![]() |
|
ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் புதிய கடற்படைத்தளம் அமைக்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் புதிய கடற்படைத்தளம் அமைக்க (/showthread.php?tid=2124) |
ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் புதிய கடற்படைத்தளம் அமைக்க - ஈழமகன் - 12-09-2005 ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் புதிய கடற்படைத்தளம் அமைக்க முடிவு- 5000 முஸ்லீம் குடும்பங்களை வெளியேற்ற முடிவு. ஜ சனிக்கிழமைஇ 10 டிசெம்பர் 2005 ஸ ஜ செனிவிரட்ண ஸ மட்டக்களப்பு ஏறாவுூர் சதாம்குசைன் கிராமத்தில் சும்மார் 5000 முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த 25000 பேரை வெளியேற்றி பாரிய நிலப்பரப்பில் ஜப்பான் மற்று இந்தியாவின் உதவியுடன் சிறீலங்கா கடற்படையினரின் கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. புதிய படை முகாம்களை போர் நிறுத்த உடன்படிக்கை கட்டுப்படுத்துகின்ற போதும் தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த புதிய தளத்தை நிறுவதற்கு சிறீலங்கா கடற்படையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த கடற்படைத்தளம் நிறுவப்படும் பட்சத்தில் ஏறாவுூர் புன்னைக்குடாப் பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கண்காணிப்பில் இருந்து வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை தென்தமிழீழ முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு அருகில் காவல்கண்காணிப்பு நிலைகளை நிறுவதற்கு சிறிலங்கா காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிறீலங்கா பாதுகாப்பு படையினரின் இத்தகைய திட்டங்கள் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளை மேற்கொள்ளும் வகையிலேயே அமைகின்றது நன்றி - நிதர்சனம். - Anandasangaree - 12-09-2005 நல்ல விடயம் கிழக்கிலை முஸ்லீம்களின் கோட்டைக்குள் ஒரு கடற்படைத்தளம். இலகுவில் முஸ்லீம்களை கிழக்கில் இரந்து வெளியேற்ற சிங்கள அரசு செய்து பயனுள்ள ஒரு சதி. வாழ்க மகிந்த. இப்படி தந்திரமான நகர்வுகள் ஊடாக கிழக்கு மாகான முஸ்லீம்களை துரத்திவிட்டு கடற்படைதளம் அதனை தொடர்ந்து கடற்படையினருக்கு ஒரு விகாரை பின்னர் விகாரைக்கு இரண்டு துறவி பின்னர் துறவிக்கு இரண்டு வீடு பின்னர் துறவிகளுக்க ஒரு பிரித் ஓத ஒரு இரண்டு பிரிவேனா பின்னர் பிரிவேனாவை அண்டிய பகுதியில் சிங்கள கடற்படையினரின் குடும்பங்களின் கடியேற்றம். பின்னர் என்ன ஏறாவுூரை மட்டகளப்பவ இறாவுற என்று மாத்தினால் சரி. - தூயவன் - 12-10-2005 ஏற்கனவே மட்டக்களப்பு நகருக்குள் விமானப்படைத் தளம் கட்டுகின்றோம் என்று சொல்லி பல தமிழ் ஆக்களின் வீடுகளை ஆக்கிரமித்து போட்டார்கள். இப்ப கடற்படைத் தளமா? ஏற்கனவே ஒலுவில் துறைமுகம் என்று வேற அம்பாறையில் இருக்கு. அது போதாதா? - kurukaalapoovan - 12-10-2005 திருகோணமலைத் தளத்திற்கு வலுச்சேர்க கட்டீனமோ? http://www.sangam.org/taraki/articles/2005...egotiations.php |