6 days 6 hours ago
விகடனுக்கும், நக்கீரனுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியும். சும்மா தமாஷ் பண்ணுகிறீர்கள். பிபிசிக்கும், RT க்கும் உள்ள வேறுபாடு போன்றது அது. அல்லது யாழுக்கும், அதிரடி/தேனி போன்றவற்றிற்கும் இருந்த வேறுபாடு என்றும் சொல்லலாம். எல்லாமுமே அஜெண்டாவுடன் இயங்கும் ஊடகம்தான். ஆனால் பட்டவர்தனமாக பிரச்சாராம் செய்யும் ஊடகங்கள் ஒரு தனி ரகம். அதில் நக்கீரன் முதல் இடம். கோவாலு ஜெ ஆளை தூக்கி உள்ளே வைத்தது முதல் எப்படி ஊடகம் நடத்துகிறார் என்பதை வாச்கர் அறிவார்கள். விஜை கோவாலு மீது வழக்கு போடவேண்டிய அவசியம் இல்லை. ஏன் எனில் இதை ஒரு குற்றவியல் வழக்ககாக சிபிஐ விசாரிக்கிறது. அப்படி திரைப்படத்துக்காகத்தான் வீடியோ எடுக்கப்பட்டது என தன்னிடம் உள்ள ஆதாரத்தை சிபிஐ அல்லது த நா அரசு அமைத்துள்ள ஆணையத்திடம் கோவாலு கொடுத்தாலே போதும். விடயம் உண்மை எனில் விஜையை களி திங்க வைக்கலாம்.
6 days 6 hours ago
பாராட்டுக்கள், சூரன்போர் நடக்கும் நேரத்தில் யாழில் சூரனின் விஜயம் பொருத்தமாய் அமைந்திருக்கு . .....! 😂
6 days 7 hours ago
வணக்கம் வாத்தியார் ........! தமிழ் பாடகி : சின்மயி பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண் : கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது பெண் : தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு ஆண் : பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ குழு : அடடா ஆண் : அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண் : கனவோ நிஜமோ காதல் மந்திரமோ.......! --- சஹாரா சாரல் தூவுதோ ---
6 days 7 hours ago
மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் ........ கல்யாணகுமார் & ஷீலா (பாவாடை தாவணியில் நீண்ட பின்னல் குஞ்சத்துடன் ஆட செம அழகு )........! 😍
6 days 7 hours ago
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம் October 28, 2025 1:50 pm தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சூரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து கடந்த வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் அதில் அவர் வரவேற்கப்பட்டார். பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, சேர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஊடாக இவர் பயணம் செய்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தின் விசேட கலாசார முக்கியத்துவம், மரபுகளை உலகிற்கு வெளிப்படுத்துவதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தை ஒரு அழகான இடமாக ஊக்குவிப்பதும், நல்லிணக்கத்தை வளர்ப்பதும், சர்வதேச சமூகங்களுடனான சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்று வலியுறுத்தினார். இதேவேளை, உலகளாவிய பயணம் தொடர்பான லொன்லி பிளானட் (Lonely Planet) சஞ்சிகையானது, 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://oruvan.com/sri-lankan-army-welcomes-sooran-from-france-to-jaffna/
6 days 7 hours ago
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
October 28, 2025 1:50 pm

தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
2025 செப்டம்பர் 01 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சூரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து கடந்த வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் அதில் அவர் வரவேற்கப்பட்டார்.
பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, சேர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஊடாக இவர் பயணம் செய்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தின் விசேட கலாசார முக்கியத்துவம், மரபுகளை உலகிற்கு வெளிப்படுத்துவதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தை ஒரு அழகான இடமாக ஊக்குவிப்பதும், நல்லிணக்கத்தை வளர்ப்பதும், சர்வதேச சமூகங்களுடனான சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்று வலியுறுத்தினார்.
இதேவேளை, உலகளாவிய பயணம் தொடர்பான லொன்லி பிளானட் (Lonely Planet) சஞ்சிகையானது, 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





https://oruvan.com/sri-lankan-army-welcomes-sooran-from-france-to-jaffna/
6 days 7 hours ago
கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.
கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரிஉள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கரூரில் கடந்த செப்-27ம் திகதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் 2 பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதிவழங்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலை விஜய் விடுதிக்கு வந்து, உயிரிழந்த 37 குடும்பத்தில் இருந்து 235 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் உயிரிழந்த அஜிதா என்ற கல்லூரி மாணவியின் குடும்பத்தில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை.
ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து சுமார் 5 நிமிடம் பேசி ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.
கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அனைவரிடமும் விஜய் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விஜய் கூறியதாகவும் தெரிகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு தவெக சார்பில் வழங்கப்படும் என்றும் விஜய் உறுதி அளித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், ஆதவ் அர்ஜூனா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அனைவரும் மீண்டும் இரண்டு பேருந்துகள் மூலம் கரூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியின்போது, விடுதி வளாகத்தில் பாதுகாப்புக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
https://akkinikkunchu.com/?p=346422
6 days 7 hours ago
கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரிஉள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். கரூரில் கடந்த செப்-27ம் திகதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் 2 பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதிவழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை விஜய் விடுதிக்கு வந்து, உயிரிழந்த 37 குடும்பத்தில் இருந்து 235 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் உயிரிழந்த அஜிதா என்ற கல்லூரி மாணவியின் குடும்பத்தில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை. ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து சுமார் 5 நிமிடம் பேசி ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அனைவரிடமும் விஜய் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விஜய் கூறியதாகவும் தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு தவெக சார்பில் வழங்கப்படும் என்றும் விஜய் உறுதி அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ஆதவ் அர்ஜூனா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அனைவரும் மீண்டும் இரண்டு பேருந்துகள் மூலம் கரூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியின்போது, விடுதி வளாகத்தில் பாதுகாப்புக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. https://akkinikkunchu.com/?p=346422
6 days 7 hours ago
கோவிலை இடித்து மீன் சந்தை கட்டுவதில் புகழ்பெற்றவர் இவர்தானா.????
6 days 7 hours ago
பத்து நாளில் முதல் முறையாக, கொழும்பு புறக்கோட்டை சந்தையில் 22 காரட் தங்கம் தற்போது ரூ. 298,000க்கு விற்கப்படுகிறது. இது அக்டோபர் 17 அன்று பதிவான ரூ. 379,200 விலையுடன் ஒப்பிடும்போது ரூ. 81,200 குறைவாகும். The Morning
6 days 7 hours ago
நிச்சயமாக இதில்... சுத்துமாத்து சுமந்திரனின் பெயரும் இருக்கும். 🤣
6 days 7 hours ago
பிரபாகரன் மனதில் மனிதம் இல்லாது போயிருந்தால் இந்தநிலை தோன்றியிராது.🤔
6 days 8 hours ago
https://www.youtube.com/watch?v=O__LTVD27_g இந்த இணைப்பில் நீங்கள் பல பேச்சு சொற்களைப் பேசிப் பழக முடியும் . .......! 👍
6 days 8 hours ago
Amazing Trees Incredible colors in Cape Breton, Nova Scotia - Canada.🍁" வர்ணங்களால் சூழப்பட்ட அழகிய அரண்மனை ........! 🥰
6 days 8 hours ago
Murugesan N · பேசமுடியாதவர்களின் உணவுகள் பேசுகின்றன ! சென்னை, வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலி'ற்கு பக்கத்தில் உள்ளது, இந்த வித்தியாசமான உணவு கடை. வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும்போது, இன்முகத்துடன், 'சைகை'யால் வரவேற்கின்றனர், இரு பெண்கள். வந்தவர்களும், பதில் வணக்கம் தெரிவித்து, 'சைகை'யால் ஏதோ சொல்கின்றனர். பெண்கள் இருவரும் புரிந்து, தலையாட்டுகின்றனர். சிறிது நேரத்தில், சப்பாத்தி, தோசை மற்றும் இட்லி சுடச்சுட தயாராகி, அவர்களது இருக்கைக்கு செல்கிறது. பிரமிளா, ரத்னம் என்ற, இந்த இரு பெண்களுக்கும் காது கேட்காது, பேச வராது. ஆனால், பிரமாதமாக சமைக்க தெரியும். இருவரும் பிழைப்பு தேடி, தங்களது ஊரை விட்டு, சென்னை வந்தனர். இங்கே உள்ள காது கேளாதோர் அமைப்பின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் சித்ராவை சந்தித்து, தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும்படி கேட்டனர். சித்ராவும் இவர்களை அழைத்து, மாற்றுத்திறனாளிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்களான, பிரபாகரன், கற்பகம் ஆகியோரை சந்திக்க வைத்தார். அவர்களது வழிகாட்டுதலின்படி, சேலம், ஆர்.ஆர்.பிரியாணி அதிபர், தமிழ்ச்செல்வனை சந்தித்தனர். 'உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?' என்று அவர் கேட்க, 'எங்களுக்கு தள்ளு வண்டி வாங்கிக் கொடுத்தால், சென்னையில், நடமாடும் உணவகம் அமைத்து, பிழைத்துக் கொள்வோம்...' என்று கூறியுள்ளனர். 'தள்ளு வண்டி வேண்டாம்;சிரமம் அதிகம். அதற்கு பதிலாக, வேளச்சேரி பிரதான சாலையில் இருக்கும், என்னுடைய, ஆர்.ஆர்.பிரியாணி கடையையும், கடைப் பொருட்களையும், காலையும் - மாலையும் கட்டணமில்லாமல் உபயோகித்துக் கொள்ளுங்கள்...' என்று, கொடுத்து உதவினார். அதன்படி, இப்போது இவர்கள் , காலையில், இட்லி, தோசை மற்றும் இடியாப்பமும்; மாலையில், இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா மற்றும் 'பிரைடு ரைஸ்' என, விதவிதமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இவர்களது சுவையான உணவிற்காகவே, நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள், இவர்களின் நிலைமையை புரிந்து, 'சைகை' மொழியில் வேண்டியதை கேட்டு, சாப்பிடுகின்றனர். புது வாடிக்கையாளர்களுக்கும், இந்த இரு பெண்களுக்கு பாலமாகவும், பணவரவு செலவை பார்த்துக் கொள்ளவும் கூடவே இருக்கிறார், சித்ரா. தற்போது, தங்களைப் போன்ற மேலும் சிலருக்கு வேலை வாய்ப்பு தர உள்ளனர்.உழைத்து பிழைக்க தயாரான இவர்கள், பலருக்கு வேலை வாய்ப்பு தரும் அளவிற்கு உயர்ந்திருப்பது பாராட்ட வேண்டியது தான். தலைவணங்குகிறேன். by செந்தில்குமார் பகிர்வு Voir la traduction ..........!
6 days 8 hours ago
6 days 8 hours ago
நாட்டு மருந்து · Amuthan ·eortndspoSilcm5icm hum68106245cm9lahl8310cn8l8ili1g52igthmtm · முன்னாடியெல்லாம் ஆட்டுக்கறி வாங்கினால் கொஞ்சம் ஈரல், கொழுப்பு எல்லாம் நாம கேட்காமலே சும்மா அள்ளிப்போடுவாங்க... நாமதான் அதெல்லாம் வேண்டாம்னு சொல்வோம் ஆனால் இப்ப அதெல்லாம் வேணும்னு நாமளே கேட்டாலும் அவங்க இல்லன்னு சொல்றாங்க.. ஏன்னு கேட்டால் ஈரல் தனியா, நுரையீரல் சுவரொட்டி தனியான்னு விக்கிறோம்.. வேணும்னா அதுக்கு தனியா காசு கொடுத்து வாங்கிட்டு போங்கன்னு சொல்றாங்க... இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா? யூடியூப்தான்... கன்டெண்ட்டுக்காக ஈரல் தனியா வாங்கி அது கறி, குடல் மட்டும் வாங்கி அது ஒரு கறி, நுரையீரல் வாங்கி அது ஒரு கறின்னு தனித்தனியா வாங்கி அதுக்கு ஒரு பேர் வைச்சு வீடியோ போட்டதின் விளைவு எங்க வந்து நிக்கிது பார்த்திங்களா? ஆட்டுக்காலுக்கு வந்த மவுசு.. ஆட்டுக்கால் பாயான்னு சொல்லி சொல்லி இப்ப அதுக்கும் ஒரு விலை... மூனு ஆட்டுக்கால் ஆயிரம் ரூபாயாம் ஒரு நேரத்தில் உடம்பு முடியாதவங்களுக்குத்தான் ஆட்டுக்கால் ரசம் வைக்க வாங்குவாங்க எல்லாரும் வாங்க மாட்டாங்க ஆனால் இப்ப வாங்க நினைச்சாலும் வாங்க முடியாது போல அந்த விலை விக்கிது... ஆட்டுக்குடல் அதுவும் பெரிசா யாரும் வாங்க மாட்டாங்க அதுவும் இப்ப விலை அதிமாகிடுச்சு இப்படி எல்லாவற்றையும் விலை ஏத்திவிட்ட பெருமை யூடியூப் காரங்களையே சேரும்... எப்பா சாமிகளா.... இன்னும் எதையெல்லாம் ஏத்திவிடப் போறீங்களோ தெரியல.. Voir la traduction
6 days 8 hours ago
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு; 22 கரட் 298,000 ரூபா! உலக சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டொலர்களுக்கு கீழே தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து, இன்று (28) உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாகக் குறைந்தது. புவிசார் அரசியல் பதட்டங்கள் தணிந்து வருவதால், தங்கம் உள்ளிட்ட பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், உலகளவில் தங்கத்தின் விலை குறையும் போக்கு ஏற்பட்டுள்ளது. 2025 ஒக்டோபர் 20 ஆம் திகதி தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,381.21 என்ற உச்சத்தை எட்டியது. ஆனால் கடந்த வாரம் 3.2 சதவீதம் பின்வாங்கி திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000 க்கும் கீழே சரிந்தது. சற்று முன்னர் வரையான சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு அமைவாக, ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1.87% சரிந்து 3,930.14 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதேநேரம் வெள்ளி 46.41 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அமெரிக்க-சீன வர்த்தக பதட்டங்கள் தளவர்வதற்கான அறிகுறிகளும் தங்கத்தின் பாதுகாப்பான புகலிட ஈர்ப்பைக் குறைத்தன. ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மற்றும் சீனாவின் பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்க கட்டணங்களை இடைநிறுத்துவதற்கும் சீனாவின் அரிய-பூமி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஒத்திவைப்பதற்கும் ஒரு ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை கோடிட்டுக் காட்டிய பின்னர், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையிலான வர்த்தக பதட்டங்களைத் தணிப்பதற்கான அறிகுறிகள் எழுந்தன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வியாழக்கிழமை (30) சந்தித்து மேலும் வர்த்தக விதிமுறைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த வாரம் பணவியல் கொள்கையை எளிதாக்க நடவடிக்கை எடுக்கும் என்ற வர்த்தகர்கள் நம்பிக்கையும் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. பல ஆய்வாளர்கள் தங்கம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 5,000 அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், அண்மைய விலை ஏற்றத்தின் நிலைத்தன்மை குறித்து சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர். கேபிடல் எகனாமிக்ஸின் ஆய்வாளர்கள் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,500 அமெரிக்க டொலர்களாக தங்கள் கணிப்பை திருத்தியுள்ளனர். இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 320,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 298,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1451391
6 days 8 hours ago
6 days 8 hours ago