![]() |
|
இங்கிலாந்து ராணி குடும்பத்திலும் மாமியார்-மருமகள் சண்டை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இங்கிலாந்து ராணி குடும்பத்திலும் மாமியார்-மருமகள் சண்டை (/showthread.php?tid=2168) |
இங்கிலாந்து ராணி குடும்பத்திலும் மாமியார்-மருமகள் சண்டை - கீதா - 12-06-2005 <img src='http://img189.imageshack.us/img189/5158/preover0tp.gif' border='0' alt='user posted image'> <span style='font-size:25pt;line-height:100%'>இங்கிலாந்து ராணி குடும்பத்திலும் மாமியார்-மருமகள் சண்டை இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மகன் இளவரசர் சார்லஸ் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலி கமீலாவை திருமணம் செய்து கொண்டார். அரச குடும்பத்தில் மருமகளாக சென்ற கமீலா மீது ராணி எலிசபெத்துக்கு இன்னும் பற்றுதல் ஏற்படவில்லை. சாதாரண குடும்பத்தை போலவே ராணி குடும்பத்திலும் மாமியார்- மருமகளுக்கு இடையே தகராறு ஆரம்பித்துவிட்டது. குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் கமீலாவை ராணி புறக்கணித்தார். ராணியின் குடும்பத்தினரின் நன்மைக்காக முக்கிய தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடப்பது வழக்கம். ராணி, அவரது கணவர், இளவரசர் உள்பட ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டு அவர்களுக்கு கடவுள் அருள் புரியட்டும் என்று பிரார்த்திப்பது வழக்கம். ஆனால் இந்த முறை நடக்க இருக்கும் பிரார்த்தனையில் கமீலாவின் பெயர் இடம் பெறவில்லை. இது பாராளுமன்றத்திலும் பிரச்சினையை கிளப்பி உள்ளது. ஆனால் ராணி இன்னும் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. கார் விபத்தில் மரணம் அடைந்த டயானா முன்பு இளவரசரை திருமணம் செய்த உடனேயே டயானாவின் பெயர் இந்த பிரார்த்தனை பட்டியலில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது</span> http://www.vaddakkachchi.com/viduppu/index.php |