![]() |
|
களவாடப்படும் உரிமைகள் (ஒரு பேப்பரில்) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: களவாடப்படும் உரிமைகள் (ஒரு பேப்பரில்) (/showthread.php?tid=2242) Pages:
1
2
|
களவாடப்படும் உரிமைகள் (ஒரு பேப்பரில்) - tamilini - 11-28-2005 ஒரு வருடத்துள் களவாடப்படும் உரிமைகள். கடந்த ஒரு பேப்பரில் ஒரு கவிதை மாவீரர் பற்றிய கவிதை வாசித்தேன். இதை எங்கையோ வாசிச்ச நினைவு என்று தேடினேன். கடைசியில் கண்டு பிடித்தேன். யாழ் களத்தில் குருவிகள் போன வருட மாவீரர் நாளை ஒட்டி எழுதிய கவிதையை ரஞ்சன் என்பவர் பெயரில் எழுதப்பட்ட வரிகளின் ஒழுங்குகளை மாற்றி அதை அப்படியே போட்டிருக்கிறார்கள்.?? http://kuruvikal.yarl.net/archives/2004_11.html நகல் http://www.orupaper.com/issue35/pages_K__34.pdf அதே கவிதையை புதினம் நாளேட்டிலும் அதே மாதிரி அந்தக்கவிதை வேறு பெயரில் போடப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு?? பருவ வயதில் மீசை அரும்பும் காலத்தில் குளப்படி மறந்தாய் குறும்புகள் துறந்தாய் கூடிக் குலாவும் கொள்கை மறந்தாய் தாய் மண் விட்டோடி அடைக்கலம் தேட மறந்தாய் அகதியாகி பீ ஆர் வாங்கி அழகான பெண்ணெடுக்க மறந்தாய் காரும் வீடும் வேண்டாத சகவாசமும் களிம்பும் கழுத்தோடு சைக்கிள் செயினும் பியரும் கானும் பப்பும் பீசாவும் இவை அனைத்தும் மறந்தாய் நீ அறிந்ததெல்லாம் தலைவன் மொழியும் தாயக விடுதலையும் விடுதலையின் தேவையும் தர்மமும்...! அந்த வயதில் இவ்வளவும் விளங்குமா... சாத்தியமா... வினவுகின்றார் சிலர் அவருக்கு சாட்சியாயும் நீயே....! நிச்சயம்... தலைவன் பாசறையில் பறவைக்கும் புரியும் தாய் மண்ணின் விடுதலையின் பெறுமதி....! பார்.... நீ பயிற்சிக்காய் ஏகையில் கத்தித் திரிந்த கூடித் திரிந்த வரப்போரக் கரிக்குருவி இத்தனை கொடூரங்கள் கண்டும் அண்டை நாட்டிலா தங்சமடைந்தது..???! அழிந்த கூடுகள் செம்மையாக்கி சீராக வாழவில்லை...!!!!! அதுக்கு ஆசை நீ மிதித்த மண்ணோடு உறவாட.... ஐந்தறிவென்றாலும் நன்றி இருக்கு தனக்காய் வாழ்ந்தவனுக்காய் தான் வாழ....! மண்ணிற்காய் மக்களுக்காய் எத்தனை மருத்துவர்கள் எத்தனை இஞ்சினியர்கள் எத்தனை எக்கவுண்டன்கள் கையில் பட்டமில்லை மனதோடு கனவுகள் சுமந்து.... தாய் மண் மானம் காக்க களத்தோடு கருவி எடுத்து ஆக்கிரமிப்பின் விளைவறிந்து வினை அறிந்து எதிரி தம் பாசறை கலங்கடித்து கரும்புலியாய் கடற்புலியாய் தரைப்புலியாய் வான் புலியாய் வீறுகொண்டு பாய்ந்திருப்பர்....! அவர்கள் மண்ணின் மைந்தர்கள் மாவீரரான வீரத்தாய்ப் புதல்வர்கள்...! வீர வசனம் பேசி எட்ட நின்று கூத்தடிக்கும் கூட்டமல்ல களத்தோடு கூடி நின்று மரணத்தால் கதை எழுதிய காவியங்கள்...! உங்கள் இலட்சியம் சுமக்க தாய் மண் சுமப்பாள் இன்னும் ஆயிரம் ஆயிரம் வீரர்கள் உங்களைப் போலவே தீரத்துடன்....! உங்கள்... வீர இலட்சியம் நிறைவேறும் உறங்குங்கள் கண்மணிகளே நான்.... வீர தாலாட்டுப் பாட வேண்டும் இன்றேல் நாவொடிந்து வீழ்ந்திடுவேன்....! இதைப்பற்றி மேலும் ஆராயவென மற்றைய கவிதைகளை வாசித்தேன். இன்னொரு ஆக்கம் எங்கோ வாசித்த நினைவு என்று தொடர்ந்தால் என்னால் எழுதப்பட்ட ஆக்கமும் ஒன்று. முதலாவது வரியை நீக்கிவிட்டு ஏனையவற்றை இணைத்திருக்கிறார்கள். ஒருவருடைய ஆக்கத்தை இணைப்பதில் தவறில்லை இணைப்பதெனில் முழுமையாக அவர்களது பெயருடன் இணைக்கலாம் அல்லவா?? இதனால் அசலாக எழுதியவர்கள் தான் இவற்றை பிரதிசெய்ததாக போய்விடும் அல்லவா?? http://www.orupaper.com/issue35/pages_K__37.pdf மாவீரராய் நம் முன்னே... மறவர்கள் இவர்கள்.. மனிதர்களாய் வாழ்ந்து காட்டிய... மரணத்தால் மரணிக்க முடியாத மானிடங்கள் இவர்கள்.... ! தமிழனாய் வாழ்ந்து.. தமிழிற்காய் வாழ்ந்து.. தமிழற்காய் தங்களை அற்பணித்த... தன்னலமற்ற மனிதர்கள்...! மானமிழந்து மற்றவர்க்கு மணிடியிட மாட்டோம் என்று.. நஞ்சினை நெஞ்சினில் சுமந்து.. சாவினில் வரலாறு படைக்கும்... சாதனையாளர்கள் இவர்கள்... ! புதிதாய் தமிழன் வரலாறு எழுதிட உதிரத்தை மையாய் வழங்கியவர் சுதந்திரத்திற்காய் தம் உயிரை வழங்கியவர் நம் மனக்கண் முன்னே மாவீரர் என்ற நாமம் கொண்டு வாழ்ந்திடும் காவலர்கள் இவர்கள்...........! http://tamilini.blogspot.com/2004_10_01_ta...ni_archive.html மாவீரர் பற்றிய கவிதைகள் உள்வாங்கப்பட்டது மகிழ்ச்சி. அதனால் விட்டுவிடும். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (கொப்பிறையிட்ஸ்)
- Mathan - 11-28-2005 பல பத்திரிகைகள் இணையத்தளங்களில் இப்படி கவிதைகள் கட்டுரைகள் களவாடப்படுவதை அல்லது வரிகள் கருப்பொருள்கள் உருவப்படுவதை கவனித்துள்ளேன். கவிதைகள் கட்டுரைகளை மீள பிரசுரிப்பதிலோ அல்லது பிரதி பண்ணுவதிலோ தவறில்லை, ஆனால் மறக்காமல் ஆக்கத்தை உருவாக்கியவரின் பெயரினை குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிடாமல் விடும் போது அசல் எது நகல் என்று தெரியாமல் போகின்றது. அது தவிர பத்திரிகைகளில் வெளியிடும் போது பிரசுரித்துள்ளோம் என்று ஒரு வரியாவது படைப்பாளிக்கு எழுதலாம். செய்வார்களா :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- KULAKADDAN - 11-28-2005 <b>இவ்வளவு நாளும் பேர போட்டு திருடினாங்கள். இப்ப வேற பேர போட்டா??? இதைப்பற்றி விளக்கம் கேட்கலாமே அவர்களிடம். அத்துடன் வலைப்பதிவில் இதைப்பற்றி ஒரு கருத்தை எழுதலாமே</b>
- tamilini - 11-29-2005 இணைத்தது பற்றி எந்த தகவலும் எனக்கு வரவில்லை (நம்மட ஆக்கம் என்று அவைக்கு தெரியுமோ தெரியாது) பெயர்கள் மாறி அனுப்பப்பட்டுள்ளன கடந்தவருடம் எழுதியது இந்த வருடம் போட்டிருக்கிறாங்க. இந்த வருசம் எழுதினது அடுத்த வருசம் வருமோ என்னவோ..?? சரி போகட்டும் ஆக்கத்தின் பயன் அடையப்பெறுவதில் மகிழ்ச்சியே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 11-29-2005 இருப்பினும் இது யாழ்களத்துக்கும், அந்தகவிஞருக்கும் சொந்தமானது, இதை எப்படி அனுமதிப்புது? - தூயவன் - 11-29-2005 அதை தம் பெயருக்கு மாற்றம் செய்து பெருமை தேடுபவர்களை அடையாளப்படுத்தும் போது கட்டாயம் கேலிக்குரியவர் ஆவார்கள். எனவே சம்பந்தப்பட்ட பொறுப்பாளரிடம் இது பற்றி அறிவித்தாகவேண்டும். - sathiri - 11-29-2005 அடபாவிங்களா? இப்பிடியும் நடக்கிறதா??யாழில் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு பேப்பர் சம்பந்தபட்டவர்கள் கவனித்தால் நல்லது - Mathan - 11-29-2005 KULAKADDAN Wrote:<b>இவ்வளவு நாளும் பேர போட்டு திருடினாங்கள். இப்ப வேற பேர போட்டா??? பொதுவாக பத்திரிகைகள் பெயருடன் ஆக்கங்களை அப்படியே பிரசுரிப்பதை கவனித்துள்ளேன். இதில் சில வரிகளும் மாற்றம் பெற்று எழுதியவர் பெயரும் வேறாக இருப்பதாக தமிழினி குறிப்பிட்டிருப்பதால் தன்னுடைய பெயரில் வேறு யாரும் அவர்களுக்கு அனுப்பியிருக்கவும் சாத்தியம் உண்டு, எது எப்படியோ இதனை களம் பார்க்கும் ஒரு பேப்பருடன் தொடர்புடையவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது. - sOliyAn - 11-29-2005 Quote:ஒரு வருடத்துள் களவாடப்படும் உரிமைகள். கடந்த ஒரு பேப்பரில் ஒரு கவிதை மாவீரர் பற்றிய கவிதை வாசித்தேன். இதை எங்கையோ வாசிச்ச நினைவு என்று தேடினேன். கடைசியில் கண்டு பிடித்தேன். யாழ் களத்தில் குருவிகள் போன வருட மாவீரர் நாளை ஒட்டி எழுதிய கவிதையை ரஞ்சன் என்பவர் பெயரில் எழுதப்பட்ட வரிகளின் ஒழுங்குகளை மாற்றி அதை அப்படியே போட்டிருக்கிறார்கள்.??சிலவேளை.. ரஞ்சன்தான் குருவிகளோ?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-29-2005 Quote:பொதுவாக பத்திரிகைகள் பெயருடன் ஆக்கங்களை அப்படியே பிரசுரிப்பதை கவனித்துள்ளேன். இதில் சில வரிகளும் மாற்றம் பெற்று எழுதியவர் பெயரும் வேறாக இருப்பதாக தமிழினி குறிப்பிட்டிருப்பதால் தன்னுடைய பெயரில் வேறு யாரும் அவர்களுக்கு அனுப்பியிருக்கவும் சாத்தியம் உண்டு, எது எப்படியோ இதனை களம் பார்க்கும் ஒரு பேப்பருடன் தொடர்புடையவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது. வரிகளைமாற்றவில்லை வரிகள் வந்த ஒழுங்குகளை மாற்றியிருக்கிறார்கள். அத்தோடு பெயரையம். நான் நினைக்கிறேன். யாரோ சுட்டு தங்கள் வேலையைக்காட்டி விட்டு அனுப்பியிருக்கிறார்கள்போல. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-29-2005 Quote:சிலவேளை.. ரஞ்சன்தான் குருவிகளோ?! குருவிக்கு றஞ்சன் என்ற பெயர் இருக்கு என்று எந்தப்புலனாய்வும் சொல்லவில்லையே.. இனிக்குருவி சொன்னாத்தான் உண்டு. அனா தமிழினிக்கு தமிழன் என்ற பெயர் இருந்த நினைவில்லை.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 11-29-2005 sOliyAn Wrote:Quote:ஒரு வருடத்துள் களவாடப்படும் உரிமைகள். கடந்த ஒரு பேப்பரில் ஒரு கவிதை மாவீரர் பற்றிய கவிதை வாசித்தேன். இதை எங்கையோ வாசிச்ச நினைவு என்று தேடினேன். கடைசியில் கண்டு பிடித்தேன். யாழ் களத்தில் குருவிகள் போன வருட மாவீரர் நாளை ஒட்டி எழுதிய கவிதையை ரஞ்சன் என்பவர் பெயரில் எழுதப்பட்ட வரிகளின் ஒழுங்குகளை மாற்றி அதை அப்படியே போட்டிருக்கிறார்கள்.??சிலவேளை.. ரஞ்சன்தான் குருவிகளோ?! <!--emo& என்ன சோழியன் அண்ணா ரஞ்சன் தான் குருவிகள் என்று குண்டை தூக்கி போடுறீங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- AJeevan - 11-29-2005 sOliyAn Wrote:Quote:ஒரு வருடத்துள் களவாடப்படும் உரிமைகள். கடந்த ஒரு பேப்பரில் ஒரு கவிதை மாவீரர் பற்றிய கவிதை வாசித்தேன். இதை எங்கையோ வாசிச்ச நினைவு என்று தேடினேன். கடைசியில் கண்டு பிடித்தேன். யாழ் களத்தில் குருவிகள் போன வருட மாவீரர் நாளை ஒட்டி எழுதிய கவிதையை ரஞ்சன் என்பவர் பெயரில் எழுதப்பட்ட வரிகளின் ஒழுங்குகளை மாற்றி அதை அப்படியே போட்டிருக்கிறார்கள்.??சிலவேளை.. ரஞ்சன்தான் குருவிகளோ?! <!--emo& குருவிகள் தான் சொல்லட்டும் எது உண்மையென்று? - shanmuhi - 11-29-2005 குருவிகள் ரஞ்சனாக இருக்கமுடியாது என்று தான் நினைக்கிறேன். லண்டலில் தான் கணக்கபேர் ரஞ்சன் என்று இருக்கிறார்கள். எதற்கும் குருவிகள் வரட்டும். உண்மை புரியும். - sri - 11-29-2005 sOliyAn Wrote:Quote:ஒரு வருடத்துள் களவாடப்படும் உரிமைகள். கடந்த ஒரு பேப்பரில் ஒரு கவிதை மாவீரர் பற்றிய கவிதை வாசித்தேன். இதை எங்கையோ வாசிச்ச நினைவு என்று தேடினேன். கடைசியில் கண்டு பிடித்தேன். யாழ் களத்தில் குருவிகள் போன வருட மாவீரர் நாளை ஒட்டி எழுதிய கவிதையை ரஞ்சன் என்பவர் பெயரில் எழுதப்பட்ட வரிகளின் ஒழுங்குகளை மாற்றி அதை அப்படியே போட்டிருக்கிறார்கள்.??சிலவேளை.. ரஞ்சன்தான் குருவிகளோ?! <!--emo& குருவிகள் தான் ரஞ்சன் என்றால் கவிதையின் வரிகளின் ஒழுங்குகளை மாற்றாமல் அதை அப்படியே போட்டிருப்பாரே. ஆகவே குருவிகள் ரஞ்சனாக இருக்கமுடியாது. - kuruvikal - 11-29-2005 குருவிகள் எப்போதும் ரஞ்சன் அல்ல...! குறித்த வரிகள் எங்கள் கற்பனையில் பிறந்த நிஜங்களின் பிரதிபலிப்புக்கள்..! கருத்து எவ்வடிவத்திலும் எவராலும் எடுத்துச் சொல்லப்படுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை..! இருந்தாலும் மூலத்தைக் குறிப்பிடுதல் சிறப்பு நாகரிகம் என்று கருதுகின்றோம்..! நன்றி - குருவிகள்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 11-29-2005 விசாரித்து பாத்ததில் ஒரு பேப்பரில் தவறு இல்லை அதை றஞ்சன் (நீர்வேலி . ஏழாலை) இங்கிலாந்தில் வசிக்கிறார்என்பவர் தான் எழுதியதாக ஒரு பேப்பருக்கு அனுப்பியிருக்கிறார் இவர் ஒரு குளறு படியான ஆள் பழைய சங்கமத்துடன் தொடர்புள்ளவர் என்று தெரிய வந்துள்ளது அதுமட்டுமல்ல தான் எழுதியதாக்பலருக்கும் மின்னஞ்சல் செய்தும் இருக்கிறார் இனி மேலாவது ஒரு பேப்பர் இப்படியானவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது - shanthy - 11-30-2005 ஒரு பேப்பர் ஆசிரியர் குழுவினருக்கு இக்கவிதையானது தொலைநகலில் சென்றடைந்தது. அதுவும் இக்கவிதைக்கு உரியவராகத் தன்னை அடையாளப்படுத்தி ரஞ்சன் என்பவர் அனுப்பியிருந்தார். அது தனது கவிதையெனச் சொன்னார். பின்னர் தனது அக்கா முறையான ஒருவரின் கவிதையென்றும் சொல்லியிருக்கிறார். இக்கவிதைக்கான உரிமம் இத்தகையளவு திருட்டாகும் என ஒரு பேப்பர் ஆசிரியர் குழு சந்தேகித்திருக்க வாய்ப்பில்லாதபடி ரஞ்சன் தானே தொடர்பு கொண்டு இக்கவிதையை அனுப்பியிருக்கிறார். இத்தகைய துணிச்சல் யாருக்கும் வராது என நினைத்திருக்கலாம் ஒருபேப்பர் ஆசிரியர் குழு. ஆனால் இதை அனுப்பியவரின் தவறினை பத்திரிகை மீதான சேறுவாருதலாக யாரும் து}ற்றாது இருப்பது நல்லது. துணிவுடன் சுவையுடன் ஒரு பத்திரிகையை நடாத்துவதும் வாசகர்களிடம் சேர்ப்பிப்பதும் என்பது பெரும் சிக்கலுக்கு உரியது. அதுவும் புலம்பெயர் சுூழலில் ஒரு ஆக்கத்தை எழுதுவதற்கே நேரம் ஓதுக்கி எழுத வேண்டிய இடத்தில் ஒரு பத்திரிகையை வெளிக்கொணர்வது என்பது எத்தகைய சிரமம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரையும் கவர்ந்துவிடும் திறனுடன் வெளிவரும் ஒருபேப்பரின் வளர்ச்சிக்கு உதவுவது இன்னும் அதன் வளர்ச்சிக்கு உதவயாக இருக்கும். யாரோ ஒருவரின் தவறுக்காக பத்திரிகையின் தரத்தை அதன் நிர்வாகத்தை குற்றம் கூறுவது சரியல்ல. இது என் கருத்து. இனி உங்கள் பார்வையில் வரும் கருத்துக்களையும் தெரிவியுங்கள். - shanthy - 11-30-2005 sOliyAn Wrote:Quote:ஒரு வருடத்துள் களவாடப்படும் உரிமைகள். கடந்த ஒரு பேப்பரில் ஒரு கவிதை மாவீரர் பற்றிய கவிதை வாசித்தேன். இதை எங்கையோ வாசிச்ச நினைவு என்று தேடினேன். கடைசியில் கண்டு பிடித்தேன். யாழ் களத்தில் குருவிகள் போன வருட மாவீரர் நாளை ஒட்டி எழுதிய கவிதையை ரஞ்சன் என்பவர் பெயரில் எழுதப்பட்ட வரிகளின் ஒழுங்குகளை மாற்றி அதை அப்படியே போட்டிருக்கிறார்கள்.??சிலவேளை.. ரஞ்சன்தான் குருவிகளோ?! <!--emo& குருவிகள் பற்றிய சோழியனின் ஒப்பீடு தவறு. குருவிகள் வேறு. ரஞ்சன் வேறு. - tamilini - 11-30-2005 ம் நான் கண்டதை ஆதாரங்களோடு நிருபித்தேன். அந்த றஞ்சன் என்பவர் ஒரு பேப்பரில் மட்டும் அல்ல புதினம் என்று லண்டனில் இருந்து வரும் வேறு ஒரு பேப்பரிலும் இந்தக்கவிதை யோடு வேறொரு கவிதையை அனுப்பியிருக்கிறார். அவற்றை இங்கு சுட்டிக்காட்டுவது தான் எங்கள் நோக்கம் ஒரு பேப்பரில் தவறு காண்பது அல்ல. பேப்பரில் போடும் போது அனுப்புபவர்கள் யார் எழுதியவர்கள் யார் என்று அடிமுடி தேடிக்கொண்டிருக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். அதற்காக இப்படியான தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா..?? Quote:அது தனது கவிதையெனச் சொன்னார். பின்னர் தனது அக்கா முறையான ஒருவரின் கவிதையென்றும் சொல்லியிருக்கிறார். இக்கவிதைக்கான உரிமம் இத்தகையளவு திருட்டாகும் என ஒரு பேப்பர் ஆசிரியர் குழு சந்தேகித்திருக்க வாய்ப்பில்லாதபடி ரஞ்சன் தானே தொடர்பு கொண்டு இக்கவிதையை அனுப்பியிருக்கிறார். முதல் தனது ஆக்கம் என்றவர் பிறகு அக்காவின் ஆக்கம் என்றிருக்கார். சுட்டவருக்கே குழப்பமா..?? |