Aggregator
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கண்டி உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி
கண்டி உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி
உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி
Dec 18, 2025 - 07:57 PM
கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் உடுதும்பரை பகுதியில் 308 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் பொப்பிட்டிய பகுதியில் 234 மி.மீ, நுகதென்ன பகுதியில் 221 மி.மீ மற்றும் கைகாவல பகுதியில் 218 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
உடுதும்பரை பகுதியில் மண்சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுவதால் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும், அப்பகுதி மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கோரிக்கை விடுத்துள்ளது.
நிலவும் மழை நிலைமையால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான 'வெளியேற்றல்' (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பரை, மெததும்பரை மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் பெய்த கடும் மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதால், வீடுகள் அல்லது கட்டிடங்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வசந்த சேனாதீர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
அப்பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அல்லது மண்மேடு சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவ்விடங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய்
119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்
119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்
119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்
Dec 18, 2025 - 04:48 PM
119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
'119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உண்மையான அவசர சந்தர்ப்பங்களில் 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவடைவதுடன், இவ்வாறான தேவையற்ற முறைப்பாடுகளுக்காக நேரத்தைச் செலவிடுவதன் மூலம், பொலிஸாரின் உடனடி உதவி தேவைப்படும் அத்தியாவசிய அவசர முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த 119 அழைப்பு இலக்கத்திற்கு போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெரிந்தே பொய்யான தகவல்களை வழங்குவது இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொலிஸாரின் நேரடி உதவி அவசியமில்லாத ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தந்த நிறுவனங்களுக்குரிய குறுந்தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறும், இந்த அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01. Police Emergency Service - 119
02. Ministry Of Child Development and Women's Affairs (Women Help Line) - 1938
03. Ministry Of Child Development and Women's Affairs (Child Help Line) - 1929
04. Fire and Rescue Service - 110
05. National Transport Commission - 1955
06. Drug Organized Crime Issues Emergency Notification unit - 1997
07. The Bureau for the Prevention and Investigation of Abuse of Children and women - 109
08. Emergency Call Center (Tamil Medium) - 107
09. Commission to Investigate Allegations of Bribery or Corruption - 1954
10. Expressway Emergency - 1969
11. Department of Immigration and Emigration - 1962
12. National Dangerous Drug Control Board - 1984
13. Sri Lanka Bureau Of foreign Employment - 1989
14. National Help Desk (Ministry of Defance) - 118
15. Disaster Management Call Center - 117
16. Sri Lanka Tourism - 1912
17. Government Information Center - 1919
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
சூரிய குடும்பத்தைவிட பல கோடி ஆண்டுகள் பழமையான வால் நட்சத்திரம் கண்டுபிடிப்பு
அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்
அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்
Editorial / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0 - 60

கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அப்பிரதேச மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹீர், தாஹீர் மரைக்கார், கண்டி மாவட்ட கட்சியின் அமைப்பாளர் அம்ஜத் ஹாஜியார், குருநாகல் மாநகர பிரதி நகர பிதா அஸார்டீன் மொய்னுடீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பயாஸ், அஸ்மி, றாபி, பஸால் உள்ளிட்டோருடன் ரமலான், இர்ஷாட் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






Tamilmirror Online || அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்
நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
18 Dec, 2025 | 02:29 PM
![]()
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்ட மாஅதிபரால் வழங்கப்பட்டன.
அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார்.
ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்ட மாஅதிபரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில், 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் ஏற்பாட்டாளராக இருந்த தற்போதைய அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கோப்புகள் சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சட்ட மாஅதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Virakesari.lk
இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!
இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!
18 Dec, 2025 | 02:10 PM
![]()
இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கும் நிகழ்வாக இச்சந்திப்பு நிகழவுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் குறித்த சந்திப்பில் இணையவுள்ளனர்.
இச்சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மகஜர் ஒன்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இச்சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஷ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மேலும் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக நீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்படவுள்ளது.
உயர்ஸ்தானிகருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மகஜர் வடிவில் தயாரிக்கப்பட்டு ஆறு கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் உயர்ஸ்தானிகரின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இம்மாத இறுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்! | Virakesari.lk