![]() |
|
வவுனியாவில் பெண்கள் உரிமை நிகழ்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வவுனியாவில் பெண்கள் உரிமை நிகழ்வு (/showthread.php?tid=2195) |
வவுனியாவில் பெண்கள் உரிமை நிகழ்வு - Mathan - 12-04-2005 வவுனியாவில் பெண்கள் உரிமை நிகழ்வு <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051203162312womenpro152.jpg' border='0' alt='user posted image'> வவுனியா, அனுராதபுரம், மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் இளைஞர் யுவதிகள் இன்று வவுனியாவில் ஒன்றுகூடி, பெண்களுக்கு எதிராக குடும்பங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பி, அவற்றை ஒழிப்பதற்கு உழைக்கப்போவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். மனிதச் சங்கிலி ஊர்வலம் ஒன்றையும் அவர்கள் நடத்தினார்கள். இலங்கையில் 60 வீதமான பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேறொரு பெண்ணைத் திருமணம் செய்தல், இளவயதுத் திருமணங்கள், பாலியல் ரீதியான வன்முறைகள் போன்ற பல்வேறு உளத்தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் மட்டுமன்றி உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் பெண்கள் குடும்பங்களில் ஆளாகின்றார்கள் என்று குடும்ப வன்முறைகளுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் திட்ட அலுவலர் திருமதி பத்மினி பாலச்சந்திரன் தெரிவித்தார். இந்த வன்முறைகளை ஒழிப்பதற்காக இலங்கை நாடாளுமன்றம் சட்டம் ஒன்றையும் கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய மட்டம் தொடக்கம் மாவட்ட மட்டம் வரையில் பல நிலைகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை உருவாக்குதல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியான மாற்றங்கள் மாவட்ட, கிராம மட்டங்களைச் சென்றடைவதற்கு நடத்தையிலும், மனப்பான்மையிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ள காரணத்தினால், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துநர்கள் மூலமாகததாக்கமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார். BBC Tamil |