Aggregator
மஹிந்த, கோட்டா வழியில் அநுர நிதியமைச்சின் செயலாளராக ஹர்ஷன நியமனம்; தவறானதொரு எடுத்துக்காட்டு - பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
மஹிந்த, கோட்டா வழியில் அநுர நிதியமைச்சின் செயலாளராக ஹர்ஷன நியமனம்; தவறானதொரு எடுத்துக்காட்டு - பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
Published By: VISHNU
29 JUN, 2025 | 06:19 PM
(இராஜதுரை ஹஷான்)
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு.அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் இந்த பதவிக்கு தகுதியற்றவர்கள் எவரும் இல்லையா, மஹிந்த மற்றும் கோட்டாவை போன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் நியமனங்களை வழங்கியுள்ளார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்நிலை பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இவ்விரு செயற்பாடுகளும் மிக மோசமான எடுத்துக்காட்டாகும்.
நாட்டின் நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரபல்யமான நாட்டுக்கு நேரடியாக செலுத்தும் பதவிகளை வகித்தவர்கள் ஓய்வுப்பெற்றதன் பின்னர் அவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுமாயின் சேவைக்காலத்தின் போது அவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு பாதிப்பு ஏற்படும்.
பிரதான அமைச்சுக்களான நிதி, வலுசக்தி, மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகித்தோருக்கு கவர்ச்சிகரமான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் உயர் சலுகைகளை வழங்கி, அவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது தேசிய மட்டத்திலோ உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கான சட்டத்தை உருவாக்க வேண்டும்.
நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட பரிந்துரைத்துள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு. அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை பிறிதொரு தவறான எடுத்துக்காட்டு.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி தொடர்பில் பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பொருளாதார நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் இலங்கை வங்குரோத்து நிலையடைய போகிறது என்பதை முன்கூட்டியதாக அறிவிக்கவில்லை. ஜனாதிபதியின் வசம் தான் நிதியமைச்சு உள்ளது. தனக்கு இணக்கமாகவரையே ஜனாதிபதி நிதியமைச்சின் செயலாளராக நியமிப்பார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வசம் பாதுகாப்பு மற்றும் நிதி பொருளாதார அமைச்சுக்கள் உள்ளன. இந்த அமைச்சில் 94 நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை ஜனாதிபதியால் அமைச்சர் என்ற அடிப்படையில் கண்காணிக்கவோ அல்லது ஆராயவோ முடியாது. ஆகவே பூரணத்துவமித்த வகையில் நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ சூரியபெருமவை நிதியமைச்சின் செயலாளராக நியமித்தமை அரசியல் நியமனமாகும். நிதியமைச்சின் செயலாளராக நியமிப்பதற்கு அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் தேர்ச்சிப்பெற்ற அரச உத்தியோகத்தர்கள் எவரும் இல்லையா? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன பதவி வகிக்கிறார். இவர் தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடைகளில் இருந்தவர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் போது இவர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டார் என்றும், ஊழல் மோசடியுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் நியமனங்களே வழங்கப்பட்டன. இதனை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் அவர்கள் இன்று அதனையே செய்கிறார்கள். நாட்டு மக்கள் இவ்வாறான அரசியல் நியமனங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
வடக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கி முன்மொழிந்த இணைப்புக்குழு கலந்துரையாடல்
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கையில் போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக மூன்று புதிய மையங்கள்
இலங்கையில் போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக மூன்று புதிய மையங்கள்
நாட்டில், போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக மூன்று புதிய மையங்களை நிறுவ ஆபத்தான மருந்துகளுக்கான தேசிய கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.
புதிய மையங்கள்
இதன்படி, மாத்தறை, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்படும் என்று சபையின் பணிப்பாளர் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார்.
நாட்டில் 'ஐஸ்' போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் கணக்கெடுப்பு
இந்த நிலையில் போதைகளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண நாடு முழுவதும் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்படும்.
அதேநேரம் இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல், தடுக்க விழிப்புணர்வு திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
https://tamilwin.com/article/3-new-centers-for-rehabilitation-of-drug-addicts-1751167165
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்!
Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்!
Northern Uni இன் துணைவேந்தராக, இலங்கையின் புகழ்பூத்த உயிர் வேதியல் துறை பேராசிரியரும், கல்வியலாளருமாகிய வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வசந்தி அரசரத்தினம், Northern Uni இன் துணைவேந்தராக நாளையதினம்(30.06.2025)முதல் பணியேற்கவுள்ளார்.
Northern Uni சமூகம் மற்றும் அதன் தலைவர், துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டமை குறித்து தமது மகிழ்ச்சியை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறந்த கல்வியாளர்
அந்த அறிக்கையில், ''இலங்கையின் உயர் கல்வித்துறையில் ஒரு சிறந்த கல்வியாளரும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவருமான பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் கல்விசார் சிறப்பு, அளப்பரிய நிர்வாகத்திறமை மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகிய தகைமைகளை உடையவர்.
அவரது புகழ்பெற்ற தொழில் வாழ்க்கை ஒரு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக நிகழ்கின்றது.
மேலும் அவரது நியமனம் Northern Uni இல் வளர்ச்சி, புதுமை மற்றும் மாற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது.
வரலாற்று மைற்கற்கள்
பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1981 இல் BSc (First Class) பட்டத்தினையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து உயிர்வேதியியல் துறையில் 1989ல் PhD பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
1984 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்து, பின்னர் விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார்.
2005ல் உயிர்வேதியியலின் மூத்த பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். அவரது வாழ்க்கை பல வரலாற்று மைற்கற்களை குறித்து நிற்கின்றது.
மருத்துவ பீடத்தின் முதலாவது பெண் பீடாதிபதி (2000 - 2003)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் (2011 - 2017)
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முதல் பெண் உறுப்பினர் (2018 - 2024)
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உயிர் வேதியல் துறையின் ஓய்வு நிலை சிரேஷ்ட பேராசிரியராகவும் முன்னை நாள் துணை வேந்தராகவும் விளங்கும் வசந்தி அரசரத்தினம் அவர்கள் தனது பணிக்காலத்தில் விஞ்ஞான ஆய்வின் வளர்ச்சிக்கும் நிர்வாக துறையின் விருத்திக்கும் உள்ளடங்கிய கல்வி முறைமையின் சீரிய எழுச்சிக்கும் வித்திட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.
அவரது மேலாண்மை மிக்க தலைமைத்துவம் வடக்கு மாகாணத்தின் உயர்கல்வித்துறையை தேசிய ரீதியில் மிளிரச் செய்துள்ளதுடன் அவரையும் நாடறிந்த சிறந்த கல்விமானாகப் புகழ் பெறச் செய்துள்ளது.
Northern Uni இற்கு பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்தின் வருகை ஒரு புதிய அத்தியாயத்தின் வெற்றிகரமான ஆரம்பமாகவும் புதுமையும் மாற்றமும் நிறைந்த கல்வி மேம்பாட்டின் ஆழமான அஸ்திவாரமாகவும் விளங்குகிறது.
மேலும், அவரது வருகை நிறுவனத்தின் கல்வி சார் அர்ப்பணிப்புக்கும் திறமைமிகு பட்டதாரிகளை உருவாக்குவதில் Northern Uni இன் தன்னிகரற்ற ஈடுபாட்டுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.
பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்களை வாழ்த்தி வரவேற்று அவரது தலைமைத்துவத்தில் கல்விக் கொள்கைகளையும் இலக்குகளையும் அடையும் பயணத்தில் Northern Uni சமூகம் பெருமிதத்துடன் கைகோர்க்கின்றது.''என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://tamilwin.com/article/northern-uni-vice-chancellor-vasanthy-arasaratnam-1751201429
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
வடக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கி முன்மொழிந்த இணைப்புக்குழு கலந்துரையாடல்
வடக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கி முன்மொழிந்த இணைப்புக்குழு கலந்துரையாடல்
Published By: VISHNU
29 JUN, 2025 | 08:25 PM
உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது.
உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) நடைபெற்றது.
ஆளுநர் தனது வரவேற்புரையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திட்டங்களை முன்னெடுப்பதற்காக வந்துள்ள உலக வங்கிக் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகரன், எமது மாகாணத்தைக் கட்டியெழுப்ப உலக வங்கி கரம் கொடுத்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கத்தின் சார்பில் உலக வங்கியின் முயற்சிக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
உலக வங்கியால் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பயணம் மற்றும் அதிகாரிகள், மக்கள் சமூகங்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 8 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 7 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் 3 வலயங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வலயங்களும் வடக்கின் ஏனைய 3 மாவட்டங்களில் தலா ஒரு வலயங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலமும் முன்மொழிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது. உலக வங்கியால் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம் ஆகிய 4 விடயப் பரப்புக்களின் கீழ் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதுடன் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதல் கட்ட செயற்படுத்தலுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் தங்களது மேலதிக தேவைப்படுத்தல்களையும் முன்வைத்தனர். எதிர்காலத்தில் உலக வங்கியால் அவற்றை கவனத்திலெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர். உலக வங்கியின் செயற்றிட்டத்தை தொய்வின்றி விரைவாக செயற்படுத்துவதற்காக இணைப்புக்குழுவொன்றும் முன்மொழியப்பட்டது. அந்தக் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பது என்று இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உகந்தையில் இருந்து கதிர்காம பாதயாத்திரை: காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
யாழில் ஊசி மூலமாக உடலில் போதைப்பொருளை செலுத்தி வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழில் ஊசி மூலமாக உடலில் போதைப்பொருளை செலுத்தி வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!
Published By: VISHNU
29 JUN, 2025 | 08:38 PM
யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி இவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.