Yarl Forum
கலிபோர்னியாவின் சக்கிரமன்டோ பகுதியில் கன்னிமேரியின் சிலையிலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: கலிபோர்னியாவின் சக்கிரமன்டோ பகுதியில் கன்னிமேரியின் சிலையிலி (/showthread.php?tid=2167)

Pages: 1 2

கலிபோர்னியாவின் சக்கிரமன்டோ பகுதியில் கன்னிமேரியின் சிலையிலி - கீதா - 12-06-2005

<img src='http://img469.imageshack.us/img469/3888/sneha35ys.jpg' border='0' alt='user posted image'>

கலிபோர்னியாவின் சக்கிரமன்டோ பகுதியில் கன்னிமேரியின் சிலையிலிருந்து இரத்தம்
கலிபோர்னியாவின் சக்கிரமன்டோ பகுதியில் கன்னிமேரியின் சிலையிலிருந்து இரத்தம் என கருதப்படும் செந்நிறப் பதார்த்த மொன்று வடிவதை இங்கு காணலாம். கன்னி மேரியின் முகத்தில் காணப்படும் கறுப்புக் கோடுகளை கண்ணீர் என கருதுவது நீண்ட காலமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
http://www.vaddakkachchi.com/viduppu/index.php

- Mathan - 12-06-2005

தகவலுக்கு நன்றி கீதா. செய்திகள் கிடைத்த இடத்தையும் குறிப்பிட்டால் நல்லது

- தூயவன் - 12-07-2005

யாழ்பாணத்தில 95ம் ஆண்டு காலப்பகுதியில் பிள்ளையார் பால் குடிக்குது எண்டு சொல்லித் திரிந்தது போலவல்லவா கிடக்குது இது. :roll:

- shobana - 12-07-2005

தூயவன் Wrote:யாழ்பாணத்தில 95ம் ஆண்டு காலப்பகுதியில் பிள்ளையார் பால் குடிக்குது எண்டு சொல்லித் திரிந்தது போலவல்லவா கிடக்குது இது. :roll:

தகவலைப்பார்த்தால் அப்படித்தான் இருக்கு யாழ்ப்பாணப்பிள்ளையார்கள் பால் குடித்த கதை போல்
ஆனால் இந்த செய்தி ஐரோப்பிய தொலைக்காட்சிகளிலும் (தமிழ் தொலைக்காட்சி அல்ல) போட்டார்கள் மதன் நான் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும்போது பார்த்தேன்

- கீதா - 12-07-2005

சில சிலைகளுக்கு ஆண்டவன் உயிர் கொடுக்கின்றர் போல இருக்கு எல்லாமே புதுமையாக இருக்கு இல்லையா

- vasisutha - 12-08-2005

shobana Wrote:
தூயவன் Wrote:யாழ்பாணத்தில 95ம் ஆண்டு காலப்பகுதியில் பிள்ளையார் பால் குடிக்குது எண்டு சொல்லித் திரிந்தது போலவல்லவா கிடக்குது இது. :roll:

தகவலைப்பார்த்தால் அப்படித்தான் இருக்கு யாழ்ப்பாணப்பிள்ளையார்கள் பால் குடித்த கதை போல்
<b>ஆனால் இந்த செய்தி ஐரோப்பிய தொலைக்காட்சிகளிலும் (தமிழ் தொலைக்காட்சி அல்ல) போட்டார்கள் </b>மதன் நான் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும்போது பார்த்தேன்

<b>பிள்ளையார் பால் குடித்ததை BBC தொலைக்காட்சியில்
காட்டினார்கள்...</b>

- sOliyAn - 12-08-2005

யேர்மனி தாய்லாந்து கனடா என்று பிள்ளையார் ஒரே காலகட்டத்தில் பால் குடித்த செய்திஇ யாழ்ப்பாணத்துக்குள் அடங்கிவிட்டதா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- தூயவன் - 12-08-2005

sOliyAn Wrote:யேர்மனி தாய்லாந்து கனடா என்று பிள்ளையார் ஒரே காலகட்டத்தில் பால் குடித்த செய்திஇ யாழ்ப்பாணத்துக்குள் அடங்கிவிட்டதா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நான் அப்போது யாழ்பாணத்திலில் இருந்தால் அப்படி அந்த எண்ணத்தில் போட்டேன். மற்றும் படி எங்கே குடித்தார் அதிகமாக என்றெல்லாம் போட்டிக்கு நான் வரவில்லையப்பா! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shobana - 12-08-2005

தூயவன் Wrote:

ஆமாம் நானும் பிள்ளையார் பால் குடிக்கும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தேன் அதனால் தான் தெரியாது BBC காட்டினார்கள் என்று

- shobana - 12-08-2005

கீதா Wrote:சில சிலைகளுக்கு ஆண்டவன் உயிர் கொடுக்கின்றர் போல இருக்கு எல்லாமே புதுமையாக இருக்கு இல்லையா

கீதா இது உங்களுக்கே ரொம்ப ஓவராகத்தெரியலயா அப்படி என்றால் ஆண்டவன் சிலைகளுக்கு கொடுக்கவேண்டாம் உயிர் களத்தில் நிக்கும் நம்ம போராளிகளுக்கு கொடுக்க சொல்லுங்கோ

- MUGATHTHAR - 12-08-2005

sOliyAn Wrote:யேர்மனி தாய்லாந்து கனடா என்று பிள்ளையார் ஒரே காலகட்டத்தில் பால் குடித்த செய்திஇ யாழ்ப்பாணத்துக்குள் அடங்கிவிட்டதா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்ப குடிச்ச மனுசன் இப்ப ஏன் குடிக்கிதில்லை (நான் குடுத்துப் பாக்கேலை கேக்கிறன்) சனம் கண்ட கண்ட பாலை எல்லாம் குடுத்து மனுசனுக்கு வெறுத்துப் போச்சுதோ தெரியேலை என்ன..........

- shobana - 12-08-2005

MUGATHTHAR Wrote:

அப்பு என்ன எப்ப பாத்தாலும் நீங்க குடிக்கிறது தான் நினைவில நிக்கனுமா?? அது இல்ல அப்பு பிள்ளையார் குடிச்சது அவர் குடிச்சது பசும்பால் என நினைக்கிறன் யாருக்காவது பிள்ளையாரோட நேரடித்தொடர்பு இருந்தால் கேட்டு சொல்லுங்கோ

- sOliyAn - 12-09-2005

அப்ப குடிச்சது ஏன் இப்ப குடிக்குதில்லை.. இது நல்ல கேள்வி.. ஜேர்மனி ஹேர்ண நகருக்கு சென்று நானும் பார்த்தேன்.. பால் குறைந்து கொண்டே போனது.. ஆனால் பலரும் கல்லான சிலை.. அதனால் கல்லு உறிஞ்சுகிறது என்று தமது மோதாவித்தனத்தை பிரசங்கித்தார்கள். அதே கல்லு இப்ப ஏன் உறிஞ்சவில்லை என்பதற்கு விடைதர அவர்களின் மேதாவித்தனம் இடம் தருமோ என்பதும் தெரியவில்லை.. ஆனால் ஒன்று.. கடவுள் நேரில் வந்து 'நான்தான் கடவுள்' என்றாலும்.. 'ஐடென்ரிரிக் காட்' கேட்கும் நிலையில்தான் பலர்.. அல்லது வெள்ளைக்காரன் யாராவது அவர் கடவுள்தான் என உறுதிப்படுத்தவேணும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- kurukaalapoovan - 12-09-2005

இன்று எமது வாழ்வு முறையை எடுத்தால் வெள்ளைக்காரனின் பங்களிப்புத்தான் அதிகப்படியாக பெரும்பான்மையாக இருக்கு. மருத்துவம், பொருளாதாரம், ஆட்சி ஆதிகாரபரவலாக்கம், முகாமைத்துவம், நிர்வாகம் தொடர்பாடல், தொழில்நுட்பம், கல்வி பயிலும் முறைகள், போக்குவரத்து முறைகள். மிகு விடையங்கள் பலவில் கூட, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஒழுங்குகளைக் கூட அவர்களுடை நடைமுறைகளின் அசல் அல்லது தழுவியதாகவே இருக்கிறது.

இவ்வளவிலும் வெள்ளைக்காரன் உறுதிப்படுத்தினதை தானே ஏற்றுக்கொண்டுள்ளோம், உங்களின் அன்றாட வாழ்வில் எத்தனை வீதமான அம்சங்களை உங்கள் மூதாதையர் தந்துவிட்டதாக பங்களித்துள்ளதாக எண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்? மூடநம்பிக்கைகளிற்கு வெள்ளைக்காரனின் உறுதிப்படுத்தல் வேண்டாம் மிகுதி எல்லாத்திற்கும் அவர்கள் உறுதிப்படுத்திய முறையில் தான் வாழ்கை ஓடுகிறது.

எமக்கு என்று நாம் இன்னும் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடியது, மாற்றங்களை உள்வாங்க முடியாத மொழி, மருவி மறைந்து போகும் கலாச்சாரம்.

பிறகென்ன நக்கல் வேண்டிக்கிடக்கு கடவுள் நேர வந்தாலும் அடையாள அட்டை கேப்பீங்கள் அதையும் வெள்ளைக்காரன் பாத்து உறுதிப்படுத்த வேணும் எண்டு?

- கந்தப்பு - 12-09-2005

உப்பிடித்தன் கொழும்பிலை பூசாரி ஒருவர், குரங்கு மாதிரி ஆட சனம் ஆன்ச்சனேயர் (இலங்கைக்கு வந்த முதல் RAWஉளவாளி) வந்திட்டார் என்று திரியினம்.(இதனை நான் வேறு பகுதியிலும் எழுத்தினனான்)

- hari - 12-09-2005

sOliyAn Wrote:யேர்மனி தாய்லாந்து கனடா என்று பிள்ளையார் ஒரே காலகட்டத்தில் பால் குடித்த செய்திஇ யாழ்ப்பாணத்துக்குள் அடங்கிவிட்டதா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கொழும்பு பிள்ளையார் என்ன சளைச்சவரா? :evil: :evil: அவரும் 4,5 லீட்டர் மூச்சுவிடாமல் குடிச்சவர்

- அருவி - 12-09-2005

இலங்கையின் கொச்சிக்கடையிலும் மேரி மாதாவின் கண்ணிலிருந்து இரத்தம் வடிந்ததாக தொலைக்காட்சியிலெல்லாம் காட்டினார்கள், ஒரு 4 வருடங்கள் இருக்கும் (கொழும்பு கொச்சிக்கடையில்லை)

- hari - 12-09-2005

அவர் என்னென்றால் ஜாளியாக பால் குடிக்கிறார், மாரி அம்மா இரத்தக் கண்ணீர் வடிக்கிறா, என்ன நடக்குது உலகத்தில்? :roll: ஏன் இவர்கள் மக்களை சும்மா குழப்பினம்? :evil: இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்! :twisted:

- தூயவன் - 12-09-2005

மன்னா!
உன் ஆட்சியில் இப்படி கண்டிப்பதோடு நின்றுவிடலாமா? உன் ஆட்சியை உலகம் தப்பாக நினைக்கு முன்பு இதற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்! இல்லாவிட்டால் எதிரிகளுக்கு நல்ல வாய்ப்பாக போய்விடும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- hari - 12-09-2005

என்ன தூயவன் என்னை அடி வாங்க வைக்கிற திட்டமா? இப்படித்தான் ஒருக்கா கோயிலுக்கு போய் ஐயரின் கழுத்தை பார்த்து! என்ன சுவர்ணமாகல் புதுப் புது டிசைன் எல்லாம் கழுத்துல தொங்குது என்று சொன்னதுக்கே அடி வேண்டாத குறையாக வீடு வந்து சேர்ந்தனான், சதாரண ஐயரோட மோதியே அந்த நிலை என்றால் கடவுளோடு மோத முடியுமா?