![]() |
|
முன்னாள் ஜனாதிபதி கைச்சாத்திட்ட காசோலைகளுக்கான கொடுப்பனவுக்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: முன்னாள் ஜனாதிபதி கைச்சாத்திட்ட காசோலைகளுக்கான கொடுப்பனவுக்க (/showthread.php?tid=2241) |
முன்னாள் ஜனாதிபதி கைச்சாத்திட்ட காசோலைகளுக்கான கொடுப்பனவுக்க - Birundan - 11-28-2005 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தாம் பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 750 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிதியை பெறுவதற்கான காசோலைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அதனையடுத்து தற்போதைய புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்காசோலைகளுக்கான நிதி கொடுப்பனவை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் சந்திரிகா பண்டாரநாயக்க தாம் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் ஜனாதிபதி நிதியிலிருந்து பெருந்தொகையான பணம் அறவிடப்படுவதற்கான காசோலைகளில் கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து நிதிக் கொடுப்பனவை தடுத்து நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்திரிகா குமாரதுங்கவால் கைச்சாத்திடப்பட்ட காசோலைகளில் ஒன்று அரசு சார்பற்ற நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பெருந் தொகைக்குரியது. மற்றுமொரு காசோலை திட்டமொன்றுக்காக வட மத்திய மாகாண அரசியல் வாதி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பிரியாவிடை வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக அநுராதபுரத்துக்குச் சென்றிருந்தார். அச் சமயம் இக்காசோலை வழங்கப்பட்டுள்ளது என்றும் இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி நிதியிலிருந்து இவ்வாறு அவசர நிதி கொடுப்பனவுகளுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணையொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிடவிருக்கின்றார். இது குறித்து அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இந்த நிதியானது அவசர அவசிய காரணங்களுக்குரியவை. வெளிநாடு ஒன்றில் விசேட சிகிச்சை பெற முயலும் இருதய நோயாளி ஒருவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு பல மாதங்களும் செல்லலாம் அதன் பின்னரே மனிதாபிமானத்துக்குரிய விடயம் என உறுதிப்படுத்தப்படும். இத்தகைய நிலைப்பாடு இருக்கும்போது மிகக் குறுகிய கால அவகாசத்தில் பெருந்தொகையான நிதி கொடுப்பனவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>நிதர்சனம் - tamilini - 11-29-2005 அப்படிப்போடுங்கோ. இனி அவங்க செய்ததை இவங்க பூதக்கண்ணாடி வைச்சு பாத்திட்டு இருக்கிறதுக்க அடுத்த வருசம் வரப்போது. :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 11-29-2005 பாம்பின் காலைத் தானே பாம்பறியும். சுனாமி நிதியைக் கொள்ளையிட்டவருக்குத் தானே, எப்படி கொள்ளையடிப்பினம் எண்டு தெரியும். |