Aggregator
பயந்தாங்கொள்ளி
பயந்தாங்கொள்ளி
பயந்தாங்கொள்ளி
துணுக்காயில் இருந்தது இந்திய இலங்கை படைமுகாமே! மக்களின் வாக்குமூலம்
வணக்கம்
பயந்தாங்கொள்ளி
'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
பயந்தாங்கொள்ளி
E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை விரைவில் செயல்படுத்த திட்டம்!
E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை விரைவில் செயல்படுத்த திட்டம்!
E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை விரைவில் செயல்படுத்த திட்டம்!
தென் கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதற்கான திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, அந்த அனுமதி கிடைத்த பிறகு, தென் கொரியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படும், பின்னர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, தென் கொரியாவில் 04 மாகாணங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைளில் கையெழுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இம்மாதம் 10 ஆம் திகதிக்குள் அவை கையெழுத்திடப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘ஜூலை மாத இறுதிக்குள் E-8 விசா பிரிவின் கீழ் முதல் குழுவை தென் கொரியாவிற்கு அனுப்ப எதிர்பார்க்கிறோம்.
அதற்காக, அந்நாட்டின் 04 மாகாணங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையெழுத்திட நாங்கள் தயாராக உள்ளோம்.
இதன் கீழ், தென் கொரியாவில் பருவகால வேலைகளுக்காக ஆண்டொன்றிற்கு முடியுமான அளவு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அனுப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்கான ஆட்சேர்ப்புக்கள் அரசாங்கத்தால் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதுடன், தனியார் துறையினருக்கு இதற்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக பல்வேறு சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.
பயந்தாங்கொள்ளி
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
தனக்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைப்பதாக பில்லியனர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள அவர்,
Starlink now available in Sri Lanka! (ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது!) என்று கூறியுள்ளார்.
இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை அனுமதிக்கும் திருத்தத்தைத் தொடர்ந்து, 2024 ஆகஸ்ட் மாதம் ஸ்டார்லிங்க் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றது.
கடந்த வாரம், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னே, ஸ்டார்லிங்க் குறித்த ஒரு முன்னோடித் திட்டம் ஏற்கனவே நடைபெற்று வருவதாகக் கூறினார்.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கி வருகிறது.
இது தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.
செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை அளிக்கப்படுவதால், இந்த இணைய சேவை நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும்.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்!
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்!
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்!
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிற நிலையில் சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசா இரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தகுதி வாய்ந்ததாக மாற்றும் விதியை உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது.
சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது சர்வதேச மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தங்கள் முழுநேர மாணவர் அந்தஸ்தை கடைப்பிடித்தால் அவர்கள் கல்வி முடியும் வரை அமெரிக்காவில் தங்கலாம் எனவும் இதை முன்னரே தீர்மானிக்கப்பட்ட தங்கும் காலத்திற்கு மாற்ற ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் விசாவில் ஒரு நிலையான காலாவதி திகதியுடன் சர்வதேச மாணவர்கள் அடிக்கடி விசா நீடிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும்.
இது கூடுதல் தேவையற்ற தாமதங்கள், நிதிச் சுமை மற்றும் மாணவர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.