Yarl Forum
மன்னார் பள்ளிமுனை 5 புலிகள் கைது: ஒருவர் சயனைட் அருந்தினார்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மன்னார் பள்ளிமுனை 5 புலிகள் கைது: ஒருவர் சயனைட் அருந்தினார்! (/showthread.php?tid=2165)



மன்னார் பள்ளிமுனை 5 புலிகள் கைது: ஒருவர் சயனைட் அருந்தினார்! - Vaanampaadi - 12-06-2005

மன்னார் பள்ளிமுனையில் 5 புலிகள் கைது: ஒருவர் சயனைட் அருந்தினார்!
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 23:57 ஈழம்] [ம.சேரமான்]
மன்னார் பள்ளிமுனை கடற்பிரதேசத்தில் பயணம் செய்த 5 தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா கடற்படை கைது செய்துள்ளதாக தமிழ்நெற் இணைய தளம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழ்நெற் இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தி:

மன்னார் பள்ளிமுனை கடற்பிரதேசத்தில் பைபர் இழைப் படகில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 விடுதலைப் புலி போராளிகள் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரில் அரசியல் துறை போராளியான குணாரத்னம் புவனேசுவரி என்ற உதயா(வயது 20) சயனைட் அருந்தியதையடுத்து மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் வவுனியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆறுமுகம் ஜெயந்தன்(வயது 23), கந்தசாமி பகீரதன்(வயது 22), அந்தோணி சகாயநாதன்(வயது 18), சிவநாதஞானம் சஞ்சினி என்ற மதி(வயது 18) ஆகியோர் கைது செய்யப்பட்ட போராளிகள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் மாலை 5.30 மணி அளவில் மன்னார் சிறிலங்கா காவல்துறையிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். மன்னார் காவல்நிலையத்தில் 4 போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போராளிகள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் கைக் குண்டுகள் இருந்ததாகவும் மன்னார் காவல்துறையினர் தெரிவித்தனர் என்று தமிழ்நெற் செய்தி தெரிவிக்கிறது.


puthinam