Aggregator

உலகின் மிகவும் வறண்ட பாலைவனத்தில் பனிப்பொழிவு

1 week ago
Published By: DIGITAL DESK 3 30 JUN, 2025 | 12:45 PM உலகின் வறண்ட பாலைவனங்களில் ஒன்றாக திகழும் வடக்கு சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் வியாழக்கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. "நம்பமுடியாத நிகழ்வு! உலகின் மிகவும் வறண்ட அட்டகாமா பாலைவனம் பனியால் சூழப்பட்டுள்ளது," என கடல் மட்டத்திலிருந்து 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ள ALMA ஆய்வகம், X தளத்தில் வீடியோ காட்சிகளுடன் பதிவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனி படர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த பனிப்பொழிவு காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் "இந்த வகையான நிகழ்வு, அட்டகாமா பாலைவனத்தில் மழைப்பொழிவு அடிக்கடி நிகழும்" எனபதை காலநிலை மாதிரியாக்கம் காட்டுகிறது என சாண்டியாகோ பல்கலைக்கழக காலநிலை ஆய்வாளர் ரவுல் கோர்டெரோ ஏஎப்பியிடம் தெரிவித்துள்ளார். உலகின் இருண்ட வானங்களுக்கு தாயகமான அட்டகாமா, பல தசாப்தங்களாக உலகின் மிகவும் மேம்பட்ட தொலைநோக்கிகளுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. ஐரோப்பிய தெற்கு ஆய்வகம், அமெரிக்க தேசிய வானொலி வானியல் ஆய்வகம் மற்றும் ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படுகிற ALMA தொலைநோக்கி, மிகவும் சக்திவாய்ந்ததாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அட்டகாமா பாலைவனம், அதன் வறண்ட நிலப்பரப்பு, உப்பு ஏரிகள், மற்றும் எரிமலைப் படிமங்களுக்காகப் புகழ்பெற்றது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூட, செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலப்பரப்புக்கு ஒப்பான பகுதியாக அட்டகாமா பாலைவனத்தைக் கருதுகிறது. இவ்வளவு வறண்ட ஒரு பகுதியில் பனிப்பொழிவு நிகழ்ந்திருப்பது, காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான விளைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட அசாதாரண வானிலை மாற்றங்களே இந்த பனிப்பொழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், வறண்ட பாலைவனப் பகுதிக்குள் ஈரப்பதமான காற்றைக் கொண்டு வந்ததாலேயே இது நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அட்டகாமா பாலைவனம் சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசிபிக் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ளது. இதனை உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று, நாசா மற்றும் தேசிய புவியியல் கழகம் ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன. இப்பாலைநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1,05,000 சதுர கி.மீ (41,000 சதுர மைல்) ஆகும். இந்த இடம் சராசரியாக ஆண்டுக்கு ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைக்கு பெறுகிறது. https://www.virakesari.lk/article/218826

எமது கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்; படகுகள் பறிமுதல் செய்யப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

1 week ago
Published By: VISHNU 30 JUN, 2025 | 07:22 PM 'இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது, அவ்வாறு அத்துமீறினால் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, 124 இற்கு மேற்பட்ட இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் மயிலிட்டியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 'இந்திய மீனவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தயவு செய்து எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம் என இந்திய மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல தடைசெய்யப்பட்ட ரோலர் படகு உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, கடல்வளங்களை அழித்துவிட்டு எம்மை தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை. இனியும் அந்த விளையாட்டு வேண்டாம். எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம். வந்தால் கைது செய்யப்படுவீர்கள். உடமைகள் பறிமுதல் செய்யப்படும் என்றார். https://www.virakesari.lk/article/218882

எமது கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்; படகுகள் பறிமுதல் செய்யப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

1 week ago

Published By: VISHNU

30 JUN, 2025 | 07:22 PM

image

'இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது, அவ்வாறு அத்துமீறினால் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு, 

124 இற்கு மேற்பட்ட இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் மயிலிட்டியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

'இந்திய மீனவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தயவு செய்து எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம் என இந்திய மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல தடைசெய்யப்பட்ட ரோலர் படகு உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, கடல்வளங்களை அழித்துவிட்டு எம்மை தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை. இனியும் அந்த விளையாட்டு வேண்டாம். எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம். வந்தால் கைது செய்யப்படுவீர்கள். உடமைகள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/218882

கட்டாய கருக்கலைப்பு: 2 வயது மகளுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் - திருவண்ணாமலையில் என்ன நடந்தது?

1 week ago

கோப்புக்காட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புக்காட்சி

கட்டுரை தகவல்

  • மாயகிருஷ்ணன் கண்ணன்

  • பிபிசி தமிழுக்காக

  • 29 நிமிடங்களுக்கு முன்னர்

திருவண்ணாமலையில் வயிற்றில் இருந்த சிசுவை குடும்பத்தினர் வற்புறுத்தி கலைக்க வைத்ததால் தனது மகளுடன் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்காலம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி உமா தேவி(வயது 25), மகள் மோகனாஸ்ரீ (2) பெற்றோருடன் வசித்து வந்தனர்.4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாஸ்ரீ யும் கடந்த ஜீன் 24-ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

'' என் மகளை விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். இந்த நிலையில் தான் எனது மகள் இரண்டாவதாக கருவுற்றார்.

சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக நான் போன் செய்த போது திருப்பதியில் இருக்கின்றோம் என்று என் மகள் கூறினார். நான் திருப்பதி கோவிலுக்கு  சாமிகும்பிட சென்றுள்ளீர்களா? என்று கேட்டதற்கு இல்லை நாங்கள் ஸ்கேன் செய்ய வந்துள்ளோம் என்று கூறினார் எனது மகளை கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தி மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளனர்.

எனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று தான் நினைத்தோம். நான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் உடனே வர முடியவில்லை'' என்கிறார் உமா தேவிவின் தந்தை ஏழுமலை.

தனது மகள் அழுது கொண்டே இறப்பதற்கு முன் தினம் பேசினார் என்கிறார் ஏழுமலை

'' நான் எதுவும் கவலைப்பட வேண்டாம் நான் வந்து விடுகிறேன் என்று ஆறுதல் கூறினேன். ஆனால் அடுத்த நாளே எங்களுக்கு போன் வந்தது முதலில் எனது பேத்தி மோகனா ஸ்ரீ கிணற்றில் விழுந்துவிட்டதாக கூறினார்கள்

உடனடியாக சில நிமிடங்களிலேயே உங்களது மகளும் கிணற்றில் விழுந்து விட்டார் இருவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் வந்தது.'' என்கிறார் அவர்.

''எனது மகள் கருவுற்று இரண்டு  மாதம் ஆனவுடன் நாங்கள் அரசு செவிலியரிடம் காண்பித்து பதிவு செய்யுங்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கும் சென்று செக்கப் செய்து வாருங்கள் என்று கூறினோம். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை பதிவு செய்யவே இல்லை என்பது இப்போதுதான் எங்களுக்கு தெரிகின்றது. எனது மகள் இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவ்வப்போது திட்டியும், வரதட்சணை கேட்டும் அடித்துள்ளனர்.'' என்கிறார் ஏழுமலை.

இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட கிணறு

படக்குறிப்பு, இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட கிணறு

திருப்பதி ஸ்கேன் சென்டரில் சோதனை

இறந்த உமாதேவியின் தந்தை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம்  விசாரணை நடத்தியதாக கூறுகிறார் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி

''விக்னேஷ் -உமாதேவி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் உமா தேவி கர்ப்பமானதால், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ? என்று நினைத்து கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டறிய முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்யது கருவில் இருப்பது பெண் சிசு என்பதை அறிந்துள்ளனர். இதனால் கருவை கலைக்க உமாதேவியை வற்புறுத்தியுள்ளனர் என்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது'' என்கிறார் அவர்.

இந்தநிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக விக்னஷ், ஜெயவேல் சிவகாமி (43) மற்றும் கருவை கலைக்க உதவியதாக அதே ஊரை சேர்ந்த சாரதி (திருப்பதி ஸ்கேன் சென்டரை அறிமுகம் செய்தவர்)  ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறது காவல்துறை.

'' தமிழ்நாட்டில் இதுபோன்ற ஸ்கேன் சென்டர்கள் தற்பொழுது தகவல் தருவதில்லை இதனால், இவர்கள் அண்டை மாநிலத்துக்கு சென்று இடைத்தரகர் மூலமாக ஸ்கேன் செய்துள்ளனர். கரு கலைப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உமாதேவி தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்'' என்கிறார் இன்ஸ்பெக்டர் லட்சுமி.

இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட கிணறு

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு

திருவண்ணாமலை உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் உள்ள சட்டவிரோத ஸ்கேனிங் மையத்தை விசாரிக்க சிறப்பு குழுக்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும்  திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் கடந்த 2023- 24 ஆம் ஆண்டில் 14233 ஆண் குழந்தைகளும் 12946 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 1287 குறைவாகும் என்றார் சுகாதார துறை மாவட்ட அதிகாரி பிரகாஷ்

''திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் போன்ற விவசாயம் சார்புடைய தொழிலை பிரதானமாக கொண்ட மாவட்டங்களில், கல்வியறிவு குறைவாக இருக்கிறது. இங்கு பெண் குழந்தைகளின் பிறப்பு கொண்டாடப்படுவதில்லை'' என்கிறார் இப்பகுதியில் வசிக்கும் லலித்குமார்.

கடந்த வருடம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழக அளவில் 28 வது இடத்தை பெற்றுள்ளது இதன் தேர்ச்சி விகிதம் 93.10 ஆகும்.

நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyllzw0q0yo

கட்டாய கருக்கலைப்பு: 2 வயது மகளுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் - திருவண்ணாமலையில் என்ன நடந்தது?

1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புக்காட்சி கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 29 நிமிடங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் வயிற்றில் இருந்த சிசுவை குடும்பத்தினர் வற்புறுத்தி கலைக்க வைத்ததால் தனது மகளுடன் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்காலம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி உமா தேவி(வயது 25), மகள் மோகனாஸ்ரீ (2) பெற்றோருடன் வசித்து வந்தனர்.4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாஸ்ரீ யும் கடந்த ஜீன் 24-ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். '' என் மகளை விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். இந்த நிலையில் தான் எனது மகள் இரண்டாவதாக கருவுற்றார். சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக நான் போன் செய்த போது திருப்பதியில் இருக்கின்றோம் என்று என் மகள் கூறினார். நான் திருப்பதி கோவிலுக்கு சாமிகும்பிட சென்றுள்ளீர்களா? என்று கேட்டதற்கு இல்லை நாங்கள் ஸ்கேன் செய்ய வந்துள்ளோம் என்று கூறினார் எனது மகளை கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தி மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளனர். எனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று தான் நினைத்தோம். நான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் உடனே வர முடியவில்லை'' என்கிறார் உமா தேவிவின் தந்தை ஏழுமலை. தனது மகள் அழுது கொண்டே இறப்பதற்கு முன் தினம் பேசினார் என்கிறார் ஏழுமலை '' நான் எதுவும் கவலைப்பட வேண்டாம் நான் வந்து விடுகிறேன் என்று ஆறுதல் கூறினேன். ஆனால் அடுத்த நாளே எங்களுக்கு போன் வந்தது முதலில் எனது பேத்தி மோகனா ஸ்ரீ கிணற்றில் விழுந்துவிட்டதாக கூறினார்கள் உடனடியாக சில நிமிடங்களிலேயே உங்களது மகளும் கிணற்றில் விழுந்து விட்டார் இருவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் வந்தது.'' என்கிறார் அவர். ''எனது மகள் கருவுற்று இரண்டு மாதம் ஆனவுடன் நாங்கள் அரசு செவிலியரிடம் காண்பித்து பதிவு செய்யுங்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கும் சென்று செக்கப் செய்து வாருங்கள் என்று கூறினோம். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை பதிவு செய்யவே இல்லை என்பது இப்போதுதான் எங்களுக்கு தெரிகின்றது. எனது மகள் இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவ்வப்போது திட்டியும், வரதட்சணை கேட்டும் அடித்துள்ளனர்.'' என்கிறார் ஏழுமலை. படக்குறிப்பு, இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட கிணறு திருப்பதி ஸ்கேன் சென்டரில் சோதனை இறந்த உமாதேவியின் தந்தை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதாக கூறுகிறார் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி ''விக்னேஷ் -உமாதேவி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் உமா தேவி கர்ப்பமானதால், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ? என்று நினைத்து கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டறிய முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்யது கருவில் இருப்பது பெண் சிசு என்பதை அறிந்துள்ளனர். இதனால் கருவை கலைக்க உமாதேவியை வற்புறுத்தியுள்ளனர் என்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது'' என்கிறார் அவர். இந்தநிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக விக்னஷ், ஜெயவேல் சிவகாமி (43) மற்றும் கருவை கலைக்க உதவியதாக அதே ஊரை சேர்ந்த சாரதி (திருப்பதி ஸ்கேன் சென்டரை அறிமுகம் செய்தவர்) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறது காவல்துறை. '' தமிழ்நாட்டில் இதுபோன்ற ஸ்கேன் சென்டர்கள் தற்பொழுது தகவல் தருவதில்லை இதனால், இவர்கள் அண்டை மாநிலத்துக்கு சென்று இடைத்தரகர் மூலமாக ஸ்கேன் செய்துள்ளனர். கரு கலைப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உமாதேவி தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்'' என்கிறார் இன்ஸ்பெக்டர் லட்சுமி. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு திருவண்ணாமலை உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் உள்ள சட்டவிரோத ஸ்கேனிங் மையத்தை விசாரிக்க சிறப்பு குழுக்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார். திருவண்ணாமலையில் கடந்த 2023- 24 ஆம் ஆண்டில் 14233 ஆண் குழந்தைகளும் 12946 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 1287 குறைவாகும் என்றார் சுகாதார துறை மாவட்ட அதிகாரி பிரகாஷ் ''திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் போன்ற விவசாயம் சார்புடைய தொழிலை பிரதானமாக கொண்ட மாவட்டங்களில், கல்வியறிவு குறைவாக இருக்கிறது. இங்கு பெண் குழந்தைகளின் பிறப்பு கொண்டாடப்படுவதில்லை'' என்கிறார் இப்பகுதியில் வசிக்கும் லலித்குமார். கடந்த வருடம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழக அளவில் 28 வது இடத்தை பெற்றுள்ளது இதன் தேர்ச்சி விகிதம் 93.10 ஆகும். நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019 - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyllzw0q0yo

இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு

1 week ago
நல்ல செய்தி. தொடரட்டும் உங்கள் பணி. இது ஒன்றே இலங்கையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கொண்டு வரும்.

மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக பௌத்த மததலைவர்களின் உதவியை நாடினாரா? மறுக்கின்றார் நாமல்

1 week ago
ஷிரந்தி கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு மஹிந்த எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை – மல்வத்து பீடம் அறிக்கை Published By: DIGITAL DESK 3 30 JUN, 2025 | 04:45 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதைத் தடுக்க தலையிடக் கோரி கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டி மல்வத்து மகா விகாரை மறுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மல்வத்து மகா விகாரையிடம் அத்தகைய கோரிக்கையை விடுத்ததாகக் வெளியாகிய செய்திகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மல்வத்து பீடம் இதனைத் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவினால் இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று மல்வத்து பீடம் குறிப்பிட்டுள்ளது. பரப்பப்படும் செய்திகளில் கூறப்பட்டுள்ளதைப் போன்று அத்தகைய சந்திப்பு அல்லது தொலைபேசி உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்றும் மல்வத்து பீடம் தெரிவித்துள்ளது. பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்துவத்து பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/218859

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்

1 week ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பூஜித், ஹேமசிறி மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு Published By: DIGITAL DESK 3 30 JUN, 2025 | 04:36 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கு ஜூலை 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் தடுக்கத் தவறியதன் ஊடாக கடமையைச் செய்யத் தவறியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு மேல் நீதிமன்றின் ட்ரயல் அட் பார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (30) நீதிபதிகள் நாமல் பலல்லே மற்றும் முகமது இர்ஷதீன் ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன் டி சில்வா, மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஆதித்யா படபெண்டிகே ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமையினால் தலைமை நீதிபதியால் மாற்றீட்டாளர் நியமிக்கப்படும் வரை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் புதிய நீதிபதி ஒருவர் பதவி வகிப்பார் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன்படி, வழக்கு விசாரணைக்கு புதிய திகதியை நிர்ணயிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தைக் கோரினார். பின்னர், வழக்கை ஜூலை 28 ஆம் திகதிக்கு நீதி மன்றம் ஒத்திவைத்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்ல் நீதிமன்ற அமர்வு, ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், சாட்சிகளை அழைக்காமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்கான மேல் நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனு மீதான பரிசீலனையின் பின்னர், இறுதி தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன்பு உயர் நீதிமன்றம் சாட்சிகளை அழைத்து புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. https://www.virakesari.lk/article/218854

இலங்கை வரும் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்?

1 week ago
இலங்கை வரும் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்? எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ள “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்” இலங்கையின் பிரமாண்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள உலகப் புகழ்பெற்ற போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் காத்திருக்கும் நிலையில், ஷாருக்கான் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்குவார் என்று சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. இது தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சொகுசு ரிசார்ட்டைத் தொடங்குவதைக் குறிக்கிறது. ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு முக்கிய முயற்சியான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ், இலங்கை, தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று வரை இலங்கையின் ஆடம்பர விருந்தோம்பல் துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த ஊகத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா மற்றும் சினமன் லைஃப் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் ஏற்கனவே “சிறப்பு வாய்ந்த ஒருவர்” வருகையைப் பற்றிய குறிப்புகளை வழங்கும் டீசர் பிரச்சாரங்களை நடத்தத் தொடங்கியுள்ளன. 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் திட்டத்தில் உலகத் தரம் வாய்ந்த கேசினோ, அதி-ஆடம்பரமான ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை அடங்கும். கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலைநிறுத்துவதில் இந்த தொடக்கமானது ஒரு மைல்கல் தருணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1437643

இலங்கை வரும் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்?

1 week ago

New-Project-396.jpg?resize=750%2C375&ssl

இலங்கை வரும் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்?

எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ள “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்” இலங்கையின் பிரமாண்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள உலகப் புகழ்பெற்ற போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் காத்திருக்கும் நிலையில், ஷாருக்கான் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்குவார் என்று சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இது தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சொகுசு ரிசார்ட்டைத் தொடங்குவதைக் குறிக்கிறது.

ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு முக்கிய முயற்சியான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ், இலங்கை, தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று வரை இலங்கையின் ஆடம்பர விருந்தோம்பல் துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்த ஊகத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா மற்றும் சினமன் லைஃப் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் ஏற்கனவே “சிறப்பு வாய்ந்த ஒருவர்” வருகையைப் பற்றிய குறிப்புகளை வழங்கும் டீசர் பிரச்சாரங்களை நடத்தத் தொடங்கியுள்ளன.

1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் திட்டத்தில் உலகத் தரம் வாய்ந்த கேசினோ, அதி-ஆடம்பரமான ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை அடங்கும்.

கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலைநிறுத்துவதில் இந்த தொடக்கமானது ஒரு மைல்கல் தருணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1437643

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

1 week ago
"மழை போல விழும் குண்டுகள்" - வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் மக்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்கள் தங்கள் இடங்களிலிருந்து வெளியேறுகின்றனர் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்ததுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது. இந்த வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஜபாலியாவில் (Jabalia) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்ததாகவும், பல வீடுகள் சேதமடைந்ததாகவும், குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மக்கள் வடக்கு காஸா பகுதியிலிருந்து வெளியேறும் போதும் தாக்குதல் தொடர்ந்ததாகத் தெரிவித்தனர். அதே சமயம், தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவித்ததாக ராயிட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது. இதற்கிடையே காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி டெல் அவிவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. தற்போது வரை காஸாவில் 56,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yppe3p2w4o

ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு!

1 week ago
ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு! காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அவர் தலையிடுவதாக இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். காஸாவில் போர் நிறுத்தத்திற்கு முயற்சித்து வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், நள்ளிரவில் காஸா அகதி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 5பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் காஸாவின் வடபகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேல் இராணுவம் அறிவித்ததையடுத்து பலஸ்தீனர்கள் வெளியேறிவருகின்றனர். https://athavannews.com/2025/1437647

ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு!

1 week ago

New-Project-1-9.jpg?resize=600%2C300&ssl

ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு!

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அவர் தலையிடுவதாக இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு முயற்சித்து வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், நள்ளிரவில் காஸா அகதி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 5பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் காஸாவின் வடபகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேல் இராணுவம் அறிவித்ததையடுத்து பலஸ்தீனர்கள் வெளியேறிவருகின்றனர்.

 https://athavannews.com/2025/1437647

இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1 week ago

30 JUN, 2025 | 02:11 PM

image

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும் மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன் IND-TN-10-MM-773பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய கைது நடவடிக்கைகள் படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும் நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.

வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218838

இலங்கை கடற்படையினரால் 8 மீனவர்கள் கைது ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1 week ago
30 JUN, 2025 | 02:11 PM சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும் மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன் IND-TN-10-MM-773பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கைது நடவடிக்கைகள் படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும் நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218838

இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு

1 week ago
இசைப்பிரியா பாலசந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என கோரும் முறைப்பாடு - அதிகாரிகள் உடனடியாக செயற்படவேண்டும் என சட்டத்தரணி வேண்டுகோள் 30 JUN, 2025 | 01:23 PM இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலசந்திரன் பிரபாகரன் ஆகியோர் கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் முறைப்பாட்டினை பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளதாக சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். தனது முறைப்பாடு தற்போது பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரினால் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் அதிகாரப்பூர்வ சட்ட வழிகள் மூலம் முறையாக விசாரிக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக நான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன். எனது முன்னுரிமை வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகும்.என அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கு முன்னோக்கி நகரும்போது உங்கள் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்காக பொதுமக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218832

வாஸ்கோடகாமா கேரளாவில் ஒரு கொடூர வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?

1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார். கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 29 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் "போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்." 'உறுமி' எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது. அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல வேண்டும் என்பதே நாயகன் கேழுவின் வாழ்க்கை லட்சியமாக இருக்கும். அதற்காகவே அவர் பல சிரமங்களைச் சந்திப்பார், ஒரு புரட்சிப் படையைத் திரட்டுவார், போர்த்துகீசிய படைகளுக்கு எதிரான சண்டையில் தன் உயிர் நண்பனைப் பறிகொடுப்பார். இருப்பினும், தனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இறுதியில் உயிரிழப்பார். வாஸ்கோடகாமா என்ற போர்த்துகீசியரை கொல்லத் துடித்த 'சிரக்கல் கேழு' ஒரு புனைவுக் கதாபாத்திரம்தான். ஆனால் பிரித்விராஜ் ஏற்று நடித்த அந்தக் கதாபாத்திரமும், 'உறுமி' திரைப்படமும் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சில மலையாள திரைப்படங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் என கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவுக்கு கடல்வழி கண்ட வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார். வாஸ்கோடகாமா, 1497ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்து அந்நாட்டு மன்னரின் ஆதரவுடன் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். பல மாதங்கள் நீடித்த கடல் பயணத்திற்குப் பிறகு, இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர் எனும் பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, ஐரோப்பிய வரலாற்றில் ஒரு 'ஹீரோவாக' கொண்டாடப்படுகிறார். நமது பாடப் புத்தகங்களில்கூட, வாஸ்கோடகாமாவின் வணிக நோக்கிலான இந்திய பயணங்கள் குறித்தும், அவரது வர்த்தக/மாலுமி முகம் குறித்துமே அதிகம் உள்ளது. இந்தியாவை அடைய வேண்டுமென்ற ஐரோப்பாவின் கனவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கோழிக்கோடு சமோரின் (ராஜா) சந்திப்பை சித்தரிக்கும் ஓவியம் "இந்தியாவோடு நேரடி ஐரோப்பிய தொடர்பைத் தொடங்கும் அதிர்ஷ்டம் பெற்ற இந்த வாஸ்கோடகாமா, வலிமையான உடலமைப்பும், முரட்டுத்தனமான மனப்பான்மையும் கொண்டவர். கல்வியறிவு இல்லாதவர், கொடூரமானவர், வன்முறையாளர் என்றாலும், அவர் விசுவாசமானவர், அச்சமற்றவர். இந்திய பயணத்திற்கு தலைமை தாங்க, அவருக்கு உத்தரவிடப்பட்டது. இத்தகைய பணியை ஒரு மென்மையான தலைவரால் நிறைவேற்ற முடியாது." இவ்வாறு வாஸ்கோடகாமா குறித்து தனது 'தி கிரேட் டிஸ்கவரீஸ்' எனும் நூலில் குறிப்பிடுகிறார் அமெரிக்க வரலாற்று ஆசிரியரான சார்லஸ் இ. நோவெல். ஜனவரி 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார். இந்தியாவை முதலில் அடைவது யார் என்ற போட்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் பல நூற்றாண்டுகளாகவே நடைபெற்று வந்தது. சிறிய நாடான போர்ச்சுகலும் தன்னால் முடிந்த அனைத்தையும் முயன்று வந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே இந்தியாவை அடைந்த அரேபியர்களும், பாரசீகர்களும் இங்கு தங்களது வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். குறிப்பாக தென்னிந்திய பகுதியான மலபாரில் (கேரளா) இஸ்லாமிய வணிகர்களிடம் இருந்தே ஐரோப்பாவுக்கு மசாலா பொருட்கள் கிடைத்தன. "போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன்பு, குஜராத், மலபார் மற்றும் செங்கடலில் உள்ள துறைமுகங்கள் உள்பட இந்திய பெருங்கடல் வர்த்தகத்தில் இஸ்லாமிய கடல் வணிகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்" என்று 'தி முகல் எம்பயர்' நூலில் ஜான் எஃப். ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார். "1492இல் கொலம்பஸ் அமெரிக்காவில் கால்பதித்தார். தான் மரணிக்கும் நாள் வரை, தான் கண்டுபிடித்தது ஆசியாவின் ஒரு பகுதியைத்தான் என்றும், அதற்கு அருகில்தான் இந்தியா உள்ளது என்றும் உறுதியாக நம்பினார். அதனால் அவர் கால் பதித்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'இந்தியர்கள்' என்று அழைத்தார்" என ஜார்ஜ் எம். டோலி தனது 'தி வாயேஜஸ் அண்ட் அட்வெஞ்சர்ஸ் ஆஃப் வாஸ்கோடகாமா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு, 'இந்தியாவை' அடைவதில் ஐரோப்பியர்கள் முனைப்பாக இருந்தனர். அதற்குக் காரணம், இந்தியா குறித்து ஐரோப்பாவில் பரவியிருந்த பிம்பம். தங்கம், வைரம், ரத்தினங்கள், மிளகு போன்ற விலை உயர்ந்த மசாலா பொருட்கள் மற்றும் பலதரப்பட்ட பொக்கிஷங்கள் நிறைந்த ஓர் இடமாக ஆசியாவும், குறிப்பாக இந்தியாவும் கருதப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார். வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் மேனுவல்' நூலில், "1497இல் புறப்பட்ட வாஸ்கோடகாமாவின் கடற்படையில் சாவ் ரஃபேல், சாவ் கேப்ரியல், சாவ் மிகுவல் எனப்படும் மூன்று கப்பல்கள் இருந்தன. ஒவ்வொரு கப்பலிலும், அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் முறையாக வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தபோது அவர் மிகச் சிறிய படையுடனே வந்தார். எத்தனை பேர் என்பது குறித்து வெவ்வேறு தகவல்கள் வரலாற்றுப் புத்தகங்களில் காணப்பட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாகிறது- அவரது கப்பலில் குற்றவாளிகளும் இருந்தார்கள். 'எம் நோம் டி டியூஸ்: தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா 1497–1499' என்ற நூல், வாஸ்கோவின் கடற்படையில் நாடு கடத்தப்பட்ட பத்து குற்றவாளிகளும் இருந்தனர் எனக் கூறுகிறது. அவர்களது பாவங்கள் போர்ச்சுகல் மன்னரால் மன்னிக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பயணத்திற்கு உதவியாக இருக்கட்டும் என அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இதற்கு மற்றொரு காரணத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதாவது, "ஆபத்தான கடற்பயணம் எனும்போது, போர்ச்சுகல் சிறைகளில் தண்டனை பெற்று வீணாக மடிவதைவிட, வாஸ்கோவுக்கு உதவியாக இருந்து கடற்பயணத்தில் உயிரிழப்பது சிறந்தது என மன்னர் கருதியிருக்கலாம்." இந்தக் குற்றவாளிகளில் முக்கியமானவர், ஜோ அவோ நுனெஸ் எனும் ஒரு 'புதிய கிறிஸ்தவர்', அதாவது சமீபத்தில் மதம் மாறிய யூதர். அவர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை ஓரளவு அறிந்திருந்தார். 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' நூலின்படி, "ஜோ அவோ நுனெஸ்- புத்திக்கூர்மை உடைய மனிதர், அவரால் மூர்கள் (இஸ்லாமியர்களை குறிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்திய சொல்) பேசிய மொழியைப் புரிந்து கொள்ள முடியும்." இந்தியாவில் முதலில் கால் வைத்த ஐரோப்பியர் ஒரு குற்றவாளியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் பயணங்களை விளக்கும் வரைபடம். புள்ளியிடப்பட்ட கோடு 1497இல் இந்தியாவுக்கான முதல் பயணத்தைக் குறிக்கிறது. வாஸ்கோவின் படை மே 20, 1498, கேரளாவை அடைந்தபோது, கரையில் இருந்து சிறிது தூரத்தில், கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. வாஸ்கோடகாமாவின் குழு, இந்தியாவில் முதன்முதலாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காப்பாடு எனும் கிராமத்தைத்தான் அடைந்தது என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், உண்மையில் அவர் முதலில் சென்றது கொல்லம் மாவட்டத்திற்கு அருகே இருந்த பந்தலாயணி பகுதிக்குத்தான் என சமீபத்தில் மறைந்த இந்திய வரலாற்று ஆசிரியரும், கல்வியாளருமான எம்.ஜி.எஸ். நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். மலபார் கரையில் இருந்து நான்கு சிறு படகுகள், வாஸ்கோவின் கப்பல்களை அடைந்து, அதில் இருந்தவர்கள் குறித்து விசாரித்தனர். குறிப்பாக, "வாஸ்கோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில் முதலில் இந்தியாவில் கால் வைத்த ஒரு ஐரோப்பியர் வாஸ்கோ அல்ல, அது ஒரு 'குற்றவாளியாக' இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், "கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்திய பிறகு, அரபு மற்றும் ஹீப்ரு மொழி பேசக்கூடிய ஒருவரை, மலபார் படகுகளுடன் கரைக்கு வாஸ்கோ அனுப்பி வைத்தார்" என 'வாஸ்கோடகாமா அண்ட் தி ஸீ ரூட் டூ இந்தியா' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், மலபார் கரையை அடைந்த முதல் ஐரோப்பியர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை அறிந்த, 'புதிய கிறிஸ்தவரான' ஜோ அவோ நுனெஸாக இருக்கலாம். ஆனால், இதை உறுதி செய்யப் போதுமான ஆவணங்கள் இல்லை. ஏமாற்றத்தில் முடிந்த முதல் இந்திய பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் சாவ் கேப்ரியல் கப்பல் (சித்தரிப்பு ஓவியம்) அவ்வாறு கேரளாவில் கால் பதித்த அந்த மொழிபெயர்ப்பாளர், உள்ளூரில் வசித்த இரு அரேபியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் வாஸ்கோவின் மொழிபெயர்ப்பாளரை எதிரியாகவே பார்த்தார்கள். "சாத்தான் உன்னைக் கொண்டு போகட்டும்" எனக் கத்தினார்கள். பிறகு, "ஏன் இங்கு வந்தீர்கள்?" எனக் கேட்ட போது, அதற்கு வாஸ்கோவின் ஆள், "நாங்கள் கிறிஸ்தவர்களையும் மசாலா பொருட்களையும் தேடி வந்தோம்" என்ற பதில் கூறியுள்ளார். இப்படித்தான், இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியருக்கும், ஏற்கெனவே இங்கு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அரேபியர்களுக்கும் இடையிலான உரையாடல் இருந்தது எனப் பல வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு வாஸ்கோடகாமா, சில நபர்களை மட்டும் அழைத்துக் கொண்டு, பிறரை கப்பல்களிலேயே எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்திவிட்டு, மலபார் கரையில் கால் பதித்தார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், வாஸ்கோவின் முதல் இந்திய பயணம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அவர் சமோரினுக்காக (கோழிக்கோட்டின் இந்து மன்னரைக் குறிக்க போர்த்துகீசியர்கள் பயன்படுத்திய சொல்) கொண்டு சென்ற பரிசுகள் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டன. மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரபு முஸ்லிம்கள், போர்த்துகீசியர்களின் வருகையை எதிர்த்தனர். "மிளகு வர்த்தகத்தில் போர்த்துகீசியர்கள் ஏகபோக உரிமையை நாடியபோது, அது இஸ்லாமியர்களால் கையாளப்பட்டதால் சமோரின் அதை மறுத்தார். பின்னர் போர்த்துகீசியர்கள் கொச்சி ராஜ்ஜியத்தை அணுகி, வணிகம் செய்ய அங்கு கடை அமைத்தனர். பின்னர், விஜயநகர பேரரசுக்கு அருகில் இருந்ததால் அவர்கள் கோவாவுக்கு மாறினர்" என்று வரலாற்று ஆசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். கடந்த 1499ஆம் ஆண்டில், சிறு அளவிலான மசாலா பொருட்களுடன் ஐரோப்பா திரும்பிய வாஸ்கோடகாமாவுக்கு, போர்ச்சுகல் நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. "முதல் இந்திய பயணத்திற்குப் பிறகு வாஸ்கோடகாமாவின் கடற்படையால் கொண்டு வரப்பட்ட மசாலா பொருட்கள் மிகப்பெரிய லாபத்திற்கு விற்கப்பட்டன, இது பயணத்தின் செலவைவிடப் பல மடங்கு அதிக லாபம்" எனத் தனது 'ஆசியா அண்ட் வெஸ்டர்ன் டாமினன்ஸ்' எனும் நூலில் கே.எம். பணிக்கர் எழுதியுள்ளார். இந்தியாவின் வளத்தை போர்த்துகீசியர்கள் புரிந்துகொண்ட தருணம் அது. வாஸ்கோவின் இரண்டாவது பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் கப்பலில் கோழிக்கோடு வணிகர்கள் சிறை பிடிக்கப்படுவதைச் சித்தரிக்கும் ஓவியம் இந்தியாவுக்கான வாஸ்கோடகாமாவின் முதல் பயணம் (1497–1499) ஐரோப்பா, இந்தியா இடையிலான கடல் வழிப்பாதையை அறிமுகப்படுத்தியது. ஆனால் கேரளாவின் கோழிக்கோடு அரசுடன் ஒரு வலுவான வணிக ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறிவிட்டது. இந்திய பெருங்கடலில் மசாலா வர்த்தகத்தில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திய அரபு இஸ்லாமிய வணிகர்களால் போர்த்துகீசியர்கள் அவமதிக்கப்பட்டனர் மற்றும் புறக்கணிக்கப்பட்டனர். "வாஸ்கோவின் பார்வையில், கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் வணிகர்கள் வெறும் பொருளாதாரப் போட்டியாளர்கள் மட்டுமல்ல, மத மற்றும் கலாசார எதிரிகளும்கூட. சமோரின் அரசவையில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு, போர்த்துகீசிய லட்சியங்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டது" என 'தி கரியர் அண்ட் லெஜெண்ட் ஆஃப் வாஸ்கோடகாமா' எனும் நூலில் வரலாற்று ஆசிரியர் சஞ்சய் சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, போர்த்துகீசிய அரசு இரண்டாவது இந்திய பயணத்தை ஏற்பாடு செய்தது. இந்த முறை நோக்கம் தெளிவாக இருந்தது. அது. "இந்தியாவில் போர்த்துகீசிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, முந்தைய பின்னடைவுகளுக்குப் பழிவாங்குவது மற்றும் மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெறுவது." இருபது போர்க் கப்பல்கள் மற்றும் சுமார் 1,500 பேர் கொண்ட ஒரு கடற்படையுடன் பிப்ரவரி 1502இல் வாஸ்கோடகாமா லிஸ்பனை விட்டுப் புறப்பட்டார். அந்தக் கடற்படை, பீரங்கிகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டிருந்தது, போருக்குத் தயாராகவும் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'மெக்கா கப்பல்களை' வாஸ்கோவின் கடற்படையினர் தாக்குவதைச் சித்தரிக்கும் ஓவியம். அதே ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, கேரளாவின் கண்ணூர் கடற்பகுதியை வாஸ்கோவின் படை அடைந்தது. அதன் பிறகு நடந்தவற்றை வாஸ்கோவின் கடற்படையில் இருந்த ஒருவர், 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' எனும் நூலில் பின்வருமாறு விவரித்துள்ளார். "அங்கே நாங்கள் மெக்காவின் கப்பல்களைப் பார்த்தோம். அவை நம் நாட்டிற்கு (போர்ச்சுகல்) வரும் மசாலா பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள். இனி போர்ச்சுகல் மன்னர் மட்டுமே நேரடியாக இந்தியாவில் இருந்து மசாலா பொருட்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் அந்தக் கப்பல்களைக் கொள்ளையடித்தோம்." "அதன் பிறகு, 380 ஆண்கள், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணித்த ஒரு மெக்கா கப்பலை நாங்கள் சிறைபிடித்தோம். அதிலிருந்து குறைந்தது 12,000 டுகட்கள் (டுகட்- தங்க நாணயம்) மற்றும் விலை உயர்ந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்தோம். அக்டோபர் முதல் நாளில் கப்பலையும் அதில் இருந்த அனைவரையும் எரித்தோம்." இங்கு குறிப்பிடப்படும் 'மெக்கா கப்பல்' என்பது 'மெரி' (Meri) என்ற ஒரு பெரிய கப்பல். இது கோழிக்கோடு பகுதியில் வசித்த கோஜா காசிம் எனும் செல்வந்தரின் சகோதரருக்கு சொந்தமான கப்பல் என வரலாற்று ஆசிரியர் கே.எம். பணிக்கர் குறிப்பிடுகிறார். வாஸ்கோவின் படையிடம் சிக்கியபோது, 'ஹஜ் புனித யாத்திரைக்காக' பயணித்துக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான யாத்ரீகர்கள் மெரி கப்பலில் நிரம்பியிருந்தனர். அத்துடன் வர்த்தகத்திற்கான மதிப்புமிக்க பொருட்களும் கப்பலில் இருந்தன. "வாஸ்கோ கப்பலை எரிக்க உத்தரவிட்டார். பெண்கள் தங்கள் குழந்தைகளை புகையின் நடுவே தூக்கிப் பிடித்து, கருணைக்காக மன்றாடினர். போர்த்துகீசியர்கள் தங்கள் கப்பல்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் வலியால் அழுதுகொண்டே இறந்தனர்." "ஒருவர்கூட தப்பிக்கவில்லை. இறக்கும் தருவாயில் இருந்தவர்களின் அழுகை கடல் முழுவதும் எதிரொலித்தது. அப்போது வாஸ்கோ அசையாமல் நின்றிருந்தார்" என லெண்டாஸ் டி இந்தியா (Lendas da Índia) எனும் நூலில் காஸ்பர் கோஹியா குறிப்பிடுகிறார். வாஸ்கோடகாமா தலைமையிலான படை செய்த இந்தச் சம்பவம் சில போர்த்துகீசிய சம காலத்தவர்களைக்கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாஸ்கோடகாமா கேரள வரலாற்றில் ஒரு வில்லனாக நினைவுகூறப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகவும் இந்தச் சம்பவம் மாறியது. 'பிரித்தாளும் சூழ்ச்சி' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கண்ணூர் ராஜா சந்திப்பைச் சித்தரிக்கும் ஓவியம் அப்போது கேரளா பல ராஜ்ஜியங்களாக பிரிந்து இருந்ததும், போர்த்துகீசியர்களின் ஆதிக்கம் ஓங்குவதற்கு ஒரு காரணமாக இருந்தது. உதாரணத்திற்கு, மெரி கப்பல் சம்பவத்திற்குப் பிறகு, வாஸ்கோவின் படையினர் கண்ணூர் ராஜாவால் வரவேற்கப்பட்டனர் என 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' குறிப்பிடுகிறது. "அக்டோபர் 20ஆம் தேதி நாங்கள் கண்ணூர் நாட்டிற்குச் சென்றோம். அங்கு அனைத்து வகையான மசாலா பொருட்களையும் வாங்கினோம். ராஜா மிகவும் ஆடம்பரமாக வந்தார், அவருடன் இரண்டு யானைகளையும், பல விசித்திரமான விலங்குகளையும் கொண்டு வந்தார்." அதைத் தொடர்ந்து, கோழிக்கோடு சென்ற வாஸ்கோவின் படையினர், அதன் ராஜா சமோரினிடம், நகரத்தில் இருந்து அனைத்து முஸ்லிம் வணிகர்களையும் வெளியேற்றி, போர்த்துகீசிய வர்த்தக ஏகபோகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரினர். ஆனால் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த சமோரின் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனால் கோழிக்கோடு நகரத்தை வாஸ்கோ தாக்கினார். "நாங்கள் எங்கள் படைகளை நகரத்திற்கு முன்பாகத் திரட்டி, அவர்களுடன் மூன்று நாட்கள் சண்டையிட்டோம். ஏராளமான மக்களைப் பிடித்து, அவர்களைக் கப்பல்களின் முற்றங்களில் தொங்கவிட்டோம். அவர்களை வீழ்த்தி, அவர்களின் கைகள், கால்கள் மற்றும் தலைகளை வெட்டினோம்." (தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா) இப்படிச் சிறிது சிறிதாக வன்முறை நடவடிக்கைகள் மூலமும், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் பிற கேரள ராஜாக்களுடன் இணைந்தும் தங்களது ஆதிக்கத்தை போர்த்துகீசியர்கள் கேரளாவில் வலுவாக்கினர். "இது பிராந்திய போட்டிகளைப் பயன்படுத்தி போர்ச்சுகலின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி" என 'தி போர்ச்சுகீஸ் ஸீபார்ன் எம்பயர்' நூலில் குறிப்பிடுகிறார் சார்லஸ் ஆர். பாக்ஸர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1524ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா, இந்தியாவின் போர்த்துகீசிய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். கேரளாவில் 1998ஆம் ஆண்டு, அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, வாஸ்கோடகாமா மலபார் பகுதிக்கு வந்து, 500 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அது 'சர்வதேச சுற்றுலா நிகழ்வாக' கொண்டாடப்படும் என அறிவித்தது. இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. 'வாஸ்கோவின் பயணமும் செயல்களும் இந்தியாவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் தொடக்கத்திற்கு வழிவகுத்தன. எனவே அதைக் கொண்டாடுவது சரியான செயல் அல்ல' என்று விமர்சிக்கப்பட்டது. ஐரோப்பாவின் காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு வாஸ்கோடகாமா ஒரு கருவியாகச் செயல்பட்டார் எனக் கூறலாம். போர்த்துகீசிய முடியாட்சியின் ஆசியோடு இந்தியா வந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, 1524ஆம் ஆண்டு மூன்றாவது முறை கேரளாவுக்கு வந்தபோது 'போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் வைஸ்ராய்' என்ற பதவியுடன் வந்தார். கொச்சியை வந்தடைந்த அவர், பின்னர் நோய்வாய்ப்பட்டு 1524 டிசம்பர் 24 அன்று இறந்தார். பிறகு 1539ஆம் ஆண்டில், அவரது உடல் எச்சங்கள் போர்ச்சுகலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24083d4wlo

வாஸ்கோடகாமா கேரளாவில் ஒரு கொடூர வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?

1 week ago

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார்.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 29 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

"போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்."

'உறுமி' எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது.

அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல வேண்டும் என்பதே நாயகன் கேழுவின் வாழ்க்கை லட்சியமாக இருக்கும். அதற்காகவே அவர் பல சிரமங்களைச் சந்திப்பார், ஒரு புரட்சிப் படையைத் திரட்டுவார், போர்த்துகீசிய படைகளுக்கு எதிரான சண்டையில் தன் உயிர் நண்பனைப் பறிகொடுப்பார். இருப்பினும், தனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இறுதியில் உயிரிழப்பார்.

வாஸ்கோடகாமா என்ற போர்த்துகீசியரை கொல்லத் துடித்த 'சிரக்கல் கேழு' ஒரு புனைவுக் கதாபாத்திரம்தான். ஆனால் பிரித்விராஜ் ஏற்று நடித்த அந்தக் கதாபாத்திரமும், 'உறுமி' திரைப்படமும் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் சில மலையாள திரைப்படங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் என கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவுக்கு கடல்வழி கண்ட வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார்.

வாஸ்கோடகாமா, 1497ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்து அந்நாட்டு மன்னரின் ஆதரவுடன் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். பல மாதங்கள் நீடித்த கடல் பயணத்திற்குப் பிறகு, இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர் எனும் பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, ஐரோப்பிய வரலாற்றில் ஒரு 'ஹீரோவாக' கொண்டாடப்படுகிறார்.

நமது பாடப் புத்தகங்களில்கூட, வாஸ்கோடகாமாவின் வணிக நோக்கிலான இந்திய பயணங்கள் குறித்தும், அவரது வர்த்தக/மாலுமி முகம் குறித்துமே அதிகம் உள்ளது.

இந்தியாவை அடைய வேண்டுமென்ற ஐரோப்பாவின் கனவு

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கோழிக்கோடு சமோரின் (ராஜா) சந்திப்பை சித்தரிக்கும் ஓவியம்

"இந்தியாவோடு நேரடி ஐரோப்பிய தொடர்பைத் தொடங்கும் அதிர்ஷ்டம் பெற்ற இந்த வாஸ்கோடகாமா, வலிமையான உடலமைப்பும், முரட்டுத்தனமான மனப்பான்மையும் கொண்டவர். கல்வியறிவு இல்லாதவர், கொடூரமானவர், வன்முறையாளர் என்றாலும், அவர் விசுவாசமானவர், அச்சமற்றவர். இந்திய பயணத்திற்கு தலைமை தாங்க, அவருக்கு உத்தரவிடப்பட்டது. இத்தகைய பணியை ஒரு மென்மையான தலைவரால் நிறைவேற்ற முடியாது."

இவ்வாறு வாஸ்கோடகாமா குறித்து தனது 'தி கிரேட் டிஸ்கவரீஸ்' எனும் நூலில் குறிப்பிடுகிறார் அமெரிக்க வரலாற்று ஆசிரியரான சார்லஸ் இ. நோவெல்.

ஜனவரி 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார். இந்தியாவை முதலில் அடைவது யார் என்ற போட்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் பல நூற்றாண்டுகளாகவே நடைபெற்று வந்தது. சிறிய நாடான போர்ச்சுகலும் தன்னால் முடிந்த அனைத்தையும் முயன்று வந்தது.

ஆனால், அதற்கு முன்பாகவே இந்தியாவை அடைந்த அரேபியர்களும், பாரசீகர்களும் இங்கு தங்களது வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். குறிப்பாக தென்னிந்திய பகுதியான மலபாரில் (கேரளா) இஸ்லாமிய வணிகர்களிடம் இருந்தே ஐரோப்பாவுக்கு மசாலா பொருட்கள் கிடைத்தன.

"போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன்பு, குஜராத், மலபார் மற்றும் செங்கடலில் உள்ள துறைமுகங்கள் உள்பட இந்திய பெருங்கடல் வர்த்தகத்தில் இஸ்லாமிய கடல் வணிகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்" என்று 'தி முகல் எம்பயர்' நூலில் ஜான் எஃப். ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார்.

"1492இல் கொலம்பஸ் அமெரிக்காவில் கால்பதித்தார். தான் மரணிக்கும் நாள் வரை, தான் கண்டுபிடித்தது ஆசியாவின் ஒரு பகுதியைத்தான் என்றும், அதற்கு அருகில்தான் இந்தியா உள்ளது என்றும் உறுதியாக நம்பினார். அதனால் அவர் கால் பதித்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'இந்தியர்கள்' என்று அழைத்தார்" என ஜார்ஜ் எம். டோலி தனது 'தி வாயேஜஸ் அண்ட் அட்வெஞ்சர்ஸ் ஆஃப் வாஸ்கோடகாமா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அளவுக்கு, 'இந்தியாவை' அடைவதில் ஐரோப்பியர்கள் முனைப்பாக இருந்தனர். அதற்குக் காரணம், இந்தியா குறித்து ஐரோப்பாவில் பரவியிருந்த பிம்பம். தங்கம், வைரம், ரத்தினங்கள், மிளகு போன்ற விலை உயர்ந்த மசாலா பொருட்கள் மற்றும் பலதரப்பட்ட பொக்கிஷங்கள் நிறைந்த ஓர் இடமாக ஆசியாவும், குறிப்பாக இந்தியாவும் கருதப்பட்டது.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார்.

வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் மேனுவல்' நூலில், "1497இல் புறப்பட்ட வாஸ்கோடகாமாவின் கடற்படையில் சாவ் ரஃபேல், சாவ் கேப்ரியல், சாவ் மிகுவல் எனப்படும் மூன்று கப்பல்கள் இருந்தன. ஒவ்வொரு கப்பலிலும், அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தபோது அவர் மிகச் சிறிய படையுடனே வந்தார். எத்தனை பேர் என்பது குறித்து வெவ்வேறு தகவல்கள் வரலாற்றுப் புத்தகங்களில் காணப்பட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாகிறது- அவரது கப்பலில் குற்றவாளிகளும் இருந்தார்கள்.

'எம் நோம் டி டியூஸ்: தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா 1497–1499' என்ற நூல், வாஸ்கோவின் கடற்படையில் நாடு கடத்தப்பட்ட பத்து குற்றவாளிகளும் இருந்தனர் எனக் கூறுகிறது.

அவர்களது பாவங்கள் போர்ச்சுகல் மன்னரால் மன்னிக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பயணத்திற்கு உதவியாக இருக்கட்டும் என அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இதற்கு மற்றொரு காரணத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அதாவது, "ஆபத்தான கடற்பயணம் எனும்போது, போர்ச்சுகல் சிறைகளில் தண்டனை பெற்று வீணாக மடிவதைவிட, வாஸ்கோவுக்கு உதவியாக இருந்து கடற்பயணத்தில் உயிரிழப்பது சிறந்தது என மன்னர் கருதியிருக்கலாம்."

இந்தக் குற்றவாளிகளில் முக்கியமானவர், ஜோ அவோ நுனெஸ் எனும் ஒரு 'புதிய கிறிஸ்தவர்', அதாவது சமீபத்தில் மதம் மாறிய யூதர். அவர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை ஓரளவு அறிந்திருந்தார்.

'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' நூலின்படி, "ஜோ அவோ நுனெஸ்- புத்திக்கூர்மை உடைய மனிதர், அவரால் மூர்கள் (இஸ்லாமியர்களை குறிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்திய சொல்) பேசிய மொழியைப் புரிந்து கொள்ள முடியும்."

இந்தியாவில் முதலில் கால் வைத்த ஐரோப்பியர் ஒரு குற்றவாளியா?

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் பயணங்களை விளக்கும் வரைபடம். புள்ளியிடப்பட்ட கோடு 1497இல் இந்தியாவுக்கான முதல் பயணத்தைக் குறிக்கிறது.

வாஸ்கோவின் படை மே 20, 1498, கேரளாவை அடைந்தபோது, கரையில் இருந்து சிறிது தூரத்தில், கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன.

வாஸ்கோடகாமாவின் குழு, இந்தியாவில் முதன்முதலாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காப்பாடு எனும் கிராமத்தைத்தான் அடைந்தது என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், உண்மையில் அவர் முதலில் சென்றது கொல்லம் மாவட்டத்திற்கு அருகே இருந்த பந்தலாயணி பகுதிக்குத்தான் என சமீபத்தில் மறைந்த இந்திய வரலாற்று ஆசிரியரும், கல்வியாளருமான எம்.ஜி.எஸ். நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

மலபார் கரையில் இருந்து நான்கு சிறு படகுகள், வாஸ்கோவின் கப்பல்களை அடைந்து, அதில் இருந்தவர்கள் குறித்து விசாரித்தனர். குறிப்பாக, "வாஸ்கோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

உண்மையில் முதலில் இந்தியாவில் கால் வைத்த ஒரு ஐரோப்பியர் வாஸ்கோ அல்ல, அது ஒரு 'குற்றவாளியாக' இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், "கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்திய பிறகு, அரபு மற்றும் ஹீப்ரு மொழி பேசக்கூடிய ஒருவரை, மலபார் படகுகளுடன் கரைக்கு வாஸ்கோ அனுப்பி வைத்தார்" என 'வாஸ்கோடகாமா அண்ட் தி ஸீ ரூட் டூ இந்தியா' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப் பார்த்தால், மலபார் கரையை அடைந்த முதல் ஐரோப்பியர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை அறிந்த, 'புதிய கிறிஸ்தவரான' ஜோ அவோ நுனெஸாக இருக்கலாம். ஆனால், இதை உறுதி செய்யப் போதுமான ஆவணங்கள் இல்லை.

ஏமாற்றத்தில் முடிந்த முதல் இந்திய பயணம்

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் சாவ் கேப்ரியல் கப்பல் (சித்தரிப்பு ஓவியம்)

அவ்வாறு கேரளாவில் கால் பதித்த அந்த மொழிபெயர்ப்பாளர், உள்ளூரில் வசித்த இரு அரேபியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் வாஸ்கோவின் மொழிபெயர்ப்பாளரை எதிரியாகவே பார்த்தார்கள்.

"சாத்தான் உன்னைக் கொண்டு போகட்டும்" எனக் கத்தினார்கள். பிறகு, "ஏன் இங்கு வந்தீர்கள்?" எனக் கேட்ட போது, அதற்கு வாஸ்கோவின் ஆள், "நாங்கள் கிறிஸ்தவர்களையும் மசாலா பொருட்களையும் தேடி வந்தோம்" என்ற பதில் கூறியுள்ளார்.

இப்படித்தான், இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியருக்கும், ஏற்கெனவே இங்கு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அரேபியர்களுக்கும் இடையிலான உரையாடல் இருந்தது எனப் பல வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு வாஸ்கோடகாமா, சில நபர்களை மட்டும் அழைத்துக் கொண்டு, பிறரை கப்பல்களிலேயே எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்திவிட்டு, மலபார் கரையில் கால் பதித்தார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால், வாஸ்கோவின் முதல் இந்திய பயணம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அவர் சமோரினுக்காக (கோழிக்கோட்டின் இந்து மன்னரைக் குறிக்க போர்த்துகீசியர்கள் பயன்படுத்திய சொல்) கொண்டு சென்ற பரிசுகள் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டன.

மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரபு முஸ்லிம்கள், போர்த்துகீசியர்களின் வருகையை எதிர்த்தனர்.

"மிளகு வர்த்தகத்தில் போர்த்துகீசியர்கள் ஏகபோக உரிமையை நாடியபோது, அது இஸ்லாமியர்களால் கையாளப்பட்டதால் சமோரின் அதை மறுத்தார். பின்னர் போர்த்துகீசியர்கள் கொச்சி ராஜ்ஜியத்தை அணுகி, வணிகம் செய்ய அங்கு கடை அமைத்தனர். பின்னர், விஜயநகர பேரரசுக்கு அருகில் இருந்ததால் அவர்கள் கோவாவுக்கு மாறினர்" என்று வரலாற்று ஆசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

கடந்த 1499ஆம் ஆண்டில், சிறு அளவிலான மசாலா பொருட்களுடன் ஐரோப்பா திரும்பிய வாஸ்கோடகாமாவுக்கு, போர்ச்சுகல் நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

"முதல் இந்திய பயணத்திற்குப் பிறகு வாஸ்கோடகாமாவின் கடற்படையால் கொண்டு வரப்பட்ட மசாலா பொருட்கள் மிகப்பெரிய லாபத்திற்கு விற்கப்பட்டன, இது பயணத்தின் செலவைவிடப் பல மடங்கு அதிக லாபம்" எனத் தனது 'ஆசியா அண்ட் வெஸ்டர்ன் டாமினன்ஸ்' எனும் நூலில் கே.எம். பணிக்கர் எழுதியுள்ளார்.

இந்தியாவின் வளத்தை போர்த்துகீசியர்கள் புரிந்துகொண்ட தருணம் அது.

வாஸ்கோவின் இரண்டாவது பயணம்

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் கப்பலில் கோழிக்கோடு வணிகர்கள் சிறை பிடிக்கப்படுவதைச் சித்தரிக்கும் ஓவியம்

இந்தியாவுக்கான வாஸ்கோடகாமாவின் முதல் பயணம் (1497–1499) ஐரோப்பா, இந்தியா இடையிலான கடல் வழிப்பாதையை அறிமுகப்படுத்தியது. ஆனால் கேரளாவின் கோழிக்கோடு அரசுடன் ஒரு வலுவான வணிக ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறிவிட்டது.

இந்திய பெருங்கடலில் மசாலா வர்த்தகத்தில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திய அரபு இஸ்லாமிய வணிகர்களால் போர்த்துகீசியர்கள் அவமதிக்கப்பட்டனர் மற்றும் புறக்கணிக்கப்பட்டனர்.

"வாஸ்கோவின் பார்வையில், கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் வணிகர்கள் வெறும் பொருளாதாரப் போட்டியாளர்கள் மட்டுமல்ல, மத மற்றும் கலாசார எதிரிகளும்கூட. சமோரின் அரசவையில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு, போர்த்துகீசிய லட்சியங்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டது" என 'தி கரியர் அண்ட் லெஜெண்ட் ஆஃப் வாஸ்கோடகாமா' எனும் நூலில் வரலாற்று ஆசிரியர் சஞ்சய் சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, போர்த்துகீசிய அரசு இரண்டாவது இந்திய பயணத்தை ஏற்பாடு செய்தது. இந்த முறை நோக்கம் தெளிவாக இருந்தது. அது. "இந்தியாவில் போர்த்துகீசிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, முந்தைய பின்னடைவுகளுக்குப் பழிவாங்குவது மற்றும் மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெறுவது."

இருபது போர்க் கப்பல்கள் மற்றும் சுமார் 1,500 பேர் கொண்ட ஒரு கடற்படையுடன் பிப்ரவரி 1502இல் வாஸ்கோடகாமா லிஸ்பனை விட்டுப் புறப்பட்டார். அந்தக் கடற்படை, பீரங்கிகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டிருந்தது, போருக்குத் தயாராகவும் இருந்தது.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'மெக்கா கப்பல்களை' வாஸ்கோவின் கடற்படையினர் தாக்குவதைச் சித்தரிக்கும் ஓவியம்.

அதே ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, கேரளாவின் கண்ணூர் கடற்பகுதியை வாஸ்கோவின் படை அடைந்தது. அதன் பிறகு நடந்தவற்றை வாஸ்கோவின் கடற்படையில் இருந்த ஒருவர், 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' எனும் நூலில் பின்வருமாறு விவரித்துள்ளார்.

"அங்கே நாங்கள் மெக்காவின் கப்பல்களைப் பார்த்தோம். அவை நம் நாட்டிற்கு (போர்ச்சுகல்) வரும் மசாலா பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள். இனி போர்ச்சுகல் மன்னர் மட்டுமே நேரடியாக இந்தியாவில் இருந்து மசாலா பொருட்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் அந்தக் கப்பல்களைக் கொள்ளையடித்தோம்."

"அதன் பிறகு, 380 ஆண்கள், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணித்த ஒரு மெக்கா கப்பலை நாங்கள் சிறைபிடித்தோம். அதிலிருந்து குறைந்தது 12,000 டுகட்கள் (டுகட்- தங்க நாணயம்) மற்றும் விலை உயர்ந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்தோம். அக்டோபர் முதல் நாளில் கப்பலையும் அதில் இருந்த அனைவரையும் எரித்தோம்."

இங்கு குறிப்பிடப்படும் 'மெக்கா கப்பல்' என்பது 'மெரி' (Meri) என்ற ஒரு பெரிய கப்பல். இது கோழிக்கோடு பகுதியில் வசித்த கோஜா காசிம் எனும் செல்வந்தரின் சகோதரருக்கு சொந்தமான கப்பல் என வரலாற்று ஆசிரியர் கே.எம். பணிக்கர் குறிப்பிடுகிறார்.

வாஸ்கோவின் படையிடம் சிக்கியபோது, 'ஹஜ் புனித யாத்திரைக்காக' பயணித்துக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான யாத்ரீகர்கள் மெரி கப்பலில் நிரம்பியிருந்தனர். அத்துடன் வர்த்தகத்திற்கான மதிப்புமிக்க பொருட்களும் கப்பலில் இருந்தன.

"வாஸ்கோ கப்பலை எரிக்க உத்தரவிட்டார். பெண்கள் தங்கள் குழந்தைகளை புகையின் நடுவே தூக்கிப் பிடித்து, கருணைக்காக மன்றாடினர். போர்த்துகீசியர்கள் தங்கள் கப்பல்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் வலியால் அழுதுகொண்டே இறந்தனர்."

"ஒருவர்கூட தப்பிக்கவில்லை. இறக்கும் தருவாயில் இருந்தவர்களின் அழுகை கடல் முழுவதும் எதிரொலித்தது. அப்போது வாஸ்கோ அசையாமல் நின்றிருந்தார்" என லெண்டாஸ் டி இந்தியா (Lendas da Índia) எனும் நூலில் காஸ்பர் கோஹியா குறிப்பிடுகிறார்.

வாஸ்கோடகாமா தலைமையிலான படை செய்த இந்தச் சம்பவம் சில போர்த்துகீசிய சம காலத்தவர்களைக்கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாஸ்கோடகாமா கேரள வரலாற்றில் ஒரு வில்லனாக நினைவுகூறப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகவும் இந்தச் சம்பவம் மாறியது.

'பிரித்தாளும் சூழ்ச்சி'

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கண்ணூர் ராஜா சந்திப்பைச் சித்தரிக்கும் ஓவியம்

அப்போது கேரளா பல ராஜ்ஜியங்களாக பிரிந்து இருந்ததும், போர்த்துகீசியர்களின் ஆதிக்கம் ஓங்குவதற்கு ஒரு காரணமாக இருந்தது. உதாரணத்திற்கு, மெரி கப்பல் சம்பவத்திற்குப் பிறகு, வாஸ்கோவின் படையினர் கண்ணூர் ராஜாவால் வரவேற்கப்பட்டனர் என 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' குறிப்பிடுகிறது.

"அக்டோபர் 20ஆம் தேதி நாங்கள் கண்ணூர் நாட்டிற்குச் சென்றோம். அங்கு அனைத்து வகையான மசாலா பொருட்களையும் வாங்கினோம். ராஜா மிகவும் ஆடம்பரமாக வந்தார், அவருடன் இரண்டு யானைகளையும், பல விசித்திரமான விலங்குகளையும் கொண்டு வந்தார்."

அதைத் தொடர்ந்து, கோழிக்கோடு சென்ற வாஸ்கோவின் படையினர், அதன் ராஜா சமோரினிடம், நகரத்தில் இருந்து அனைத்து முஸ்லிம் வணிகர்களையும் வெளியேற்றி, போர்த்துகீசிய வர்த்தக ஏகபோகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரினர்.

ஆனால் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த சமோரின் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனால் கோழிக்கோடு நகரத்தை வாஸ்கோ தாக்கினார்.

"நாங்கள் எங்கள் படைகளை நகரத்திற்கு முன்பாகத் திரட்டி, அவர்களுடன் மூன்று நாட்கள் சண்டையிட்டோம். ஏராளமான மக்களைப் பிடித்து, அவர்களைக் கப்பல்களின் முற்றங்களில் தொங்கவிட்டோம். அவர்களை வீழ்த்தி, அவர்களின் கைகள், கால்கள் மற்றும் தலைகளை வெட்டினோம்." (தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா)

இப்படிச் சிறிது சிறிதாக வன்முறை நடவடிக்கைகள் மூலமும், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் பிற கேரள ராஜாக்களுடன் இணைந்தும் தங்களது ஆதிக்கத்தை போர்த்துகீசியர்கள் கேரளாவில் வலுவாக்கினர்.

"இது பிராந்திய போட்டிகளைப் பயன்படுத்தி போர்ச்சுகலின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி" என 'தி போர்ச்சுகீஸ் ஸீபார்ன் எம்பயர்' நூலில் குறிப்பிடுகிறார் சார்லஸ் ஆர். பாக்ஸர்.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1524ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா, இந்தியாவின் போர்த்துகீசிய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

கேரளாவில் 1998ஆம் ஆண்டு, அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, வாஸ்கோடகாமா மலபார் பகுதிக்கு வந்து, 500 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அது 'சர்வதேச சுற்றுலா நிகழ்வாக' கொண்டாடப்படும் என அறிவித்தது. இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

'வாஸ்கோவின் பயணமும் செயல்களும் இந்தியாவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் தொடக்கத்திற்கு வழிவகுத்தன. எனவே அதைக் கொண்டாடுவது சரியான செயல் அல்ல' என்று விமர்சிக்கப்பட்டது.

ஐரோப்பாவின் காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு வாஸ்கோடகாமா ஒரு கருவியாகச் செயல்பட்டார் எனக் கூறலாம். போர்த்துகீசிய முடியாட்சியின் ஆசியோடு இந்தியா வந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, 1524ஆம் ஆண்டு மூன்றாவது முறை கேரளாவுக்கு வந்தபோது 'போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் வைஸ்ராய்' என்ற பதவியுடன் வந்தார்.

கொச்சியை வந்தடைந்த அவர், பின்னர் நோய்வாய்ப்பட்டு 1524 டிசம்பர் 24 அன்று இறந்தார். பிறகு 1539ஆம் ஆண்டில், அவரது உடல் எச்சங்கள் போர்ச்சுகலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx24083d4wlo

யாழ். மயிலிட்டிக்கு சென்ற அமைச்சர்களிடம் காணிகளை விடுவிக்குமாறு கோரிய மக்கள்

1 week ago
30 JUN, 2025 | 12:49 PM கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (29) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா, க,இளங்குமரன், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ். மாவட்ட செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேவேளை, இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள காணிகள், ஆலயங்கள், பாடசாலை காணி தொடர்பிலும் அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். https://www.virakesari.lk/article/218827

யாழ். மயிலிட்டிக்கு சென்ற அமைச்சர்களிடம் காணிகளை விடுவிக்குமாறு கோரிய மக்கள்

1 week ago

30 JUN, 2025 | 12:49 PM

image

கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (29) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா, க,இளங்குமரன், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ். மாவட்ட செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.   

அதேவேளை,  இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள  காணிகள், ஆலயங்கள், பாடசாலை காணி தொடர்பிலும் அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

34__4_.jpg

34__2___1_.jpg

34__3___1_.jpg

https://www.virakesari.lk/article/218827