5 days 11 hours ago
அவ்வளவு தூரம் காரை ஓட்டி வந்த பெண், தானே வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றிருக்கலாம், அல்லது தாயை கோவில் வாசலில் இறக்கிவிட்டு தான் சென்று நிறுத்தியிருக்கலாம். ஒரு உயிர் போய்விட்டது, இனி ஒரு உயிர் போகாமல் பாதுகாக்கலாமேயொழிய போன உயிரை திரும்பப்பெற முடியாது. கார் ஓட்டத்தெரியாதவர் சாவியை வாங்கியிருக்கக்கூடாது. வீட்டிலிருந்து பத்திரமாய் கொண்டுவந்த நகையை இவ்வாறு அசமந்தமாய் விட்டிருக்கலாமா?
5 days 11 hours ago
இப்போது சரியாக இருக்கும்.
5 days 11 hours ago
இஸ்ரேல் 60 நாள் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது - டிரம்ப் 02 JUL, 2025 | 10:21 AM இஸ்ரேல் 60 நாள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உத்தேச யுத்த நிறுத்த காலத்தில் நாங்கள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார். சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மிகவும் கடுமையாக பாடுபட்ட எகிப்தும் கத்தாரும் இந்த யுத்த நிறுத்த யோசனையை ஹமாசிடம் கையளிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹமாஸ் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் என நான் எதிர்பார்க்கின்றேன் இல்லாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முற்றிலும் தயாராகவுள்ளது என ஐக்கியநாடுகளிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் இந்த யுத்தநிறுத்த யோசனையை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெளிவாக தெரியவில்லை. இஸ்ரேலிய பிரதமர் காசாவில் மோதல்களை முடிவிற்கு கொண்டுவர முயல்கின்றார் என தெரிவித்துள்ள டிரம்ப் இது தொடர்பில் அடுத்த வாரம் உடன்பாடு ஏற்படலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218991
5 days 11 hours ago
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது - கனடிய தேசிய தமிழர் அவை Published By: RAJEEBAN 02 JUL, 2025 | 11:02 AM செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம்; அங்கீகரிக்கவேண்டும் பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதிக்கான வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது என கனடிய தேசிய தமிழர் அவை தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில் கனடிய தேசிய தமிழர் அவை மேலும் தெரிவித்துள்ளது. ஜூன் 25 2025 அன்று ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம்மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் தமிழ் மக்கள் காணாமல் போனதுடன் தொடர்புடைய செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம் மேற்கொண்டார். இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் வாக்குமூலத்தின் பின்னர் இந்த மனித புதைகுழி முதலில் 1998 இல் உறுதிப்படுத்தப்பட்டது.1996இல் இவர் கிருஷாந்தி குமாரசுவாமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தார் என்பது நிருபிக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது ராஜபக்ச செம்மணியில் காணாமல்போன 300 முதல் 400 வரையிலான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு;ளதாக தெரிவித்தார். இவரது வாக்குமூலமும் சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையும் ( சர்வதேச மன்னிப்புச்சபை தனது முன்னைய அறிக்கைகளில் பெருமளவானவர்கள் காணாமல்போனது,இரகசிய புதைப்புகள் குறித்து நம்பகதன்மைமிக்க ஆதாரங்களை முன்வைத்திருந்தது.) இது தொடர்பில் ராஜபக்ச மிகவும் திட்டவட்டமான தகவல்களை வெளியிட்டிருந்தார், அவர் கடத்தல்,சித்திரவதை கொலைகளில் உயர் அதிகாரிகளிற்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். வதைமுகாம்கள் காணப்பட்ட பகுதிகள்,பாதிக்க்பபட்டவர்கள்,ஆகியவை குறித்த தகவல்களை வழங்கியதுடன் உடல்கள் புதைக்கப்பட்ட சில இடங்களையும் காண்பித்திருந்தார். கடும் பாதுகாப்பின் மத்தியில் திறந்த நீதிமன்றத்திற்கு அவர் தனது வாக்குமூலத்தினை வழங்கினார்,இலங்கை அரசாங்;கம் அதுவரை தெரிவித்து வந்ததை அவர் நேரடியாக சவாலிற்கு உட்படுத்தியதுடன் இலங்கையில் திட்டமிடப்பட்ட தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் காணப்படுவதை வெளிப்படுத்தினார். பலவருட மௌத்திற்கு பின்னர் இந்த வருடம் பெப்ரவரி மாதம் மீண்டும் செம்மணி கவனத்i ஈர்த்தது.அரியாலை சித்துபாத்தி மயானத்தில் தகனமேடையை அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் மனித எச்சங்களை கண்டுபிடித்தனர்.ஜூன் 8ம் திகதியளவில் இந்த பகுதி மனித புதைகுழி காணப்படும் பகுதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் இடம்பெற்ற அகழ்வின் போது மூன்று குழந்தைகளினது உடல்கள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஜூன் 29ம் திகதி இடம்பெற்ற அகழ்வின் போது சிறுபிள்ளையொன்றின் எலும்புக்கூடுகளும் நீலநிற புத்தகபையும் மீட்கப்பட்டது,அந்த பையில் தமிழ் ஆங்கில எழுத்துக்கள் காணப்பட்டன. சிறுவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும்,புத்தகபைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டமையும்,இந்த பகுதியில் சிறுவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர் என நீண்டகாலமாக தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சர்வதேச கண்காணிப்புடனான தடயவியல் சோதனை குறித்து வலியுறுத்தி வந்துள்ளனர்.இலங்கை அரசாங்கத்தின் ஆதாரங்களை மறைக்கும் நீதியை குழப்பும் வரலாற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர். செம்மணியில் இதுவரை 33 மனிதஎச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன,மேலும் செய்மதி படங்கள் இந்த பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன,இவற்றை எதிர்காலத்தில் அகழ்வதற்கான திட்டங்கள் உள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது விஜயத்தின் போது முழுமையான விசாரணைகளை கோரினார்.சர்வதேச நிபுணர்கள் தடயவியல் நிபுணர்களின் வலுவான விசாரணைகள் மூலமேஉண்மையை வெளிக்கொணர்ந்து காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு முடிவை காணமுடியும் என அவர் தெரிவித்திருந்தார். செம்மணி மனித புதைகுழி தோண்டப்படுவது தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கையின் தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பதற்கான தெளிவான சான்றாகும். தமிழ் இனப்படுகொலைகள் ஆரம்பித்தது முதல் வடக்குகிழக்கில் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மனித புதைகுழிகளிற்கு காரணமானவர்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மனித புதைகுழிகளிற்கு பின்னால் உள்ள உண்மையை மறைக்க முயன்றுள்ளனர். பொறுப்புக்கூறல் இன்மை தொடர்வது இலங்கையில் தொடர்ந்து நீடிக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றது. https://www.virakesari.lk/article/218996
5 days 11 hours ago
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது - கனடிய தேசிய தமிழர் அவை
Published By: RAJEEBAN
02 JUL, 2025 | 11:02 AM

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம்; அங்கீகரிக்கவேண்டும் பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதிக்கான வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது என கனடிய தேசிய தமிழர் அவை தெரிவித்துள்ளது
அறிக்கையொன்றில் கனடிய தேசிய தமிழர் அவை மேலும் தெரிவித்துள்ளது.
ஜூன் 25 2025 அன்று ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம்மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் தமிழ் மக்கள் காணாமல் போனதுடன் தொடர்புடைய செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் வாக்குமூலத்தின் பின்னர் இந்த மனித புதைகுழி முதலில் 1998 இல் உறுதிப்படுத்தப்பட்டது.1996இல் இவர் கிருஷாந்தி குமாரசுவாமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தார் என்பது நிருபிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது ராஜபக்ச செம்மணியில் காணாமல்போன 300 முதல் 400 வரையிலான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு;ளதாக தெரிவித்தார்.
இவரது வாக்குமூலமும் சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையும் ( சர்வதேச மன்னிப்புச்சபை தனது முன்னைய அறிக்கைகளில் பெருமளவானவர்கள் காணாமல்போனது,இரகசிய புதைப்புகள் குறித்து நம்பகதன்மைமிக்க ஆதாரங்களை முன்வைத்திருந்தது.)
இது தொடர்பில் ராஜபக்ச மிகவும் திட்டவட்டமான தகவல்களை வெளியிட்டிருந்தார், அவர் கடத்தல்,சித்திரவதை கொலைகளில் உயர் அதிகாரிகளிற்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

வதைமுகாம்கள் காணப்பட்ட பகுதிகள்,பாதிக்க்பபட்டவர்கள்,ஆகியவை குறித்த தகவல்களை வழங்கியதுடன் உடல்கள் புதைக்கப்பட்ட சில இடங்களையும் காண்பித்திருந்தார்.
கடும் பாதுகாப்பின் மத்தியில் திறந்த நீதிமன்றத்திற்கு அவர் தனது வாக்குமூலத்தினை வழங்கினார்,இலங்கை அரசாங்;கம் அதுவரை தெரிவித்து வந்ததை அவர் நேரடியாக சவாலிற்கு உட்படுத்தியதுடன் இலங்கையில் திட்டமிடப்பட்ட தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் காணப்படுவதை வெளிப்படுத்தினார்.
பலவருட மௌத்திற்கு பின்னர் இந்த வருடம் பெப்ரவரி மாதம் மீண்டும் செம்மணி கவனத்i ஈர்த்தது.அரியாலை சித்துபாத்தி மயானத்தில் தகனமேடையை அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் மனித எச்சங்களை கண்டுபிடித்தனர்.ஜூன் 8ம் திகதியளவில் இந்த பகுதி மனித புதைகுழி காணப்படும் பகுதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் இடம்பெற்ற அகழ்வின் போது மூன்று குழந்தைகளினது உடல்கள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
ஜூன் 29ம் திகதி இடம்பெற்ற அகழ்வின் போது சிறுபிள்ளையொன்றின் எலும்புக்கூடுகளும் நீலநிற புத்தகபையும் மீட்கப்பட்டது,அந்த பையில் தமிழ் ஆங்கில எழுத்துக்கள் காணப்பட்டன.
சிறுவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும்,புத்தகபைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டமையும்,இந்த பகுதியில் சிறுவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர் என நீண்டகாலமாக தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சர்வதேச கண்காணிப்புடனான தடயவியல் சோதனை குறித்து வலியுறுத்தி வந்துள்ளனர்.இலங்கை அரசாங்கத்தின் ஆதாரங்களை மறைக்கும் நீதியை குழப்பும் வரலாற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.
செம்மணியில் இதுவரை 33 மனிதஎச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன,மேலும் செய்மதி படங்கள் இந்த பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன,இவற்றை எதிர்காலத்தில் அகழ்வதற்கான திட்டங்கள் உள்ளன.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது விஜயத்தின் போது முழுமையான விசாரணைகளை கோரினார்.சர்வதேச நிபுணர்கள் தடயவியல் நிபுணர்களின் வலுவான விசாரணைகள் மூலமேஉண்மையை வெளிக்கொணர்ந்து காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு முடிவை காணமுடியும் என அவர் தெரிவித்திருந்தார்.
செம்மணி மனித புதைகுழி தோண்டப்படுவது தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கையின் தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பதற்கான தெளிவான சான்றாகும்.
தமிழ் இனப்படுகொலைகள் ஆரம்பித்தது முதல் வடக்குகிழக்கில் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மனித புதைகுழிகளிற்கு காரணமானவர்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மனித புதைகுழிகளிற்கு பின்னால் உள்ள உண்மையை மறைக்க முயன்றுள்ளனர்.
பொறுப்புக்கூறல் இன்மை தொடர்வது இலங்கையில் தொடர்ந்து நீடிக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றது.
https://www.virakesari.lk/article/218996
5 days 11 hours ago
இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம் - இந்தியா ஒருமுறை கூட வெல்லாத ஆடுகளம் எப்படி உள்ளது? பும்ரா ஆடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் கில்லும் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது டெஸ்ட் போட்டி பிரிமிங்ஹாமில் இன்று(ஜூலை2ம் தேதி) தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் போட்டியில் வெற்றிக்கு உதவிய அதே வீரர்களோடு, மாற்றமில்லாமல் 2வது டெஸ்டிலும் களமிறங்குகிறது. ஆனால், இந்திய அணி இதுவரை ப்ளேயிங் லெவனை வெளியிடாமல் சஸ்பென்சாக வைத்திருப்பது ஏன் எனத் தெரியவில்லை. பிரம்மாஸ்திரம் பும்ராவை விளையாட வைக்கலாமா அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டிக்கு இடம் கிடைக்குமா என கணிப்புகள் வந்தாலும் இதுவரை உறுதியான அறிவிப்பு ஏதும் நிர்வாகத்திடம் இருந்து இல்லை. டாஸ் நிகழ்வுக்குப்பின்புதான் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஏமாற்றாத இளம் அணி விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத, நிலையில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் டெஸ்டில் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். ரிஷப் பந்த் இரு சதங்கள், கேப்டன் கில், ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் சதம் ஆகியவை மனநிறைவை அளித்தன. ஆனால், இவர்கள் தவிர இந்திய அணியில் நடுவரிசை பேட்டர்களின் பங்களிப்பு குறிப்பாக கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பங்களிப்பு ஏமாற்றத்தை அளித்தது. பந்துவீச்சிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை. முதல் இன்னிங்ஸில்தான் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததேத் தவிர 2வது இன்னிங்ஸில் பெரிதாக பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. வேகப்பந்துவீச்சில் பும்ரா தவிர பிரசித் கிருஷ்ணா, ஷர்துல், சிராஜ் ஆகியோரின் எக்னாமி ரேட், விக்கெட் வீழ்த்தும் திறன் கவலைக்குரியதாக முதல் டெஸ்டில் இருந்தது. ஷர்துல் தாக்கூர் அணியில் கொண்டுவந்ததே கேள்விக்குரியதாக மாறிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர் சுப்மன் கில் கேப்டன்ஷிப் மீதான கேள்வி இளம் இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவு ஸ்திரத்தன்மையுடன் இருந்தாலும், பந்துவீச்சில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் கேப்டன் ஷுப்மன் கில், பந்துவீச்சாளர்களை எவ்வாறு கையாள வேண்டும், எந்த சூழலில் எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது, புதிய பந்தில் யாரை பந்துவீசச் செய்வது, யாருக்கு அதிக ஓவர்கள் வழங்குவது என்பதில் முடிவெடுப்பதில் இன்னும் தடுமாற்றத்தைச் சந்திக்கிறார். இந்த சூழலில் 2வது டெஸ்ட் போட்டி இன்று பிர்மிங்ஹாமில் தொடங்குகிறது. இந்திய அணியில் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று துணைப் பயிற்சியாளர் ரேயன் டான் டஸ்சே தெரிவித்துள்ளார். ஆனால், எந்த வகையான மாற்றம் என்பதில்தான் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. புதிய வரலாறு படைக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி விளையாடும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் இந்திய அணி தோற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. 2011ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் இன்னிங்ஸ் 242 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது, 2018ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் 18 ரன்களில் இந்திய அணி தோற்றது. 2022ம் ஆண்டில் பும்ரா கேப்டன்ஷிப்பில் நடந்த போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 1986ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணி டிரா செய்துள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து எப்போதுமே இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து பதிலடி கொடுத்தாலும் இதுவரை இந்த மைதானத்தில் வெற்றிக்கொடி நாட்டியதில்லை. பிரிம்மிங்ஹாமில் நடைபெறும் 2வது டெஸ்டில் இந்திய அணி வென்றால் அது வரலாற்று வெற்றியாக, இந்த நூற்றாண்டிலேயே முதல் வெற்றியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. 'பாஸ்பால்' உத்தியில் தொடர் வெற்றி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிராண்டம் மெக்கலம் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக பிரெண்டம் மெக்கலம் வந்தபின் பாஸ்பால் உத்தியை கையில் எடுத்து தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக ஸ்டோக்ஸ் வந்தபின், உள்நாட்டில் நடந்த 21 டெஸ்ட் போட்டிகளில் 16 டெஸ்ட்களில் இங்கிலாந்து வென்றுள்ளது. கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 4 வெற்றிகளையும், ஒரு போட்டியை டிராவும் செய்துள்ளது. நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடர்களை வென்று, ஆஷஸ் டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்திருக்கிறது இங்கிலாந்து அணி. ஆஷஸ் தொடரில் மட்டும் இங்கிலாந்து பேட்டர்கள் 3938 பந்துகளைச் சந்தித்து 2920 ரன்கல் சேர்த்தனர். 85 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 93 விக்கெட்டுகளை வீழ்த்தியது. ஆஷஸ் தொடரில் இருந்தே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சில் 41% "குட்லென்த்"தில்(6முதல்8மீட்டருக்குள்) வீசிவருகிறார்கள். பேட்டர்களும் சராசரியாக 39 ரன்களும், ஓவருக்கு 3.69 ரன்களும் சேர்த்து வருகிறார்கள். இது ஆஷஸ் மட்டுமல்ல, அடுத்து நடந்த நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கைத் தொடர்களிலும் இங்கிலாந்து வீரர்களின் நிலைத்தன்மை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சீராக இருந்து வருகிறது. இங்கிலாந்து அணி வோக்ஸ், ஸ்டோக்ஸ், கார்ஸ், டங்க் ஆகிய இளம் பந்துவீச்சாளர்களை வைத்துதான் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களும் இரு இன்னிங்ஸிலும் 47% பந்துகளை "குட்லென்த்தில்" வீசியதாக கிரிக்இன்ஃபோ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதல் டெஸ்டில் மைதானம் தட்டையாக இருந்தபோதிலும் அதில் ஸ்விங் செய்த சதவீதமும் இந்திய அணியைவிட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிகமாகவே பந்தை திருப்பினர். ஒட்டுமொத்தத்தில் பாஸ்பால் உத்தியைக் கையாண்டு இங்கிலாந்து தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. அதனால்தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் அந்த அணி செய்யாமல் 2வது டெஸ்டில் விளையாடுகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இணைந்தபோதிலும் அவரை 2வது டெஸ்டில் பயன்படுத்தாமல் மாறாத ப்ளேயிங் லெவனில் இங்கிலாந்து களமிறங்குகிறது பேட்டிங்கில் பிளங்கெட், போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ஸ்மித் என பேட்டிங்கிலும் வலுவாக இருக்கிறார்கள். இதில் டெய்லெண்டர்கள் வோக்ஸ், கார்ஸ் வரை சிறப்பாக பேட்செய்வது அந்த அணிக்கு பெரிய பலமாகும். அதனால்தான் முதல் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களால் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர். டெஸ்ட் போட்டியில் கூட பாஸ்பால் உத்தியில் வேகமாக ரன்களைச் சேர்க்கும் விதத்தில் இங்கிலாந்து பேட்டர்கள் பேட் செய்வது இந்திய அணிக்கு பெரிய சவாலாகும். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கு இணையாக முதல் இன்னிங்ஸிலும் இங்கிலாந்து பேட்டர்கள் பேட் செய்தனர், 2வது இன்னிங்ஸிலும் 370 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்து வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த பேட்டிங் வரிசையை உடைக்க ஆடுகளம், காலநிலை சாதகமாக இல்லாதபட்ச்தில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சவாலாகவே 2வது டெஸ்ட் போட்டி இருக்கும். 'ப்ளேயிங் லெவனில் சஸ்பென்ஸ்' இந்திய அணியின் ப்ளேயிங்கில் லெலவனில் யார் இடம் பெறுவார்கள் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டாலும், அவரை பயன்படுத்துவது என்பது கடைசி நேரத்தில்தான் முடிவாகும். ஏனென்றால் 3 டெஸ்டில் மட்டுமே பும்ரா விளையாட இருப்பதால் அவருக்கு சுமையைக் குறைக்கும் வகையில் சரியாக பயன்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்துவரக்கூடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ராவின் பங்களிப்பு தேவை என்பதையும் உணர்ந்துள்ளது நிர்வாகம். ஆதலால், பும்ரா அணியில் இடம் பெறுவது என்பது கடைசி நேரத்தில் ஆடுகளத்தின் தன்மை, காலநிலையைப் பொருத்துதான் முடிவாகும். அதேநேரம், வேகப்பந்துவரிசையில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. கடந்த டெஸ்டில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஷர்துல் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக நிதிஷ் ரெட்டி அழைக்கப்படலாம். நிதிஷ் ரெட்டி ஆஸ்திரேலியாவில் சதம் அடித்து, பந்துவீச்சிலும் ஓரளவு 5வது பந்துவீச்சாளர் பணியை சிறப்பாகச் செய்தார் என்பதால் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர் பும்ரா நிதிஷ் ரெட்டியை அணிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் நடுவரிசை பேட்டிங் இன்னும் ஸ்திரமாகும். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் தட்டையானது, பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும், கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். பும்ரா அல்லது கருண் நாயர் இல்லாத பட்சத்தில் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வரலாம். சுந்தர் வருகையால் பேட்டிங் வரிசையும் ஸ்திரமாகும், அதேநேரம் கூடுதலாக சுழற்பந்துவீச்சாளர் கிடைக்கக்கூடும். மற்றவகையில் இந்திய அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசித் கிருஷ்ணா, சிராஜ் ஆகிய இருவரும் தங்களின் எக்கானமி ரேட்டை குறைக்கும் வகையில் 2வது டெஸ்டில் பந்துவீசுவது அவசியமாகும். கடந்த டெஸ்டில் இருவரும் ஓவருக்கு 6 ரன்ரேட்டை சராசரியாக விட்டுக்கொடுத்தனர். ஐபிஎல் தொடரில்கூட இருவரும் இந்த அளவு ரன்களை வழங்கியதில்லை. கடந்த டெஸ்டில் வெற்றி இந்திய அணியிடம் கைநழுவி சென்றதற்கு பந்துவீச்சில் சொதப்பியது முக்கியக் காரணமாகும். அதேசமயம், பீல்டிங்கிலும் கடந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் மோசமாக செயல்பட்டு பல கேட்சுகளை கோட்டைவிட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு டெஸ்டில் அதிக கேட்சுகளை தவறவிட்ட அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் வந்தது. ஜெய்ஸ்வால், மட்டும் 3 கேட்சுகளை கோட்டைவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக தீவிரமான ஸ்லிப் கேட்ச் பயிற்சியில் ஜெய்ஸ்வால் ஈடுபட்டார். இந்த டெஸ்டில் பீல்டிங்கில், குறிப்பாக கேட்ச் பிடிப்பதில் கூடுதல் கவனத்தை இந்திய வீரர்கள் செலுத்துவது அவசியமாகும். ஆடுகளம் எப்படி உள்ளது? பிர்மிங்ஹாமில் இருக்கும் எட்ஜ்பாஸ்டன் மைதானம் வரலாற்று ரீதியாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக் கூடியது. இங்கு நிலவும் காற்று, காலநிலையால் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய முடியும். ஆனால், இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக மாறிவிட்டன. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆடுகளத்தில் இருக்கும் புற்கள் வெட்டி குறைக்கப்படும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று 2வது டெஸ்ட் போட்டியும் இரு அணிகளின் பேட்டர்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கக்கூடும். முதல் இருநாட்களில் காலநிலையை நன்கு பயன்படுத்தினால் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய இயலும், நன்கு பவுன்ஸ் செய்யலாம். அதிலும் டியூக் பந்தில் தொடக்கத்தில் 30 ஓவர்கள் வரை டாப்ஆர்டர் பேட்டர்கள் நிதானமாக பந்து சற்று தேயும் வரை ஆடுவது அவசியமாகும். ஆனால், பெரும்பாலும் 3வது நாளில் இருந்து ஆடுகளம் வறண்டு இருக்கும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்கள் கை ஓங்கக்கூடும். குளிர்ந்த காலநிலை, மழை சூழல், காற்றின் வேகம் ஆகியவற்றைப் பொருத்து வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தும் தன்மை மாறக்கூடும். முதல் நாளிலும், கடைசி நாள் ஆட்டத்திலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடைசி நாளில் ஆடுகளத்தில் இருக்கும் வெடிப்புகள், பிளவுகளால் பந்து திடீரென பவுஸ்ஆகலாம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதுதான் இந்த மைதானத்தில் சிறந்ததாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ljj2yyz80o
5 days 11 hours ago
செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் : சமூக செயற்பாட்டாளரான சகோதர மொழி இளைஞன் 02 JUL, 2025 | 10:14 AM யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் அகழப்படுகின்றன. இதில் சிறுவர்கள், பெரியோர்கள் என கொடூரமாக கொலை செய்யப்பட்ட 38 பேரின் எலும்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். இந்த விடயம் குறித்து சிங்கள மக்களாகிய நாங்களும் தமிழ் மக்களுடன் இணைந்து ஒன்றாக இருக்கின்றோம். யுத்த காலத்தில் ஏராளமானேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட காலமாக அவர்களை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த புதிய அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது என்னவெனில், இதற்கு ஒரு தீர்வினை வழங்குங்கள். இதனால் அமைச்சர்களுக்கும் பெரிய பிரச்சினை இருக்கின்ற அதேவேளை மக்களுக்கும் இதனால் பிரச்சினை உள்ளது. புதிய அரசாங்கத்திடம் இருந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றார். https://www.virakesari.lk/article/218985
5 days 11 hours ago
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 38 எலும்புக்கூடுகளில் குறைந்தது 10 சிறுவர்கள், குழந்தைகளுடையதென சந்தேகம்! 02 JUL, 2025 | 10:02 AM இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு அருகில், நீல நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு செருப்பு கண்டெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 38 எலும்புக்கூடுகளில், குறைந்தது 10 சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் அடங்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது நீதிமன்றத்தால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "ஏற்கனவே ஒரு பையுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு, நாள் முழுவதும் தோண்டப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது," என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் குறிப்பிடுகின்றார். ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 33 மனித எலும்புகளுக்கு மேலதிகமாக ஐந்து மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டாலும், எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தோன்றுவதால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என அவர் மேலும் கூறினார். "முழு நாள் அகழ்வுப் பணியில் சுமார் ஐந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது. குழப்பமாக காணப்படுகிறது." தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் அடையாளம் காணப்பட்டு, மனித எலும்புகள் இருக்கக்கூடிய இடங்களாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணிகள், திங்கட்கிழமை (01) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 1990 களில் செம்மணி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி கிளிபர்ட் பெரேரா அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு, அகழ்வாராய்ச்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் அகழ்வாராய்ச்சி தொடர்பான பழைய தகவல்களைப் பற்றி விவாதித்ததாகவும் சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார். செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு வரையிலான புதைகுழிகள் இருப்பதாக, செப்டம்பர் 7, 1996 அன்று பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தின் நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக்கூண்டில் இருந்தவாறு தெரிவித்திருந்தார். 1999 ஆம் ஆண்டு அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. எஞ்சிய 13 உடல்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வாராய்ச்சிகள் மே 15 ஆம் திகதி தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பமானது. https://www.virakesari.lk/article/218984
5 days 11 hours ago
பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 1 ஜூலை 2025 மகாராஷ்டிராவில் சர்ச்சைக்குரிய மும்மொழிக் கொள்கை தொடர்பான அரசாங்க ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். மும்மொழிக் கொள்கையை எந்த வகுப்பிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசின் சார்பாக நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறிய ஃபட்னாவிஸ், இந்தக் குழுவின் அறிக்கைக்குப் பிறகு, மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், "எங்களுக்கு மராத்தி முக்கியம். எங்கள் கொள்கை மராத்தியை மையமாகக் கொண்டது, அதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை" என்று ஃபட்னாவிஸ் தெரிவித்தார். நரேந்திர ஜாதவ் தலைமையிலான குழு "இந்தப் பிரச்னையில் தவறான அரசியல் நடக்கிறது. எனவே, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதித்தோம். எந்த வகுப்பிலிருந்து இந்த கொள்கையை செயல்படுத்த வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எந்த மொழியைப் பயன்படுத்த வேண்டும், மும்மொழிக் கொள்கை தொடர்பாக குழந்தைகளுக்கு என்னென்ன வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய நரேந்திர ஜாதவ் தலைமையில் மாநில அரசு சார்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார். "இந்தக் குழுவின் அறிக்கை வந்த பிறகே மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும். அதனால், 2025ம் ஆண்டு ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் வெளியான இரு அரசு உத்தரவுகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். புதிய குழு, மும்மொழிக் கொள்கையைச் சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்யும்" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார். "இந்தக் குழு மும்மொழிக் கொள்கை குறித்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட மக்களின் கருத்துகளையும் கேட்கும். அதன் பிறகு, எங்கள் மாணவர்களின் நலனுக்காக ஒரு முடிவை எடுக்கும். மாநில அரசு அந்த முடிவை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். மராத்தி (மொழி) மற்றும் மராத்தி மாணவர்கள் மட்டுமே எங்களுக்கு முக்கியம். எங்கள் கொள்கை மராத்தியை மையமாகக் கொண்டது, மராத்தி மாணவர்களை மையமாகக் கொண்டது. இதில் நாங்கள் எந்த அரசியல் செய்ய விரும்பவில்லை" என்று ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார். ஜூலை 5-ஆம் தேதி பேரணி அல்லது கூட்டம் நடைபெறும் - உத்தவ் தாக்கரே "மராத்தி மக்களின் அதிகாரத்தின் முன் அரசாங்கம் தோற்றுவிட்டது. சம்யுக்த மகாராஷ்டிரா காலத்திலும் இதேபோன்ற இயக்கம் நடந்தது, அந்த நேரத்திலும் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்தனர். அப்போது, இந்த சதியை நாங்கள் முறியடித்தோம், அதேபோல், இந்த முறையும் இந்த சதியை முறியடித்தோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார். மராத்தி மக்களைப் பிரித்து அமராதி வாக்குகளை ஈர்க்க அரசாங்கம் ஒரு மறைக்கப்பட்ட செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால், நாங்கள் மொழியை எதிர்க்கவில்லை, அதனை திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம் என்ற நியாயமான நிலைப்பாட்டை மராத்தி மொழி பேசும் மக்கள் எடுத்தனர். எனவே, மராத்திக்கும் அமராதிக்கும் இடையில் எந்தப் பிரிவும் இல்லை. இந்தப் பிரிவு தங்களுக்கு நன்மை தரும் என்று அரசாங்கம் நினைத்தது. ஆனால் இன்றைய போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 5ஆம் தேதி நடைபெறவிருந்த பேரணி தடுக்கப்படவும், மராத்தி மக்கள் ஒன்று கூடாமல் இருக்கவும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக பொய்கள் மற்றும் வதந்திகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறிவிட்டது. பொய்யான வழிகளில் வெற்றி பெறுவது பாஜகவின் தொழிலாகிவிட்டது. மராத்தி மக்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். நெருக்கடி வந்த பிறகுதான் ஒன்றாகச் சேர வேண்டுமா? என்கிற கேள்வியுடன் நான் மராத்தி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஜூலை 5ஆம் தேதி, மொழித் திணிப்புக்கு எதிராக ஒரு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் இப்போது, அதை வெற்றிப் பேரணியாக மாற்றி, அதன் வடிவத்தை முடிவு செய்யப் போகிறோம். இந்த இயக்கத்தின் போது ஒன்றாகக் கூடிய அனைத்து கட்சிகளும், ஜூலை 5ஆம் தேதி என்ன செய்ய வேண்டும் என்பதை சேர்ந்து முடிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். "அந்தக் குழுவுக்கு எந்த அர்த்தமும் இல்லை. யார் குழுவை நியமித்தாலும், அவர்கள் எங்களை கட்டாயப்படுத்த முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. யார் நியமித்தாலும், அவர்கள் எங்களை வற்புறுத்த அனுமதிக்க முடியாது. ஜூலை 5ஆம் தேதி ஒரு கூட்டம் அல்லது பேரணி இருக்கும். மராத்தி மக்களே, இப்போது உறங்க வேண்டாம். நாம் ஒன்றாக இணைத்துள்ளோம் . ஒன்றாகவே முன்னேறுவோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார். "மஷேல்கர் குழு அறிக்கையை இன்னும் வாசிக்கவே இல்லை"-உத்தவ் தாக்கரே பட மூலாதாரம்,FACEBOOK/SHIVSENA படக்குறிப்பு, "மராத்தி மக்களே, இப்போது தூங்க வேண்டாம். நாம் ஒன்றாக இணைத்துள்ளோம் . ஒன்றாகவே முன்னேறுவோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார். "மஷேல்கர் குழு அறிக்கையைப் பற்றி பேசும் பாஜகவுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் 'ரூமர் பேக்டரி' என்ற திரைப்படத்தை தயாரித்து, அதன் போஸ்டரில் தேவேந்திர ஃபட்னாவிஸின் புகைப்படத்தை வையுங்கள்" என்று மஷேல்கர் கமிட்டி அறிக்கை குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே கூறினார். "முதலமைச்சருக்கு மராத்தி மொழி புரியுமா? இந்தக் குழு முதலில் உயர் கல்விக்காகவே நியமிக்கப்பட்டது. அப்போது உதய் சமந்த் உயர்கல்வி அமைச்சராக இருந்தார். அந்தக் குழுவில் தொடக்கக் கல்வி தொடர்பான யாரும் இல்லை. இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதை செயல்படுத்த வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்ய எனது தலைமையில் ஒரு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் எங்கள் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டதால், அந்த அறிக்கையின் பக்கத்தைக் கூட என்னால் திருப்ப முடியவில்லை. முதலமைச்சர் மராத்தியை கற்றுக்கொண்டு, அதைப் படித்த பிறகுதான் விமர்சிக்க வேண்டும். ஏனெனில் நான் அந்த அறிக்கையை இன்னும் படிக்கவே இல்லை" என்று உத்தவ் தாக்கரே கூறினார். மேலும், "தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அந்த அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு உருவாக்கப்பட்ட ஆய்வுக் குழு ஒரு கூட்டத்தைக் கூட நடத்தவில்லை. அந்த அறிக்கையில் என்ன இருந்தாலும், இந்தியை கட்டாயமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அந்த நேரத்தில் அவர்கள் துரோகம் செய்து எங்கள் அரசாங்கத்தை கவிழ்த்தனர்" என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். "ஒரு நெருக்கடிக்குப் பிறகு ஒன்று சேர்வதற்குப் பதிலாக, அது நடப்பதற்கு முன்பு நாம் ஒன்று சேர்ந்தால், எந்த நெருக்கடியும் இருக்காது. தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைவார்கள் என அரசாங்கம் பயந்ததால் தான் இந்த உத்தரவை ரத்து செய்தது" என்று தாக்கரே கூறினார். இந்தி பற்றிப் பேசிய உத்தவ் தாக்கரே, "நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி பேசும் மாநிலங்களில் இந்திக்கும், குஜராத்தில் குஜராத்திக்கும், மகாராஷ்டிராவில் மராத்திக்கும் நீதி கிடைக்க வேண்டும். மக்களுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் இவர்கள் தங்களை சாணக்கியர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்" என்றார். "அரசாங்கத்துக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது?" - ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் இந்த விவகாரம் தொடர்பான சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். "ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகளைக் கற்பித்தல் என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் முடிவு நிரந்தரமாகத் திரும்பப் பெறப்பட்டது. இது தொடர்பாக, அரசாங்கம் இரண்டு அரசாணைகளை ரத்து செய்துள்ளது. இதைத் தாமதமாக பெறப்பட்ட ஞானம் என்று சொல்ல முடியாது, ஏனெனில் மராத்தி மக்களின் எதிர்ப்பினால் மட்டுமே இது திரும்பப் பெறப்பட்டது" என்று ராஜ் தாக்கரே பதிவிட்டுள்ளார். அரசாங்கம் இந்தி மொழியை இவ்வளவு பிடிவாதமாக திணிக்க முயன்றதற்கும், அதற்கான அழுத்தம் எங்கிருந்து வந்தது என்பதும் இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சார்பில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்ட போது, பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அதில் பங்கேற்கத் தயாராக இருந்தன. அந்தப் பேரணி நடந்திருந்தால், அது மிகப் பெரிதாக இருந்திருக்கும். அது சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் நாட்களை நமக்கு நினைவூட்டியிருக்கும். ஒருவேளை இந்த ஒற்றுமையால் அரசாங்கம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பரவாயில்லை. அப்படி ஒரு பயம் இருக்கவேண்டும்" என்று ராஜ் தாக்கரே கூறினார். ராஜ் தாக்கரே தொடர்ந்து பேசுகையில், "இன்னொரு விஷயம், அரசாங்கம் மீண்டும் ஒரு புதிய குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு அறிக்கை வெளிவருகிறதோ, இல்லையோ, ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் சகித்துக்கொள்ளப்படாது. அரசாங்கம் இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இந்த முடிவு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம், மகாராஷ்டிர மக்களும் அவ்வாறே எண்ணுகின்றனர். " என்றும் அவர் கூறினார். தாக்கரே சகோதரர்களின் ஐக்கிய முன்னணி தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவால் மும்பையில் நேற்று (ஜூன் 30) ஒரு அடையாள ஹோலி போராட்டம் நடத்தப்பட்டது. வரும் வாரத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா மற்றும் சிவசேனா (தாக்கரே) ஆகியவை ஒன்றிணையும், இதன் விளைவாக, ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரும் 'இந்தி சக்தி'யை எதிர்க்க ஒன்றிணைவார்கள். ஏற்கெனவே, தாக்கரே சகோதரர்களின் கூட்டு இயக்கம் உட்பட இந்தி மொழி திணிப்பு தொடர்பான பிரச்னை மகாராஷ்டிரா அரசியலைக் கிளறி வருகிறது. 'இந்தி கட்டாயம்' குறித்த சர்ச்சை தேசிய கல்விக் கொள்கையின்படி, மகாராஷ்டிராவில் முதலாம் வகுப்பிலிருந்தே மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவும், இந்தி மொழியை மூன்றாம் மொழியாக 'கட்டாயமாக்க'வும் மாநில அரசு ஏப்ரல் மாதம் முடிவு செய்தது. இருப்பினும், மாநிலம் முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் அதே மாதத்தில், ஜூன் மாதத்தில் 'கட்டாய' என்ற வார்த்தையை திரும்பப் பெற்று, 'பொது' என்ற வார்த்தையைச் சேர்த்து திருத்தப்பட்ட அரசாங்க முடிவை வெளியிட்டது. இருப்பினும், மூன்றாவது மொழியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகள், 'மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்காமல் வேறு இந்திய மொழியைக் கற்க விருப்பம் இருந்தால், ஒப்புதல் வழங்கப்படும். இருப்பினும், இந்த மொழியைக் கற்க விரும்புவோரின் எண்ணிக்கை குறைந்தது 20 ஆக இருக்க வேண்டும், அப்போதுதான் ஒரு ஆசிரியர் கிடைக்கப் பெறுவார், இல்லையெனில் அது ஆன்லைனில் கற்பிக்கப்படும்.' இந்த 'திருத்தப்பட்ட' அரசாங்க முடிவுக்கு கல்வித் துறை வல்லுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e007l478zo
5 days 11 hours ago
Published By: VISHNU 02 JUL, 2025 | 01:53 AM பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஐந்தரை நாட்கள் முடிவடைந்தது. இன்றைய நாளில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலை புத்தகப்பையோடு இருந்த மனித உடல் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. அகழ்ந்தெடுக்கும் பொழுது சிறு குழந்தையின் உடலுடன் சப்பாத்து குழந்தை விளையாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நாள் முழுவதும் நடந்த அகழ்வுப் பணியில் ஐந்து வரையான மனித எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. அதனுடைய எண்ணிக்கையை சொல்ல முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. பழைய செம்மணி புதைகுழி வழக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சட்ட வைத்திய அதிகாரி அகழ்வு நடந்த பிரதேசத்திற்கு இன்று வருகை தந்தார். தற்போது அகழ்வு பணியில் ஈடுபடும் சட்ட வைத்திய அதிகாரியோடு பேசி கடந்த அகழ்வு பணி தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார். பழைய செம்மணி வழக்கும் புதிய செம்மணி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது. ஏற்கனவே தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா குழுவினரால் அடையாளப்படுத்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான பகுதிகள் நீதிமன்ற அனுமதிக்கமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய தொல்லியல் துறை மாணவர்களின் உதவியுடன் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் சேர்ந்து தற்போது துப்பரவாக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/218978
5 days 11 hours ago
Published By: VISHNU
02 JUL, 2025 | 01:53 AM

பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஐந்தரை நாட்கள் முடிவடைந்தது. இன்றைய நாளில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலை புத்தகப்பையோடு இருந்த மனித உடல் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.
அகழ்ந்தெடுக்கும் பொழுது சிறு குழந்தையின் உடலுடன் சப்பாத்து குழந்தை விளையாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாள் முழுவதும் நடந்த அகழ்வுப் பணியில் ஐந்து வரையான மனித எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. அதனுடைய எண்ணிக்கையை சொல்ல முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
பழைய செம்மணி புதைகுழி வழக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சட்ட வைத்திய அதிகாரி அகழ்வு நடந்த பிரதேசத்திற்கு இன்று வருகை தந்தார். தற்போது அகழ்வு பணியில் ஈடுபடும் சட்ட வைத்திய அதிகாரியோடு பேசி கடந்த அகழ்வு பணி தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார்.
பழைய செம்மணி வழக்கும் புதிய செம்மணி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது.
ஏற்கனவே தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா குழுவினரால் அடையாளப்படுத்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான பகுதிகள் நீதிமன்ற அனுமதிக்கமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய தொல்லியல் துறை மாணவர்களின் உதவியுடன் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் சேர்ந்து தற்போது துப்பரவாக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
https://www.virakesari.lk/article/218978
5 days 11 hours ago
'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, காவலாளி அஜித் குமாரும் அவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் இடமும் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் "என் கண் எதிரிலேயே அவனை அடித்தார்கள். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். வாயில் மிளகாய் பொடியை கரைத்து ஊற்றினார்கள். கோவிலின் பின்புறம் கூட்டிப் போய் நகை எங்கே என்று கேட்டு அடித்தனர். அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டான்" எனக் கூறி கண்கலங்கினார், காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார். "எங்கள் புகாரால் ஓர் உயிர் பறிபோகும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை" என்கிறார், காவலாளி மீது புகார் கொடுத்த நிகிதா. திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் போட்டுக் காண்பித்தனர். கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அவரது சொந்த ஊரான மடப்புரம் கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் மடப்புரம் அமைந்துள்ளது. 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு விவசாயம் மற்றும் அவை சார்ந்த கூலி தொழில்கள் பிரதானமாக உள்ளன. மடப்புரம் கிராமத்தில் என்ன நிலவரம்? மடப்புரம் கிராமத்துக்கு பிபிசி தமிழ் சென்ற போது, கோவிலைச் சுற்றி கடை வைத்திருந்த வணிகர்கள் பலரும் பேசவே தயங்கினர். ஒரு சில பெண்கள், "நாங்கள் வெளியூரில் இருந்து வந்து வியாபாரம் செய்கிறோம். போலீஸ் அடித்து அந்தப் பையன் இறந்துபோன தகவலைக் கேள்விப்பட்டோம். அவர் யாருடனும் சண்டை போட்டு நாங்கள் பார்த்ததில்லை" எனக் கூறினர். கோவிலுக்கு அருகில் பூ வியாபாரம் செய்து வரும் ஆறுமுகத்தாய் பிபிசி தமிழிடம் பேசும்போது, "இந்த வழியாக அந்தப் பையன் வேலைக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். அன்றைக்கு போலீஸ் அழைத்துக் கொண்டு போனதாக கூறினார்கள். போலீஸ் அடித்ததை நான் பார்க்கவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு பிபிசி தமிழ் சென்றது. மிகப் பழைமையான அந்த வீடு அமைந்துள்ள தெருவில் சில அரசியல் கட்சி நிர்வாகிகளின் கார்கள் நின்றிருந்தன. படக்குறிப்பு, மாலதி "சடலமாக வருவான் என நினைக்கவில்லை" அஜித்குமாரின் தாய் மாலதியிடம் பிபிசி தமிழ் பேசுகையில், "சாமி கும்பிட வந்த ஒரு பெண், தனது காரை பார்க்கிங் செய்வதற்காக சாவியை என் மகனிடம் கொடுத்துள்ளார். அவன் தனக்குத் தெரிந்தவர்களிடம் சாவியைக் கொடுத்துள்ளான். சாமி கும்பிட்டுவிட்டுக் கிளம்பி போன அவர்கள், திரும்பி வந்து நகையைக் காணவில்லை எனக் கூறி கோவில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்" என்றார். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 9.5 சவரன் நகை மற்றும் 2,500 ரூபாய் பணத்தைக் காணவில்லை என்று கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் அஜித்குமாரை திருப்புவனம் போலீஸார் விசாரித்துள்ளனர். "மாலை நான்கு மணியளவில் என் மகனை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருப்பது தெரிந்தது. அங்கு அவனிடம், 'அரிசி மாவு ஆட்டி உங்களை எல்லாம் காப்பாத்தினேன். நகை எடுத்திருந்தால் கொடுத்துவிடு' எனக் கூறி அழுதேன். நான் எடுக்கவில்லை எனக் கூறினான். அங்கிருந்து போலீஸார் என்னை விரட்டிவிட்டனர்" எனக் கூறினார் மாலதி. "மறுநாள் என் மகனை சடலமாகக் கொடுப்பார்கள் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை" என்றவாறு மாலதி கதறி அழுதார். இவரது கணவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாவு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். நிகிதா கொடுத்த புகாரின்பேரில் ஜூன் 28ஆம் தேதி காலையில் அஜித்குமாரின் வீட்டுக்கு போலீஸார் சென்றுள்ளனர். படக்குறிப்பு, நவீன்குமார் "மிளகாய் பொடியை கரைத்து ஊற்றினர்" "தனிப்படை காவலர்கள் 3 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். வெளியில் இருந்த வேனில் என் அண்ணன் இருந்தான். சட்டை எல்லாம் மண்ணாக இருந்தது. தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது நன்றாக அடித்துள்ளனர் எனத் தெரிந்தது" என்று அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் கூறினார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரவு முழுக்க என் அண்ணனை தூங்கவிடவில்லை. 'உன் தம்பியை அடித்தால் சொல்வாயா?' எனக் கேட்டு என்னையும் அடித்தனர். மதியம் சாப்பிட்ட பிறகு 3 தனிப்படை போலீஸார் அண்ணனை கடுமையாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் நகையை எடுத்ததாக கூறியுள்ளான்" என்கிறார். கோவிலின் பின்புறம் நகை உள்ளதாகக் கூறியதால் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அங்கு அழைத்து சென்றுள்ளனர். " அங்கு நகை இல்லை எனத் தெரிந்ததும் கோபப்பட்டு காவலர்கள் கடுமையாக அடித்தனர். அவனது அலறல் சத்தம் கேட்டு கோவில் அருகே கடை வைத்திருந்த வியாபாரிகள் ஓடிவந்தனர்" எனக் கூறினார். "போகும் போது என் அண்ணன் நடந்து போனான். வரும்போது தூக்கிக் கொண்டு வந்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது மிளகாய்ப் பொடியை கரைத்து வாயில் ஊற்றினர். அருகில் கம்பியெல்லாம் கிடந்தது. கடைசியாக என் சட்டையை கழட்டிக் கொடுத்தேன்." எனக் கூறி கண்கலங்கினார், நவீன்குமார். கோவிலின் பின்புறத்தில் அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாட்டுத்தொழுவத்துக்கு பிபிசி தமிழ் சென்றது. சுற்றிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு அந்த இடமே சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அரசு வேலை மற்றும் நிவாரண உதவிகளை தருகிறோம் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாக வெளியில் பேசப்படும் தகவல் குறித்து நவீன்குமாரிடம் கேட்டபோது, "அரசு தரப்பில் உதவி செய்வதாகக் கூறினர். ஆனால், அப்படி எந்த உதவிகளும் வரவில்லை" எனக் குறிப்பிட்டார். "அஜித்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாது. அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்களிடம் சாவியைக் கொடுத்ததாகக் கூறினான்." என்று அவரது நண்பரும் அவருடன் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிபவருமான வினோத் கூறினார். காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படும் 5 பேரில் வினோத்தும் ஒருவர். அவர் குறிப்பிடும் இரு ஆட்டோ டிரைவர்களும் காவல்துறை அழைத்துச் சென்ற 5 பேரில் அடங்குவர் என்று வினோத் கூறினார். படக்குறிப்பு, வினோத் காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் அங்கிருந்து திருப்புவனம் காவல் நிலையத்துக்கு பிபிசி தமிழ் சென்றபோது, குடும்பம் சகிதமாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய அவர்கள், "நன்றாக வேலை பார்த்ததாக உயர் அதிகாரிகள் நற்சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். அதை வைத்து எங்கள் குழந்தைகளை வளர்க்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினர். "இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பங்களுக்கும் நியாயம் வேண்டும்" என்று குறிப்பிட்ட அவர்கள், " உயர் அதிகாரிகள் கூறும் போது கீழே உள்ளவர்கள் அதைக் கேட்டு செயல்படத்தான் செய்வார்கள். அந்தப் பையனுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை" எனக் கூறினர். ஆனால், உரிய அனுமதியின்றி காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியதாகக் கூறி அவர்களை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர். படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம் "மூன்று மாதங்களாக சம்பளம் வரவில்லை" "பத்தாவது படித்த பிறகு தனியார் கம்பெனியில் என் அண்ணன் வேலை பார்த்து வந்தான். கோவிலில் காவலாளி பணி உள்ளதாகக் கூறியதால் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு தற்காலிகமாக வேலை பார்த்து வந்தான். மூன்று மாதங்களாக அந்த சம்பளமும் கொடுக்கப்படவில்லை" எனக் கூறுகிறார், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார். கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்த பெண்ணின் மேலிட செல்வாக்கு காரணமாகவே தன் அண்ணனை காவல்துறை தாக்கியதாக அவர் குற்றம் சுமத்தினார். புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஓர் உயிர் போனதில் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். இப்படி நடக்கும் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினால் அழைத்து விசாரிப்பார்கள் என்று தான் தெரியும். காவலாளி இறந்தது கூட எங்களுக்குத் தெரியாது" எனக் கூறுகிறார். தானும் 76 வயதான தாய் மட்டுமே வசித்து வருவதாகக் கூறும் அவர், "எனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறுவது தவறானது. ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக சார்பாய்வாளரிடம் புகார் கொடுத்தேன். மதியம் 2.30 மணிக்கு சென்று மாலை 7 மணிக்கு தான் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தோம்" என்கிறார். "நகையை பின்சீட்டில் வைத்திருந்ததாகக் கூறுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?" என்று கேட்டபோது, "என் தாயார் வயதானவர் என்பதால் யாரும் பறித்துவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக காரின் பின்சீட்டில் வைத்துவிட்டுச் சென்றேன். வேண்டும் என்றே செய்யவில்லை" எனக் கூறுகிறார். "என் நகையை இறந்து போன காவலாளி எடுத்திருப்பாரா என உறுதியாக தெரியாது. என்னிடம் சாவி வாங்கிச் சென்றது அவர் தான். அதைத் தான் கூறினேன். எங்களுக்குக் கடவுளைத் தவிர வேறு யாரையும் தெரியாது" என்கிறார் நிகிதா. படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடம் விசாரணை நடந்த காட்சி (இடது), காவலாளி அஜித்குமார் (வலது) "எந்த அதிகாரமும் இல்லை" - ஆஷிஷ் ராவத் காவல்துறை மீதான விமர்சனங்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் ராவத்திடம் விளக்கம் பெறுவதற்காக பிபிசி தமிழ் நேரில் சென்றது. "புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டதால், தற்போது தனக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று மட்டும் அவரது தரப்பு பதிலாக பிபிசி தமிழுக்கு சொல்லப்பட்டது. அஜித்குமார் மரண வழக்கு உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது பெரும் திருப்பமாக அமைந்தது. 5 காவலர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுவிட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgk3ryvpekzo
5 days 13 hours ago
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 06 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 06 / 'விஜயாவின் தந்தை சிங்கபாகு (சிங்க = சிங்கம், பாகு = கை) யார்?' விஜயனின் தந்தை சிங்கபாகுவின்பிறப்பு உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது. சிங்கபாகுவும் அவரது சகோதரி சிங்ஹசீவலியும் (சீவாலி / சிங்கவல்லி) சிங்கத்திற்கும் மனித இளவரசிக்கும் பிறந்தவர்கள். சிங்கம் மற்றும் மனிதர்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை பொருந்தவில்லை. ஆகவே, எந்த சந்ததியும் இருந்திருக்க முடியாது. அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே தகாத திருமணம் மூலம், அவர்களுக்கு முப்பத்திரண்டு மகன்கள் பிறந்ததாக தீபவம்சம் கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளாக பிறந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இந்த கதை வடகிழக்கு இந்தியாவில் நடந்தது என்று கூறியிருந்தாலும், இந்தியாவின், அந்தப் பகுதிகளில், இந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை? விஜயா மற்றும் சுமித்தா இரட்டையர்களில் மூத்தவர்கள். மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இப்படியான, காணாமல் போகும் சம்பவங்கள், இந்த நூல்களில் அடிக்கடி நிகழ்கிறது. பதினாறு இரட்டையர்களின் கதை அம்பத்தாவின் புத்த புராணத்திலிருந்து [Buddhist Legend of Ambattha] நகலெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கு, அந்த புராணத்தில், நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகளுக்கு இடையே திருமணங்கள் நடந்தன. ஐந்து சகோதரிகள் இருந்தனர், மூத்தவர் திருமணம் செய்து கொள்ள யாரும் இல்லாமல் இருந்தார். அவள் தொழுநோயால் பாதிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டாள். அதே நேரத்தில் பெனாரஸின் [காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி] மற்றொரு மன்னரான ராமரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் காட்டில் சில இலைகளை சாப்பிட்டு, தொழுநோயை குணப்படுத்தினார். அவ்வேளையில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூத்த சகோதரியை தற்செயலாக அவர் சந்திக்க நேர்ந்தது. தகுந்த இலைகளை உண்ணுமாறு ராமர் அவளுக்கு அறிவுறுத்தியதால், அவளும் நோய் நீங்கினாள். அவர்கள் பின்னர் திருமணம் செய்து பதினாறு இரட்டையர்களைப் பெற்றனர். மேலும், இரண்டு கதைகளும் புத்தர் பழங்குடியினரை விஜயனின் பழங்குடியினருடன் இணைக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதா அல்லது அந்த கதையில் இருந்து பதினாறு இரட்டையர்களைப் பற்றிய நகலெடுக்கப்பட்டதா? எனக்குப் புரியவில்லை. இராசாவலிய இதை விவரிக்கிறது. இராசாவலியின் பக்கங்கள் 10 முதல் 13 வரை பார்க்கவும் [அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு சகோதரிகளில் ஒருவரை மனைவியாகக் கொண்டு, மூத்த சகோதரியைத் தங்கள் தாயாகக் கருதி, அரச அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேற்கூறிய நான்கு இளவரசர்களின் மூத்த சகோதரி தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கிடையில், பாரனேஸ்? [city of Baranes?] நகரத்தில் ஆட்சி செய்த மன்னன் ராமன், தொழுநோயால் பாதிக்கப்பட்டு, தனது மகனுக்கு அரியணையை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு காட்டில் நுழைந்து, இறக்கத் தீர்மானித்தார். குழிக்குள் ஒரு மனிதனைப் பார்த்து அவர் "நீங்கள் யார்?" என்று கேட்டார். "நான் ஒரு பெண்," என்று பதில் வந்தது, இப்படி கதை தொடர்கிறது.]. மேலும் பண்டைய இலங்கை நாளிதழ்கள் முழுவதிலும் ஒரு கொடூரமான தர்க்கமும் காணப்படுகிறது. அது எவ்வளவு கெட்டவராக இருந்தாலும் அல்லது தீயவராக இருந்தாலும், அவர் புத்த மதத்திற்கு மாறிய தருணத்தில் அவர் மகிமைப்படுத்தப்படுவார் என்பதே ஆகும்; முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன. புத்தரின் அனைத்து நினைவுச்சின்னங்களும், இந்த கொடூரமான தர்க்கத்தைக் கேட்டு, அவர்களின் புனித நினைவுச் சின்னங்களுக்கான கொள்கலன்களில் [reliquaries], அழுது நெளிந்து கொண்டிருக்கும் என்று எண்ணுகிறேன்! Part:06 / 'Who is Vijaya’s father, Sinhabahu (Sinha = Lion, Bahu = Arm)?' The birth of Vijaya’s father, Sihabahu, is biologically impossible. Sihabahu and his sister Sihasivali (Sivali) are born to a lion and to a human princess. The number of chromosomes in lion and humans do not match, and there could not have been any offspring, an illogical invention. There is an incestuous marriage between the brother and the sister. The Dipavamsa says they had thirty-two sons, but the Mahavamsa says that they had twins sixteen times. The narration took place North-Eastern India, and there is no mention of these events in that part of India. Vijaya and Sumitta was the eldest of the twins. There is no information about what happened to the rest. This happens very often in the chronicles. The story of sixteen twins must have been copied from the Buddhist Legend of Ambattha. There, in that legend, also incestuous marriages took place between four brothers and four sisters. There were five sisters and the elder one was without any one to marry. She became afflicted with leprosy and she was left in a jungle. At the same time another king of Benares, Rama, was also afflicted with leprosy. He happened to eat some leaves in the jungle, and cured of leprosy. He happened to meet the elder sister who was afflicted similarly with leprosy, a happy coincidence again. Rama advised her to eat the appropriate leaves and she too became cured of the disease. They then married and had sixteen twins, all boys. The incestuous marriage and having sixteen twins seems to be quite regular in the chronicles. Also, both story may be easily guessed that an attempt has been made to link Buddha tribe with the tribe of Vijaya and followers of both sides or just copied? Rajavaliya narrates this, but not as the legend of Ambattha. See the pages 10 to 13 of the Rajavaliya. There is a cruel logic running throughout the Lanka chronicles that however bad or evil one may be, but he would be glorified the moment he converted to the Buddhism; all the sins committed earlier are washed off. All the relics of the Buddha’s must be writhing in their reliquaries on this cruel logic! நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 07 தொடரும் / Will Follow
5 days 13 hours ago
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 06
[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]
பகுதி: 06 / 'விஜயாவின் தந்தை சிங்கபாகு (சிங்க = சிங்கம், பாகு = கை) யார்?'
விஜயனின் தந்தை சிங்கபாகுவின்பிறப்பு உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது. சிங்கபாகுவும் அவரது சகோதரி சிங்ஹசீவலியும் (சீவாலி / சிங்கவல்லி) சிங்கத்திற்கும் மனித இளவரசிக்கும் பிறந்தவர்கள். சிங்கம் மற்றும் மனிதர்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை பொருந்தவில்லை. ஆகவே, எந்த சந்ததியும் இருந்திருக்க முடியாது. அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே தகாத திருமணம் மூலம், அவர்களுக்கு முப்பத்திரண்டு மகன்கள் பிறந்ததாக தீபவம்சம் கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளாக பிறந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இந்த கதை வடகிழக்கு இந்தியாவில் நடந்தது என்று கூறியிருந்தாலும், இந்தியாவின், அந்தப் பகுதிகளில், இந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை? விஜயா மற்றும் சுமித்தா இரட்டையர்களில் மூத்தவர்கள். மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இப்படியான, காணாமல் போகும் சம்பவங்கள், இந்த நூல்களில் அடிக்கடி நிகழ்கிறது.
பதினாறு இரட்டையர்களின் கதை அம்பத்தாவின் புத்த புராணத்திலிருந்து [Buddhist Legend of Ambattha] நகலெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கு, அந்த புராணத்தில், நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகளுக்கு இடையே திருமணங்கள் நடந்தன. ஐந்து சகோதரிகள் இருந்தனர், மூத்தவர் திருமணம் செய்து கொள்ள யாரும் இல்லாமல் இருந்தார். அவள் தொழுநோயால் பாதிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டாள். அதே நேரத்தில் பெனாரஸின் [காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி] மற்றொரு மன்னரான ராமரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் காட்டில் சில இலைகளை சாப்பிட்டு, தொழுநோயை குணப்படுத்தினார். அவ்வேளையில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூத்த சகோதரியை தற்செயலாக அவர் சந்திக்க நேர்ந்தது. தகுந்த இலைகளை உண்ணுமாறு ராமர் அவளுக்கு அறிவுறுத்தியதால், அவளும் நோய் நீங்கினாள். அவர்கள் பின்னர் திருமணம் செய்து பதினாறு இரட்டையர்களைப் பெற்றனர். மேலும், இரண்டு கதைகளும் புத்தர் பழங்குடியினரை விஜயனின் பழங்குடியினருடன் இணைக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதா அல்லது அந்த கதையில் இருந்து பதினாறு இரட்டையர்களைப் பற்றிய நகலெடுக்கப்பட்டதா? எனக்குப் புரியவில்லை. இராசாவலிய இதை விவரிக்கிறது. இராசாவலியின் பக்கங்கள் 10 முதல் 13 வரை பார்க்கவும்
[அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு சகோதரிகளில் ஒருவரை மனைவியாகக் கொண்டு, மூத்த சகோதரியைத் தங்கள் தாயாகக் கருதி, அரச அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேற்கூறிய நான்கு இளவரசர்களின் மூத்த சகோதரி தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கிடையில், பாரனேஸ்? [city of Baranes?] நகரத்தில் ஆட்சி செய்த மன்னன் ராமன், தொழுநோயால் பாதிக்கப்பட்டு, தனது மகனுக்கு அரியணையை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு காட்டில் நுழைந்து, இறக்கத் தீர்மானித்தார். குழிக்குள் ஒரு மனிதனைப் பார்த்து அவர் "நீங்கள் யார்?" என்று கேட்டார். "நான் ஒரு பெண்," என்று பதில் வந்தது, இப்படி கதை தொடர்கிறது.].
மேலும் பண்டைய இலங்கை நாளிதழ்கள் முழுவதிலும் ஒரு கொடூரமான தர்க்கமும் காணப்படுகிறது. அது எவ்வளவு கெட்டவராக இருந்தாலும் அல்லது தீயவராக இருந்தாலும், அவர் புத்த மதத்திற்கு மாறிய தருணத்தில் அவர் மகிமைப்படுத்தப்படுவார் என்பதே ஆகும்; முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன. புத்தரின் அனைத்து நினைவுச்சின்னங்களும், இந்த கொடூரமான தர்க்கத்தைக் கேட்டு, அவர்களின் புனித நினைவுச் சின்னங்களுக்கான கொள்கலன்களில் [reliquaries], அழுது நெளிந்து கொண்டிருக்கும் என்று எண்ணுகிறேன்!
Part:06 / 'Who is Vijaya’s father, Sinhabahu (Sinha = Lion, Bahu = Arm)?'
The birth of Vijaya’s father, Sihabahu, is biologically impossible. Sihabahu and his sister Sihasivali (Sivali) are born to a lion and to a human princess. The number of chromosomes in lion and humans do not match, and there could not have been any offspring, an illogical invention. There is an incestuous marriage between the brother and the sister. The Dipavamsa says they had thirty-two sons, but the Mahavamsa says that they had twins sixteen times. The narration took place North-Eastern India, and there is no mention of these events in that part of India. Vijaya and Sumitta was the eldest of the twins. There is no information about what happened to the rest. This happens very often in the chronicles.
The story of sixteen twins must have been copied from the Buddhist Legend of Ambattha. There, in that legend, also incestuous marriages took place between four brothers and four sisters. There were five sisters and the elder one was without any one to marry. She became afflicted with leprosy and she was left in a jungle. At the same time another king of Benares, Rama, was also afflicted with leprosy. He happened to eat some leaves in the jungle, and cured of leprosy. He happened to meet the elder sister who was afflicted similarly with leprosy, a happy coincidence again. Rama advised her to eat the appropriate leaves and she too became cured of the disease. They then married and had sixteen twins, all boys. The incestuous marriage and having sixteen twins seems to be quite regular in the chronicles. Also, both story may be easily guessed that an attempt has been made to link Buddha tribe with the tribe of Vijaya and followers of both sides or just copied? Rajavaliya narrates this, but not as the legend of Ambattha. See the pages 10 to 13 of the Rajavaliya. There is a cruel logic running throughout the Lanka chronicles that however bad or evil one may be, but he would be glorified the moment he converted to the Buddhism; all the sins committed earlier are washed off. All the relics of the Buddha’s must be writhing in their reliquaries on this cruel logic!
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 07 தொடரும் / Will Follow
5 days 13 hours ago
5 days 13 hours ago
5 days 14 hours ago
ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தலுக்கு அனுமதி! நாடு முழுவதும் ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டாய சீட் பெல்ட் பயன்பாடு குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தைத் தொடர்ந்து, கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கூறிய அவர், இந்த முன்மொழிவுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது, குருநாகல் மற்றும் அனுராதபுரம் இடையே மட்டுமே ஆன்லைன் அபராதம் செலுத்தும் முறை உள்ளது. இப்போது, அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் மொபைல் சாதனங்களை வழங்குகிறோம். இதனால் இந்த ஆண்டு முதல், போக்குவரத்து அபராதங்களை மொபைல் போன்கள் மூலம் எங்கிருந்தும் செலுத்த முடியும் – என்றும் கூறினார். https://athavannews.com/2025/1437827
5 days 14 hours ago

ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தலுக்கு அனுமதி!
நாடு முழுவதும் ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டாய சீட் பெல்ட் பயன்பாடு குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தைத் தொடர்ந்து, கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கூறிய அவர்,
இந்த முன்மொழிவுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தற்போது, குருநாகல் மற்றும் அனுராதபுரம் இடையே மட்டுமே ஆன்லைன் அபராதம் செலுத்தும் முறை உள்ளது.
இப்போது, அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் மொபைல் சாதனங்களை வழங்குகிறோம்.
இதனால் இந்த ஆண்டு முதல், போக்குவரத்து அபராதங்களை மொபைல் போன்கள் மூலம் எங்கிருந்தும் செலுத்த முடியும் – என்றும் கூறினார்.
https://athavannews.com/2025/1437827
5 days 14 hours ago
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை! கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 138,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் காட்டுகின்றன. இது 2024 ஜூன் மாதத்தில் வந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 21.8% அதிகமாகும். SLTDA வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து மொத்தம் 37,934 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 27.4% ஆகும். மேலும், இங்கிலாந்திலிருந்து 11,628 பேரும், சீனாவிலிருந்து 8,804 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,299 பேரும், பாகிஸ்தானியர் 6,833 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 ஆக உள்ளது. அவர்களில், 241,994 பேர் இந்தியாவிலிருந்தும், 112,312 பேர் ரஷ்யாவிலிருந்தும், 107,902 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என்று SLTDA குறிப்பிட்டது. https://athavannews.com/2025/1437830
5 days 14 hours ago

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 138,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் காட்டுகின்றன.
இது 2024 ஜூன் மாதத்தில் வந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 21.8% அதிகமாகும்.
SLTDA வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி,
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து மொத்தம் 37,934 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 27.4% ஆகும்.
மேலும், இங்கிலாந்திலிருந்து 11,628 பேரும், சீனாவிலிருந்து 8,804 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,299 பேரும், பாகிஸ்தானியர் 6,833 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 ஆக உள்ளது.
அவர்களில், 241,994 பேர் இந்தியாவிலிருந்தும், 112,312 பேர் ரஷ்யாவிலிருந்தும், 107,902 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என்று SLTDA குறிப்பிட்டது.
https://athavannews.com/2025/1437830