Aggregator

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்

3 days 19 hours ago
இலங்கை மெய்வல்லுநர் அணியினர் நாடு திரும்பினர் Published By: Vishnu 28 Oct, 2025 | 07:24 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை மெய்வல்லுநர் இன்று நாடு திரும்பினர். அவர்களை விமான நிலையத்தில் வைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உட்பட அமைச்சு அதிகாரிகள் வரவேற்றனர். தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே அதிசிறந்த மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்தார். அத்துடன் பாத்திமா ஷபியா யாமிக் 100 மீற்றர், 200 மீற்றர், 4 x 100 மீற்றர் ஆகிய 3 போட்டிகளில் புதிய போட்டி சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தார். ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையக வீரர் விக்னராஜ் வக்ஷன் வெள்ளிப் பதக்கத்தையும் குண்டு எறிதல் போட்டியில் யாழ். பருத்தித்துறை வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப் பதக்கமும் வென்றனர். https://www.virakesari.lk/article/228925

ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது.. கேள்வி எழுப்பிய ஞானசார தேரர்

3 days 20 hours ago
காணாவில் 2 மில்லியன் டொலர் முதலிட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து பணம் வந்தது. கிழக்கில் தங்க மலையேதும் உருவாகியுள்ளதா என்று ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், "இஸ்லாத்தில் ஹாக்கிமியத் மற்றும் கிலாபத் என்ற மதவாதங்களை நிலைநாட்டுவதற்காகவும் அவர்களின் நோக்கங்களை செய்து கொள்வதற்காக இலங்கைக்கு மிகப் பாரிய தொகை பணங்கள் வந்துள்ளன. முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை பிரிப்பதற்கு அவர்களின் ஊடக செயற்பாடுகளை நாமறிவோம். தனிப்பட்ட குரோதங்கள் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பாரியது. ஹிஸ்புல்லாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இல்லை. ஈஸ்டர் தாக்குதலுக்கான சஹ்ரான் எல்லாம் உருவாகியது கிழக்கில் தான். ஏறாவூர் பகுதியில் சரியா நீதிக்கு விருப்பமானவர்கள் மற்றும் அதை நடைமுறைப்படுத்துமாறு சில பள்ளிவாசல்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு கையொப்பம் பெறப்படுகின்றன. அதனால் அவர்களுக்கென்று தனியான பல்கலைக்கழகம் வழங்க முடியாது. அதை அரசு சுவீகரிக்க வேண்டும். ஜமாஅதே இஸ்லாம் என்பது பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட இஸ்லாம் இராச்சியத்தின் கொள்கையாகும். அந்த கொள்கை தான் இலங்கையில் பலமான இஸ்லாம் கொள்கையாகும் என்றார். https://tamilwin.com/article/m-l-a-m-hizbullah-gana-1761738186

ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது.. கேள்வி எழுப்பிய ஞானசார தேரர்

3 days 20 hours ago

காணாவில் 2 மில்லியன் டொலர் முதலிட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து பணம் வந்தது. கிழக்கில் தங்க மலையேதும் உருவாகியுள்ளதா என்று ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், 

"இஸ்லாத்தில் ஹாக்கிமியத் மற்றும் கிலாபத் என்ற மதவாதங்களை நிலைநாட்டுவதற்காகவும் அவர்களின் நோக்கங்களை செய்து கொள்வதற்காக இலங்கைக்கு மிகப் பாரிய தொகை பணங்கள் வந்துள்ளன. முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை பிரிப்பதற்கு அவர்களின் ஊடக செயற்பாடுகளை நாமறிவோம்.

தனிப்பட்ட குரோதங்கள் 

அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பாரியது. ஹிஸ்புல்லாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இல்லை. ஈஸ்டர் தாக்குதலுக்கான சஹ்ரான் எல்லாம் உருவாகியது கிழக்கில் தான்.

ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது.. கேள்வி எழுப்பிய ஞானசார தேரர் | M L A M Hizbullah Gana

ஏறாவூர் பகுதியில் சரியா நீதிக்கு விருப்பமானவர்கள் மற்றும் அதை நடைமுறைப்படுத்துமாறு சில பள்ளிவாசல்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு கையொப்பம் பெறப்படுகின்றன.

அதனால் அவர்களுக்கென்று தனியான பல்கலைக்கழகம் வழங்க முடியாது. அதை அரசு சுவீகரிக்க வேண்டும்.

ஜமாஅதே இஸ்லாம் என்பது பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட இஸ்லாம் இராச்சியத்தின் கொள்கையாகும். அந்த கொள்கை தான் இலங்கையில் பலமான இஸ்லாம் கொள்கையாகும் என்றார்.

https://tamilwin.com/article/m-l-a-m-hizbullah-gana-1761738186

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 20 hours ago
125ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி தென் ஆபிரிக்கா வெற்றி போன‌ வ‌ருட‌மும் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் பின‌லுக்கு வ‌ந்த‌வை............ இந்த‌ வ‌ருட‌ம் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் பின‌லுக்கு வ‌ந்து இருக்கின‌ம்........................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 20 hours ago
அதற்குப் பிறகு தானே தென் ஆபிரிக்கா அணிக்காக ஈழப்பிரியன் அண்ணா கேட்டு நாங்கள் ஒரு யாகம் செய்தோம்...................🤣. அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அஞ்ஞாத வாசம் போக வேண்டியது தான்............🤣. ஆனாலும் இந்தியாவில் நம்பிக்கை இருக்கின்றது, அது எப்படியும் தோற்று விடும் என்று...........😜.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 21 hours ago
இதே இங்கிலாந்துக்கு எதிராக 69க்குல் சுருண்ட தென் ஆபிரிக்கா, லோராவின் 169 உடன், இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. விளையாட்டு வினோதங்கள்.

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

3 days 21 hours ago
கொழும்பு தங்கச் சந்தையில் விலை சரிவு இலங்கையில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன, நேற்று (28) உடன் ஒப்பிடும்போது 22 காரட் மற்றும் 24 காரட் தங்கம் இரண்டும் ரூ. 2,000 குறைந்துள்ளன. கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் இன்று (29) காலை, 22 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு ரூ. 294,000க்கு விற்கப்பட்டது, இது நேற்று ரூ. 296,000 ஆக இருந்தது. இதற்கிடையில், 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு ரூ. 320,000 லிருந்து ரூ. 318,000 ஆக குறைந்துள்ளது. https://www.dailynews.lk/2025/10/29/admin-catagories/breaking-news/885257/colombo-gold-market-records-price-decline/?fbclid=IwY2xjawNvEztleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR4-I-RaWPkCBLMp8COQtf26cdwsbOUrOP5VReENdtRvvHq71kN8OSkTAk2cjw_aem_yK57uEQYrJt5QcGI8z46cw

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 21 hours ago
அடடா. தென்னாபிரிக்கா இப்படி விளாசும் என்று எதிர்பார்க்கவில்லை! இங்கிலாந்து மகளிருக்கு பெரிய மூக்குடைபாடுதான்👃 நமக்கு புள்ளி ஏற வாய்ப்பில்லை☹️

ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?

3 days 22 hours ago
இலங்கைத் திருநாட்டின் பெருமைகள். தங்கமகள் மற்றும் தங்கமகன் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கத்தை வென்று வந்த முஸ்லீம் பெண்ணும், கானா நாட்டில் 50 கிலோ தங்கம் வாங்க, இரண்டு மில்லியன் அமெரிக்க டொலரை கொடுத்து ஏமாந்த முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் ஹிஸ்புல்லாவும். Rooban Mahan

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 22 hours ago
169 இந்த‌ ஸ்கோரை த‌னி ஒரு ம‌க‌ளிரால் அடிக்க‌ முடியாது மீத‌ம் இருக்கும் போட்டியில் , அவுஸ்ரேலியா ம‌க‌ளிரை தெரிவு செய்த‌வைக்கு முட்டை தான் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் தான் ஒரு விளையாட்டில் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்சா..........இப்போது தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அடித்து விட்டா இம‌ய‌ம‌லை ஸ்கோர‌...................................

மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…

3 days 23 hours ago
மன்னார் காற்றாலைத் திட்டத்தைப் பற்றி இது வரை நான் கண்ட கட்டுரைகளில் எல்லாத் தரவுகளையும், சட்ட ஆதாரங்களையும் உள்ளடக்கிய ஒரேயொரு கட்டுரை இது மட்டும் தான். இரண்டாம் தடவையும் வாசிக்க வேண்டும், முழுவதையும் விளங்கிக் கொள்ள. இந்தத் தரவுகளை வைத்துக் கொண்டு யாராவது இலங்கையில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு கோரியாவது ஏதாவது வழக்குப் போட்டிருக்கிறார்களா இது வரை? தேர்தல் நேரம் மட்டும் வெளிப் பட்டு வரும் "ஜனாதிபதி சட்டத்தரணிகள்" எவராவது ஒரு சூழல் பாதுகாப்பு சட்டத் தரணியோடு இணைந்து இதை உச்ச நீதிமன்றத்திற்குக் கொன்டு போக முடியாதா? இலங்கையில், இந்த விடயங்களில் eminent domain என்ற அரசுக்கான விசேட உரிமை சட்டத்தில் இருக்கிறதா?

ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?

3 days 23 hours ago
🔴 கடுமையாக ஏமாற்றப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லா! கானா நாட்டின், அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களைக் கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் மேலும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. Vaanam.lk