Yarl Forum
நீர்வேலி படுகொலையில் தனது பங்கை ஒத்துக்கொள்கிறது ஈ.பி.டி.பி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நீர்வேலி படுகொலையில் தனது பங்கை ஒத்துக்கொள்கிறது ஈ.பி.டி.பி (/showthread.php?tid=2162)



நீர்வேலி படுகொலையில் தனது பங்கை ஒத்துக்கொள்கிறது ஈ.பி.டி.பி - sri - 12-07-2005

நீர்வேலியில் அண்மையில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.டி.பி.யே ஈடுபட்டது என்பதை அப்பகுதி மக்களின் தகவல்களின் அடிப்படையிலும், சம்பவம் நடந்த பின்னர் குற்றவாளிகள் தப்பிச் சென்ற திசையை நோக்கியும் அறிய முடிகிறது.


இந்நிலையில் இன்று ஈ.பி.டி.பி.யால் வெளிநாட்டுத் தூதரகங்களிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையொன்று இது பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

கிழக்கில் முஸ்லிம்களின் படுகொலைகளின் பின்னால் அரசே இருப்பது ஆதாரபூர்வமாக அம்பலமான நிலையில் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில், கிழக்கில் முஸ்லிம்களின் கொலைகளை புலிகளே புரிந்ததாகக் குறிப்பிட்டுள்ள ஈ.பி.டி.பி. இதன் மூலம் புலிகள், இனங்களிற்கிடையேயான வன்முறையைத் தோற்றுவிக்க முனைவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்தோடு, யாழ் குடாநாட்டில் இராணுவத்தினர் மீதான இரண்டு கிளைமோர்த் தாக்குதல்களையும் விடுதலைப் புலிகளே நடத்தியுள்ளனர் என்றும் இராணுவத்தினரைச் சினமூட்டிப் போருக்குள் இழுக்கும் செயற்பாட்டைப் புலிகள் மேற்கொண்டுள்ளார்கள் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சிறிலங்கா இராணுவத்தினர், தம்மீதான தாக்குதல்களிற்கு நீர்வேலிப் படுகொலைகளே காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்திருந்த போதும், மேற்படி விவசாயிகளின் கொலைகள் குறித்த விபரங்களை ஈ.பி.டி.பி.யின் அறிக்கை முற்றாகத் தவிர்த்திருந்தது. இதுவே அவர்களின் இச்சம்பவங்களினுடனான தொடர்பை முற்றாக நிரூபித்து நிற்கிறது.

அரசாங்கத்தின் பரிவில் வாழ்க்கை நடத்தும் ஈ.பி.டி.பி. தங்களிற்குத் தேவையான போதெல்லாம் இவ்வாறான நாசகாரச் செயல்களைச் செய்வதில் வழமையாக ஈடுபடுபவர்கள். தற்போது மகிந்தவின் அமைச்சரவைக் குறைப்பில் டக்ளசுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருக்கவே இவர்கள் யாழ். நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வாறான நெருக்கடியேற்பட்டால் தங்களின் தேவை இராணுவத்திற்கு இன்றியமையாதது என்பதால் தங்களைத் தொடர்ந்தும் முக்கியத்தும் தந்து அரசு வைத்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகும்.

அரச தலைவர் தேர்தல் காலத்திலும், தேர்தலைப் புறக்கணிக்குமாறு புலிகள் கோருவதான துண்டுப்பிரசுரமொன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை என்ற பெயரில் விநியோகித்துக் கொண்டிருந்த நபர்களைப் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

அவர்களை விசாரித்த போது அவர்கள் ஈ.பி.டி.பி. குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேற்படி நால்வரும் தற்போதும் விளக்கமறியலில் உள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பதட்டத்தை ஏற்படுத்தி தங்களின் முக்கியத்துவத்தைப் பேணும் ஈ.பி.டி.பி.யின் மேற்படி அறிக்கையில் சர்வதேச நாடுகள் புலிகளை தடைசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டின் மீதான முற்றுகை ஓயாத அலைகள் - 04-ல் இறுக்கப்பட்ட போது, படைகளை முந்திக் கொண்டு தமது மூட்டை முடிச்சுக்களுடன் ஓடுவதற்குத் தயாராக நின்றவர்களையே தற்போதும் நம்பியிருக்க வேண்டிய துர்ப்பக்கிய நிலையில் சிறிலங்கா அரசும் அதன் படைகளும் தற்போதும் இருப்பதையே மேற்படி சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

புதினம்