Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
கேணல். கிட்டு மற்றும் அவருடன் மரணித்த வீரர்களுக்குமான நினைவு நாள் நிகழ்வுகளை இலண்டனில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.......
[size=18]<b> ..
.</b>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
இந்திய வல்லாதிக்க சதியால் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட அவருடன் மரணித்த வேங்கைகளுக்கு எமது வீரவணக்கம்....
அலைகடல் மீதில்
அழித்தது உமை..
அன்னியப்படைகள்..
அணிவகுக்கிறோம்
அண்ணல் வழியில்
அடிமையை ஒழிக்க
அழியும் ஒருநாள்
அடிமை சாசனம்
அன்று விடியும்
அன்னை தமிழீழம்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
<img src='http://img356.imageshack.us/img356/1401/kiddanna3bp.jpg' border='0' alt='user posted image'>
தகவல்: சங்கதியிடமிருந்து
[size=14] ' '
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
கிட்டண்ணா!
உன்னுடன் லண்டனில் உறவாடிய அந்த சில நாட்பொழுதுகள்... கற்பனைக்கெட்டாத ஆளுமை, தீர்க்கதரிசனம், தூரநோக்கு, ... அப்பழுக்கற்ற அன்பு/அரவணப்பு இழந்து பதின்மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதண்ணா! ஆனால் நீ புலத்திலிட்ட அந்த பலமான அத்திவாரம், இன்று தேசியத்திற்கான மலை போன்று அசைக்கமுடியாத தூண்களாக!
நீ, பிராந்திய அரக்கனின் கோரக்கரங்களுக்கு அகப்படாமல், உன்னை அழித்த செய்தி கேட்டு துடு துடித்தோம்! ஆனால் இன்று தேசியம் எனும் மாவிருட்சமாக ஈழத்தமிழினம்!
விண்ணுலகில் இருக்கும் எம் அன்புத் தளபதியே! உன் கனவு, இலட்சியம், தாகம் நிறைவேறப்போகும் நாள் வெகுதூரத்திலில்லை! இறுதி மானத்தமிழன் இப்பூவுலகில் வாழும்வரை, நீயும் அவர்களின் இதயங்களில் வாழுவாய்!
" "
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
லண்டனில் எப்போது எங்க நடக்கின்றது?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 53
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
கேணல். கிட்டு மற்றும் அவருடன் மரணித்த வீரர்களுக்கும் எமது வீரவணக்கம்
!!!
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
www.eelasongs.com இல் <b>"கேணல் கிட்டு:ஒரு காலத்தின் பதிவு"</b> என்ற நூலில் இருந்து சில பதிவுகள்/பகிர்வுகள் காணப்படுகிறது...
ஊரில் கைவசம் இருந்த அருமையான வரலாற்று நூலில் இதுவும் ஒன்று...
கேணல் கிட்டுவின் பன்முக ஆற்றல்கள் பற்றிய பன்முகப் பார்வைகள் ஒருங்கு சேர்ந்த அருமையான படைப்பு....
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>கேணல் கிட்டுவின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பனையோலை பொருள் கண்காட்சி </b>
[வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 15:55 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டுவின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கிளிநொச்சியில் பனையோலை உற்பத்தி பொருள் கண்காட்சி நடைபெற உள்ளது.
கிளிநொச்சி இரணமடுச் சந்தியில் எதிர்வரும் 16 ஆம் நாளன்று முற்பகல் 9.00 மணிக்கு இக்கண்காட்சி நடைபெறும்.
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
<b><i>தகவல் மூலம்- புதினம்.கொம்</i></b>
"
"
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்லஇ அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்
கேணல். கிட்டு மற்றும் அவருடன் மரணித்த ஒன்பது வீரர்களுக்கும் எமது வீரவணக்கம்
 [url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=8338&start=15][size=18]கேணல் கிட்டு...
<img src='http://img303.imageshack.us/img303/8357/kittu09zu.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img303.imageshack.us/img303/3972/kittu41ir.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img303.imageshack.us/img303/5962/kittu59gc.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img303.imageshack.us/img303/5481/kittu64cj.jpg' border='0' alt='user posted image'>
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>கேணல் கிட்டுவின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கனடாவில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது </b>
வங்கக்கடலிலே 1993ம் ஆண்டு இந்தியச் சதியினால் காவியமான கேணல் கிட்டு மற்றும் ஒன்பது வேங்கைகளின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.
ஆர்மேனியன் இளையோர் நிலையத்தில் நேற்று மாலை 6 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது.
கனடிய மற்றும் தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.
உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
பொங்குமாகடலில் ஓயாது எழகின்ற அலை போல்.....
நெஞ்சமெலாம் நினைவுகளின் ஓசை.
வங்கக்கடல் பிளந்து......
எங்கள் சூரியரைப் புதைத்த கொடுமையின்
ஆறாத ரணத்தை வருடி.. வருடி...
ஆற்றவைக்க முடியவில்லை.
நெஞசத்தைப் பிழிகின்ற நினைவுகளுக்கூடே
இறுதியாய் அவர் உரைத்த விடுதலையின் மந்திரம்...
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>கேணல் கிட்டு நினைவாக முத்தமிழ் கலையரங்கம் - 2006 </b>
இந்திய - சிறிலங்கா கூட்டுச் சதியினால் வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு நினைவு முத்தழிழ் கலையரங்கம் - 2006 இன்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
புலிகளின்குரல் அமலன் அரங்கில் காலை 10 மணிக்கு இச்சிறப்பு முத்தமிழ் கலையரங்கம் ஆரம்பமாகியது.
பொதுச்சுடரை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் ஏற்றிவைக்க, கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்துக்கான மலர்மாலையினை நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் கலைக்கோன் அணிவித்தார்.
தொடர்ந்து சங்கநாதம் கலைஞர்களின் முத்தமிழ் நடனம் வரவேற்பு நடனம் ஆகியன இடம்பெற்றன.
புலிகளின்குரல் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது.
அவர் தனதுரையில்,
விடுதலைப் புலிகள் எப்படி ஊடகங்களை வளர்த்தெடுத்தார்கள், பயன்படுத்தினார்கள், அதில் மூத்த தளபதி கேணல் கிட்டுவின் செயற்பாடுகள் என்பது பற்றியும் புலிகளின்குரலின் ஒலிபரப்புப்பணி, வானொலி மன்றங்களின் இயக்கம், முத்தமிழ் கலையரங்கங்கள் என்பன பற்றி விரிவாகக் கூறினார்.
வரவேற்புரையை புலிகளின்குரல் இசையமைப்பாளர் ப.சிறீவரதன் நிகழ்த்தினார்.
வானொலி மன்றங்களின் சார்பில் ஓய்வுபெற்ற உதவிக்கல்வி அதிகாரி க.சரவணபவன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து கேணல் கிட்டு சுற்றுக்கேடயத்தை 2005 ஆம் ஆண்டில் வென்ற மல்லாவி வானொலி மன்றத்திற்கு அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் வழங்கினார்.
மல்லாவி வானொலி மன்றத் தலைவர் சுபநேசன் கேணல் கிட்டு நினைவுக் கேடயத்தை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சிறப்புரையை தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் நிகழ்த்தினார்.
கேணல் கிட்டு நினைவு முத்தமிழ் கலையரங்கம் - 2006 நிகழ்ச்சிக்கு உறுதுணை வழங்கிய தமிழீழ வைப்பகங்களின் மேலாளர் பாலகிருஸ்ணன் புலிகளின்குரல் பற்றிய மதிபீட்டினை தெரிவித்தார்.
தொடர்ந்து புலிகளின்குரல் முத்தமிழ் கலையரங்கம் 2005-ல் தெரிவுசெய்ப்பட்ட கலைஞர்களுக்கும், வானொலி மன்றங்களில் தொடர்ந்து முனைப்புடன செயலாற்றி வருபவர்களுக்கும், நாளாந்த அறிவியல் வினாடி வினாப்போட்டிகளில் வென்றவர்களுக்கும் சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கப்பட்டன.
சான்றிதழ்கள் பரிசில்களை தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், வணிக ஒன்றியத்தலைவர் வெற்றியரசன், லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி சிறப்புத்தளபதி கோபால், கடற்புலிகள் அணியின் மோகன், இளந்தென்றல் வாணிபப் பொறுப்பாளர் சேரன், தமிழீழ வைப்பக மேலாளர் பாலகிருஸ்ணன், அனைத்துலக தொடர்பக நந்தவனம் பொறுப்பாளர் திலீபன், நவம் அறிவுக்கூட சிறப்புப் பொறுப்பாளர் தேவன், நவம் அறிவுக்கூட அதிபர் சிவா, வைத்திய கலாநிதி போராளி அஜந்தன் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து முத்தமிழ்க் கலையரங்குகளில் சிறப்பு நிகழ்ச்சியாக சங்கநாதம் நிகழ்ச்சியை வழங்கும் பேபி ஆசிரியை குழுவினருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகள் பற்றி புலிகளின்குரல் கலைப்பிரிவு மேலாளர் பா.கபிலன், முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சி மதிப்பீட்டாளர்கள் சார்பில் புலிகளின்குரல் நிகழ்ச்சி மதிப்பீட்டு மேலாளர் ந.கோகுலன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
நன்றியுரையை புலிகளின்குரல் துணைப்பொறுப்பாளர் வி.செயல்வீரன் வழங்கினார்.
2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புலிகளின்குரல் வானொலி மன்றங்கள் ஊடாக மக்களின் கலை வெளிப்பாடுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு புலிகளின்குரல் ஊடாக ஒலிபரப்பப்பட்டு வருவதுடன் மாதாந்தம் மன்றங்களின் கலை நிகழ்ச்சிகளின் அரங்கேற்றமாக முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய முத்தமிழ் கலையரங்கம் 2006-ல் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற வானொலி மன்றங்களின் முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகளில் தெரிவுசெய்யப்பட்ட கலைஞர்களுக்கு 15 சான்றிதழ்களும் பரிசில்களும், புலிகளின்குரல் நாளாந்த அவதானிப்புப்போட்டியில் தொடர்ந்து சரியான விடைகளை எழுதிய 29 பேருக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
புலிகளின்குரல் வானொலி மன்றங்களில் தொடர்ச்சியாக் தீவிரமாக செயற்பட்டு வருபவர்கள் 22 பேருக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
புலிகளின்குரலில் தற்போது மல்லாவி, விசுவமடு, வடமராட்சி கிழக்கு, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, முள்ளியவளை, வட்டக்கச்சி, ஆகிய வானொலி மன்றங்கள் உள்ளன. இதுவரை 44 முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகளும், 19 சிறப்பு முத்தமிழ் கலையரங்கு நிகழ்ச்சிகளுமாக 63 முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகள் வானொலி மன்றங்களிலும், நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா காலங்களிலும் புலிகளின்குரலால் நடத்தப்பட்டன.
கேணல் கிட்டு நினைவாக நடத்தப்படுகின்ற புலிகளின்குரல் தொடர் ஒலிபரப்பில் முத்தமிழ் கலையரங்கம் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.
<i><b>தகவல் மூலம் - புதினம்</b></i>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>புதுமண்டபத்தடி, ஆலங்குளத்திலும் கேணல் கிட்டு நினைவு தினம்
சிறிலங்கா - இந்திய அரசுகளின் கூட்டுச் சதியால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 13ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் புதுமண்டபத்தடியில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஊரக மேம்பாட்டுப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் க.அரிகரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் பொதுச்சுடரினை மாவடிமுன்மாரிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மா.தீபன் ஏற்றி வைக்க, தேசியக் கொடியினை மாவட்டத் துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவடிமுன்மாரிக்கோட்ட மகளிர் அரசியல் பொறுப்பாளர் த.கவிதா ஏற்றி வைத்தார்.
பின்னர் கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலையினை இரு மாவீரர்களின் தாயாரான லெட்சுமி அவர்கள் அணிவித்தார். ஏனைய வேங்கைகளின் திருவுருவப் படங்களிற்கு போராளிகள், பொதுமக்கள் எனப் பலரால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5054
[b]<i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>தமிழர்களுக்கு இருக்கும் தலைமைத்துவம் போல் சிங்கள அரசுக்கும் இருக்கின்றதா?
-தலைமைச் செயலகப் பொறுப்பாளர் சுரேஸ்
தமிழருக்கு என்று ஒருதலைமை, ஒரு சிறந்த கட்டுக் கோப்பு, சிறந்த திட்டமிடல் இருக்கின்றது. சிங்கள அரசுக்கு என்று ஒரு தலைமைத்துவம் இருக்கின்றதா? இவ்வாறு கேள்வி எழுப்புகிறார் மாவட்ட தலைமைச் செயலகப் பொறுப்பாளர் சுரேஸ் அவர்கள். கித்துள் பாடசாலையில் நேற்று நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 13வது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்:- ஜே.வி.பியா? அல்லது ஹெல உறுமயவா? அல்லது மகிந்த ராஜபக்சவா சிங்கள அரசுக்கு தலைமைத்துவம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு யார் போவது? அவர்களது ஆலோசனை என்ன? திட்டம் என்ன எதுவுமே இல்லாது காணப்படுகின்றது.
20 வருடங்களுக்கு முன் எமது தேசியத்தினை ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழத்தினை மீட்டு எடுப்போமா என்று சந்தேகம் கொண்டு தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் புத்திஜீவிகளும் போராட்டத்தின் மூலம் அழியப் போகின்றது என ஏங்கி இருந்த காலத்தில் சிறிய எண்ணிக்கையிலான போராளிகளைக் கொண்டு பெரியளவிலான சிறிலங்கா படைகளை யாழ்.கோட்டைக்குள் முடங்கி சிங்களப் படைத் தளபதியையே பிடிப்பதற்கு நீர் கேட்க வைத்தவர் கிட்டு அண்ணன்.
சிங்கள இராணுவத்தினர் யாழ்.கோட்டைக்குள் அடங்கி யாழ்ப்பகுதிக்குள் வெளியேற விடாது எமது தேசத்தின் மக்களை சுதந்திரமாக நடமாட விட்டவர் அவர் அன்றே எமது தமிழீழத்தைக் காட்டி விட்டார். கடந்த இருபது வருடங்களுக்கு முன்பே புலிகள் சாதிப்பார்கள் என்பதை சிங்கள இராணுவத்திற்கும், அரசுக்கும் அறியப்படுத்தியவர் கிட்டு அண்ணர். அதனை நெறிப்படுத்தும் வகையில் அவரது பேரில் தலைவர் அவர்களால் கிட்டு பீரங்கிப் படையணியை வளர்ந்து இருக்கின்றது என்றார்.
[b]<i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>வெல்லாவெளி, பாலையடிவட்டையில் நினைவு நிகழ்வுகள்</b>
வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வேங்கைகளின் 13வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று வெல்லாவெளிக் கோட்ட படையணி போராளிகளால் படைமுகாமில் காலை 8.30 மணியளவில் இடம் பெற்றது. இதில் பொதுச்சுடரினை வெல்லாவெளிக் கோட்டத் தளபதி கி.யோகராஜ் ஏற்றி வைக்க, தேசியக் கொடியினை பொறுப்பாளர்களில் ஒருவரான ஆதித்தனும், ஈகச்சுடரினை படை முகாம் பொறுப்பாளர் செல்வக் கணேஸ் ஏற்றி வைத்தார்.
பத்து மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு போராளிகளால் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வெல்லாவெளிக் கோட்ட தளபதி கி.யோகராஜ் சிறப்புரையும் நிகழ்த்தினார்.
இதேவேளை நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் வெல்லாவெளிப் பிரதேச ஊரக மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 13ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் பாலையடிவட்டை யில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதில் பொதுச்சுடரினை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் பா.தயாமோகன் ஏற்றி வைக்க தேசியக் கொடியினை வெல்லாவெளிக் கோட்டத்தளபதி கி.யோகராஜ் மற்றும் ஈகச்சுடரினை கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் தமிழார்வன் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து போராளிகள், பொதுமக்களால் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாலையடிவட்டை பொது விளையாட்டு மைதானத்தில் ஊரக மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் தலைமையில் பிரதேச பொறுப்பாளர் கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>கேணல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகள்; மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் ஆகியோரின் நினைவு நிகழ்வு
வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 13வது ஆண்டு நினைவு நிகழ்வும், மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் நினைவும் [b]பாரிஸ்நகரின் புறநகர் பகுதியான எல்.எஸ்.சி மண்டபத்தில் </b>நேற்று பி.பகல் 16.00 மணிக்கு சிறப்பாக நினைவு கூரப்பட்டன. பொதுச்சுடரினை மாவீரர் 2ம் லெப். ஞானச்சுடரின் சகோதரி அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியினை பிரெஞ்சுக் கிளை பரப்புரைப் பொறுப்பாளர் திரு,மேத்தா அவர்களும் ஈகச்சுடரினை மாவீரர். லெப். குட்டிமணியின் சகோதரரும் ஏற்றி வைத்தனர்.
அமைதி வணக்கத்துடன் பாரிஸ் ஈழநிலா இசைக்குழுவினர் எழுச்சிப் பாடல்களை வழங்கினர். தமிழ்ச்சோலை மாணவமணிகள் உரைகளாற்றினர்
எழுச்சி நடனங்களை பொண்டி, லாக்கூர்னோ, சென் டெனிஸ் தமிழ்ச்சோலை மாணவ மாணவியர்கள் வழங்கினர். சிறப்புரை பரப்புரைப் பொறுப்பாளர் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலை, பண்பாட்டுக் கழக கலைஞர்கள் ஒன்றிணைந்து சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் என்ற நாடகத்தையும் வழங்கினர். இவ்எழுச்சிமாலை நிகழ்வில் 700 வரையிலான தமிழ்மக்கள் கலந்து கொண்டு நினைவு கூர்ந்தனர். தமிழீழ தேசியக் கொடியிறக்கலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5053
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>சிறப்புப் படையியல் பயிற்சிக் கல்லூரியில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் நினைவு தினம் </b>
கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையியல் பயிற்சிக் கல்லூரியில் சிறப்புற நினைவு கூரப்பட்டது. காலை விசேட படையியல் ஒத்திகைப் பயிற்சியைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேஜர் சோதியா படையணியைச் சேர்ந்த வேணி தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் பொதுச் சுடரினை வடபோர் முனைக் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான அன்ரன் ஏற்றிவைத்தைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை தளபதி ஜெரி ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து கேணல் கிட்டு உட்பட10 வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரினை தளபதி யாதுமூரான் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலையை சாள்ஸ் அன்ரணி சிறப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவரான புலிக்குட்டி ஏற்றி வைத்தார்.
பொது மாவீரர் படத்திற்கான மலர் மாலையை போர்ப்பயிற்சி ஆசிரியர் தமிழ்நிலா அணிவித்து வைத்தார். 2001ஆம் ஆண்டு இதேநாள் வீரச்சாவடைந்த மாலதி படையணி தளபதி லெப்.கேணல் மதியின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையை மாலதி படையணி போராளி கலைமகள் அணிவித்தார்.
அகவணக்கம், உறுதியுரை என்பவற்றை அடுத்து கடந்த 3 நாள்கள் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளில் 13ஆம் ஆண்டு ஞாபகார்த்தமாக நடந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் மென்பந்து துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் வலைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மாலை 7:30 மணிக்கு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி போராளி மாநிலவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அகவணக்கத்தைத் தொடர்ந்து போராளிகளின் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. நினைவுரையினை ராஜன் கல்விப் பிரிவு ஆசிரியர் குமரன் அவர்கள் நிகழ்த்தினார். வெற்றி பெற்ற அணிகளுக்கும் விளையாட்டில் நடுவர்களாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்குமான பரிசில்களை வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து போராளிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5052
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நாளை லண்டன் நியூமோடன் பகுதியில் மாலை ஐந்து மணியளவில் "கிட்டண்ணாவின்" நினைவு நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக அறிந்தேன். நடைபெறும் மண்டப விபரங்களை பின் தருகிறேன்.
" "
Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
Richard Challoner R.C Secondary Boys School
Manor Drive North, New Malden, Surrey KT3 5PE
http://www.yell.com/maps/mapAction.do?nat_...tion=NEW+MALDEN
[size=18]<b> ..
.</b>
|