Aggregator
பேடோங்டார்ன் ஷினாவத்ரா தாய்லாந்து பிரதமராக பதவி வகிப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை
01 JUL, 2025 | 12:34 PM
தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டார்ன் ஷினாவத்ரா பதவி வகிப்பதற்கு அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் இடைக்காலதடைவிதித்துள்ளது.
கம்போடியாவின் முன்னாள் தலைவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த விடயங்கள் அம்பலமாகியதை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது.
பிரதமர் நெறிமுறையை மீறினார் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் அவரை பதவியிலிருந்து இடைநீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முகமது நபியை சித்தரிக்கும் கருத்தோவியத்திற்கு துருக்கியில் கடும் எதிர்ப்பு - நான்கு கருத்தோவியர்கள் கைது
முகமது நபியை சித்தரிக்கும் கருத்தோவியத்திற்கு துருக்கியில் கடும் எதிர்ப்பு - நான்கு கருத்தோவியர்கள் கைது
01 JUL, 2025 | 12:53 PM
முகமது நபியையும் மோயீசனையும் சித்தரிக்கும் கருத்தோவியங்களை வரைந்த நான்கு கருத்தோவியக் கலைஞர்களை துருக்கி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கருத்தோவியங்களிற்கு எதிராக கடும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டதையடுத்தே துருக்கி பொலிஸார் கருத்தோவிய கலைஞர்களை கைதுசெய்துள்ளனர்.
அரசியல் சஞ்சிகையொன்றில் வெளியான இந்த கருத்தோவியத்தில் குண்டுகள் விழும்போது, இறக்கைகள் மற்றும் ஒளிவட்டங்களுடன் காணப்படும் இஸ்லாமியர் ஒருவரும் யூதரும் கைகுலுக்கிக்கொள்வதை காணமுடிகின்றது.
வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த கருத்தோவியம் சமூக ஊடகங்களில் பரவலானது.இதனை தொடர்ந்து இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோஷமெழுப்பினர்.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் சஞ்சிகையின் நடவடிக்கை குறித்து துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த கருத்தோவியம் ஒரு தூண்டும் நடவடிக்கை என தெரிவித்துள்ள துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் அலி யெர்லிகயா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்னால் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
கேலிச்சித்திரம் கருத்து சுதந்திரத்தினால் அல்லது பேச்சு சுதந்திரத்தினால் பாதுகாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற் தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இயலும் - ஐங்கரநேசன்
இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற் தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இயலும் - ஐங்கரநேசன்
Published By: VISHNU
01 JUL, 2025 | 08:08 PM
பாரம்பரிய வாழ்விடத்தையும் தனித்துவமான, மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் கூட்டத்தைத் தேசிய இனங்கள் என்று அரசியல் அறிஞர்கள் வரையறை செய்துள்ளார்கள். இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் எதுவுமில்லை. ஆனால், எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் தேசிய இனங்கள் தங்களை உயர்வாகக் கருதிச் சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கியொடுக்கி வருகின்றன. இவ்வொடுக்குமுறைக்கு எதிராகச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் கிளர்ந்தெழுகின்றன. இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற்தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இயலும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (29) நடைபெற்ற பசுமை அமைதி விருதுகள் விழாவுக்குத் தலைமை உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
காலத்துக்குக்காலம் மானுடத்தை வழிநடத்துவதற்கென்று சிந்தனையாளர்களால் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டு வந்துள்ளன. சோசலிசக் கோட்பாடு பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளில் இனங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்காக உருவானது.
ஆனால், சோசலிச நாடுகள் பிற்காலத்தில் முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் அடிபணிந்தபோது அங்கு இனங்களுக்கிடையில் மோதல்கள் தலை தூக்கியது. சோவியத் யூனியன் சிதறுண்டதும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த உக்ரைன் மீது சோவியத் ரஸ்யா இப்போது படையெடுப்பதும் சோசலிசச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தியதிலிருந்த குறைபாடுகளால் ஏற்பட்ட விளைவுகள்தான்.
போர்களில் ஏற்படும் உயிரிழப்புகளைவிட சுற்றுச்சூழல் சீர்குலைவினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. வளங்களின் அளவுக்கு மிஞ்சிய நுகர்வால் வளப்பற்றாக்குறைவு ஏற்பட்டு, எஞ்சியுள்ள வளங்களைப் பங்கிடுவதில் முரண்பாடுகளும் மோதல்களும் வெடித்துள்ளன. பூமியின் வெப்ப உயர்வு காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து தீவு நாடுகளில் கரையோரப்பகுதிகளை மெல்ல மெல்லக் காவுகொண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளாகத் காலந்தப்பிய அடை மழை, கடும் வரட்சி, காட்டுத் தீ, உயிரினங்களின் அழிவு, இதுவரை காணாத புதுப்புது நோய்கள் என்று பல்வேறு சூழற் பிரச்சினைகள் தினந்தினம் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன.
தற்போதுள்ள அரசியற் கொள்கைகள், கோட்பாடுகளினால் சூழற் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க இயலாததாலேயே சூழலியம் என்ற புதிய கோட்பாடு முகிழ்த்து வருகிறது. ஒவ்வொரு தேசிய இனமும் தன்னை முதன்மைப்படுத்தும் மனிதமையச் சிந்தனையைத் தவிர்த்து சூழல்நேயச் சிந்தனைக்கு முதலிடம் கொடுத்தால் மட்டுமே அது வாழுகின்ற சூழலைப் பாதுகாக்க முடியும்.
இதன் மூலமே ஒட்டுமொத்தப் பூமியும் பாதுகாக்கப்படும். ஆபத்தின் விழிம்பில் நிற்கும் உலகை காப்பாற்றுவதற்குச் சூழலியற்தேசியம் என்ற கோட்பாட்டை உலகை வழிநடத்துகின்ற கோட்பாடாக நாம் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே எம்மையும் ஏனைய உயிரினங்களையும் பேரழிவுகளிலிருந்து காப்பாற்ற இயலும் என்றார்.
செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !
சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியத்தாருங்கள் : அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க மக்களிடம் வேண்டுகோள்
மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியத்தாருங்கள் : அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க மக்களிடம் வேண்டுகோள்
01 JUL, 2025 | 01:03 PM
( அபிலாஷனி லெட்சுமன் )
கடந்த காலங்களில் மொழியினால் மிக மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். தேசிய ரீதியான மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியதரலாம். அவ்வாறான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகைதந்து சமர்பிக்கலாம். துரிதமாக அரச மொழி கொள்கையினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க தெரிவித்தார்.
அரச கரும மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க மேலும் தெரிவிக்கையில்,
மொழி உரிமை தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடிய அதிகாரத்தை அரச ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக எமது ஆணைக்குழு நான்கு முறைகளில் செயற்பட்டுவருகின்றது. அரச கருமமொழிகள் கொள்கைகளை நடைமுறைபடுத்துவற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தேசிய ரீதியான மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியதரலாம். மொழி தொடர்பான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகைதந்து சமர்பிக்கலாம்.துரிதமாக அரச மொழி கொள்கையினை மேம்படுத்த பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.
குறிப்பாக கடந்த காலங்களில் மொழியினால் எத்தகைய மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
இலங்கையை போன்ற பல்லின , பல்மத மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட அழகிய தேசம் வேறு எங்கும் கிடையாது. நாம் தமிழர், சிங்களவர் , இஸ்லாமியர் என்ற கொள்கையினை விடுத்து “நாம் இலங்கையர்” என்ற என்ற ஒருமைப்பாட்டுக் கொள்கையை ஏற்க வேண்டிய கட்டாயம் இன்றைய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஒருமைப்பாட்டு நோக்கமே எங்களது வலிமையான குறிக்கோளாகும்.
பாடசாலைகள் மட்டுமின்றி, சமுக வளர்ச்சிக்கான அடிப்படையாக மும்மொழித் தேர்ச்சி கட்டாயமாகக் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு குழந்தையை சமூகமயமாக்கும் கட்டத்தில், அதற்குத் தேவையான மொழித் திறன்களை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்றையும் ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும். மாற்றம் ஆரம்ப நிலையிலிருந்தே நடைமுறைக்கு வந்தால், அரச கரும மொழி கொள்கையின் ஊடாக நல்லிணக்கம் உள்ள நாடாக காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார , அரச மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க , அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த மஹலேகம் , தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மின்சார உற்பத்தியில் புதிய மைல்கல்
இலங்கையின் மின்சார உற்பத்தியில் புதிய மைல்கல்
01 JUL, 2025 | 03:05 PM
2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 70 சதவீத மின்சார உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகூடிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஏனைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் அதிகளவில் மின்சார பயன்பாடு அதிகமாக காணப்பட்டுள்ளது.
இந்த மின்சார உற்பத்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.
இலங்கையில் 100 சதவீதம் நீர்மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து அதிகளவான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டமை இலங்கை மின்சார சபையின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.