![]() |
|
கூத்தடித்த கடலே விடை கொடு..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கூத்தடித்த கடலே விடை கொடு..! (/showthread.php?tid=2129) |
கூத்தடித்த கடலே விடை கொடு..! - kuruvikal - 12-09-2005 <img src='http://kuruvikal.yarl.net/archives/tsunami_31.jpg' border='0' alt='user posted image'> <b>கடலிடை ஒரு குழப்பம் கலைந்தது அமைதி கறுவி எழுந்தவள் பேசினால் "சுனாமி" அலைகளால்..! சில மணித்துளிகளில் கரை தொட்டவள் ஆடினாள் ஊழியக்கூத்து..! படுக்கையில் உறங்கியோரும் பள்ளி போனோரும் பசியினில் தவித்தோரும் பண்டிகை கண்டோரும் பாதையில் பயணித்தோரும் பார்த்திருக்க பரிதவிக்க பாதியில் போயினர் பரலோகம்...! கட்டியணைத்தபடி கட்டுக்கலைந்தபடி கட்டுடல் சிதைந்தபடி கரையெங்கும் பிணக்கோலம்..! கண் முன்னே காவியங்கள் அலையோடு அள்ளுப்பட கைகள் இருந்தும் கருவி இருந்தும் கையாலாகாதவர்களாய் உறவுகள்..! பாசப்பிணைப்புக்கள் அறுபட அன்புறவுகள் முறிபட கதறி அழக்கூட அவகாசம் இன்றி பாவிகளான பந்தங்கள் அப்படி ஒரு அலங்கோலம்..! மங்காத மனித அவலமொன்று மாநிலத்தில் ஆரங்கேறி ஆண்டு ஒன்றுமானது..! அருவி கண்ட விழிகள் அடங்கவில்லை இன்னும்...! நெஞ்சுக்குள் நின்றாடும் நினைவுகள் அழியாத கோலங்களாய் தொடருது..! அடுத்த விநாடி வாழ்வுக்கு என்ன வழி...??? விடை தேடும் மனிதர்கள் இன்னும் அநாதைகளாய்...! அள்ளிக் கொடுத்ததுவும் கிள்ளிக் கொடுத்ததுவும் கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும் ஏமாற்றியதுவும் பொருளும் பவிசும் போனதுக்கு ஈடாகுமோ...??! கொட்டிக் கொடுத்தது கூட கைக்கெட்டா நிலை..! கொட்டாவிகள் மலிவாக மனதுக்குள் உள்ள வலிக்கு மருந்தென்ன.... அங்கலாய்ப்பு..!!! இன்னும் எத்தனை ஆண்டுகள் அவலத்தின் வலி... தீருமோ அது...???! கூத்தடித்த கடலே விடை கொடு...!</b> கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...! - tamilini - 12-09-2005 Quote:மங்காத மனித அவலமொன்று அதற்குள்ள ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இப்ப வேறை சூறாவளியாம். :? - kuruvikal - 12-09-2005 மாதங்கள் ஓடினதுதான் மிச்சம்...மனக்காயங்கள் ஆற்ற யாருமில்லாமல் எத்தனை உறவுகள் வேகுகின்றன..!
- தூயவன் - 12-09-2005 வரும் 26ம் திகதியோடு சரியாக ஒரு வருடம் புூர்த்தியும் ஆகப் போகுது. எங்கள் சனத்துக்கு பொது அமைப்புக்கள் கொடுத்ததை வைத்து தான் சமாளிக்குதுகள். இப்படி எத்தனை காலத்துக்கு காலத்தை ஓட்டுகின்றது? :roll: - தூயவன் - 12-09-2005 வரும் 26ம் திகதியோடு சரியாக ஒரு வருடம் புூர்த்தியும் ஆகப் போகுது. எங்கள் சனத்துக்கு பொது அமைப்புக்கள் கொடுத்ததை வைத்து தான் சமாளிக்குதுகள். இப்படி எத்தனை காலத்துக்கு காலத்தை ஓட்டுகின்றது? :roll: - KULAKADDAN - 12-09-2005 குருவிகளே உங்கள் கவிதை காந்த கால வலியை நினைவுகூர்கிறது. இப்போது புயல் எச்சரிக்கை கிடைத்துள்ளதாக செய்திகள் இணையத்தில் இருக்கிறன. அது எத்தகைய பாதிப்பை கொண்டு வருமோ?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Re: கூத்தடித்த கடலே விடை கொடு..! - RaMa - 12-10-2005 [quote=kuruvikal]<img src='http://kuruvikal.yarl.net/archives/tsunami_31.jpg' border='0' alt='user posted image'> அள்ளிக் கொடுத்ததுவும் கிள்ளிக் கொடுத்ததுவும் கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும் ஏமாற்றியதுவும் பொருளும் பவிசும் போனதுக்கு ஈடாகுமோ...??! கொட்டிக் கொடுத்தது கூட கைக்கெட்டா நிலை..! கொட்டாவிகள் மலிவாக மனதுக்குள் உள்ள வலிக்கு மருந்தென்ன.... அங்கலாய்ப்பு..!!! இன்னும் எத்தனை ஆண்டுகள் அவலத்தின் வலி... தீருமோ அது...???! கூத்தடித்த கடலே விடை கொடு...![/b] கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...! எத்தனையோ சிறுவர்களையும் பெரியவர்களையும் அனாதையாக்கி விட்டு போன சுனாமியின் ஒரு வருட நினைவு கவிதை வலிக்கின்றது சுனாமியின் பாதிப்பு இன்னும் அடங்கலை அதற்குள் இன்னுமொரு சூறாவளியா? - sWEEtmICHe - 12-10-2005 kuruvikal Wrote:மாதங்கள் ஓடினதுதான் மிச்சம்...மனக்காயங்கள் ஆற்ற யாருமில்லாமல் எத்தனை உறவுகள் வேகுகின்றன..!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வலி வலி குருவிகளே கண்ணீர் வலி
Re: கூத்தடித்த கடலே விடை கொடு..! - Mathuran - 12-10-2005 [quote=kuruvikal]<img src='http://kuruvikal.yarl.net/archives/tsunami_31.jpg' border='0' alt='user posted image'> <b>கடலிடை ஒரு குழப்பம் கலைந்தது அமைதி கறுவி எழுந்தவள் பேசினால் "சுனாமி" அலைகளால்..! சில மணித்துளிகளில் கரை தொட்டவள் ஆடினாள் ஊழியக்கூத்து..! படுக்கையில் உறங்கியோரும் பள்ளி போனோரும் பசியினில் தவித்தோரும் பண்டிகை கண்டோரும் பாதையில் பயணித்தோரும் பார்த்திருக்க பரிதவிக்க பாதியில் போயினர் பரலோகம்...! கட்டியணைத்தபடி கட்டுக்கலைந்தபடி கட்டுடல் சிதைந்தபடி கரையெங்கும் பிணக்கோலம்..! கண் முன்னே காவியங்கள் அலையோடு அள்ளுப்பட கைகள் இருந்தும் கருவி இருந்தும் கையாலாகாதவர்களாய் உறவுகள்..! பாசப்பிணைப்புக்கள் அறுபட அன்புறவுகள் முறிபட கதறி அழக்கூட அவகாசம் இன்றி பாவிகளான பந்தங்கள் அப்படி ஒரு அலங்கோலம்..! மங்காத மனித அவலமொன்று மாநிலத்தில் ஆரங்கேறி ஆண்டு ஒன்றுமானது..! அருவி கண்ட விழிகள் அடங்கவில்லை இன்னும்...! நெஞ்சுக்குள் நின்றாடும் நினைவுகள் அழியாத கோலங்களாய் தொடருது..! அடுத்த விநாடி வாழ்வுக்கு என்ன வழி...??? விடை தேடும் மனிதர்கள் இன்னும் அநாதைகளாய்...! அள்ளிக் கொடுத்ததுவும் கிள்ளிக் கொடுத்ததுவும் கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும் ஏமாற்றியதுவும் பொருளும் பவிசும் போனதுக்கு ஈடாகுமோ...??! கொட்டிக் கொடுத்தது கூட கைக்கெட்டா நிலை..! கொட்டாவிகள் மலிவாக மனதுக்குள் உள்ள வலிக்கு மருந்தென்ன.... அங்கலாய்ப்பு..!!! இன்னும் எத்தனை ஆண்டுகள் அவலத்தின் வலி... தீருமோ அது...???! கூத்தடித்த கடலே விடை கொடு...!</b> கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...! வலிகளை வலிமையான வரிகள் கொண்டு விவரித்து பாட குருவிகளுக்கா வார்த்தைப் பஞ்சம். எங்கள் வாழ்வின் வளிநெடுகில் அவலம். அவலத்துள் அவலங்கள் கண்டு கொதிக்கின்ற குருவிகளே. தமிழன் என்பதனால் பொதுவான கட்டமைப்பைக் கூட புதைகுழியில் புதைத்துவிட்டு தமிழனை பதைக்க விட்ட சிங்கள இனவெறி பிடித்த பேய்களிடம் கேட்கவேண்டிய கேள்விகளை, சுனாமியிடம் கேட்டு பயன் என்ன? - அனிதா - 12-10-2005 kuruvikal Wrote:மாதங்கள் ஓடினதுதான் மிச்சம்...மனக்காயங்கள் ஆற்ற யாருமில்லாமல் எத்தனை உறவுகள் வேகுகின்றன..! ம்ம் உண்மைதான் குருவி அண்ணா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அம்மா அப்பா இல்லாமல் எத்தினையோ குழந்தைகள்..குழந்தைகளை பிரிந்த தாய்மார்கள் ...கணவன் மனைவியை இழந்து, மனைவி கணவனை இழந்து இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ..இதல்லாம் நினைத்தால் ஒரு மாதிரித்தான் இருக்கு ... இவர்களின் மனகாயங்களை ஆற்றுவதும் சுலபமானதல்ல... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக எழுதிய கவியும் நன்றாக இருக்கு ... - Mathan - 12-10-2005 புயல் அபாயம் போய்விட்டதாக செய்திகளில் படித்தேன். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை நாம் ஏறக்குறைய மறந்துவ்விட்டோம் பலர் இன்னும் எதிவித உதவியும் கிடைக்காமல் அவதியுறுவதாக பாதிக்கப்பட பிரதேசங்களுக்கு போய் வந்த சிலர் சொன்னார்கள். அவர்களை நினைவூட்டிய கவிதைக்கு நன்றி. - lollu Thamilichee - 12-11-2005 salut கவிதை அருமை சிந்திக்க வைத்தது கவிதை - kuruvikal - 12-20-2005 "ஆழிப்பேரலையால் 14 ஆயிரத்து 300 பேர் காவுகொள்ளப்பட்ட தேசம். 3000 பேர் வரை காணமல் போன தேசம். 52 மருத்துவ நிலையங்கள், 57 கல்விக்கூடங்கள், 50 ஆயிரத்துக்கும் அதிக வீடுகள் அழிக்கப்பட்டும், துடைத்தெறியப்பட்டதுமான தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலிருந்து மீளவேண்டும் என்ற நிலை அடுத்த கட்டம் இருக்கிறது." http://www.eelampage.com/?cn=22666 |