Aggregator

56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

5 days 7 hours ago
வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயம் ஒரே மதத்துகாரர் இப்படி நட்டாற்றில் விட கூடாது .எண்ணெய் கண்டு பிடிக்கும் முன் இதே சவூதிகள் எப்படி இருந்தார்களாம் பழையதை மறந்து கொட்டமடிக்கிறார்கள் .

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

5 days 7 hours ago
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் தற்காலிகமாக இரஸ்சிய பணத்தினை கையாட இயலாமையால் 90 பில்லியன் யூரோவினை உக்கிரேனுக்கு வட்டியற்ற கடனாக கொடுக்க முன் வந்துள்ளது, இரஸ்சியாவின் இழப்பீட்டு தொகை கிடைக்காவிட்டால் மட்டுமே உக்கிரேன் அந்த பணத்தினை திருப்பி கொடுக்க வேண்டும் (உண்மையில் கடைசியாக உக்கிரேன் தான் இந்த பணத்தினை திரும்ப கொடுக்க வேண்டும்). அமெரிக்கா தான் கொடுத்ததாக 350 பில்லியன் கடனை உரிமை கோருகிறார்கள், முன்னர் செலன்ஸ்கி 350 பில்லியன் தரவில்லை என கூறினார், கடைசியாக செலன்ஸ்கியும் பதவிக்காலம் முடிந்து போய்விடுவார், முதலில் காசு கொடுப்பார்கள் பிறகு அந்த காசினை திருப்பி கேட்பார்கள். உக்கிரேனின் நிலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என தெரியாது, அப்படி உக்கிரேன் காசு கொடுக்காவிட்டாலும் ஐரோப்பியர்களும் அமெரிக்களும் சும்மாவா இருப்பார்கள்? புட்டின் வேறு ஐரோப்பிய நாடுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். கொடுத்த கடனுக்கு பதிலாக இடங்களை இலங்கையில் சீனா பெற்றது போல செய்வார்களா? இந்த யுத்தம் தொடர மேலும் மேலும் புதிய நெருக்கடிகள் அதிகரிக்கும்.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

5 days 7 hours ago
மாவீரர் நினைவாலயம் ஆண்டான்குளம், கண்டலடி, மட்டு அம்பாறை மாவட்ட நினைவாலயம் தம்பிலுவிலில் இருந்தது. இங்கே 3000 மாவீரர்களின் நினைவுருவப் படங்கள் 2004ம் ஆண்டில் (திறக்கப்பட்ட அன்று) வீரவணக்கத்திற்காக வைக்கப்பட்டது. மன்னாரில் ஆண்டான்குளத்தில் இருந்தது.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

5 days 7 hours ago
சிங்கள அதிபர்களான சந்திரிக்கா மாமி மற்றும் மகிந்த மாமாவுடன் பீலஸ்தீன தலைவர் யாசிர் அராஃவத் 1997 https://www.bbc.com/sinhala/news/story/2004/11/041111_arafat_srilanka (கரப்பான் மாட்டிக்கொண்டது🤣🤣) https://www.facebook.com/photo.php?fbid=2747705088898652&set=p.2747705088898652&type=3

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

5 days 7 hours ago
பாகம் - 19 02.12.1990 கரிகாலனின் லாண்ட்குறோசர் கொக்கட்டிச்சோலையை சென்றடைந்தது. அங்குள்ள தேவாலயத்தின் முன்றலிலே தான் கூட்டம் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இக் கூட்டத்திற்காக வருகை தந்திருந்தனர். திரு தம்பிராசா அவர்கள் தலை மையில் கூட்டம் ஆரம்பமாகியது. உரை நிகழ்த்தியவர்களில் அனேகர் குமரப்பாவையே ஞாபகப்படுத்தினர். ஏனெனில் அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் குமரப்பாவைத் தெரியும். திரு. கரிகாலன் அவர்கள் உரையாற்றும்போது “இன்றையநாள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். இந்திய ஒப்பந்தத்தின் பெயரால் இந்திய வல்லாதிக்க பூதம் எம்மை படுகொலை செய்த நாள்” என்று குறிப் பிட்டு இந்திய அரசின் தந்தி ரங்களுக்கு பலியாகாமல் எவ்வாறு போராட்டத்தை புலிகள் முன்னெடுத்துச் சென்றனர் என்பதை விளக்கினார். தொடர்ந்து தற்போதைய நிலைபற்றி அவர் பேசுகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஒரே நேரத்தில் 11 பொலிஸ்நிலையங்களையும் 7 இராணுவ முகாம் களையும் தாக்கி வெற்றி பெறும் அளவுக்கு போராட் டத்தில் வளர்ச்சியடைந்துள்ளோம். போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பே இச்சாதனைகளுக்கு மூலகாரணம். எனவே சிறிலங்கா அரசு பெருமளவில் இராணுவத்தை குவித்துமக்களைப்படுகொலை செய்து அகதிகளாக அலையச் செய்வதன்மூலம் மக்களை எம்மிடமிருந்து அன்னியப்படுத்தி போராட்டத்தை முறியடிக்கலாம் எனக்கனவு காண்கிறது. ஆதலால் நாம் எந்தச்சூழ்நிலையிலும் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இந்திய இராணுவத்துடன் நாம் நடத்திய போரில் 2000 சிப்பாய் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய போரில் 1500 சிறிலங்கா இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரம் பேர் கால்களை இழந்துள்ளனர். இந்நிகழ்வுகளெல்லாம் போராட்டத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றது. தமிழீழத்தை மீட்டெடுக்கும் படிக்கற்கள்இச்சாதனைகள்' என்று பேசினார். அடுத்து திரு. நியூட்டன்பேசினார். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள சிரேஷ்ட போராளிகளில் ஒருவர் இவர். 1985 ஆம் ஆண்டு மட்டக்களப்புக்குச் சென்ற இவர் தொடர்ச்சியாக அப்பகுதியிலேயே விடுதலைக்காக தீவிரமாக உழைத்துவருபவர். “குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் மரணம் இயக்கத்தின் தன்மானத்திற்கு எடுத்துக்காட்டு. அவர்கள்பிடிபடும் போது ஆயுதம் இருந்தது. சயனைட் இருந்தது. அவர்கள் அப்போதே சண்டை பிடித்திருக்கலாம். சயனைட் அருந்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் தம்மை இந்திய அரசு காப்பாற்றுமென நம்பினர். கடைசியில் இந்தியாவின் நம்பிக்கைத் துரோகத்தினாலேயே அவர்கள் சயனைட் அருந்த நேரிட்டது. பிற்பகல் 5 மணிக்கு சாகப்போகிறோம் என்பது நண்பகல் 12 மணிக்கே அவர்களுக்குத் தெரியும். எமதுபிராந்தியத் தளபதிகள் எதிரியின் முன்னால் கைகட்டி நின்று மறுமொழி சொல்லக் கூடாது என்பதற்காகவே சயனைட் அருந்தினார்கள் அந்த குமரப்பா வளர்த்த போராளிகளே இன்று மட்டக்களப்பில் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இன்று கோட்டையில் புலிக்கொடி பறக்கிறது, யாழ்ப்பாணம் மாதிரி இங்கு ஏன் கொண்டுவர முடியாது? என சிலர் கருதலாம். அங்குள்ள புவியியல் நிலைமை வேறு இங்குள்ள நிலைமை வேறு. மட்டக்களப்பு போராளிகள் போராடத் தெரியாதவர்கள் அல்ல. உண்மையில் தமிழீழப் போராட்டத்தில் மட்டக்களப்பிலேயே கூடுதலான ஆயுதங்கள் எதிரிகளிடமிருந்து கைப் பற்றப்பட்டன. இன்று கோட்டையில் புலிக்கொடி பறக்கின்றதென்றால் மட்டக்களப்புப் போராளிகளும் தான் அதில் பங்காளிகள். அவர்களும் அங்கு போராடியிருக்கிறார்கள். கோட்டையை மீட்டெடுக்க உதவிய ஆயுதங்களில் கணிசமானவை மட்டக்களப்பில் பெறப்பட்டவைதான். வெள்ளம் வராமல் ஒரு அணைக்கட்டை கட்டுகிறோம் அந்த அணைக்கட்டில் ஒரு இடத்தில் வெடிப்பு ஏற்பட்டால் பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும். அதே போன்ற நிலைமைதான் மட்டக்களப்பிலும் ஏற்பட்டது. நாளை, வியட்னாம் நிலைமை போல இங்கும் உரு வாகலாம். நாளாந்த வேலை களைக்கவனித்துக் கொண்டு இருப்பார்கள் மக்கள்: இராணுவம் வந்தவுடன் சண்டை செய்வார்கள். பின்னர் தங்கள் வேலைகளைக் கவனிப்பார்கள். அந்த நிலைக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று பேசினார். கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு இராணுவ அட்டூழியங்களுக்குப் பின்னரும் எதற்கும் அஞ்சாமல் இவ்வளவு பேர் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்களே என்று. போரா ளிகளுடன் மிகவும் அன்னியோன்னியமாக நடந்து கொண்டார்கள் மக்கள். அங்கிருந்து புறப்பட்டோம். மகிழடித்தீவுச் சந்தியை அடைந்தோம். ஏற்கெனவே எனக்குப் பழக்கமான பலர் அங்கே காணப்பட்டனர். அவர்களில் கணிசமானோர் எழுவான்கரைக் கிராமமான ஆரைப்பற்றை என்ற கிராமத்தைச் சேர்த்தவர்கள். சூரியன் உதிக்கும் திசையில் உள்ள கிராமங்கள் எழுவான்கரை என அழைக்கப்படும். கடலுக்கும் வாவிக்கும் இடையில் உள்ள கிராமங்கள் இவை. சூரியன் மறையும் திசையில் உள்ள கிராமங்கள் படுவான் கரை என அழைக்கப்படும். வாவிக்கு மேற்குப் பக்கமாக உள்ள கிராமங்கள் இவை. ஆரைப்பற்றை கிராமத்தில் இராணுவமுகாம் இருப்பதால் பெரும்பாலான ஆண்கள் ஆற்றைக் கடந்து படுவான் கரைக்கு வந்துள்ளனர். ஆற்றுக்கு அப்பால் மனைவி, குழந்தைகள். இவர்கள் ஆற் றங்கரையை அண்டிய மகிழடிச்தீவுச் சந்தியில், அனைவரும் ஆற்றங்கரையையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தனர். குடும்பங்கள் சிதறிய நிலையில் அவர்கள். நாங்களும் ஆற்றங்கரைக்குச் சென்றோம். சாதாரணமாக எப்போதும் ஐந்து தோணிகளாவது ஆற்றில் தென்படும். சிலர் மீன் பிடித்துக்கொண்டிருப்பர். எழுவான்கரைக்கும் படுவான்கரைக்குமிடையில் போக்கு வரத்து நடந்துகொண்டிருக்கும். ஆனால் இப்போதோ எவருமே காணப்படவில்லை. ஆற்றைப்பார்த்தேன். ஓடிக் கொண்டிருந்தது தண்ணீராகத் தெரியவில்லை. பிரிந்திருக்கும் குடும்பத்தினரின் கண்ணீராகவே எனக்குத் தெரிந்தது. (தொடரும்)

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

5 days 8 hours ago
பாகம் - 19 30-11-1990 விசுவுடன்போய்க் கொண்டிருக்கையில் திரும்பிப்பார்த்தேன்: ஒரேவெளி முன்னாலும் வெளி. கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் ஒரே வெளிக்குள்ளாலேயே சென்று கொண்டிருந்தோம். அப்போது நான் புதுவையண்ணா யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு வல்லை வெளியைப் பார்த்துவிட்டு “வல்லை வெளி தாண்டிப் போகுமோ’?" என்றுபாடினார். இந்த வெளியைப் பார்த்தால் தான் உண்மையான வெளி எதுஎன்பது தெரியும் என்றேன். அப்போது யோகன் "அது வல்லை வெளி. இது வானவெளி'' என்றார். யாழ்ப் பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று கொஞ்சக் காலம் போராடி விட்டுத் திரும்பிய ஒரு போராளியிடம் மட்டக்களப்பைப் பற்றிக் கூறச்சொன்னபோது “மட்டக்களப்பில் ஓடினால் வெளி, விழுந்தால் வெடி” என்று கூறியது ஞாபகத்துக்குவந்தது. 1987 ஆம் ஆண்டுவரை சயனைட் மூலம் வீரமரணமடைந்த போராளிகளின் தொகை மட்டக்களப்பில் தான் கூடுதலாக இருந்தது. ஏனெனில் அங்குள்ள இயற்கையமைப்பு பெரும் பாலும் வெளிகள் உள்ள பிரதேசமாக இருப்பதால் போராளிகளுக்குச்சாதகமாக அமையவில்லை. யாழ்ப்பாணத்தில் நாலுமதில் தாண்டினால் ஒரு போராளியைப்பிடிக்க முடியாது. அங்குள்ள நிலைமை அப்படியல்ல; இதனாலேயே சயனைட் அருந்த வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டன. இலுக்குவட்டை, தீலிவட்டை என்னும் இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தோம். இங்குள்ள அகதிகள் பெரும்பாலும் கிழான் சந்திவெளிப் பக்கம் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள், சட்டக்கண்டன் முன்மாரி என்னும் இடத்தில் பொம்மர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்தும் இருவர் படுகாயமடைந்துமிருந்தனர். பெரியதம்பி சண்முகம் என்பது குடும்பத் தலைவரின் பெயர். இலுப்பையடி முன்மாரி என்னுமிடத்தை பார்த்தோம் அங்கும் இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கியி ருந்தனர். முறக்கொட்டாஞ்சேனை முகாமுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 35 வயதான ஒரு குழந்தைக்குத் தகப்பனான தம்பிப்பிள்ளை கந்தசாமியின் மனைவி, சித்தாண்டிக்கோயில் முகாமில் கைது செய்யப்பட்ட துரைசிங்கம் என்பவரின் தாய் என்பவர்களைச் சந்தித் தோம். “முறக்கொட்டாஞ் சேனை முகாமில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டவர்கள்?” என்று கேட்டேன். “முதல் தரம் 6, அடுத்ததரம் 15, அடுத்த தரம் 36, அந்த முப்பத்தாறு பேரில் தான் தனது மகனும் ஒருவர் என்று சொன்னார் தாய். "தலையாட்டி மூலமாகவா கைது செய்யப் பட்டனர்?” என்று கேட்டேன். "இல்லை ஒரு சைசான ஆளைப் பார்த்து ஏற்றினார்கள்" என்று சொன்னார்கள். நற்குணம் உதயகுமார் ஆகிய இருபிள்ளைகளை சித்தாண்டிக்கோயில் அகதி முகாமில் பறி கொடுத்த தாயையும் சந்தித்தோம். புஷ்பராணி என்பது அவரது பெயர். “இவர்கள் கைது செய்யப்பட்ட போது முகாமுக்கு யார் பொறுப்பாக இருந்தார்கள்?” என்று கேட்டேன். “செஞ்சிலுவைச்சங்கம் தான்” என்றார்கள். இப்போது அவர்கள் உங்கள் பிள்ளைகளின் விடுதலை சம்பந்தமாக என்ன சொல்கிறார்கள்? என்று கேட்டேன். எழுதித்தருவதுமட்டும்தான் உங்களது வேலை. விடுதலை சம்பந்தமான விஷயம் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்கள் என்றார். எவ்வளவு அலட்சியமான பதில். தமது பொறுப்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் தான் இவர்கள் உள்ளனர். இப்படிக் கைது செய்யப்பட்டவர்களை யாராவது போய்ப் பார்க்க முடியுமா? என்று கேட் டேன் இதுவரை கைது செய்யப்பட்ட எவரையுமே பார்க்க முடியவில்லை என்றார். அப்படியே பெருமாவெளிக் கட்டு என்னும் இடத்தை அடைந்தோம். அங்கே நான்கு சின்னத்தடி நட்டு இரண்டு பனைவடலி ஓலையால் வேயப் பட்டிருந்த ஒரு குடிசையைக் கண்டேன். விளையாட்டுக்காக சிறுபிள்ளை கள் அமைக்கும் கொட்டில்தான் அது. அதற்குள் ஒருதாய் இரு குழந்தைகளை அணைத்தபடி இருந்தாள். இப்படியான நிலைமையில் இருக்கிறார்களே என்று எண்ணிய நான் அந்தத் தாயை அணுகி இதுதான் உங்கட வீடா' என்று கேட்டேன். இல்லை. நாங்கள் அந்த மரத்தடியிலதான் கிடக்கிறம். இது வேற ஆக்கள் இருக்கிறது. நாங்கள் வெயிலுக்காக வந்திருக்கிறம் என்றார் அவர். நான் நினைப்பதைவிட மோசமான நிலை. அங்கிருந்த இன்னொருவரைச் சந்தித்தேன். அவருடன் உரையாடினேன். உங்க பெயர் என்ன? காளிக்குட்டி ஆறுமுகம். எந்த இடம்? வீரமுனை. வீரமுனையைவிட்டு ஏன் இங்கு வந்தீர்கள்? வீரமுனையில் 300பேரை இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் கைது செய்து கொண்டு போனார்கள். வெட்டிக்கொல்கிறார்கள், அதனால் தான் இங்கு வந்திருக்கிறோம். வீரமுனையில் எங்கு வைத்து கைது செய்யப்பட்டார்கள்? அங்குள்ள சிந்தாத்துரைப் பிள்ளையார் கோயிலில். இதில் உங்களது உறவினர்களும் இருக்கிறார்களா? எனது தம்பிமார் மூவர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவர்களது பெயர், வயது? உலக நாதன் 30வயது. யோகராசா 28வயது, நவரட்ணம் 26வயது. இவர்கள் திருமணமானவர்களா? உலகநாதன் மட்டும் திருமணமானவர். இவருக்கு ஒரு பெண்குழந்தையும் இரண்டு ஆண்குழந்தைகளும் உண்டு. நீங்கள் மட்டக்களப் புக்கு வந்து எவ்வளவு காலம்? 3மாதம். இவ்வளவு நாட்களும் எங்கேயிருந்தீர்கள்? சித்தாண்டிக் கோயிலில் அகதி முகாமில். அங்கே சாப்பாடு, வசதிகள் எப்படி? 3 மாத காலத்துக்கு 13கிலோ மாவும், 6கிலோ அரிசியும் எமது குடும் பத்துக்கு தந்துள்ளார்கள். வேறெதுவும் கிடைக்கவில்லை. கொண்டு வந்த பொருள்களையெல்லாம் விற்று உடுத்த உடுப்புடன் இருக்கிறோம். தற்போது வீரமுனை நிலைமை என்ன மாதிரி? கிராமத்தில் ஒருவருமே இல்லை: அங்கு முஸ்லிம் அதிகாரம்தான் இருக்கிறது. அதனால் இராணுவம் தமிழர்கள் மீது வெறியாட்டம் ஆடுகிறது. அந்தப் பகுதியில் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள்? முந்நூறு பேருக்குமேல் பெண்கள் குழந்தைகளைக் கூடவெட்டிக் கிணற்றில் போட்டிருக்கிறார்கள். உடற்கட்டுள்ள ஆண்கள், கல்வியறிவு மிக்கவர்கள். எல்லோரையும் தெரிந்தெடுத்துக் கொல்கிறார்கள். இங்கே நிலைமை என்ன மாதிரி? சாப் பாடு இல்லை. மருந்து இல்லை நோயினால் குழந்தைகள் அவஸ் தைப்படுகிறார்கள். இப்போது வீரமுனை நிலைமை பற்றி அறிந்தீர்களா? கட்டடத்தை உடைத்து ஜன்னல், கதவு போன்றவற்றை முஸ்லிம் ஊர் காவல்படையினர் கொண்டு போகிறார்கள் என்றார் அவர். அவரிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினோம். கரிகாலனின் அலுவலகம் சென் றோம். அங்கு ஒரு தகப்பன் தமது மகளுடன் வந்திருந்தார். "தம்பி! இது என்ட மகள். இவள் நல்லாப்படிப்பாள். எவ்வளவோ கஷ்டப்பட்டு இவளைப் படிப்பிச்சன், ஆனா இப்பபோராட ஆக்கள் வேணும். அதால இவளை உங்களிட்ட ஒப்படைக்கிறேன் போராட்டம் முடியிறபோது இவள் உயிரோட இருந்தால் இவளைப் படிப்பிச்சுப் போடோணும்" என்றார். பொதுவாகளே தகப்பன்மார் பெண்பிள்ளைகளில் தான் கூடிய பாசம் வைத்திருப்பார்கள். பெண்பிள்ளையையே இப்படி ஒப்படைக்க ஒரு தகப்பன்முன் வருகிறார் என்றால்... இது தான் மட்டக்களப்புமண்ணின் மகிமை. படிப்பைக் காரணம் காட்டி பிள்ளைகளைப் பிரித்தெடுக்கும் எமதுசமூக அமைப்புடன் ஒப்பிடுவதே தவறு. (தொடரும்)

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

5 days 8 hours ago
இலங்கையிலுள்ள உறவுகள் அவுஸ்ரேலியா எவ்வளவு போகுது என கேட்டால் வங்கியில் 204 என்பார்கள், அதாவது ஒரு அவுஸ்ரேலிய நாணயம் 204 இலங்கை நாணய பெறுமதி கொண்டது. எந்த ஒரு நாணயத்தின் மதிப்பும் தனிய கணிக்கப்படுவதில்லை அதனுடன் இன்னொரு நாணயத்தின் பெறுமதியுடன் இணைத்து கணிக்கப்படுகிறது. குறித்த இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் இடம்பெறும் போது அந்த வர்த்தகங்களின் பெறு பேறாக வர்த்தக நிரம்பல் அல்லது வர்த்தக நிலுவை ஏற்படும், வர்த்தக நிலுவை ஏற்பட்டால் குறித்த நாடு தனது நாணயத்தினை விற்று நிலுவையினை செலுத்த வேண்டும் அதனால் குறித்த நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி அடையும், அதனால் குறித்த நாணய வீழ்ச்சி அடைந்த நாட்டின் ஒரு பொருள் அதிக நாணய பெறுமதி கொண்ட வர்த்தக பங்காளி நாட்டின் குறித்த ஒரு பொருளின் விலையுடன் ஒப்பிடும் போது விலை மலிவாக காணப்பட விலை குறைவானமையால் நாணய பெறுமதி அதிகம் கொண்ட்ட நாட்டினர் அவர்களின் பொருளை வாங்குவார்கள், அப்படி வாங்கும் போது தற்போது வர்த்தக நிலுவையிலிருந்து வர்த்தக நிரம்பல் ஏற்படும், இப்படி குறித்த நாடுகளுக்கிடையே இயல்பாக சமநிலையாகும் (automatic stabilizer) தன்மை கொண்டது Free float. ஆனால் இந்தியா போன்ற முகாமைத்துவ மிதக்கவிடப்பட்ட (Managed float) நாணயக்கொள்கையினை கடைப்பிடிக்கும் நாடுகள் தமது உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காகவும் வேறு பிற காரணங்களுக்காவும் வலிந்து நாணய பெறுமதியினை கட்டுப்படுத்துவர்.

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

5 days 8 hours ago
மிதக்கவிடப்பட்ட நாணயக்கொள்கை இரண்டு வகையானவை. Free float . Managed float இலங்கை மற்றும் பல மேற்கு நாடுகள் முதலாவது மிதக்கவிடப்பட்ட நாணய கொள்கையினையும், இந்தியா போன்ற சில ஆசிய நாடுகள் இரண்டாவது மிதக்கவிடப்பட்ட கொள்கையினை பின்பற்றுகின்றன. Managed float இனை Dirty float என ஏன் அழைக்கிறார்கள்?

தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.

5 days 9 hours ago
இவ்வளவு காலமும் இந்தியன் இருந்து எங்களுக்கு என்ன செய்தார்கள் ? எவன் வந்தாலும் அவனின் சுய நலத்துக்கே வருவான் இலங்கையின் பூர்வ குடி நாங்கள் என்று கடைசியில் எங்களின் இருப்பே பறி போகிறது அதை இந்தியா ரசித்து கொண்டு இருக்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் டாஸ்மார்க்கில் விழுந்து கிடக்கிறார்கள் .வடகிழக்கில் இருப்பே பறி போகையில் எவன் வந்து எம்மை சாட்டி அரசியல் செய்தால் அதை பிடித்து கொண்டு மேலே போவதுதான் சாணக்கியம் . பழிவாங்கும் இந்திய படங்களை பார்த்து இன்னும் இன்னும் அழிந்து கொண்டு இருக்கிறோம் நல்லகாலம் ஜப்பான்காரன் அணுகுண்டு வீச்சுக்கு பின் அத்தகைய படங்களை பார்க்கவில்லை அவர்களை யார் அழித்தார்களோ அவர்களின் உதவியின் ஊடே வளர்ந்து காட்டி கொண்டார்கள் .

தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.

5 days 9 hours ago
உரிமை உள்ளவர்கள் இலங்கை அருகில் உள்ளது சிங்களவர்கள் கிந்தி பாட்டை ரசித்து கொண்டாடுவார்களே தவிர நம்பி நம்ம வடகிழக்கு தமிழர்களின் கண்மூடித்தனமாய் விசுவாசம் போல் ஏமாற மாட்டார்கள் தங்களின் இந்திய அரசியலில் மிக தெளிவாய் இருப்பார்கள் . உதாரணத்துக்கு இந்திய அரசின் உசுபேத்தளில் நம்மவர் திருகொணோஸ்வரருக்கு மிகபெரிய காண்டா மணி இங்கிலாந்தில் வைத்து செய்து அங்கு கொண்டு சென்றார்கள் கடைசியில் சிங்கள அரசு மறுப்பு தெரிவிக்க கொண்டு போன மணி சேமிப்பு கிடங்கில் கிடக்கு . இப்படி டெல்லியின் இயலாமை வெள்ளிடைமலை.

தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.

5 days 10 hours ago
ஊரிலை நல்லதண்ணி கிணத்துக்காரன் கையில் திடீர் என்று பணம் கிடைத்தால் என்ன செய்வான் ? நாலு பக்கமும் சுவர் இரண்டு ஆள் உயரத்துக்கு வைத்து அந்த நல்ல தண்ணியை தான் மட்டுமே அனுபவித்து கொண்டாடுவான் . அப்படி ஆகா ஓகோ எனும் அளவுக்கு சிங்களம் பெரும் பணக்காரனா மாற கனிம மலை வெட்டுபவர்கள் விடுவார்களா ?

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

5 days 10 hours ago
இந்த அடிப்படை ஆய்வு முறையிலான வர்த்தகத்தினை பெருநிறுவனங்கள் பயன்படுத்தும் வர்த்தக முறைமையினை பயன்படுத்த உள்ளேன் (எந்த வித காப்புரிமைகளையும் மீறாத வகையில், அவ்வாறு காப்ப்புரிமை மீறல்கள் காணப்படும் பட்சத்தில் அதனை சுட்டிக்காட்டுமாறு கள உறவுகளிடம் கேட்டுக்கொள்கிறேன், அதனை உடனடியாக நீக்க). உங்கள் ஆக்கபூர்வ பங்களிப்பினை வழங்கவும்.

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

5 days 10 hours ago
'இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம்' நிதியத்துக்கு இதுவரை 4286 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது - ஹர்ஷன சூரியப்பெரும 19 Dec, 2025 | 06:07 PM (எம்.மனோசித்ரா) 'இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம்' நிதியத்துக்கு இதுரையில் 4286 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் சுமார் 6 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் 3400 மில்லியன் ரூபாவுக்கு அதிக நிதி கிடைக்கப் பெற்றிருந்தது. தற்போது அந்த தொகை 4286 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இதன் பெறுமதி 13.8 மில்லியன் டொலராகும். இதில் வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் சுமார் 6 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தொகை பொருள் மற்றும் சேவை ஒத்துழைப்புகளுக்கு அப்பால் கிடைக்கப் பெற்றதாகும். இதுவரையில் 4 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய உதவிகள் பொருட்களாகவும், சேவையாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் 43 நாடுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, பிரித்தானியா, ஜேர்மன், பூட்டான், இத்தாலி, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், நியூசிலாந்து, மாலைத்தீவு, சவுதி, பிரான்ஸ், கொரியா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளை வழங்கியுள்ளன. இதேவேளை ஸ்ரீலங்கள் எயாலைன்ஸ் கடன் மறுசீரமைப்பிற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/233842