Aggregator

யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…

1 week ago
ஆரப்பா அந்த ஆட்கள். இவைகள் பெயர், ஊர் விபரங்களை வெளிவிட்டால்தானே மிகுதி வால்கள் யார், யார் என்பதை கண்டுபிடிக்கலாம். சட்டவிரோதமான முறைகளில் சொத்து சேர்ப்பவர்களின் சொத்தை முடக்குவது வரவேற்கத்தக்க விடயம்.

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

1 week ago
இங்கே கருத்தாடல் செய்யப்படும் விடயம் விடுதலைப்புலிகள் யாழ் மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து முஸ்லீம்களை விரட்டிய காலத்தில் விரட்டப்பட்ட முஸ்லீம்களிடம் இருந்த தங்க நகைகளை அபகரித்தார்களா? இல்லையா? என்பது மட்டுமே

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

1 week ago
கானாவில் தங்கம் ஹிஸ்புல்லா மோசடி மஞ்சள் நிறத்திலான உலோகப்பொருட்கள் கண்டு பிடிப்பு அத்தனையும் முக நூல் பாதி ..... மிகுதி பாதி எங்கேயெல்லாம் சென்று தேடுவார்களோ🙂

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

1 week ago
https://www.facebook.com/share/17Ssyf9XgK/?mibextid=wwXIfrபோலித் தங்க மோசடி: இலங்கை எம்.பி.யை ஏமாற்றியதாக 11 பேருக்கு ஜாமீன் கானா வின் அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் - Ghanaian Cedi (GHS) (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களை இவர்களிடமிருந்து கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week ago
உங்கள் மனநிலை புரிகிறது. ஜஸ்டின் அண்ணா அடிக்கடி சொல்லும் post truth world இன் கஸ்டங்களில் இதுவும் ஒன்று. சதிக்கோட்பாட்டு மனநிலை+ அரைகுறை புரிதல் இது ஒரு explosive mix. இப்படி இருப்பவர்கள் அமெரிக்காவையே ஒரு குழப்பு குழப்பி, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். யாழ் எம்மாத்திரம். “எதை நம்புவது என்றே தெரியவில்லை” என்ற மனநிலைக்கு வாசகரை கொண்டு வருவதே இவர்களின் வெற்றியின் முதல் படி. இது கிட்டதட்ட தத்துவவியலில் வரும் fallacy களில் ஒன்றான false equivalency போன்றது. தரவுகளையும், இவர்கள் சொல்லும் கற்பனைகளையும் சமன் என வாசகரை குழப்பி விட்டால்…. அடுத்து அதே வாசகரை தமது கற்பனைகளை நம்ப வைப்பது இலகுவாகிவிடும். Anti vaxers எனப்படும் வக்சீன் எதிர்பாளர் தொட்டு, சீமான், டிரம்ப் என இந்த கஞ்சா கப்ஸா கதையாளர்களின் லிஸ்ட் மிக நீண்டது. யாழும் விதிவிலக்கல்ல.

தவெக உட்கட்சி மோதல்

1 week ago
மிக்க நன்றி அண்ணா உங்களின் கருத்துகளுக்கு......................❤️. தமிழ்நாட்டில் முதலில் களையப்பட வேண்டியது சாதியப் பாகுபாடுகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லவே இல்லை, அண்ணா. தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்னும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படுவதால் அந்தப் பாகுபாடுகளை இல்லாதொழிக்கலாம் என்று முன்வரும் எந்த ஒரு தமிழக தலைவருக்கும் என்னுடைய பூரண ஆதரவும், பிரார்த்தனைகளும் என்றும் உண்டு. அப்படியான ஒரு தலைவர் இன்றைய தமிழகத்தில் இல்லை. இன்று அங்கு தமிழ்த்தேசியம் பேசும் தலைமைகளும் உண்மையில் குறுஞ்சாதியவாதமே பேசுகின்றார்கள். இன்று திராவிடம் என்பது அரசியலுக்கான ஒரு முகவரியே என்பதில் எனக்கும் முழு உடன்பாடே. ஊழலும், லஞ்சமும், இவற்றை ஒரு சாதாரண நிகழ்வுகளாக ஏற்றுக் கொள்ளும் அன்றாட வாழ்க்கை முறைகளும் கூட தமிழகத்தில் மாற்றப்படவேண்டும். ஊழல் என்னும் போது எல்லாமே ஊழல் தான் - 120 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாவிற்கு விற்கும் முதல் நாள் - முதல் காட்சி கூட ஊழலின் ஒரு வடிவம் தான். ஒரு சமூகத்தின் தலைவர்களுக்கு பொதுவெளியில் அடிப்படை நாகரிகம் இன்றியமையாத ஒன்று. பல தலைவர்கள் இதை ஒரு பொருட்டாக நினைப்பதேயில்லை. மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும் என்று மனதார விரும்புகின்றேன். காலப்போக்கில் இது ஒரு கட்டுக்கடங்காத கும்பல் மற்றும் பழங்குடிகளின் மனநிலையை சமூகத்தில் உண்டாக்குவது மட்டும் இல்லாமல், கும்பல் மனநிலையே சரியான ஒரு பாதை என்ற ஆபத்தான எண்ணத்தையும் உண்டாக்கிவிடுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களும், சிங்கள மக்களும், இஸ்லாமிய மக்களும் ஒரே தெரிவுகளை முதன்மையாகக் கொண்டவர்கள் அல்லர். தமிழ் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின் இன்றைய மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனை பிரதானமானது. சிங்கள மக்களுக்கு அன்றாட வாழ்க்கையும், அன்றாட நுகர்வுகளும் பிரதானமானது. இஸ்லாமிய மக்களுக்கு அவர்களின் மார்க்கமும், வியாபாரமும் பிரதானமானது. ஒவ்வொருவரின் பெரும்பாலான முயற்சிகளும் அவர்களின் தெரிவுகளை நோக்கியே இருக்கின்றது. நிச்சயமாக இவர்களில் ஒருவர் இன்னொருவரை விட சிறந்தவர் அல்லது திறமைசாலி என்பதற்கு இங்கு இடமில்லை. உலகெங்கும் மொழிவாரிக் கொள்கைகளே நாடுகளிலும், பிரதேசங்களிலும் இருக்கின்றன என்பது மிகச் சரியான கூற்று, அண்ணா. இவ்வளவு பெரிய ஜனநாயக தேசமான அமெரிக்காவில் கூட ஆங்கிலத்தையே ஒரு ஒற்றை மொழியாக முன்னிறுத்துகின்றார்கள். சீனாவில் அதன் பிரதேச மொழிகளே வெளி உலகில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டன. இதுவே தான் ரஷ்யாவிலும். தமிழ்நாட்டில் தமிழை முன்னிறுத்தி கொள்கைகளை வகுப்பதில் பிழையேதும் இல்லை, மாறாக அது தேவையான ஒன்றும் கூட. ஆனால் 'உன்னுடையா அப்பா தமிழ் இல்லை............. உன்னுடைய தாத்தா தமிழ் இல்லை................ ஆகவே நீ தமிழ் இல்லை.............. நீ இங்கு வாழலாம், ஆனால் ஆளக்கூடாது................' என்பன போன்ற நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை இல்லை, அண்ணா.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week ago
எல்லாரும் ஏதோ ஒன்றை பார்க்கிறோம், வாசிக்கிறோம் இல்லையா. எதை நம்புவது என்றே தெரியவில்லை. நீங்கள் சொல்லுவதைத்தான் நானும் கருதுகிறேன். கொஞ்சம் மேலதிகமாக யோசிச்சுப் பார்க்கிறேன். எப்படி இது நடந்திருக்கும் என்று யோசிச்சுப் பார்க்கிறேன். அவ்வளவே.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week ago
எனக்கென்னமோ…அவர்களை விட நீங்கள் இதில் இமோசனலாக இருப்பது போல் படுகிறது😂. நீங்கள் சொல்லும் ஆள் மனமுடைந்து போயிருக்கலாம். அவர் ஒரு நல்ல சீவன் என நினைக்கிறேன். அநேகமாக அவர் தன் தொழிலாளரை முடிந்தளவு நடுத்தெருவில் விடாது தடுக்க முனைந்திருப்பார் என ஊகிக்கிறேன். திரும்பி வந்து கடனை அடைத்தால் சந்தோசமே. முதலில் நடுத்தெருவில் நிற்கும் தொழிலாளர் சம்பளபாக்கியை அடைக்கட்டும். இருவரும் தலைமறைவு என்பது தரவு. அவர்களை வியாபாரத்தை பொறுப்பேற்று கொண்டோராலே தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்கள் யாழில் டெலிகிராபின் தலையங்கத்தை பார்த்து கருத்து எழுதுபவர்களின் எழுத்தை நம்பினால் யாரும் காப்பாற்ற முடியாது. என்னை பொறுத்தவரை எப்போ இவர்கள் இருக்கும் வரை இருந்து டிவிடெண்டை சுருட்டி கொண்டு, தெரிந்தே வேலையாட்களை நட்டாற்றில் விட்டு சென்றனரோ அன்றே இவர்கள் குற்றவாளிகள்தான். சட்டம் கூட இரெண்டாம் பட்சமே.

இனிய தீபாவளி

1 week ago
❤️................... எனக்கு பத்து வயதளவில் இருக்கும் போது வீட்டில் ஒரு கோழி வாங்கிக் கொடுத்தார்கள். அப்பொழுது மூன்றோ நாலு மாதக் குஞ்சு. மஞ்சள் நிறத்தில் வெள்ளை வெள்ளைப் புள்ளிகள் போட்டது. இன்றுவரை வாழ்நாளில் நான் கண்டவற்றில் மிக அழகானவற்றில் இதுவும் ஒன்று. இந்த கோழியிலிருந்து எத்தனையோ கோழிகளை உருவாக்கினோம். ஆரம்பத்தில் கமபர்மலைப் பகுதிக்கு போய் அடைக்கு முட்டைகள் வாங்கியதை தனிக் கதையாகவே எழுதலாம். அப்பொழுது அங்கு பலர் முட்டைகளை குலுக்கிவிட்டே கொடுப்பார்கள்...............😒. தளும்ப தளும்ப இறைச்சியையும் முட்டைகளையும் சுமந்து கொண்டு முற்றத்தில் உலாவித் திரிந்தது இந்த 'ஆதித்தாய்' எங்கள் வீட்டில் அன்று.......................

யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து

1 week ago
கண்ணால் காண்பதுவும் பொய்யே, காதால் கேட்பதுவும் பொய்யே. கவிஞர் வைரமுத்துவை போற்றுவோம், தூற்றுவோம். நாங்கள் கண்ணால் காணவில்லை வாசித்தோம், காதால் கேட்டோம். போற்றுவோம், தூற்றுவோம். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கவிஞர் வைரமுத்துவிற்கே.

இனிய தீபாவளி

1 week ago
பண்டிகைக்காலத்திக்கேற்ற பதவிசான கவிதை ..........! சுமார் 1975 க்கு முன்வரையான சில நிகழ்வுகள் நினைவில் நீந்துகின்றன ........! அன்று நாங்கள், எம்போன்ற மத்தியதர வர்க்கம் ஆட்டிறைச்சி சாப்பிடுவதென்றால் தீபாவளி போன்ற பண்டிகைகள் , கோவில் வேள்விகள் , யாராவது இறந்துபோனால் "சிலவு" நாட்களில்தான் கிடைக்கும் ........அப்போது கடைகளில் இறைச்சி வாங்கும் பழக்கமும் இல்லை ......மாட்டிறைச்சி..... ம்கூம் .....மூச் ........ கோழி இறைச்சி அப்பப்ப மற்றும் உறவினர் வரும்போதும் கிடைக்கும் .......அக்காலத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாதபடியால் அவை தளும்ப தளும்ப இறைச்சியையும் முட்டைகளையும் சுமந்து கொண்டு முற்றத்தில் உலாவித் திரியும் . ........! ஆகையால் நான் வேள்விகளுக்கு எதிரானவன் அல்ல .........கிடாய் வளர்ப்பதே விருந்தோம்பலுக்கும், வேள்விகளுக்கும்தான் ........எப்படி பூசி மொழுகினாலும் இன்றும்கூட இதுதான் யதார்த்தம் . .....! எப்படிக்கொல்வது..... கோவில்களில் ஒரே வெட்டில் முடிந்துவிடும் .......மற்றும்படி இதற்காக ஒரிருவர் டிப்பிளோம் எடுத்து ஆங்காங்கே வசித்தார்கள் . ..... சிலர் வாய்க்குள் உப்பு போன்ற எதையாவது திணித்துவிட்டு மூச்சுத்திணற பிடித்து கொல்வார்கள்...... அடுத்து அதை சாப்பிட இலைகுலை குடுத்து பாரமான இரும்பால் தலையில் ஒரே அடி ......அதன்பின் அதன் தோல் உரிப்பது ஒரு கலை .......காலில் குறிப்பிட்ட இடத்தில் கொஞ்சம் வெட்டி விட்டு அதனுள் காற்றை செலுத்த மாற்றர் பலூன்போல பெரிதாக உப்பிக்கொண்டு வந்திருக்கும் பின் சுலபமாய் உரித்து விடுவார்கள் . ......இப்போது அவர்களும் தாம் கொன்ற சீவன்களைத் தேடிப் போய்விட்டார்கள் ..........! 😇

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week ago
நீங்கள் சொல்வது போல், அவர்கள் தப்பாக நிறையச் செய்திருக்கலாம் என்பது உண்மையே. ஆனால் புறக்காரணிகளையும் ஒதுக்கிவிட முடியாது. அவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதில் உள்ள உள் விளையாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தால்தான் முழுஉண்மையும் வெளிவரும். தலைமறைவானார்கள் என்பதிலேயே எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அதுசம்பந்தமாக, நிறைய ஊகங்கள். பிறகு வெளியில வந்து என்னமோ சொன்னார். இன்னும் என்ன என்ன எல்லாம் வெளியில் வருமோ. உண்மைதான். இப்பிடி நடந்திருக்க வாய்ப்பு அதிகம். நல்ல வக்கில் வைத்தால் குறைந்த தண்டனைகளுடன் வெளிவந்துவிடுவார்கள். ஆனால், எம்மவர் முன்னால், அவர்கள் குற்றவாளிகளே. 😄

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

1 week ago
ஆம், அவரேதான். கொழும்பு பல்கலையில் மருத்துவம் கற்று இன்று அவுஸ்த்திரேலியா மெல்பேர்னில் தனியார் மருத்துவ நிலையமொன்றினை நடத்தி வருகிறார். எப்போதாவது தொலைபேசியில் பேசுவோம். ஆனால் அதே நட்பு இன்னமும் தொடர்கிறது.

தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: மத்தியஸ்தம் செய்த ட்ரம்ப்

1 week ago
ஒரு குறிக்கோளோடுதான் ஐயன் ஆரவாரப்படுத்துகிறார் . ........ எப்படியோ நல்லதுதான் நடந்திருக்கு . .......! 👍