அன்பு அவரை சூழந்து கொண்டிருந்தவாகவும், உம்மை அழைக்கும் நேரம் இதுவல்ல என் கூறியதகாவும் அவர் என்னிடம் சொன்னார். இவர் இறைவன் மேல் எவ்வித நம்பிக்கையும் இல்லாத மனிதர்.

உங்களின் அனுபவங்களையும் கூறுங்கள்.

Print this item

  முன்னாள் ஜனாதிபதி கைச்சாத்திட்ட காசோலைகளுக்கான கொடுப்பனவுக்க
Posted by: Birundan - 11-28-2005, 11:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தாம் பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 750 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிதியை பெறுவதற்கான காசோலைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அதனையடுத்து தற்போதைய புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்காசோலைகளுக்கான நிதி கொடுப்பனவை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் சந்திரிகா பண்டாரநாயக்க தாம் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் ஜனாதிபதி நிதியிலிருந்து பெருந்தொகையான பணம் அறவிடப்படுவதற்கான காசோலைகளில் கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து நிதிக் கொடுப்பனவை தடுத்து நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்திரிகா குமாரதுங்கவால் கைச்சாத்திடப்பட்ட காசோலைகளில் ஒன்று அரசு சார்பற்ற நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பெருந் தொகைக்குரியது.

மற்றுமொரு காசோலை திட்டமொன்றுக்காக வட மத்திய மாகாண அரசியல் வாதி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பிரியாவிடை வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக அநுராதபுரத்துக்குச் சென்றிருந்தார். அச் சமயம் இக்காசோலை வழங்கப்பட்டுள்ளது என்றும் இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி நிதியிலிருந்து இவ்வாறு அவசர நிதி கொடுப்பனவுகளுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணையொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிடவிருக்கின்றார்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நிதியானது அவசர அவசிய காரணங்களுக்குரியவை. வெளிநாடு ஒன்றில் விசேட சிகிச்சை பெற முயலும் இருதய நோயாளி ஒருவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு பல மாதங்களும் செல்லலாம் அதன் பின்னரே மனிதாபிமானத்துக்குரிய விடயம் என உறுதிப்படுத்தப்படும். இத்தகைய நிலைப்பாடு இருக்கும்போது மிகக் குறுகிய கால அவகாசத்தில் பெருந்தொகையான நிதி கொடுப்பனவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>நிதர்சனம்

Print this item

  களவாடப்படும் உரிமைகள் (ஒரு பேப்பரில்)
Posted by: tamilini - 11-28-2005, 10:55 PM - Forum: கவிதை/பாடல் - Replies (21)

ஒரு வருடத்துள் களவாடப்படும் உரிமைகள். கடந்த ஒரு பேப்பரில் ஒரு கவிதை மாவீரர் பற்றிய கவிதை வாசித்தேன். இதை எங்கையோ வாசிச்ச நினைவு என்று தேடினேன். கடைசியில் கண்டு பிடித்தேன். யாழ் களத்தில் குருவிகள் போன வருட மாவீரர் நாளை ஒட்டி எழுதிய கவிதையை ரஞ்சன் என்பவர் பெயரில் எழுதப்பட்ட வரிகளின் ஒழுங்குகளை மாற்றி அதை அப்படியே போட்டிருக்கிறார்கள்.??

http://kuruvikal.yarl.net/archives/2004_11.html

நகல்

http://www.orupaper.com/issue35/pages_K__34.pdf

அதே கவிதையை புதினம் நாளேட்டிலும் அதே மாதிரி அந்தக்கவிதை வேறு பெயரில் போடப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு??

பருவ வயதில்
மீசை அரும்பும் காலத்தில்
குளப்படி மறந்தாய்
குறும்புகள் துறந்தாய்
கூடிக் குலாவும் கொள்கை மறந்தாய்
தாய் மண் விட்டோடி
அடைக்கலம் தேட மறந்தாய்
அகதியாகி பீ ஆர் வாங்கி
அழகான பெண்ணெடுக்க மறந்தாய்
காரும் வீடும்
வேண்டாத சகவாசமும்
களிம்பும் கழுத்தோடு சைக்கிள் செயினும்
பியரும் கானும்
பப்பும் பீசாவும்
இவை அனைத்தும் மறந்தாய்
நீ அறிந்ததெல்லாம்
தலைவன் மொழியும்
தாயக விடுதலையும்
விடுதலையின் தேவையும் தர்மமும்...!
அந்த வயதில் இவ்வளவும்
விளங்குமா... சாத்தியமா...
வினவுகின்றார் சிலர்
அவருக்கு சாட்சியாயும் நீயே....!
நிச்சயம்...
தலைவன் பாசறையில்
பறவைக்கும் புரியும்
தாய் மண்ணின்
விடுதலையின் பெறுமதி....!
பார்....
நீ பயிற்சிக்காய் ஏகையில்
கத்தித் திரிந்த கூடித் திரிந்த
வரப்போரக் கரிக்குருவி
இத்தனை கொடூரங்கள் கண்டும்
அண்டை நாட்டிலா தங்சமடைந்தது..???!
அழிந்த கூடுகள் செம்மையாக்கி
சீராக வாழவில்லை...!!!!!
அதுக்கு ஆசை
நீ மிதித்த மண்ணோடு உறவாட....
ஐந்தறிவென்றாலும்
நன்றி இருக்கு
தனக்காய் வாழ்ந்தவனுக்காய்
தான் வாழ....!

மண்ணிற்காய் மக்களுக்காய்
எத்தனை மருத்துவர்கள்
எத்தனை இஞ்சினியர்கள்
எத்தனை எக்கவுண்டன்கள்
கையில் பட்டமில்லை
மனதோடு கனவுகள் சுமந்து....
தாய் மண் மானம் காக்க
களத்தோடு கருவி எடுத்து
ஆக்கிரமிப்பின் விளைவறிந்து
வினை அறிந்து
எதிரி தம் பாசறை கலங்கடித்து
கரும்புலியாய் கடற்புலியாய்
தரைப்புலியாய் வான் புலியாய்
வீறுகொண்டு பாய்ந்திருப்பர்....!
அவர்கள் மண்ணின் மைந்தர்கள்
மாவீரரான வீரத்தாய்ப் புதல்வர்கள்...!
வீர வசனம் பேசி
எட்ட நின்று கூத்தடிக்கும் கூட்டமல்ல
களத்தோடு கூடி நின்று
மரணத்தால் கதை எழுதிய
காவியங்கள்...!
உங்கள் இலட்சியம் சுமக்க
தாய் மண் சுமப்பாள்
இன்னும் ஆயிரம் ஆயிரம் வீரர்கள்
உங்களைப் போலவே தீரத்துடன்....!
உங்கள்...
வீர இலட்சியம் நிறைவேறும்
உறங்குங்கள் கண்மணிகளே
நான்....
வீர தாலாட்டுப் பாட வேண்டும்
இன்றேல் நாவொடிந்து
வீழ்ந்திடுவேன்....!


இதைப்பற்றி மேலும் ஆராயவென மற்றைய கவிதைகளை வாசித்தேன். இன்னொரு ஆக்கம் எங்கோ வாசித்த நினைவு என்று தொடர்ந்தால் என்னால் எழுதப்பட்ட ஆக்கமும் ஒன்று. முதலாவது வரியை நீக்கிவிட்டு ஏனையவற்றை இணைத்திருக்கிறார்கள். ஒருவருடைய ஆக்கத்தை இணைப்பதில் தவறில்லை இணைப்பதெனில் முழுமையாக அவர்களது பெயருடன் இணைக்கலாம் அல்லவா?? இதனால் அசலாக எழுதியவர்கள் தான் இவற்றை பிரதிசெய்ததாக போய்விடும் அல்லவா??

http://www.orupaper.com/issue35/pages_K__37.pdf

மாவீரராய் நம் முன்னே...
மறவர்கள் இவர்கள்..
மனிதர்களாய் வாழ்ந்து காட்டிய...
மரணத்தால் மரணிக்க முடியாத
மானிடங்கள் இவர்கள்.... !

தமிழனாய் வாழ்ந்து..
தமிழிற்காய் வாழ்ந்து..
தமிழற்காய் தங்களை அற்பணித்த...
தன்னலமற்ற மனிதர்கள்...!

மானமிழந்து மற்றவர்க்கு
மணிடியிட மாட்டோம் என்று..
நஞ்சினை நெஞ்சினில் சுமந்து..
சாவினில் வரலாறு படைக்கும்...
சாதனையாளர்கள் இவர்கள்... !

புதிதாய் தமிழன்
வரலாறு எழுதிட
உதிரத்தை மையாய் வழங்கியவர்
சுதந்திரத்திற்காய் தம்
உயிரை வழங்கியவர்
நம் மனக்கண் முன்னே
மாவீரர் என்ற நாமம் கொண்டு
வாழ்ந்திடும் காவலர்கள் இவர்கள்...........!

http://tamilini.blogspot.com/2004_10_01_ta...ni_archive.html

மாவீரர் பற்றிய கவிதைகள் உள்வாங்கப்பட்டது மகிழ்ச்சி. அதனால் விட்டுவிடும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (கொப்பிறையிட்ஸ்)

Print this item

  தமிழ் பாடல்களின் கீபோட் நோட்ஸ்
Posted by: shanmuhi - 11-28-2005, 10:15 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (2)

தமிழ் பாடல்களின் கீபோட் நோட்ஸ்.

யாரிடமாவது தமிழ்பாடல்கள் அல்லது நத்தார் பாடல்களின் கீபோட் நோட்ஸ் இருக்கிறதா....? ? ?
தந்தால் மிக உதவியாக இருக்கும்.

Print this item

  மனிதர் ஒரு வருடத்துக்கே காதல் வயப்பட்டு இருக்க முடியும்-BBC
Posted by: siluku - 11-28-2005, 03:20 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

மனிதர் ஒரு வருடத்துக்கே காதல் வயப்பட்டு இருக்க முடியும்-BBC

Romantic love 'lasts just a year'


Some couples may disagree, but romantic love lasts little more than a year, Italian scientists believe.
The University of Pavia found a brain chemical was likely to be responsible for the first flush of love.

Researchers said raised levels of a protein was linked to feelings of euphoria and dependence experienced at the start of a relationship.

But after studying people in long and short relationships and single people, they found the levels receded in time.

The team analysed alterations in proteins known as neurotrophins in the bloodstreams of men and women aged 18 to 31, the Psychoneuroendocrinology journal reported.

The love became more stable. Romantic love seemed to have ended

Piergluigi Politi

They looked at 58 people who had recently started a relationship and compared the protein levels in the same number of people in long-term relationships and single people.

In those who had just started a relationship, levels of a protein called nerve growth factors, which causes tell-tale signs such as sweaty palms and the butterflies, were significantly higher.

Of the 39 people who were still in the same new relationship after a year, the levels of NGF had been reduced to normal levels.

Report co-author Piergluigi Politi said the findings did not mean people were no longer in love, just that it was not such an "acute love".

"The love became more stable. Romantic love seemed to have ended."

And he added the report suggested the change in love was down to NGF.

"Our current knowledge of the neurobiology of romantic love remains scanty.

"But it seems from this study biochemical mechanisms could be involved in the mood changes that occur from the early stage of love to when the relationship becomes more established."

However, he said further research was needed.


http://news.bbc.co.uk/1/hi/health/4478040.stm

Print this item

  புற்றுநோயாளிகளை மீன் எண்ணெய் காப்பாற்றும்
Posted by: AJeevan - 11-28-2005, 02:53 PM - Forum: மருத்துவம் - No Replies

[size=14] [b]மரண வாசலில் நிற்கும் புற்றுநோயாளிகளை
மீன் எண்ணெய் காப்பாற்றும்..*
<img src='http://www.dinakaran.com/health/daily/2005/nov/17/fish.jpg' border='0' alt='user posted image'>
புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து விட்டால், குணப்படுத்த முடியும். முற்றிய கட்டத்தில் ஒன்றுமே செய்ய முடியாது.
இதுதான் இன்றுவரை உள்ள நிலைமை. ஆனால் அமெரிக்காவின் நவேடா மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரான் பார்தினி, ஒமேகா-3 அமிலம் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

இவரது வீட்டின் அருகில் வசித்து வரும் 78 வயது முதியவர், நுரையீரல் புற்றுநோயாளி. மரண வாசலில் நின்று கொண்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் நாள் குறித்து விட்டனர்.
அதிகம் போனால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று தொpவித்து விட்டனர்.

இது நடந்தது 2000ம் ஆண்டில். இந்நிலையில் டாக்டர் ரான் பார்தினி, 78 வயது முதியவருக்கு ஒமேகா-3 அமிலத்தை கொடுத்து சோதனை செய்தார்.

கிட்டத்தட்ட 4 வருட சிகிச்சைக்குப் பின், கடந்த ஆண்டு ஸ்கேன் எடுத்த போது, புற்றுநோய் கட்டிகளின் அளவு 10 சதவீதம் சுருங்கி இருந்தது தெரிய வந்தது. இதனால் ஏற்கனவே தேதி குறிக்கப்பட்ட அந்த முதியவர் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டுள்ளார்.

வழக்கமாக கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே புற்றுநேயாளி களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலைமையை இதன்மூலம் மாற்றி, யோசிக்க வைத்துள்ளார் டாக்டர் ரான் பார்தினி. அவர் தற்போது மேற்கொண்டு விரிவான ஆய்வுகளை செய்து வருகிறார்.

ஒமேகா-3 அமிலம், மீன் எண்ணெய் மற்றும் ஆல்கே என்ற ஒருவகை கடற்பாசி ஆகியவற்றில் நிறைய உள்ளது.

அதே சமயம் சோளத்தில் ஒமேகா 6 என்ற அமிலம் இருக்கிறது. இது வேலைக்கு ஆகாது. ஏனெனில் புற்றுநோய் கட்டிகளை நன்றாக வளர்த்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது

Print this item

  புற்றுநோயாளிகளை மீன் எண்ணெய் காப்பாற்றும்
Posted by: AJeevan - 11-28-2005, 02:51 PM - Forum: மருத்துவம் - No Replies

[size=14] [b]மரண வாசலில் நிற்கும் புற்றுநோயாளிகளை
மீன் எண்ணெய் காப்பாற்றும்..*
<img src='http://www.dinakaran.com/health/daily/2005/nov/17/fish.jpg' border='0' alt='user posted image'>
புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து விட்டால், குணப்படுத்த முடியும். முற்றிய கட்டத்தில் ஒன்றுமே செய்ய முடியாது.
இதுதான் இன்றுவரை உள்ள நிலைமை. ஆனால் அமெரிக்காவின் நவேடா மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரான் பார்தினி, ஒமேகா-3 அமிலம் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

இவரது வீட்டின் அருகில் வசித்து வரும் 78 வயது முதியவர், நுரையீரல் புற்றுநோயாளி. மரண வாசலில் நின்று கொண்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் நாள் குறித்து விட்டனர்.
அதிகம் போனால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று தொpவித்து விட்டனர்.

இது நடந்தது 2000ம் ஆண்டில். இந்நிலையில் டாக்டர் ரான் பார்தினி, 78 வயது முதியவருக்கு ஒமேகா-3 அமிலத்தை கொடுத்து சோதனை செய்தார்.

கிட்டத்தட்ட 4 வருட சிகிச்சைக்குப் பின், கடந்த ஆண்டு ஸ்கேன் எடுத்த போது, புற்றுநோய் கட்டிகளின் அளவு 10 சதவீதம் சுருங்கி இருந்தது தெரிய வந்தது. இதனால் ஏற்கனவே தேதி குறிக்கப்பட்ட அந்த முதியவர் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டுள்ளார்.

வழக்கமாக கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே புற்றுநேயாளி களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலைமையை இதன்மூலம் மாற்றி, யோசிக்க வைத்துள்ளார் டாக்டர் ரான் பார்தினி. அவர் தற்போது மேற்கொண்டு விரிவான ஆய்வுகளை செய்து வருகிறார்.

ஒமேகா-3 அமிலம், மீன் எண்ணெய் மற்றும் ஆல்கே என்ற ஒருவகை கடற்பாசி ஆகியவற்றில் நிறைய உள்ளது.

அதே சமயம் சோளத்தில் ஒமேகா 6 என்ற அமிலம் இருக்கிறது. இது வேலைக்கு ஆகாது. ஏனெனில் புற்றுநோய் கட்டிகளை நன்றாக வளர்த்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது

Print this item